(Reading time: 17 - 33 minutes)

பொம்முவுக்கு தனது முதல் ஜென்மத்தின் ஜென்மரகசியத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அத்தனை பெரும் அவளை தடுத்தனர். ஆனால் அதையும் மீறி பொம்மு அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டாள். அதனால் பொம்மு தன நண்பர்கள் அரவிந்த் மற்றும் கோக்கியுடன் சிட்டிக்ககா புதைக்க பட்ட இடத்திற்கு வந்தாள். குமரிகாண்டத்தின் வீரர்கள் சிட்டிக்காவின் எலும்புகளை தோண்டி எடுத்து அதில் அந்த மண்டையோட்டை மட்டும் எடுத்து பொம்முவிடம் கொடுத்தனர்.

பொம்மு ஒரு கையில் பிரம்மாஸ்திரம் பிடித்திருக்க மறுகையில் அந்த மண்டையோட்டை வாங்கினாள். அதில் எழுத்துக்கள் இருந்தது.

“வேணாம் பொம்மு...அதை படிக்காதீங்க!” – கோக்கி. அழுதபடி.

அரவிந்த் பொம்முவையே பார்த்தான்.

“என்னோட இன்னொரு கையில் பிரம்மாஸ்திரம் இருக்கு...கவலைபடாதீங்க....ஒரு வேலை நான் இறந்திட்டா. எனக்காக அங்க நிச்சயம் போர் நடக்கும்....அதுல அந்த ஷானுதாவோட உயிர் இந்த பிரம்மாஸ்திரத்தை வச்சு அழிக்கலாம்....” – பொம்மு மெல்ல.

பொம்மு அரவிந்தை பார்த்தாள்.

“நான் இறந்தாலும் உன்னை பத்திரமா உன்னை உங்க வீட்ல அரசர் துரயுகன் சேர்த்திடுவார்” – பொம்மு

அரவிந்த் எதுவும் பேசவில்லை. பொம்மு அந்த ஜென்மரகசியத்தை படிக்க ஆரம்பித்தபோது....திடிரென ஏதோ வெடிக்க ஆரம்பித்தது. பொம்மு அதிர்ச்சியுடன் திரும்பினாள். அங்கே காவலாளிகள் அவளை தேடி ஓடி வந்தனர்.

“அரசி!....ஓடி போய்டுங்க....அந்த சூனியக்காரி ஷானுதா அரக்கர்கள் படையை கூட்டிட்டு வந்துட்டாள்...அவங்க அரண்மனையை தேடி வராங்க!” – காவலாளிகள்.

எங்கும் பயங்கர வெடிசத்தங்கள் கேட்டது.

“அரவிந்த் இந்த மண்டையோட்டை வச்சுக்கோ ....வா நாம இங்கிருந்து தப்பிக்கணும்...” என்று அரவிந்திடம் அந்த மண்டையோட்டை கொடுத்தாள். பொம்மு கோக்கி மற்றும அரவிந்த் மூவரும்  அரண்மனையை விட்டு வெளியே தப்பி ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் அரண்மனைக்குள் தாக்குதல் ஆரம்பித்து விட்டது. நாய்கள் ஆவிகள் படை அரக்கர்களை எதிர்த்து பயங்கர போர் நடத்திக் கொண்டிருந்தனர். அரசர் துரயுகன் அவர்களை அரண்மனைவிட்டு வெளியே காப்பாற்றி வந்தார்.  பொம்மு அரவிந்த் கோக்கி முன்று பேரும் அந்த கலவரத்தில் தப்பி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அங்கே எங்கும் அரக்கர்கள் நாட்டை அழித்துக் கொண்டு இருக்க. குமரிகாண்டத்தின் வீரர்கள் அந்த அரக்கர்களை எதிர்து சண்டை போட்டு கொண்டிருந்தன. பூமி அங்கே இங்கே என பிளந்தது. பொருட்கள் விண்ணில் வீசப்பட்டு கொண்டிருந்தது. போர் வீரர்கள் குண்டுகளை வீசி அரக்கர்களை காயப்படுத்தி கொண்டிருந்தன. நிறைய மக்கள் கலவரத்தில் சிக்கி இறந்து கிடந்தனர்.

