(Reading time: 12 - 23 minutes)

06. என் இதய கீதம் - Parimala Kathir

ல்லூரி நிறைவு பெறும்  நேரம் நெருங்கி கொண்டிருந்தது .  அபி நிமிடத்துக்கு மூன்று தடவை போனை எடுத்து பார்த்த வண்ணம் இருந்தாள்.  அஸ்வினிடம்  இருந்தும் சங்கர் இடம் இருந்து போன் வராததால் சற்று குழப்பமாகவே இருந்தாள். அவளது செய்கையை பார்த்து புவிகாவும் காயாவும் தமக்குள்ளேயே சிரித்தனர்.  

En ithaya geethamகாயாவும் அபியும் காலேஜ் முடிந்ததும்  ரெவரன்ஸ் புக் எடுக்க காலேஜ் லைப்ரரிக்கு சென்று விட்டனர். 

புவிக்கா பிரின்சியின்  ஆபீஸ் வாசல் அருகில் அவரது அனுமதிக்காக  காத்திருந்தாள்.  திடீரென பழக்கமற்ற ஓர் ஆணின் குரல் அவள் பின்னின்று கேட்டது. 

"எக்ஸ்கியூஸ்மி  மிஸ் ...."  என்ற கம்பீரமான ஆண்குரலில் அது வந்த திசை நோக்கி திரும்பினாள்.

எத்தனை செக்கனோ அல்லது நிமிடங்களோ அவளது மான்விழி  பார்வை அவனுள் மின்சாரம் போன்று தாக்கியது. 

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே

" யெஸ் ஹாவ்  கான் ஐ ஹெல்ப் யூ சார்...."

உன் வார்த்தை தேன் வார்த்ததே  

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

ஓ........ ஒ.......

லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே

உன் வார்த்தை தேன் வார்த்ததே

மௌனம் பேசியதே,... குளிர் தென்றல் வீசியதே...

ஏழை தேடிய  ராணி ... நீ... என்காதல்தேவதையே...

( பக் ரவுண்டு மியூசிக்)

அஸ்வின் புவிக்காவின் அழகிய மலர் முகத்தை  தன் இரு கைகளிலும் ஏந்தி 

"இத்தனை நாளும் என்னை தனியே தவிக்க விட்டு எங்கடி போனாய்? இந்த மூன்று வருஷமா உன்னை தேடி அலையாத இடமே இல்ல.  என்னை அப்பிடி பாக்காதே கண்ணம்மா உன் கரு விழி பார்வை என்னை கொள்ளாமல் கொள்கிறது."

அப்பொழுது ஆபிஸ் கிளாக் சுந்தரத்தின் குரலில் அஸ்வின் கனவுலகில் இருந்து மீண்டு வந்தான்.  

' ச்சா...  நானா இப்பிடி அவள் என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்." என்று அஸ்வின் மன போராட்டத்துடன் தனது  தலையை கோதியபடி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அமைதி இன்னையாகவே காணப்பட்டால் சரியாக சொல்லப்போனால் புவிக்காவும் அவனது ஆண்மை ததும்பும் தோற்றத்தில் சற்றே தன்னிலை மறந்து போனாள்.

இருவரது மனப் போராட்டங்களையும்  அறிந்திராத சுந்தரம்  

" புவிம்மா உன்னை சார் கூப்பிடுறார்  உள்ள போம்மா" என்ன்றார்.

"ம்.... சரிண்ணா நான் போய் பாத்துக்கிறன்." என்று சுந்தரத்திடம் கூறி உள்ளே செல்ல திரும்பியவள் அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக பெயர் தெரியாத அஸ்வினிடம் திரும்பி 

"அ.... அது...வ... வந்...வந்து ஏன் சார் என்..... என்னை கூப்பிட்டீங்க..?" என்று சற்று சங்கடத்துடன் கேட்டாள். 

ஆனால் மறந்தும் கூட அவள் அஸ்வின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.  

ஆனால் அவனோ பார்வையாலேயே தனது தேவதையை காதல் செய்து கொண்டிருந்தான்.

புவிகாவின் தடுமாற்றத்தையும் சங்கடத்தையும் ரசித்தவனாக 

"நான் என்னோட த..." என்று அவன் அவளது கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போதே,

"ஏம்பா சுந்தரம் இந்த புவிக்கா இருக்காளா இல்ல போய்ட்டாளா? ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ண முடியாததுகள் எல்லாம் எப்பிடித்தான் நாளை படிச்சு முடிச்சு ஒரு கம்பனில வேலை பார்க்க போகுதுகளோ எனக்கு தெரியல "

"பு...வி...க்...கா.... ரொம்ப  இனிமையான பெயர்.  " ஏன்று அஸ்வின் அவளது பெயரை தனக்குள் சொல்லிப் பார்த்து ஆந்தப் பட்டான்.

"அம்மா.... நீ உள்ளார போம்மா  இல்லாங்காட்டி அந்த மனுஷன் உன்னை இதை சொல்லியே ஒரு வாரத்துக்கு ராச்சர்  பண்ணுவாரு நான் இந்த தம்பிக்கு என்ன தேவையோ அதை  செய்யறன்."

