(Reading time: 29 - 57 minutes)

 

ங்க மருமகள் தான… அப்படியே வந்துட்டாலும்…”

“டேய்… என் தங்கச்சிக்கு இப்போ என்னடா… அவளை எதுக்கு குறை சொல்லுற?...”

“வாடா ஆதி… நீ எல்லாம் நண்பனாடா?... எனக்கு சப்போர்ட் செய்யாம அவளுக்கு செய்யுற?... வருங்காலம் உன்னைப் போற்றும் மச்சான் கண்டிப்பா…”

“தங்கச்சி தாண்டா ஃபர்ஸ்ட்… நண்பன் இரண்டாவது தான்…”

“ஏண்டா… நீங்க இரண்டு பேரும் பேசுறத பார்த்தா, யாராவது அண்ணன் தம்பினு சொல்வாங்களா?...” என்று குறைப்பட்டுக்கொண்டார் சுந்தரம்…”

“நல்லா கேளுங்க… எப்ப பாரு மாமன்- மச்சானு சொல்லிட்டே இருக்கானுங்க… உருவத்தில் ரெண்டு பேரும் கொஞ்சம் கூட ஒட்டலைடா… ஆனா… நடவடிக்கையில் என்ன ஒரு ஒற்றுமைடா… உங்களுக்குள்ளே….” என்றார் கோதை…

“என்னமோ அம்மா… ஆதியை எனக்கு அண்ணனா பார்க்கவே தோணலை… நண்பனா, முக்கியமா மச்சானா தான் பார்க்க பிடிச்சிருக்கு…”

“டேய்… லூசு… அதும் என் தங்கச்சியை நீ பார்த்துல இருந்து தான் மச்சான் அதிகமா சொல்லுறேன்னும் எனக்கு தெரியும்… சோ… அடக்கி வாசி…”

ஆதியை திட்ட வாயெடுத்தவன், அபியின் “முகில் மாமா…” என்ற அழைப்பில் மகிழ்ந்தான்…

“ஹாய் குட்டி…” என்றபடி அவளைத் தூக்கி கொண்டவன், அவளது கன்னத்தில் இதழ் பதித்து, பதிலுக்கு அபியின் முத்தத்தையும் பெற்றுக்கொண்டான்…

“சரி வாங்க… அபிக்கு சாப்பாடு கொடுத்துட்டு நாமும் சாப்பிடலாம்… நான் போய் அனுவின் தோழிகளையும் கூட்டிட்டு வரேன்…” என்றார் கோதை…

“பாட்டி பாட்டி நானும் வரேன்… மிஸ் கூட நானும் சாப்பிடுவேன்…” என்று அடம்பிடித்தவளை புதிதாக பார்த்தனர் முகிலனும், ஆதர்ஷும்…

ஏனெனில், இன்று வரை அவளுக்கு ஆதர்ஷ் மட்டுமே மிகவும் பிடிக்கும்… அவனிடம் ஒட்டும் அளவுக்கு அனுவிடம் கூட அவள் ஒட்டியதில்லை… முகில், அவ்னீஷ் இருவரும் அவளுக்குப் பிடித்த மாமா தான்… எனினும் ஆதர்ஷ் அவளின் செல்ல மாமா… நண்பனும் கூட… அவனும் வெளியூரிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து இன்று தான் வந்திருந்தான்… காலையில் அவன் வந்ததும் “தர்ஷ் மாமா… என்று அழைத்தவளை பாசத்தோடு அணைத்துக்கொண்டான்…

“இவ்வளவு நாள் எங்க போயிட்ட தர்ஷ் என்ன விட்டுட்டு…”

அவளின் தர்ஷ் என்ற அழைப்பில் அவன் நேசம் பன்மடங்காகும்… அவளைத் தவிர ஒருவரைகூட அவன் தர்ஷ் என்று அழைக்கவிட்டதில்லை… ஆரம்பத்தில் ஆதி, அர்ஷ் அர்ஷ் என்று மழலையில் விளித்தவள், இப்பொழுது தர்ஷ் என்று அழைக்கிறாள்… இருந்தும் சில நேரங்களில் அர்ஷ் என்று வேண்டுமென்றே அழைக்கையில் அவனுக்கு அவளின் விளையாட்டு புரிந்து அவளுடன் அந்த நாள் முழுவதும் செலவிடுவான்… அவனுடன் இருப்பதில் அவளுக்கு அவ்வளவு ஆனந்தம்… அதை அந்த வீட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள்…

“வேலைடா குட்டிமா…”

“உனக்கும் உன் வேலை தான் பெருசா போச்சு… போ… பாட்டி தாத்தாக்கும் அவங்க வேலை பெருசு… அம்மா, அப்பாக்கு அவங்க வேலை பெருசு… முகில் மாமாக்கும் சின்ன மாமாக்கும் அவங்க வேலை பெருசு… எனக்கும் என் வேலை பெருசு….”