மின்னெலென ஒரு பாறை வந்து பொம்முவின் பக்கம் வந்து நொறுங்கியது. அங்கே நின்றிருந்த நால்வரும் தூக்கி  எறியப்பட்டனர். பொம்மு கண் முழித்து பார்த்தபோதுபாறை விழுந்ததில் ஒரே புகையாய் இருந்தது. அவள் கையில் கெட்டியாக அந்த பிரம்மாஸ்திரதை பிடித்திருந்தாள்.

“அரவிந்த்! கோக்கி “ என்று அந்த புகையில் பொம்மு தேடினாள். போர் நடக்கும் சத்தங்கள் இல்லை. புகை மெல்ல விலகியதும் பொம்முவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஷானுதாவின் கையில் பிடிப்பட்ட நிலையில் அரவிந்த் இருந்தான். அவன் கையில் மண்டையோடு  பத்திரமாக இருந்தது. ஷானுதாவின் அரக்கர்கள் படை அவள் பின்னே நின்றிருந்தது. ஷானுதாவின் பக்கமாக குதிரை வண்டியில் மாதவன் நின்றிருந்தான்.

குமரிகாண்டத்தின் வீரர்கள் பொம்முவுக்காக எதையும் செய்யாமல் அப்படியே கையில் ஆயுதங்களுடன் தாயராக நின்றனர். அரசர் துரயுகனும் கோக்கியும் பொம்முவின் பக்கம் வந்து நின்றனர்.

“கடைசியா உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சா பொம்மு!” – ஷானுதா.

“நாம ஏன் சண்டை போடணும்...நாம ஒருகாலத்தில சகோதிரிகள் தான?” – பொம்மு மெல்ல.

“அங்கதானே எனக்கு பிரச்சினையே ஆரம்பிச்சது....அதை பத்தி பேசகூட எனக்கு விருப்பம் இல்ல....எனக்கு இப்போ சகோதரி பாசம் எல்லாம் இல்ல....எனக்கு தேவை உன் கையில் இருக்கிற அந்த பிரம்மாஸ்திரம் “ – ஷானுதா  

அனைவருக்கும் ஷானுதா பிரமாஸ்திரத்தை கேட்பது அதிர்ச்சியாக இருந்தது.

“ஒரு முறை நல்லா யோசி....நான் நீயும் சண்டை போடலனா...யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது..” – பொம்மு.

“உன்னோட இந்த அழகான உபதேசத்துக்காக எனக்கு இங்க நேரம் போகறதை நான் விரும்பலை...” என்று ஷானுதா அரவிந்தின் கழுத்தை பிடித்து நெரித்தாள்.

பொம்மு பதறினாள்.

“வேண்டாம் அவனை ஒன்னும் பண்ணிடாத...என்கூட வந்த பாவத்துக்கு அவன் சாக வேண்டாம்...” – பொம்மு அழுதபடி.

“உன் கையில் இருக்குற அந்த பிரம்மாஸ்திரத்தை தூக்கி என்கிட்ட போடு ! அரவிந்தை அங்க அனுப்புறோம்!” – மாதவன்.

பொம்மு யோசித்தாள். திரும்பி அரசர் துருயுகன் முகத்தை பார்த்தாள். துரயுகன் கண்களால் வேண்டாம் என்று சொன்னார். பொம்முவின் பக்கம் இருக்கும் எல்லாருமே வேண்டாம் என்றனர். ஆனால் பொம்முவுக்கு அரவிந்த் தான் முக்கியமாக பட்டது.  உடனே அந்த பிரமாஸ்திரத்தை தூக்கி மாதவனிடம் போட்டாள். மாதவன் அந்த பிரமாஸ்திரத்தை கைப்பற்றி அதை ஷானுதாவிடம் கொடுத்தான்.

“ரொம்ப சந்தோஷம்....அரவிந்தை கூட்டிட்டு போ!” – ஷானுதா அரவிந்தின் கழுத்தை விட்டாள்.

“அரவிந்த்....வா!” – பொம்மு

எல்லோரும் அரவிந்தை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் அரவிந்த் அங்கிருந்து வரவில்லை.

“அரவிந்த்...பயப்படாத!  இங்க வா!” – துரயுகன் கத்தினார்.

ஆனால் அரவிந்த் நகரவில்லை.

