(Reading time: 6 - 11 minutes)

13. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ரவிந்த் பார்வை கூர்மையாக இருந்தது. ஷானுதா ஏவிய பிரமாஸ்திரம் அவனை நோக்கி அசுர வேகத்தில் வந்தது. அரவிந்தின் போர்ப்படை அவனை காப்பாற்ற ஓடி வந்தனர். மாதவன் முகத்தில் சிறிது பதட்டம் தெரிந்தது. ஷானுதா மனதில் பயம் நிறைத்திருந்தது. உலகமே பயத்தில் இருண்ட நேரம் அது. அரவிந்த் இறக்க போகின்றான் என்று எல்லாரும் நினைத்த நேரத்தில் அசுர வேகத்தில் வந்துக்கொண்டிருந்த  பிரம்மாஸ்திரம் சுழன்று ஷானுதாவை நோக்கி அதே வேகத்தில் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் ஷானுதாவின் உடலில் அது பாய்ந்தவுடன் ஒரு பெரிய ஒளிச்சிதறல் அங்கே தோன்றியது. அனைவரின் கண்களும் கூசியது. ஆனால் அரவிந்துக்கு மட்டும் ஷானுதாவின் உருவம் தெளிவாக தெரிந்தது. வலியில் ஷானுதா துடித்துக் கொண்டே மண்டியிட்டாள். அவள் கண்களில் கண்ணீர். அதை கண்டவுடன் அரவிந்த் மனம் மாறியது.

“நான் ஜெய்ச்சதுக்கு காரணம் உன்  பக்கம் நெறைய நம்பிக்கை இருந்துச்சு....ஆனா நான் சாகறதுக்கு காரணம்  என் பக்கம் துரோகம் மட்டும் தான் இருந்துச்சு... என்று ஷானுதா கடைசி வார்த்தைகளை கூறி ஆகாயத்தை பார்த்தாள். பிரகாச ஒளி மறையும்போதே ஷானுதாவின் உருவம் மறைந்தது. ஷானுதா இறந்தாள். அவள் இருந்த இடத்தில் நிலாராணியின் வில்லும் பிரம்மாஸ்திரம் மட்டுமே இருந்தது. திடிரென அரவிந்துக்கு துரயுகன் அன்று ஒருநாள் கூறிய ஒரு விஷயம் நியாபகதிற்கு வந்தது.

“பிரமாஸ்திரத்தை பத்தி ஷானுதாவுக்கு ஒன்னும் தெரியாது....அந்த பிரமாஸ்திரத்தை ஏவும் போது கவனம் சிதறவே கூடாது....அப்படி கவனம் சிதறி இந்த பிரமாஸ்திரத்தை யாரவது ஏவினால் பிரம்மாஸ்திரம் திரும்பிச் சென்று விட்டவரையே கொன்னுடும்! அந்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தை கையாள்வது ரொம்ப கஷ்டம்!”

Bommuvin Thedal

அப்போதுதான் மக்களுக்கும் அரவிந்துக்கும் ஷானுதாவின் மரணம் நிகழ்ந்த காரணம் புரிந்தது. இருண்ட வானம் மறைந்து சூரிய ஒளி தென்பட்டது. அரவிந்தை சுற்றி கரகோஷங்களுடன் மக்கள் வந்தனர். அரவிந்த் முகத்தில் நீண்ட நாள் கழித்து புன்னகை தெரிந்தது.

நிலாயுகமே தீய சக்தியில் இருந்து விடுதலை பெற்று இப்போது சுதந்திர நிலைமையை அடைந்தது. நிலாராணியின் வில் கோவிலில் மீண்டும் சேர்க்கப்பட்டது. பிரம்மாஸ்திரம் குமரிகாண்டத்தில் சேர்க்கப்பட்டது. ராஜேந்திரன் தன் நாட்டுக்கு சென்று தன் மக்களுக்கு அமிர்த நீரை சேர்த்தான். துரயுகன் தன நாட்டுக்கு தனது படையுடன் திரும்பினார். அடிமை ஆவிகள் எல்லாம் மேலோகத்தை அடைந்தன. குட்டிசாத்தான்களும் தங்கள் இருப்பிடத்தை அடைந்து சுதந்திரமாக வாழ ஆரம்பித்தனர். நிலாயுகத்தில் காடுகள் அழிந்து வீடுகள் நிரம்ப ஆரம்பித்தது. நிலாயுகத்தின் ராஜாவாக அரவிந்துக்கு தகுதி இருந்தாலும் அவன் இந்த ஜென்ம காலத்தை சேர்ந்தவன் அல்ல. அதனால் அவன் தன்னுடைய ஜென்ம காலத்திற்கு மாதவனோடு திரும்பி செல்ல முடிவெடுத்தான். மாதவன் தன்னுடைய வண்டியில் மாதவனை ஏற்றிக்கொண்டு காலத்தின் பாதையை கடந்து கொண்டிருந்தான். அரவிந்த் ஏதோ யோசனையில் இருந்தான்.

“அரவிந்த்!...”

“சொல்லு மாதவா?”

“என்ன யோசிக்கிற?”

“ஷானுதா சாகும் முன்னே தான் இறக்குறது தன்னுடைய பக்கம் துரோகம் தான் காரணம்னு சொன்னா..அதை தான் யோசிச்சிகிட்டு இருந்தேன்...”

