“இது ரொம்ப கொடுமையான விஷயம்....நீ வளர்த்த மரத்தை நீயே அழிச்சு உன் போற்படையின் ஆக்கத்தை நிறுத்திட்ட....” – ஷானுதா.
“மிஞ்சி இருக்கிற காட்டேரி படைகளையும் குமரிகாண்டத்தின் வீரர்கள் அழிச்சுடுவாங்க...என்ன பண்ண போற ஷானுதா “ – மாதவன்.
ஷானுதா மாதவனை நோக்கி அம்புகளை விட ஆரம்பித்தாள் மாதவன் அதிலிருந்து தப்பி ஓடினான்.. போர் மீண்டும ஆரம்பித்தது. இம்முறை அரவிந்தின் படையானது பயங்கர உற்சாகத்துடன் செயல்ப்பட்டது. அரவிந்த் அங்கிருந்த மக்களையும் குட்டிசாத்தான்களையும் மலையை விட்டு கீழே அனுப்பி முடித்தான். நாய்கள் அரசர் துரயுகன் மாயக்கூவல் எழுப்பினார். உடனே நிலாயுகத்தை தாண்டி உள்ள நாய்களின் குடும்பமான நரிகள் ஓநாய்கள் ஒட்டுமொத்தமாக நிலாயுகத்தில் வந்து அரக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். ஆவிகள் வினோத மிருங்ககளையும் பறவைகளையும் அழித்து முடித்தனர். இப்படியாக ஷானுதாவின் மொத்த படையும் தரைமட்டமானது.
“அரவிந்தை கொன்னுட்டா எனக்கு சாகவரம் கிடைக்கும் மாதவா...அதுக்கப்புறம் என்னால எதையும் ஆக்க முடியும்...” – ஷானுதா பயங்கர சத்தத்துடன் கத்தினாள்.
“அதுக்கு நீ என்னை அழிக்கனுமே ஷானுதா...” என்று அரவிந்த் ஷானுதா முன் வந்து நின்றாள். ஷானுதாவின் மனதில் பயம் தோன்ற ஆரம்பித்தது. சற்று அரவிந்தை பார்த்தே நின்றாள் ஷானுதா.
காட்டேரி அத்தனையும் அழித்து முடித்தார்கள் குமர்காண்டத்தின் வீரர்கள். ஷானுதாவின் சார்பில் தற்போது யாரும் இல்லை. அரவிந்தின் படை அடுத்ததாக ஷானுதாவை நோக்கி விரைந்தது. அதை கண்டு மேலும் அதிர்ச்சியானாள் ஷானுதா.
“என்ன பாக்குற ?....குறி வை ஷானுதா....என்னை கொல்லு....அதுக்கப்புறம் உனக்கு சாகவரம் கிடைக்கும்..சீக்கிரம் எல்லாரும் உன்னை சுத்தி வளைசிட்டாங்க...சீக்கிரம்...” – அரவிந்த் தைரியமாக.
ஷானுதாவுக்கு அவளின் மாயவித்தைகள் மறந்து போனது. அவளால் எதையும் கவனிக்க முடியாத நிலைக்கு சென்றாள். போர்ப்படை ஆக்ரோஷமாக வந்து கொண்டிருந்தது.
“ஏன் தயங்குற...சீக்கிரம்...வந்துட்டாங்க....” – அரவிந்த் மெல்ல.
ஷானுதாவின் உடல் நடுங்கி கொண்டிருந்தது. அந்த உதறலுடன் கையில் வில்லை ஏந்தி அதில் பிரமாஸ்திரத்தை பிடித்து. நின்றாள். மாதவன் நடக்க போவதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். போர்படை ஷானுதா நெருங்கி வந்து விட்டது.
“நல்லா நான் சொல்றதை கவனி ஷானுதா...உனக்கு இருக்கறது ஒரே வாய்ப்பு...அதை தவறவிட்டா உனக்கு நடக்க போறது மரணம் மட்டும் தான்....அதை மனசுல வச்சுக்கோ...” என்றான் அரவிந்த்.
ஷானுதாவால் அஸ்திரத்துக்கு சரியான குறியை வைக்க முடியவில்லை. அவள் மனதில் பயம் அதிகமாகி கொண்டிருந்தது. அவளின் கவனம் சிதறி கொண்டே இருந்தது. அரவிந்த் தைரியமாக நின்றான்.
“உன்னை கொன்னுடுறேன் அரவிந்த.....” என்று ஷானுதா கத்திகொண்டே அஸ்திரத்தை ஏவினாள்.
தொடரும்
Go to Bommuvin Thedal episode # 11
Go to Bommuvin Thedal episode # 13
{kunena_discuss:697}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.