“அரவிந்த் உனக்கு என்ன பைத்தியமா?...இங்க வா “ – பொம்மு கத்தினாள்.

அரவிந்தின் சுயருபத்தை காடும் தருணம்தான் அது. அரவிந்த் ஷானுதாவின் பக்கம் போய் நின்றான். எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஷானுதா கேலியாக போம்முவை பார்த்தாள். மாதவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.

“நான் உன் பக்கம் வரமாட்டேன் பொம்மு! நான் இவங்களுக்கு உதவி செய்வேன்!” – அரவிந்த்.

சுற்றியள்ள எல்லோருக்கும் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

“இவன் எங்களுக்கு வாக்கு குடுத்திருக்கான்....பொம்முவை கொல்றதுக்கு எங்களுக்கு உதவி செய்வான்...பொம்மு இறந்தபிறகு இவனை நாங்க அவனோட வீட்டுக்கு அனுப்பிடுவோம்!” – மாதவன் சிரித்தபடி சத்தமாக

பொம்மு அதிர்ச்சியில் அரவிந்தை பார்த்தபடி நின்றாள். அரவிந்த் அவளை பார்க்க முடியாமல் தலைகுனிந்தான்.

ஷானுதா தன் வில்லை எடுத்து பிரம்மாஸ்திரத்தை பிடித்து பொம்முவுக்கு குறி வைத்தாள். பொம்முவின் பக்கம் இருப்பவர்கள் ஷானுதாவை நெருங்க முயன்ற போது...

“அங்கேயே நில்லுங்க....இல்லனா....இந்த பிரம்மாஸ்திரம் பொம்முவுக்கு பதிலா வேற யார் உடம்புலயும் பாயும்....எல்லாரும் போம்முவை விட்டு தூரம் போங்க ” என்று ஷானுதா வில்லை பிடித்து காட்டி மிரட்ட பொம்முவின் பக்கம் இருந்தவர்கள் அவளை விட்டு தள்ளி நின்றனர். ஆவிகள் படையும் நாய்கள் படையும் பொம்முவுக்காக  கண்ணீர் விட்டன. துரயுகன் தன் கண்களை முடினார். கோக்கி தேம்பி அழுதுக் கொண்டிருந்தது. இன்னும் சில வினாடிகளில் பொம்முவை நோக்கி பிரம்மாஸ்திரம் வரப்போகிறது. ஆனால் பொம்முவுக்கு அதிர்ச்சியே அரவிந்த் தனக்கு செய்த துரோகம் தான் என்று அரவிந்தையே பார்த்தாள். அவளுக்கு மரணம் பற்றிய பயம் இல்லை.

“சாகறதுக்கு முன்னாடி உன்னோட கடைசி ஜென்மரகசியத்தை நீ தெரிஞ்சுக்க வாய்ப்பு தரேன்....அரவிந்த்....அவகிட்ட அந்த ஜென்மரகசியத்தை அவகிட்ட குடு...படிக்கட்டும்...” என்று ஷானுதா கூற உடனே அரவிந்த் மெல்ல பொம்முவின் பக்கம் சென்று அவன் கையில் இருந்த அந்த மண்டையோட்டை பொம்முவின் கையில் குடுத்தான். பொம்மு அரவிந்தையே பார்த்தாள். ஆனால் அரவிந்த் அவள் முகத்தை பார்க்கவில்லை.

“சீக்கிரம் படி.......சத்தமா படி.” – ஷானுதா

பொம்மு மெல்ல தலைகுனிந்து தன் கையில் உள்ள அந்த மண்டையோட்டின் தலையில் தெரியும் வரிகளை படிக்க ஆரம்பித்தாள். அவள் குரலில் சிறு நடுக்கம் இருந்தது. பொம்மு அந்த வரிகளை படிக்கும்போதே அவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

ஆனால் உனக்கு மொத்தம் ஏழு ஜென்மங்கள் உள்ளன.

அரவிந்த் என்னும் பெயரில் நீ உன்னுடைய ஏழாம் ஜென்மத்தை எடுப்பாய்

அந்த ஏழாம் ஜென்மமான அரவிந்த் உன் ஆறாம் ஜென்மத்துடன்  நிலாயுகம் வருவான். 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 10

Go to Bommuvin Thedal episode # 12

{kunena_discuss:697}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.