“உண்மைதான்....அது அவள் மனசில இருக்குற வேதனை...ஒருவேளை நான் அவளுக்கு துரோகம் செய்யாம இருந்திருந்தா ஷானுதா இனிக்கு உயிரோட இருந்திருப்பா...”

“நீ ஏன் அவ சாவுக்கு காரணமா இருந்த?...உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு?”

“எனக்கும் அவளுக்கும் தொடர்பில்லை நான் நல்லதை செய்ய தான் வந்தேன்.....”

“எனக்கு புரில...நீ செய்த எல்லா காரணத்திலும் ஒரு காரணம் இருந்திருக்கு ...உணகுன் எதிர் காலத்தை பத்தி தெரிஞ்சுக்குற சக்தி இருக்கு! நீயே நினைச்சா ஷானுதாவை கொன்னிருக்க முடியும் ...ஏன் அதை செய்யலை?”

“நீ சொல்றது உண்மைதான்...ஆனா உனக்கு துணையா இருந்து காப்பத்துறது மட்டுமே என்னோட நோக்கம்....”

“உண்மையில் நீ யாரு?” – அரவிந்த் குரலில் தயக்கம் இருந்தது. அதை கேட்டவுடன் மாதவன் மெல்ல திரும்பி அரவிந்தை பார்த்து பேசினான்.

“நல்லதை நடத்த கடவுள் நேரடியா தான் வரணுமா?...என் மூலமா நிலாராணி வரகூடதா?” என்று மாதவன் கூறியவுடன் அரவிந்தின் மனதில் மகிழ்ச்சி பெருகியது. ஆச்சிரியத்தில் அவன் பேச்சே வரமால் திணறினான். திடிரென ஒரு மின்னல் வெளிச்சத்தில் எல்லாமே மறைந்தது.

Bommuvin Thedal"ஹேப்பி பர்த்டே " என்று எல்லாரும் பாட ஆரம்பித்தனர் . வீடே தோரணங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது . ஏனென்றால் இன்று அரவிந்தின் பிறந்தநாள் . 13 வயது தொடங்கும் அரவிந்தின் பெற்றோர் இம்முறை அவன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர் .

அரவிந்த் எல்லாவற்றையும் உணர்ந்தான். நடந்த எதுவும் கனவில்லை நிஜம்தான். மாதவனால் அவள் தற்போது இந்த காலகட்டத்துக்கு கொண்டு வரபட்டிருக்கிறான். பிறந்த நாளுக்கு வந்திருந்த விருந்தினர்கள்  அரவிந்துக்கு பரிசை குடுத்து விட்டு செல்ல ஆரம்பித்தனர். அன்று அரவிந்த் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான்.

நேரம் 9.30, அரவிந்த் உணவு உண்டப்பின் தன் அறைக்கு சென்றான். தன் படுக்கை நிறைய பரிசுகள் இருப்பதை கண்டான். ஆனால் அரவிந்த் அவனின் கட்டிலின் கிழே குனிந்து பார்த்த போது அங்கே ஒரு பெரிய பரிசு இருந்தது. அவன் அதை எடுத்தான். அந்த பரிசின் மேல் “மாதவன்” என்று பெயர் மட்டும் போட்டிருந்தது. அதற்குள் அவன் தம்பி சஞ்சய் அங்கு வேகமாக வந்தான்.

“அப்பாடி...இன்னும் எதையும் பிரிச்சு பாக்கலையா...நான் வரதுக்குள்ள எல்லாத்தையும் பிரிச்சு இருப்பேனு நான் பயந்திட்டேன்...” என்று பெருமூச்சு வாங்கியபடி கூறினான் சஞ்சய்.

“இல்ல சஞ்சய்...நீ பொய் அதை எல்லாத்தையும் உன் அறைக்கு எடுத்திட்டு போய்  பிரிச்சி எடுத்துக்கோ...அதெல்லாம் உனக்குத்தான்...ஆனா இந்த பரிசு மட்டும் எனக்கு. சரியா?” – அரவிந்த். மெல்ல புன்னகையுடன்.

“அப்படியா .,...டேன்க் யு அண்ணா...ஜாலி  ஜாலி “ என்று சஞ்சய் மிகவும் சந்தோஷத்தோடு படுக்கை மேல் இருக்கும் பரிசுகளை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று பிரித்து பார்க்க ஓடினான்.

அரவிந்த் அவன் கையில் இருக்கும் பரிசை பிரித்தான். அவன் நினைத்தது போலவே அதினுள் பொம்மு இருந்தாள். அரவிந்த் அவளை கையில் எடுத்து ஆச்சர்யத்துடன் எடுத்து பார்த்தான். ஆனால் பொம்மு ஒரு பொம்மையாகவே இருந்தாள்.

“பொம்மு!.....பொம்மு! என்கிட்டே பேசு பொம்மு “ என்று அரவிந்த் அழைத்தான்.

பொம்மு பேசவில்லை. அரவிந்த் மனதில் லேசான வருத்தம் தோன்றியது. ஆனால் அரவிந்த் சிரித்து கொண்டே போம்முவை அருகில் இருந்த மேடையின் மேல் உட்கார வைத்தான். மேஜை அருகில்ன் நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டு. போம்முவையே பார்த்தான். அவள் என்றாவது தன்னிடம் பேசுவாளா என்ற ஏக்கம் அவன் மனசில் இருந்தது. பொம்மு எந்த உணர்வும் இல்லாமல் இருந்தாள். 

முற்றும்

Go to Bommuvin Thedal episode # 12

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.