(Reading time: 29 - 57 minutes)

 

ன்னடா… ஆதி… அபி என்னமோ மிஸ்-னு சொல்லுறா?..”

“ஆமாடா… எங்கிட்டயும் வந்ததிலிருந்து அந்த மிஸ் புராணம் தான்…”

“அப்படி என்னடா அந்த மிஸ் உன்ன விட ஸ்பெஷல்?...”

“அது அப்படிதான் முகிலா… அபிக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றார் கோதை…

“ஆமா முகிலா… அத நானும் பார்த்தேன்… அந்த பெண்ணும் பார்க்க லட்சணமா பழக நல்லவிதமா தெரியுறா…” என்றார் சுந்தரம்…

“நீங்க சொல்லுறத பார்த்தா உங்க ரெண்டு பேருக்கும் கூட பிடிச்சிருக்கு போலயே…” என்று இழுத்தான் முகிலன்…

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பெரியவர்கள் இருவரும் மௌனமாக புன்னகைத்துக் கொண்டனர்…

அதை முகிலனின் பார்வை கண்டு கொண்டது… ஓஹோ கதை அப்படி போகிறதா?... சரிதான்… இது யாருக்கு விரிச்ச வலை?... அவ்னீஷிற்கா? இல்லை ஆதர்ஷிற்கா?...

“அவளை மட்டுமில்லை அவள் தோழியையும் பிடிச்சிருக்கு… ரெண்டு பேரும் நல்ல பொண்ணுங்க…” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் கோதை….

(சரிதான்… அப்போ ரெண்டு பேருக்கும் வலை விரிச்சிட்டாங்க…. என்று சிரித்துக் கொண்டான் முகிலன் என்ற முகிலேஷ்…)

“என்னடா எதுக்கு சிரிக்குற நீ இப்போ?...”

“அது ஒன்னுமில்லைடா ஆதி…”

“நீ ஒன்னுமில்லைன்னு சொன்னா அதில் ஓராயிரம் அர்த்தம் இருக்கும்னு எனக்கும் தெரியும்…”

“அப்படியா.. அப்போ எதாச்சும் ஒரு அர்த்தம் சொல்லேன்டா…”

“டேய்… விளையாடாத… ஒழுங்கா சொல்லு…”

“பாருங்கம்மா… இவனை…”

“டேய்… நீயும் நானும் தான பேசிட்டிருக்கோம்… அம்மாவ ஏண்டா இப்போ உள்ளே இழுக்குற?...”

“அடடா… உங்க சின்னப்பிள்ளை சண்டை என்னைக்கு தான் ஓயப்போகுதோ?... தெரியலை…”

“கோதை… இதை இன்னைக்கு நேற்றா நாம பார்க்குறோம்… எப்பவும் நடக்குறது தான… விடு மா….”

“நீங்க இப்படி செல்லம் குடுத்து குடுத்து தான் இவனுங்க இப்படி அட்டகாசம் செய்றானுங்க…”

“நான் மட்டும் தான் செல்லம் குடுத்தேனா?... நீ குடுக்கலையா?...”

“உங்க அளவுக்கு நான் குடுக்கலை…” என்ற கோதையிடம்…

“எந்த அளவுன்னும் சொல்லிட்டா தேவலை…” என்றார் சுந்தரம்…

“அடடா… எங்கள சொல்லிட்டு இப்போ நீங்க சண்டை போட்டுக்கறீங்களே… என்னடா ஆதி, இதுக்கு நாம பரவாயில்லை போலயேடா…”

“ஆமாடா… முகிலா… நாம பெட்டர் தான்டா… இந்த பெரியவங்க சண்டையில சின்னப் பசங்க நம்மள இழுத்து விட்டாலும் விடுவாங்க…”

“சரியா சொன்னடா ஆதி, என்ன நடந்த போதிலும் நாம பிரியாம ஒற்றுமையா இருக்கனும்டா…. நம்மள பிரிக்க பெ…ரி…ய சக்தி முயற்சி பண்ணினாலும் நாம அசையாம இருக்கணும்டா…” என்றவனின் முதுகில் ஒன்று போட்டார் கோதை….

“அய்யோ அம்மா… வலிக்குது…”

“படவா… யாருடா உங்கள பிரிக்க பார்க்குறது?... ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் முன்னாடி அடிச்சிக்கிட்டது என்ன?... இப்போ இப்படி வாயடிக்கிறது என்ன?...”

“அதெல்லாம் சும்மா அம்மா… நாங்க சும்மா விளையாண்டோம்… நீங்க அத நம்பிட்டீங்களா?... அய்யோ அய்யோ….” என்று வடிவேலு சார் பாணியில் சொல்லிவிட்டு “என்னடா… ஆதி…. அம்மாக்கு நீயாச்சும் எடுத்து சொல்லேண்டா பாவி…” என்று அவனையும் இழுத்து விட்டான்…

ஆதர்ஷ் பேச ஆரம்பிக்கும் முன் “கோதை இவர்களை பேச விட்டால் நாள்முழுக்க வாயாடி கொண்டிருப்பார்கள்… நீ அபியுடன் சென்று ஷன்வி - ரிகாவை அழைத்து வா…” என்று கூறினார் சுந்தரம்…

“சரிங்க…” என்று கோதை போய்விட்டார்….

