(Reading time: 29 - 57 minutes)

காதல் நதியில் – 03 - மீரா ராம்

வனா???..... அவளின் உடல் குலுங்கியது… கண்களின் கண்ணீர் வெளியே வரவா என்று எட்டிப் பார்த்தது… இவனால் தானே நா………..ன்…………..  ……………….” என்று சிந்தித்தவளை…       அபியின் “மாமா…..” என்ற குரல் கலைத்தது…

“ஹாய் ப்ரின்செஸ்…” என்றவன் அவனை நோக்கி ஒடி வந்தவளை தூக்கிக்கொண்டான்…

ஷன்வி புரியாமல் அவனைப் பார்க்க…

kathal nathiyil

“ஏன் மாமா லேட்?... அம்மா உன்னைக் காணோம்னு ரொம்ப நேரமா தேடினாங்க… நீ இன்னைக்கும் லேட் தான்…” என்று அலுத்துக்கொள்ள…

“சாரிடா பிரின்செஸ்… மாமாக்கு வேலை இருந்துச்சுடா… மாமா வந்த ஃப்ளைட் லேட் ஆயிடுச்சுடா… மாமா இனி லேட்டா வர மாட்டேன்டா… சாரி குட்டி…” என்றபடி அவன் தன் காதைப் பிடித்துக் கொள்ள…

“ஹ்ம்ம் குட் மாமா…” என்று அவனிடம் இன்னும் ஒட்டிக்கொண்டாள்…

“வா ரிகா-ஷன்வி, ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆக போகுது… வாங்க போகலாம்…” என்றபடி வந்தவள் அங்கிருந்தவனைக் கண்டதும் கோபப்பட்டாள்…

“நீ ஏண்டா இங்க வந்த?... உனக்கு உன் பிசினெஸ் தான முக்கியமா போச்சு… வீட்டு நினைப்புதான் உனக்கு வரவே வராதே… ஹே… அபி… இங்க வா… அவன் கிட்ட உனகென்னப் பேச்சு?... இங்க வான்னு சொல்லுறேன்ல…” என்று மகளை இழுத்தாள்…

“அம்மா மாமா பாவம், ஃப்ளைட் லேட் ஆயிடுச்சாம்…” என்று பாவம் போல சொன்னவளைப் பார்த்து முறைத்தாள் அனு…

“ஆமா அபி… ஒவ்வொரு முறை வரும்போதும் ஒவ்வொரு காரணம்… போன தடவை டிரெயின் லேட், இந்த தடவை ஃப்ளைட்டா?... அதெப்படி அபி உன் மாமாக்கு மட்டும் எல்லாம் லேட் ஆகுது?!!?…”

“அக்கா சாரி அக்கா… நிஜமாகவே மீட்டிங்-ல் மாட்டிக்கிட்டேன் அக்கா… அங்க லேட் ஆனதால் ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டேன்… அடுத்த ஃப்ளைட்-ல் அடிச்சு புடிச்சு வந்தால் நீ இங்க என்னைத் திட்டுற…”

“ஆமாடா உன்ன திட்டணும்னு எனக்கு கொள்ளை ஆசை… போடா… உன்ன எனக்கு தெரியாதா?...”

“இந்த மீட்டிங் யாரால தாமதம் ஆச்சுன்னு உனக்கு தெரியுமா அக்கா?...”

“யாரால?...”

“எல்லாம் உன்னோட செல்லம் இருக்கானே ஒருத்தன்… அவனாலதான்… ஃபாரினர்ஸ் கூட அவன் தான் மீட்டிங்-ல் கலந்துக்கிறதா இருந்துச்சு… கடைசி நிமிஷத்துல நீ போயிட்டுவாடா… ஐ ஹவ் சம் அர்ஜென்ட் ஒர்க் னு சொல்லிட்டு என் பதில் கூட எதிர்பார்க்காம ஃபோன் கட் பண்ணிட்டான்…”

“இப்போ சொல்லு என் மேல தப்பிருக்கா?... இப்ப மட்டும் அவனை திட்டமாட்டியே… என்ன திட்டுறதுனா மட்டும் உனக்கு சர்க்கரைப்பொங்கல் சாப்பிடுற மாதிரி இருக்குமே…”

