(Reading time: 13 - 26 minutes)

12. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ரவிந்தை சுற்றி இருக்கும் பொம்முவின் ஆட்கள் அவனை மெல்ல அவர்கள் பக்கம் இழுத்தனர். அரவிந்த் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் பக்கம் சென்றான். பெரிய அதிர்ச்சியில் இருந்த ஷானுதாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாய் மாதவன் அரவிந்த்தின் பக்கம் போய் நின்று ஷானுதாவுக்கு எதிராய் நின்றான். ஷானுதாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  பொம்மு அசைவில்லாமல் உறைந்து நின்றாள்.

“இப்ப புரியுதா?...பொம்முவுக்கு உயிர் வந்த காரணம்?... ஒரு ஜென்மத்தை உயிரோட எழுப்பனும்னா அந்த ஜென்மத்தோட மறுஜென்மத்தால் தான் முடியும்....இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சவுடனே உன்கிட்ட இருந்த அந்த பொம்மையை திருடி பைரவன் மூலமா அரவிந்திடம் சேர்த்தேன்...” – மாதவன்.

“என் கூட இருந்து எனக்கு துரோகம் பண்ணதா  நீ நினைக்கலாம்....ஆனா பைரவன் தனக்கு ஆறு ஜென்மங்கள் தான் இருக்குனு என்கிட்டே  சொல்லுச்சு...” – ஷானுதா.

Bommuvin Thedal

“அது பொய்....பைரவன் உன்கிட்ட சொன்ன பொய்....பைரவனோட ஜென்மரகசியத்தில் எழுதப்பட்ட விதி அது....” – மாதவன்.

ஷானுதா எதுவும் பேசமுடியாமல் மாதவனையே முறைத்தாள்.

“ரொம்ப ஆச்சிரியமா இருக்குல?...உனக்கு எதிரா நான் மாறிட்டேன்னு நினைச்சு வருத்தபடுரியா?....அது தப்பு....உன்கூட இருந்ததுக்கு காரணமே உன்னை கொல்லத்தான்...” – மாதவன்.

“உன்னை கொல்லத்தான் உனக்கே தெரியாமே நிறைய விஷயம் பண்ணேன்...அதுல இந்த முக்கியமான விஷயம் அரவிந்தை நம்ம பக்கம் சேர்த்தது....அதை நான் செய்யலைனா நீ அவனை அன்னிக்கே கொன்னுருப்ப....உன்னோட சாவு அரவிந்தால் தான் நடக்கணும்....”

“என்னால இப்பவே உன்னையும் அவனையும் சேர்த்து அழிக்க முடியும்...” – ஷானுதா. அவள் கையில் பிரமாஸ்திரத்தை இறுக்கி பிடித்தாள்.

“முயற்சி பண்ணு...” – மாதவன் சிரித்துக்கொண்டே.

அரவிந்த் மாதவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷானுதா வெறியுடன் தன் வில்லில் பிரமாஸ்திரத்தை பிடித்து மாதவனுக்கு குறி வைத்தாள். சுற்றியிருந்த அத்தனை பேரும் பயத்தில் காலடிகளை பின்னே வைக்க ஆரம்பித்தனர். ஷானுதா பிரமாஸ்திரத்தில் பயங்கர பிரகாசமாக தெரிந்தது. ஷானுதா முகத்தில் கடும் வெறியுடன் கையில் இருக்கும்  அஸ்திரத்தை ஏவினாள். மின்னல் வேகத்தில் புயலுடன் வந்த அஸ்திரம் மாதவனை மோதி ஒரு சாதரணமாக கிழே விழுந்தது. மாதவனை தவிர அத்தனை பேரும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். ஷானுதா குழுப்பத்துடன் நின்றாள். ஒரு மாயசொடுக்கை அவள் போட்டவுடன் ஷானுதாவின் கைக்கு திரும்ப வந்தது அந்த பிரம்மாஸ்திரம்.

“என்ன ஆச்சு?...ஏன் இது வேலை செய்யலை?” என்று அந்த அஸ்திரத்தை பார்த்தபடி ஷானுதா கோபமாக கத்தினாள்.

“அஸ்திரம் கிடைச்சா போதுமா?....அதுகேத்த வில் வேண்டாமா?” – மாதவன்.

“என்ன சொல்ற?” ஷானுதா மெல்ல.

“பிரம்மாஸ்திரம் விடுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த ஒரு வில் வேண்டும்....அது இல்லாம அந்த பிரமாஸ்திரத்தை சாதாரண வில்லுல விட்டா இப்படிதான் நடக்கும்...” – மாதவன்.

சுற்றி இருந்த மனிதர்கள் நடுவே சிறிது சலசலப்பு இருந்தது. ஷானுதா குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள். அவள் மனதில் பல கேள்விகள் ஓடியது.

“ரொம்ப கொழப்பமா இருக்கா...சரி....உனக்கு வாய்ப்பு தரேன்....நிலாயுகத்தின் கோவிலில் தான் அந்த சக்தி வாய்ந்த வில் இருக்கு....முடிஞ்சா அதை எடுக்க பாரு..” – மாதவன்.

உடனே ஷானுதா முகத்தில் ஒரு தெளிவு வந்தது. கையிலிருக்கும் அவளுடைய வில்லை தூக்கி எறிந்து விட்டு பிரமாஸ்திரத்தை மட்டும் மறுகையில் பிடித்திருந்தாள்.

