(Reading time: 13 - 26 minutes)

ந்த நள்ளிரவு நேரத்தில் நிலாயுகத்தில் பயங்கர சத்தம். நிலாயுகத்தின் மலையுச்சியை நோக்கி ராட்சதர்களின் படை விரைந்து கொண்டிருந்தது. கோவிலை காக்கும் குட்டிசாத்தான்கள் ராட்சதர்களை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். குட்டிச்சாத்தான்களின் தாக்குதலில் மலையிலிருந்து அத்தனை ராட்சதர்களும் தள்ளிவிடப்பட்டனர். ஷானுதா அந்த மலையடிவாரத்தில் ஷானுதா மெளனமாக நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தாள். ராட்சதர்கள் அத்தனை பெரும் மலையின் உச்சியை அடையமுடியாமல் மீண்டும் மீண்டும் குட்டிசாத்தான்களால் தாக்கப்பட்டனர்.

ஷானுதா இறுதியாக முடிவெடுத்து நிலாயுகத்தின் மலையுச்சியை நோக்கி ஏற ஆரம்பித்தாள்.

அதற்குள் அங்கே காட்டில் அரவிந்தின் படை பயங்கர பிரகாசத்துடன் வந்துக் கொண்டிருந்தது. அரவிந்தின்  படையில் ஆயிரம் ஆவிகளும் நாய்கள் கனிஸ் நாட்டின் மொத்த நாய் கூட்டமும் குமரிகாண்டத்தின் போர் வீரர்கள் என நிறைந்து காணப்பட்டது. மாதவனின் வண்டியில் அரவிந்த் இருந்தான்.

அவளுக்கு எதிராக ஷானுதாவின் படையும் இருந்தது.அவளின் படையில் கட்டேரிகளும் வினோத் ஜந்துக்களும் அரக்கர்களும் நிறைந்து காணப்பட்டது.

“நில்லு ஷானுதா” – துரயுகன் பயங்கர சத்தத்துடன். ஷானுதா திரும்பி நின்று அரவிந்தின் படையை நோட்டமிட்டாள்.

“உனக்கு முடிவு கட்டுற நேரம் வந்திடுச்சு....இனி உன்னால எதுவும் பண்ண முடியாது...” – ராஜேந்திரன்.

“ஒரு போர் படைக்கு பயப்படுவேன்னு நினைச்சீங்களா....பாக்குறீங்களா என்னோட சக்தி வாய்ந்த போர்ப்படையை” – ஷானுதா கண் அசைத்தவுடன் அங்கே கலவரம் நடக்க தொடங்கியது.

எண்ணமுடியாத அளவுவில் இருந்த  காட்டேரிகளின் தாக்குதளை ஆரம்பித்தன. வினோத ஜந்துக்கள் காட்டில் கலவரம் நடத்த தொடங்கின. நாய்களின் படை பல விரைந்து பல ஜந்துக்களை தாக்க ஆரம்பித்தன. மாதவன் வண்டியை நிலாயுகத்தின் மலையை நோக்கி செலுத்தினான். ராஜேந்திரனின் கழுகுபடைகள் வினோத பறவைகளை நோக்கி தாக்குதலை நடத்த ஆரம்பித்தன. குமரிகாண்டத்தின் வீரர்கள் காட்டேரிகளிடம் பயங்கர சண்டையை நடத்திக்கொண்டு இருந்தனர்.

“ரொம்ப ஆச்சிரியமா இருக்கா?...இவங்களை சமாளிக்க முடியுமான்னு முயற்சி பண்ணுங்க...எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று சொல்லி ஷானுதா மீண்டும் மலையுச்சியை நோக்கி நடந்தாள்.

“அரவிந்த் எங்கே?...அரவிந்த் “ என்று ராஜேந்திரன் கலவரத்தின் நடுவே தேடியபடி.

