(Reading time: 29 - 57 minutes)

 

ன்ன அனு உன் தம்பியை இப்படி பார்க்குற?... என்னாச்சுடா?...”

“இல்லங்க… நான் எப்பவும் ஈஷ்-னு கூப்பிட்டால் எங்கிட்ட அன்னைக்கு நாள் முழுதும் பேச மாட்டான்… சண்டைக்கு வருவான்… கோபப்படுவான்… இன்னைக்கு ஒன்னுமே சொல்லாம போறான்… அதான் யோசிக்கிறேன்…”

“அவன் கவனிக்காமல் கூட போயிருக்கலாம் அனு…”

“நிச்சயமாய் இல்லங்க… அவன் ஒரு மாதிரி இருக்குறான்…”

“நீ வீணா குழப்பிக்கிற அனு… அவன் நார்மலா தான் இருக்குறான்… அவன் வழியில் விடு… அப்படி எதும் இருந்தால் அவனே உன்னிடம் வந்து சொல்லிடுவான் கண்டிப்பா…  உன் தம்பி தான் ஓட்டவாயாச்சே… அது உனக்கு தெரியாதா?...”

“என் தம்பி ஓட்டவாயா?...” என்று முறைத்தாள் அனு…

“ஓ… அவனை மட்டும் சொல்லிட்டேன்னு கோபமா?... நீயும் தாண்டா செல்லம்…”

“என்னது!... நானுமா?...”

“ஆமாடா தங்கம்…” என்று கண்ணடித்தான்…

அதிலும் கோபம் குறையாத அவளைப் பார்த்து சிரித்தவன், “அட மக்கு, நீ என்னிடம் எதையும் மறைத்திருக்கிறாயா?...””

“இல்லை..” என்று தலை அசைத்தாள்…

“அதை தான் நானும் சொன்னேன் இப்போ… புரிஞ்சதா அனு…”

“ஹ்ம்ம்…” என்று அசடு வலிய சிரித்தாள்…

“ஹாஹா… வா போகலாம்… எனக்கு பசிக்குது…” என்று சன்னமாக முணுமுணுத்தான்… வெட்கத்துடன் அவனைக் கிள்ளிவிட்டு ஓடி விட்டாள்…

“அனு சொல்லுற மாதிரி இவன் ஒரு மார்க்கமா தான் இருக்குறான்… பய எதும் காதலில் சிக்கிட்டானோ?... ஹ்ம்ம் சீக்கிரம் தெரிஞ்சா நல்லது…” என்று யோசித்தபடி அவனும் சென்றான்…

“இவன் ஷன்வியிடம் நெருக்கம் காட்டுவது போல் தெரிகிறது… ஒரு வேளை அவனுக்கு இவளைப் பிடித்திருக்கிறதா?... ஷன்வியிடமும் சிறு தடுமாற்றம் தெரிகிறது… அது இவனால் தானா?... அவளுக்கு நல்வாழ்வு கிடைத்தால் அதுவே எனக்கு போதும்…” என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள் ரிகா…

“இவனிடம் பேசக்கூடாதென்று மனதிற்கு எவ்வளவு உரைத்தும் பயனில்லையே… அவனைக் கண்ட நொடியில் மனம் ஏன் அவனிடம் செல்கிறது… அவனிடத்திலிருந்து என்னால் கண்களை அகற்ற முடியாமல் போகிறதே ஏன் ?... ரிகா இதை பார்த்தால் என்ன நினைப்பாள்?... தவறு ஷன்வி அவனின் உயரம் அறிந்தும் அவனிடம் ஆசை கொள்ளாதே… இது நடவாது… விலகி விடு…” என்று தனக்குள் புலம்பினாள் ஷன்வி…

“இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்… நன்றாக வாயடித்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது ஏன் ஊமையாகி போகிறாள்… ஏனிந்த திடிர் மாற்றம்?... என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையா… இல்லையே… அக்கா வருவதற்கு முன் வரை சகஜமாக தானே இருந்தாள்.. பிறகென்ன ஆனது… ஓ… மேடம் யோசனை அவ்வாறு போகிறதா?...  அதனால் தான் என்னை விட்டு விலக முடிவெடுத்து கிளம்ப எத்தனித்தாளா?.. மக்கு ஷன்வி…” என்று அவளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் அவ்னீஷ்…

வாடா முகிலா…”

“வந்தேன்டா சு….  சாரி… ஆதி….”