“எடுக்கத்தான் போறேன் மாதவா.....அது என் கையில் கிடைச்சா முதல்ல உன்னைதான் கொல்லுவேன்...இது சத்தியம்...” – ஷானுதா பல்லைக் கடித்தபடி..

“அப்படியே நடக்கட்டும்...” – மாதவன் கையை கட்டினான்.

ஷானுதா அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தாள். அரக்கர்களும் அவளை பின் தொடர ஆரம்பித்தனர். ஷானுதாவும் அரக்கர்களும் அங்கிருந்து கிளம்பியது ஒரு புயல் கடந்து செல்வதை போல் இருந்தது. மக்கள் அனைவரும் மாதவனையும் அரவிந்தையும் சூழ்ந்தனர்.

“ஏன் இப்படி பண்ண?...வில் இருக்கிற இடத்தை அவகிட்ட சொல்லாம இருந்திருக்கணும்...” – துரயுகன் கோபமாக.

“அவளோட மரணமே அந்த நிலாயுகத்தில் தான் நடக்க போகுது அரசே....அது அவளோட விதி....அதுமட்டுமல்ல.....அந்த தீய மரத்தை அழிக்கணும்னா இப்ப அவ அந்த வில்லை எடுத்தாகனும்...” – மாதவன் பொறுமையாக யோசித்தபடி.

“நீ சொல்றது எனக்கு புரியல...” – துரயுகன் குழப்பத்துடன்.

“இப்ப நான் சொல்றது புரியாது....சீக்கிரம் நாம நிலாயுகதுக்கு போயாகனும்...” என்று மாதவன் வேகமாக கூறினான். அரவிந்த் மனவருத்தத்தில் இருந்ததை கண்ட மாதவன் அவன் அருகில் சென்றான்.

 ராஜேந்திரனும் சந்கோலனும் குமாரிகாண்டத்தை வந்து அடைந்து அங்கே நாடே நாசம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்சியாடைந்தனர். பிறகு அங்கே நடந்த விஷயங்களை அவர்கள் மக்களிடம் கேட்டு அறிந்தனர். மாதவன் , அரவிந்த் மற்றும் துரயுகன் அவர்கள் இருவரும் தங்களிடம் வந்து பேசும் வரை அமைதியாக நின்றிருந்தனர்.

“என் நாட்டில் நுழைஞ்சு இப்படி பண்ணதுக்காகவே நான் அந்த ஷானுதாவை எதிர்த்து போரிட போறேன்!” – செங்கோலன் கோபமாய்.

ராஜேந்திரன் அங்கே இருக்கும் கூட்டத்தில் நுழைந்து மாதவனுடன் நின்றிருக்கும் அரவிந்திடம்  பேசினான். பொம்முவை தொட்டு பார்த்த அரவிந்த் ஒரு அசைவில்லாமல் உண்மையில் ஒரு பொம்மு போலவே இருந்தாள். எல்லாருக்கும் பொம்முவின் உயிர் அவளை விட்டு சென்றதை சோகத்துடன் உணர்ந்தனர். அரவிந்தின் கண்களில் நீர் தென்பட்டது. மனதில் பெரும் சோகம் வந்தது.

“அரவிந்த்....நாம கிளம்பலாம்....இனி நாம ஒரு நிமிடம் இங்க இருந்தாலும் நிலாயுகத்தின்  கோவிலுக்கு ஆபத்து...” – ராஜேந்திரன் அவசரமாக.

“என்னால என்ன பண்ண முடியும்?” – அரவிந்த்  மெல்ல. அவனின் பார்வை தரையில்தான் இருந்தது.

சுற்றியிருப்பவர்களின் பார்வை அவன் மேலே திரும்பியது.

“என்ன பேசுற நீ?...உன்னை நம்பி தான் அத்தனை பேரும் இங்க இருக்காங்க...நீ அந்த ஷானுதாவை அழிச்சாகனும்.” – ராஜேந்திரன் சத்தமாக.

“என்னால் முடியாது....அந்த ஷானுதாவை எதிர்த்து நீங்களே போர் நடத்துங்க....” – அரவிந்த்.

ராஜேந்திரனால் அவன் சொல்வதை ஏற்கமுடியவில்லை. மாதவன் அமைதியாக இருந்தான்.

“பயப்படுறியா?....அந்த ஷானுதாவை எதிர்த்து நம்மாளால் எதுவும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா?” – ராஜேந்திரன்.

“இல்ல...என்னை நினைச்சு வெட்க படறேன்...என்னால தான் பொம்மு உயிர் போயிடுச்சு...நான் செய்த துரோகம் தான் காரணம்”  - அரவிந்த் அழ ஆரம்பித்தான். மாதவன் மெல்ல அவன் தோளில் கைவத்து பேச ஆரம்பித்தான்.

“இனி அது வெறும் பொம்மை அரவிந்த்...இனி நீதான் நிஜம்....நீதான் பொம்மு....வருத்தபடாத...நீ பொம்முவுக்கு செய்தது துரோகம் இல்ல..... நடக்கவேண்டிய நல்ல காரியத்தில் அதுவும் ஒண்ணு...” – மாதவன்.

ஆனால் அரவிந்தால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

“இதோ பாரு அரவிந்த்...நடந்ததை நினைச்சு வேதனை படறதவிட....நடக்க போற நல்லதை நினை...”  - மாதவன்.

அரவிந்த் தன் கண்களை துடைத்து மாதவனை கண்டான். பொம்மு மட்டும் அப்படியே இருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.