ஷானுதா மலையுச்சியை அடைவதை கழுகுகள் தடுக்க ஆரம்பித்தன. ஆனால் ஷானுதாவின் சக்திக்கு எதிராக எந்த கழுகும் ஜெயிக்கவில்லை. நிலாயுகமே போரால் எங்கும் பயங்கரமாக இருந்தது. எங்கும் தாக்குதல்கள்.

இறுதியில் ஷானுதா மலையுச்சியை அடைந்தாள். அவளின் வரவை தடுக்க தைரியத்துடன் குட்டிச்சாத்தான்கள் நின்றார்கள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை எதிர்த்து நிக்க தோணும்?....இனி பயம் பயம் மட்டும் தான் உங்க மனசுல இருக்கணும்...” – ஷானுதா தன் வலது கைகளை உயர்த்தி சக்திகளை திரட்டினாள். ஷானுதாவுக்கு குட்டிசாத்தான்களை சமாளிப்பது மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால் அவளின் சக்திக்கு எதிராக நின்ற குட்டிச்சாத்தான்கள் தீக்கு இறையாகி கொண்டிருந்தன. அதில் சியாத்தும் இறந்து போனார்.

“குட்டிசாத்தான்களே....வேணாம்...தப்பிச்சி போய்டுங்க...” – செங்கோலன் பயங்கர சத்தமாக. குட்டிச்சாத்தான்கள் கோவிலை விட்டு விலகி தப்பி ஓடின.

ஷானுதா மெல்ல அந்த நிலாயுகத்தின் கோவிலுக்குள் சென்றாள். கோவிலுக்குள் திமிருடன் நடந்து வந்த ஷானுதா அங்கிருக்கும் மக்களை கண்டுகொள்ளாமல் நிலாராணியின் சிலையை நோக்கி சென்றாள். மக்கள் அனைவரும் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தன. நிலாராணியின் சிலையை கேலியாக கண்டாள் ஷானுதா. அந்த சிலையின் பாதத்தில் ஒரு பழமையான வில் ஒன்று இருந்தது. அது மிகவும் பயங்கர வடிவங்களை கொண்டிருந்தது. ஷானுதா அந்த வில்லை கையில் எடுத்து பார்த்தாள். அவோல் மனதில் பெரும் சந்தோஷம். அந்த சந்தோஷத்துடன் நிலாராணி சிலையின் முகத்தை பார்த்தாள்.

“இனி உங்களால் என்ன செய்ய முடியும் நிலாராணி?” என்று கேலியாக கேட்டுவிட்டு அங்கிருந்து கோவிலின் வெளியே செல்ல ஆரம்பித்தாள் ஷானுதா.

ஆரம்பத்தில் ஷானுதாவின்  படையை எதிர்த்து சமாளித்த அரவிந்தின் படை. தற்போது வலுவிழந்துக் கொண்டே இருந்தது. ஆயிரம் ஆவிகள் படையும் அரக்கர்களும் பயங்கரமாக் மோதி சண்டை போட்டுகொண்டு இருந்தன. ஆனாலும் அரவிந்தின்  நாய் படையில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

“எல்லாரும் கவனிங்க” என்று ஷானுதா உரக்க கத்த அந்த சத்தம் நிலாயுகத்தையே அமைதியாக்கியது. அனைவரும் ஷானுதாவையே கண்டனர். அவள் கையிலிருக்கும் வில்லும் பிரமாஸ்திரமும் மின்னிக் கொண்டிருந்தன. அரவிந்தின் படை அதை கண்டு அதிர்ச்சி ஆகியது.