“டேய்… இன்னும் நீ அத விடலையா…?”

“அதான் சொல்ல வந்ததை உன் சுட்டெரிக்கும் பார்வையில் தடுத்திட்டியேடா நண்பா..”

“நீ அடி தான்டா வாங்க போற…”

“அது மட்டும் தான்டா பாக்கி… உன் தங்கச்சி ஏற்கனவே சொல்லிக்கிட்டு தான் இருக்குறா…. நீ அத நிறைவேத்த தான துடிக்கிற… தெரியும் டா.. உன்னை….”

“ஹாஹா… மயூரி எப்படி இருக்குறாடா?... நீ அவளை நல்லாப் பார்த்துக்கறீயா?...”

“இதோடா… அண்ணனும் தங்கச்சியும் பேசிக்கிறதே இல்லை பாரு… எனக்கு போன் பண்ணுறாளோ இல்லையோ… உனக்கு வாரம் தவறாம பேசிடுறாளே.. அப்பறம் என்னடா… பாசமலர் சிவாஜி சார் நடிப்பு வேண்டியிருக்கு?...”

“நடிப்பா?...”

“டேய்.. டேய்.. போதும்டா…”

“ஹ்ம்ம்..”

“ஹேய்… மச்சான்… உன் ஸ்பீச் அருமைடா… என்ன ஒரு தன்னடக்கம்டா… இப்போ தான் டா தெரியுது உன் பிசினெஸ் ட்ரிக்…”

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லைடா…  நம்ம தொழிலாளிகளுக்கு நாம தானடா செய்யனும்…”

“சரிடா.. மச்சான்… நல்லா யோசிச்சு தான் இத்தனை சதவீதம் கொடுக்கப்போறதா முடிவெடுத்திருக்கியா?...”

“இதுல யோசிக்க என்னடா இருக்கு… உழைப்புகேற்ற ஊதியம் அவங்களுக்கு கிடைச்சிருக்கு… சிம்பிள்…”

“மச்சான்… அம்மா அப்பா என்ன சொன்னாங்கடா?...”

“வா முகிலா… நாங்க சொல்ல என்னப்பா இருக்கு… என்னைக்கு இந்த கம்பெனி பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தோமோ அப்பொழுதே எல்லா முடிவுகளும் அவனின் கையில் தான்… என்னை விட என் பையன் திறமையா தொழிலையும் கவனிச்சு, தொழிலாளிகளின் நன்மதிப்பையும் சம்பாதிச்சிருக்கான்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குதுப்பா…” என்றார் சுந்தரம்…

“வாங்கப்பா… உங்க பையனாச்சே… அவனுக்கு சொல்லியாதரணும்?...”

“உன் தோழனாச்சேப்பா… நான் புதுசா சொல்லிதர என்ன இருக்கு… நீ தான ஆல்-இன்-ஆல் அவனுக்கு எப்பவும்…”

“அய்யோ அப்பா… இதென்ன புது கதை…?”

“பழைய கதைதாண்டா முகிலா…”

“டேய் ஆதி… இதுக்கெல்லாம் காரணம் நீதானாடா…? நல்லா வருவ மச்சான் நீ….”

“உன் ஆசைபடியே நடக்கும் மச்சான்…”

“சரிடா… ரெண்டு பேரும் அரட்டை அடிச்சது போதும்… போய் சாப்பிடுங்க…”

“சரிப்பா... ஆமா… அம்மா எங்கப்பா?...”

“இப்போதான் என் நினைவு உனக்கு வந்ததா முகிலா?...”

“அம்மா…” என்று ஓடிவந்து அவரை அணைத்துக்கொண்டான் முகிலன்…

“கண்ணா… அம்மாவை இப்பொழுதாச்சும் பார்க்க வந்தியே….” என்றவரின் குரல் கம்மியிருந்தது…

“இல்லம்மா… கொஞ்சம் வேலை….” என்றவனின் குரலிலும் அழுகை தெரிந்தது….

அவனின் அழுகை குரல் அவரை ஏதோ செய்ய, அவனின் மனதை மாற்ற, “மயூரி எப்படி இருக்காடா… அவளையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே கண்ணா…” என்றார்..

அவனுக்கு தனது தாயின் பேச்சு மாற்றம் புரிந்து இளநகை அரும்பியது… அவரும் அதை கண்டு புன்னகைப் பூத்தார்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.