அவளின் கோபம் அவனுக்கும் புரிந்தது… தன்னுடன் யாரும் நேரம் செலவிடவில்லை என்கிற அவளின் ஆதங்கம் அவனுக்கு புரிந்தது… அவனை தவிர மற்றவரிடம் அவள் அதிகம் ஒட்டமாட்டாளென்ற உண்மையும் அவனுக்கு புரிந்தது… தானும் இல்லாத போது, மற்றவர்களிடத்தில் செல்லவும் அவளுக்கு மனமில்லை… அதுவும் அவனுக்கு புரிந்தது… தன்னை தேடியிருக்கிறாள் என்பதே அவனுக்கு உவகை அளித்தது… இருந்தும் அவளுடன் இருக்க முடியாமல் போன நாட்களை எண்ணி மனம் வருந்தினான்…

“என்ன வேலைடா குட்டிமா…?”

“உங்கிட்ட சொல்லமாட்டேன்…”

“தர்ஷ் மேல கோபமா?...”

“…………..”

“குட்டிமா…”

“……………”

“யாரும் பேசவேண்டாம்…”

“தர்ஷும் பேசகூடாதாடா?...”

அவனின் கேள்வி அவளை ஏதோ செய்ய… “தர்ஷ்…” என்று அவன் மேல் சாய்ந்து கொண்டாள்…

அவளின் வருத்தம் கண்ணீராய் வழிந்தது… “என்ன விட்டு இனி போக மாட்டல்ல தர்ஷ்…?... “

“மாட்டேண்டா குட்டிமா… நீ அழாதேடா… எனக்கு கஷ்டமா இருக்கு குட்டிமா…” என்றவனின் கண்களும் கண்ணீர் சிந்தியது…

“நீயும் அழாத தர்ஷ்… எனக்கும் கஷ்டமா இருக்கு நீ அழுதா…”

அதன் பிறகு “தர்ஷ், இத பாரு, நான் வரைஞ்சது, தர்ஷ் இங்க பாரு நான் செஞ்சது…” என்று எடுத்து காட்டியவள், “தர்ஷ் எனக்கு பாட்டு தெரியுமே, ஆட கூட தெரியுமே…” என்று ஆடி பாடி காட்டினாள்…

அவளின் அந்த மழலை மொழி பாட்டை ரசித்தவன், அவளுடைய குட்டி குட்டி பரத ஜதியின் அபிநயத்தில் தன்னை முழுவதும் மறந்தான்…

“எப்படி தர்ஷ்… நல்லா ஆடினேனா?...”

“என் குட்டிமா… சூப்பரா ஆடிட்டடா…”

“இதெல்லாம் என் மிஸ் சொல்லி கொடுத்தாங்க…”

“மிஸ்-ஆ?...”

“ஆமா தர்ஷ்… என் மிஸ்….”

“யாருடா அந்த மிஸ்?...”

“அவங்க நைட் வருவாங்க… அப்போ நான் அவங்கள நான் உனக்கு காட்டுறேன்… சரியா?...”

“சரிடா… மிஸ் பெயர் என்ன?...”

(ஏனோ அவனுக்கு அவளுக்கு நடனம் சொல்லி கொடுத்தவளின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது… சிறு குழந்தைக்கு கூட இவ்வளவு அபிநயத்துடன் ஆட சொல்லி கொடுக்க முடியுமா என்றெண்ணி வியந்தான்…)

“சஸ்பென்ஸ்…”

“ஹ்ம்ம் பாருடா… எனக்கே சஸ்பென்ஸா?...”

“ஆமா… தர்ஷ்… உனக்கு தான் சஸ்பென்ஸ்… நீ ஊருக்குப் போனதிலிருந்து அவங்க தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்… நீ என்ன விட்டுட்டு போனல்ல… சோ… உனக்கு பனிஷ்மென்ட்… மிஸ் நேம் நைட் தான் சொல்லுவேன் உனக்கு…” என்று கொஞ்சம் கோபமாக கொஞ்சம் குழந்தையாக சிரித்தாள் அபி…

ஏனோ அவளின் அந்த பதிலில் அவனுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது… “ஹ்ம்ம்… நைட் எப்படியும் தெரிஞ்சிடுமே… அப்போ பார்த்துக்கலாம்… பட்… பெயராச்சும் தெரிஞ்சிருக்கலாம்… ஹ்ம்ம்ம்…” என்று எண்ணமிட்டான்….

அவன் சாதாரணமாக பெண்களின் பின் சுற்றும் ரகம் இல்லை… தன்னை தவிர மற்றவரிடம் பழக யோசிப்பவள் அந்த பெண்ணிடம் மட்டும் எப்படி இவ்வளவு பழகினாள் என்ற சிறு பொறாமையும், அவனின் செல்ல குட்டிமாவின் மனதை வென்றவளைப் பார்க்கும் ஆர்வமும் அவனை இவ்வாறு        எண்ணவைத்தது…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.