“சரி சரி விடுடா… உனக்கும் அனுபவம் வேணுமேடா… அதான் உன்ன ப்ரெசெண்ட் பண்ண சொல்லியிருப்பான்…”

“அதான பார்த்தேன்… நீயாவது அவனை திட்டுறதாவது!?... அவன் தானே உனக்கு மாயக்கண்ணன்… சே…” என உண்மையாக அலுத்துக் கொண்டான்…

“ஏண்டா லூசு, வளர்ந்திருக்கியே தவிற, இன்னும் நீ குழந்தை தாண்டா… அப்படிதான் நீயும் பிஹேவ் பண்ற… சரி வா… பார்ட்டி ஸ்டார்ட் ஆக போகுது…. வாடா… என்று தம்பியை அழைத்தாள்…

“ரிகா – ஷன்வி இவனை அறிமுகப்படுத்த மறந்துட்டேன்… இவன் என் தம்பி அவ்னீஷ், மலர் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஜிஎம்… அவ்னீஷ் இவங்க என்னோட ஃப்ரண்ட்ஸ்… ஷன்வி - ரிகா…”

“மலரா?...அப்பாகூட சொல்லியிருக்காரே அந்த கம்பெனி பரம்பரை பரம்பரையாய் நடத்திட்டு வராங்க… இந்த ஊட்டியில் அது தெரியாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க.. அதை நடத்திட்டு வந்த சுந்தரம் அங்கிள் கூட அப்பாவுக்கு கொஞ்சம் பழக்கம்…” என்று எண்ணமிட்டவள் அனுவின் சத்தமான அழைப்பில் தன்னிலைக்கு வந்தாள்…

“என்ன ஷன்வி என்ன யோசிக்கிற…?”

“ஒன்றுமில்லை அனு…”

“ஒன்றும் இல்லாததற்கா ஏதோ மங்கள்யான் ராக்கெட் விடுவதுபோல் யோசிப்பாங்க உன் ஃப்ரெண்ட்?... ஏன் அக்கா.. இதெல்லாம் நீ கேட்க மாட்டியா?...”

அவனைப் பதிலுக்கு முறைத்தவள் ஷன்வி இல்லை அனு… “போடா அரட்டை… என் ஃப்ரெண்ட்-ஐ கிண்டல் பண்ணுறியா நீ… பேசாமல் போயிடு… இல்லை உன் மாமாவிடம் கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்…”

“இதோடா… சும்மா மாமா பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாத அக்கா.. என்னப் பார்த்தால் மாமா என்ன படையே நடுங்கும்.. தெரியுமா…?” என்று இல்லாத காலரைத் தூக்கிவிட்டவனின் தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது…

“என்னடா இன்னும் என் பேர நீ சொல்லலையேன்னு நினைச்சேன்… அதெப்படி அவ்னீஷ் சரியா நான் வருகிற நேரம் பார்த்து இப்படி மாட்டிக்கிற?... ஹ்ம்ம்… உன்ன கண்டால் படை நடுங்குமா?.. அப்படியாடா?... பார்க்கலாமா?...”

“அய்யோ மாமா நான் சும்மாதான் சொன்னேன்… நீங்க வேற பத்தினியை காக்கும் பதி போல வந்து தரிசனம் தந்த பிறகும் அடியேன் சும்மா இருக்கவில்லை என்றால் இந்த உலகம் என்மேல் கோபம் கொள்ளாதோ?...” என்று வசனம் பேசியவனின் முதுகில் ஒரு அடி போட்டாள் அனு… “போக்கிரி… வாடா… போதும் உன் அராஜகம்…”

“ஷன்வி – ரிகா இவர் என் கணவர் ஷியாம்… என்னங்க நான் சொன்னேன்ல என் ஃப்ரெண்ட்ஸ்… இவங்க தான்… “

“வணக்கம் ஷன்வி – ரிகா…”

“வணக்கம் சார்…”