“உங்க அத்தனை பாதுகாப்பை மீறி...இந்த அத்தனை தாக்குதல்களை மீறி ....இந்த கோவிலோட சக்தியை மீறி...நிலாராணியின் வில்லை எடுத்திட்டேன்....” என்று ஷானுதா அந்த வில்லை உயர்த்தி காட்டினாள். ராஜேந்திரன் கோபமாக பார்த்தான். அதே நேரம் மாதவனின் அறிவுரைப்படி அரவிந்த் கோவிலின் உள்ளே இருந்த மக்களை ஷானுதாவுக்கு தெரியாமல் வெளியே மறைமுகமாக அவர்களை அனுப்பி கொண்டிருந்தான். அத்தனை மக்களும் மலையிலிருந்து கிழே இறங்கி பதுங்கி கொண்டிருந்தனர். ஷானுதா போற்படைகளை பார்த்து பேசிகொண்டிருந்தாள்.

“இனி என்னை உங்களால் தடுக்க முடியாது...அரவிந்தை என்கிட்டே ஒப்படைச்சிட்டு உங்க உயிரை காப்பாத்திக்க ஒடுங்க” – ஷானுதா சிரித்தபடி..  

“உன்னோட மரணத்தை பாக்காம அவங்களால எப்படி போக முடியும்?...” என்று மாதவனின் குரல் அந்த கோவிலின் பக்கம் இருந்து ஷானுதாவுக்கு எட்டியது. அவள் திரும்பி பார்த்தபோது மாதவன் நிலாயுகத்தின் கோவிலின் கோபுரத்தின் மேல் நின்றிருந்தான்.  ஷானுதா மெல்ல கோவிலின் அருகே வந்து நின்று மாதவனை சிரிப்புடன் பார்த்தாள்.

“என்னை அலைய வைக்காம நீயே என் முன்னாடி சரியான நேரத்துல வந்திருக்க..பிரமாஸ்திரத்தை வச்சு முதல்ல உன் உன் உயிரை தான் நான் எடுக்கணும்” என்று ஷானுதா கையில் வில்லை உயர்த்தினாள்.

“முடிஞ்சா...முயற்சி செய்” – மாதவன் தயாராக.

ஷானுதா கையில் வில்லில் அந்த பிரமாஸ்திரத்தை பிடித்து மாதவனுக்கு குறி வைத்தாள். அரவிந்தின் போற்படையே அங்கே நடக்க போவதை பதட்டத்துடன். ஷானுதா அஸ்திரத்தை ஏவினாள். பிரம்மாஸ்திரம் மாதவனை நோக்கி மின்னலென பாய்ந்தது. ஆனால் நொடியில் மாதவன் கோபுரத்தில் இருந்து தரைக்கு குதித்தான். அஸ்திரம் கோவிலின் கோபுரத்தை தாக்கியது. இடியே விழுந்தது போல ஒரு வெடியுடன் கோபுரம் உடைந்து மலையிலிருந்து கிழே விழ ஆரம்பித்தது. அஸ்திரம் மீண்டும்  ஷானுதாவின் கைக்கு வந்த போது அவளுக்கு ஒரு அதிர்ச்சி. கீழ் நோக்கி விழுந்த கோபுரம் தீய மரத்தில் மோதி மீண்டும் ஒரு பெரும் இடி சத்தம் கேட்டது. தீய மரம் அந்த புனிதமான கோபுரம் பட்டவுடன் கருகி போனது.. ஷானுதா அதை கண்டு உறைந்து நின்றாள். அரவிந்தின் போர்ப்படை சந்தோஷ கரகோஷத்துடன் போரை மீண்டும் தொடங்கினர்.

”என்ன?...இது எப்படி நடக்கும்?” – ஷானுதா.

“தீய மரத்தை அழிக்கணும்னா நிலாயுகத்தின் கோவிலே அழிஞ்சு போகும்னு விதி எழுதப்பட்டிருக்கு ஷானுதா...இப்ப அது உண்மை ஆகிடுச்சுல?...என்ன பாக்குற?...தீய மரத்தை அழிக்கிற சக்தி நிலாயுகத்தின் கோவிலுக்குதான் இருக்கு...” – மாதவன் சிரித்தபடி

ஷானுதா முகத்தில் கோபம் தெரிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.