“அப்பா… யாரது?.. ஷன்வி-ரிகா?...” என்று கேட்டவன் ஆதி இல்லை முகிலன்…

“அபியோட மிஸ்…”

“ரெண்டு பெயரா இருக்கு….?”

“ஒரே பெயரை ரெண்டு பேருக்கும் வைக்க முடியாதே முகிலா…”

“ஓ… அப்போ அந்த மிஸ் இதுல யாரு?... ஷன்வியா?... ரிகாவா?...” என்று யோசித்த ஆதர்ஷை

“அபியோட மிஸ் பேரு ஷன்வி தான அப்பா?...” என்ற முகிலனின் குரல் கலைத்தது…

“இல்லடா என் அறிவு மகனே… அபியோட மிஸ் ரிகா தான்… ஷன்வியும் ரிகாவும் சேர்ந்து அந்த ஸ்கூல் நடத்துறாங்க…” என்றவர், “வாங்க அருணாச்சலம்…” என்று அங்கு வந்தவரை வரவேற்க சென்றுவிட்டார்…

“அப்பாடா… ஒரு வழியா… அப்பா சொல்லிட்டார்… இவரை இத சொல்ல வைக்குறதுக்குள்ள எவ்வளவு போராட்டம்…. ஹ்ம்ம்..” என்று சலித்துக்கொண்டான் முகிலன் தனக்குள்…

“ரிகா… ஹ்ம்ம்… நல்ல பெயர் தான்… வித்தியாசமா கூட இருக்கு… அதனால தான் என் குட்டிமாக்கு அவங்கள பிடிச்சிட்டோ…. எது எப்படியோ, அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்… இத்தனை நாள் என் செல்லத்தை தனியா விடாம பார்த்துக்கிட்டதுக்கு…” என்று நினைத்தவனின் இதழ்களில் புன்னகை வளர்ந்தது…

“என்னடா மச்சான்… தனியா சிரிக்கிற?...”

“எதுமில்லைடா…”

“எங்கிட்ட மறைக்காம சொல்லு… என்ன விஷயம்?...”

அவனிடம் காலையிலிருந்து இப்போது வரை நடந்ததை கூறியவன், “வாடா போகலாம் தேங்க்ஸ் சொல்ல…” என்றான்…

“ஹ்ம்ம்… போகலாமே…” என்றான்… முகிலனுக்கு தெரியும், ஆதர்ஷ் பெண்களிடம் மரியாதையாக பழகுபவன், வழிபவன் அல்ல… இந்த பெண்ணிடம் தேங்க்ஸ் சொல்ல மட்டுமே விரும்புகிறான்… வேற எண்ணங்கள் அவன் மனதில் இல்லை என்பது… இவள் மட்டுமல்ல எந்த பெண்ணிடமும் அவன் மனம் செல்லாது…

ங்கே…. மூன்று பேரும் மூன்று விதமான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நேரம் கோதை வந்து ரிகாவை அழைத்தார்… “ஷன்வி-ரிகா சாப்பிட போகலாம்… வாங்க…” என்றவர், அங்கிருந்த அவ்னீஷைப் பார்த்து நீயும் இங்கே தான் இருக்குறீயாடா… சரி வாங்க சேர்ந்தே போகலாம்…” என்றார்…

ரிகா அபியின் கைபிடித்து கோதையுடன் செல்ல, ஷன்வி ரிகாவின் அருகில் அவளுடன் செல்வதை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டு பின் தொடர்ந்தான் அவ்னீஷ்… 

எல்லோரும் ஒன்றாக உணவுண்ண அமர்ந்திருக்க, அங்கே முகிலனும் ஆதர்ஷும் மட்டும் இல்லை… அவர்களின் பால்ய நண்பன் ஒருவனிடத்தில் கதை அளந்து கொண்டிருந்தனர் இருவரும்…

“அவர்கள் வரும் வரை காத்திருந்தால் அபி பசி தாங்க மாட்டாள்… நாம் சாப்பிடலாம்…” என்று சுந்தரம் கூறிவிட்டார்…

சாப்பிட்டு முடித்ததும் ஷன்வி-ரிகா கிளம்ப ஆயத்தமானதை பார்த்து, “ஒரு நிமிஷம்…” என்றார் கோதை…

(நிறைய குழப்பங்கள் இருப்பதாக போன வாரம் எல்லாரும் சொல்லியிருந்தீங்க… இந்த வாரம் அதெல்லாம் ஓரளவு சரியாகிருக்கும் என்று நம்புகிறேன்… ஹீரோ ஹீரோயின் யாரென்று இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க… அபியை பற்றி கொஞ்சம் தகவல்களும் கொடுத்துவிட்டேன்… இந்த வாரமும் சில குழப்பங்கள் இருக்கலாம் உங்களில் சில பேருக்கு… அதை அடுத்தடுத்து வரும் வாரப் பதிவுகளில் சரி செய்கிறேன்… ஹ்ம்ம்… மீண்டும் அடுத்த வாரத்தில் காதல் நதியில் சந்திப்போம்…)

தொடரும்

Go to episode # 02

Go to episode # 04

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.