“உங்க ரெண்டு பேர் பற்றி தான் வீட்டில் எப்பவும் பேசிட்டே இருப்பாங்க என்னோட அனுவும், அபியும்… வாங்க பார்ட்டி நடக்குற இடத்திற்கு போகலாம்..” என்று சிரித்தான் ஷியாம்…

அவனின் அந்த என் அனு என்ற அழைப்பில் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் அவனின் மனைவி காதல் பொங்க… அவனும் அவளைப் பார்த்து மயக்கும் புன்னகை ஒன்று வீச…

“இதற்குமேலும் நாம் இங்கிருந்தால் இவங்க டூயட் கூட பாடினாலும் பாடிடுவாங்க… வாங்க நாமும் எஸ் ஆகிடலாம் இங்கேயிருந்து…” என்றான் அவ்னீஷ்…

ஷன்விக்கும் அது சரியென்றே தோன்றிவிட அவர்களை தொந்தரவு செய்யாது அகன்றனர் நால்வரும்… அபி ரிகாவின் கைப்பிடித்து நடக்க, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர் ஷன்வியும் அவ்னீஷும்…

அவள் அருகில் நடந்து வருவது தனக்கு ஏன் இவ்வளவு இனிக்கிறது என்று வியந்தவன் பார்வையாலே அவளை வருடிக்கொண்டிருந்தான்…

அவளுக்கோ புரியாத நிலை… “என்ன நேர்ந்தது எனக்கு?... ஏன் இவனிடம் இப்படி மயங்குகிறேன்… எனை காந்தம் போல் ஈர்க்கின்றானே… இதற்குமுன் நான் இப்படி இல்லையே… ஏன் ஷன்வி இப்படி இருக்கிறாய்???...” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள்…

அவர்கள் இருவரின் ஜீவனும் ஒரு ஜீவனாக மாறப்போவதற்கான அறிகுறி தான் அது என்பதை அவர்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை தான்…

அபியின் கைப்பிடித்து நடந்துகொண்டிருந்த ரிகாவிற்கோ மனம் அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது… இத்தனை நாட்களாய் மனதினில் அழுத்திய பாரம் இன்று எதிரே நின்று கைகொட்டி சிரிப்பதுபோல் இருந்தது அவளுக்கு… இவன் அனுவின் தம்பியா?... நான் இன்று இன்னிலைக்கு ஆளாகி இருப்பதே இவனால் தானே… இவனால் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சமா நஞ்சமா?... எப்பேர்ப்பட்ட சித்திரவதைக்கெல்லாம் உட்பட்டேன்… எல்லாம் இவனால் தானே… இவன் மட்டும் அன்று வராமல் இருந்திருந்தால்?... இவன் மட்டும் என்னைப் பார்க்காமலிருந்திருந்தால்?... இவன் மட்டும் என் பாதையில் குறுக்கிடாமல் இருந்திருந்தால்?... இவனை மட்டும் கடவுள் என் வாழ்வில் அந்த ஒரு நாள் பயணிக்க விடாமல் இருந்திருந்தால்?... அய்யோ… இத்தனை இருந்திருந்தால் தான் எனக்கு முன்னே தெரிகிறது… நான் என் செய்வேன் ?... என் மனம் பிளக்கிறதே… இவனைப் பார்க்காமல் இத்தனை நாள் செத்து கொண்டிருந்தேன்… இனி தினமும் பார்த்து நான் சாகவேண்டுமா?.. இவனால் தானே நான் என்று நித்தமும் துடிக்க வேண்டுமா?...

ஹ்ம்ம்.. அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?.. என் விதி இப்படியிருந்தால் பாவம் அவன் தான் என்ன செய்ய முடியும்?... எனினும் மனம் அவனையே பழிக்கிறதே… வேண்டாம் என் வாழ்வு தான் இப்படி ஆகிபோனது… என் வாழ்வில் நுழைந்த அந்த ஒரு நாளுக்காக அவனை நான் பழி சொல்வது முறையல்ல… என்னைச் சுற்றி உள்ளவர்களாவது நலமோடு வாழட்டும் இறைவா… அதற்கு நல்வழி காட்டு…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.