"ம் சரிங்கண்ணா. உங்களுக்கு என்ன வேணுமோ சுந்தரம் அண்ணாகிட்ட கேளுங்க அவர் செய்து தருவார்." என்று கூறி அவனிடம் தன் பவள வாய் திறந்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு சிட்டாக சென்று மறைந்தாள்

ஸ்வின் தனது தேவதையின் புன்னகையில் தன்னை தொலைத்தான் இரண்டாவது தடவையாக

"சார்...... சார்.... என்ன சார் ஏதாவது பிரச்சனையா? வந்ததிலிருந்து எதயோ தொலைச்சிட்ட மாதிரியே இருக்கீங்க?"

"ம்.... மூன்று வருசமா என் இதய துடிப்பை  துளைச்சிட்டு அதை தேடிட்ட்டு  இருந்தேன் இப்போ தான் அதை கண்டு பிடித்தேன் இனி ஒருபோதும் தவறவிடமாட்டேன்." என்று தனக்கு தானே சொல்லி கொண்டான். 

"என்னாச்சு சார் திரும்பவும் எதோ யோசனையில இருக்கீங்க?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... என்னோட தங்கச்சி...."

"அண்ணா..... வந்திட்டீங்களா? சாரி அண்ணா நான் லைப்ரரிக்கு போய் இருந்தேன். அது தான் கொஞ்சம் லேற்  ஆகிடிச்சு அப்போ நாம கிளம்பலாமா?"

"ம்..... ஓகே.... கிளம்பு .....  சரிங்க அப்போ நான் கிளம்புறன். இவ தான் என்னோட சிஸ்டர் இவள தேடி தான் இங்க வந்தேன் ."

"ஓ...... இவங்க நம்ம..."

அதற்குள் அஸ்வினின் கைபேசி அவர்களை இடையூறு செய்தது. (பாவம் புவி தன் தங்கையின் தோழி என்பது தெரியாமல் போய் விட்டது .)

கை சைகையாலேயே  அஸ்வின் சுந்தரத்திடம் இருந்து விடை பெற்று அபியுடன் காரில் ஏறி  புறப்பட்டு விட்டனர்.

பிரின்சிபாலின் அறையில் 

"டுத்த வார மிடில்ல எக்ஸாம்ஸ்  தொடங்குது நீ என்னன்னா  கலியாணம் கருமாதி என்று வந்து நிக்கிற. போ போய் எக்ஸாமுக்கு பிரிபயார் பண்ற வழிய பாரு கிளம்பு ..."

"இல்ல... சா...ர்... அது.. வந்து.."

என்ன வந்து போய் நீ எவளவு நேரம் கெஞ்சினாலும் லீவு கிடைக்காது. உன்னோட வை மினிற்ஸ் முடிஞ்சு போச்சு நீ கிளம்பலாம். சுந்தரம்... சுந்தரம்..."

அதற்கு மேல் அவருடன் பேசி பிரயோசனம் இல்லை என்று தெரிந்தவள் அங்கிருந்து கோவமாக கிளம்மி விட்டாள்.

எதிரில் பட்ட சுந்தரம் "ஏனம்மா ரொம்ப திட்டிட்டாரா?.... வருத்தப்படாதம்மா"

"இல்லன்னா அவரை பத்தி தான் தெரியுமே அவர் யார் கூட தான் சிரிச்ச முகமாய் பேசி இருக்கார் எப்பவும் சுடுதண்ணி குடிச்ச மாதிரி தானே கத்துவார்." என்று சொல்லி சிரித்தாள்.

இவரிடம் அந்த ஆளைப்பத்தி கேட்கலாமா என்ற குறுகுறுப்பை அடக்கி கொண்டு அவரிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு சென்றாள்.

ஸ்வின் காரில் அமைதியாக இருந்தான் தன் காதல் தேவதையின் சொர்க்கத்தில்.  இதனை அறியாத அபி தன் தமையனின் கனவு சொர்க்கத்தை கல்வீசி கலைத்தாள். 

"என்னண்ணா அமைதியா வர்ற நீ சங்கரை மீரற் பண்ணினாய் தாணே? ஆமா  ஏன் எனக்கு இரண்டு பேருமே போன் பன்னால? "  என்று மனதில் இருந்த படபடப்பை மறைத்து பேச முயன்றாள் முயன்றும் தோற்றுப் போனாள்.

தங்கையை ஒரு தரம் ஆழப் பார்த்து விட்டு "நாம் வீட்டுக்கு போய் இதப் பத்தி பேசலாமா?" 

அவன் தங்கை சரி என்று கூறினாலும்  உள்ளே அவள் இதயம் பட படத்த படிதான் இருந்தது.

அஸ்வினின் கார் ஒரு சிறு மாளிகையின் கேட் முன்னே நின்று காரன் அடித்தது. வாட்ச் மேன் வந்து வந்து கதவு திறந்ததும்   இரு மருங்கிலும் நறுமணம் வீசி பூத்துக் குலுங்கும் அழகிய பூந்தோட்டம் நடுவே பச்சை கம்பளம் விரித்தது போன்ற அழகிய புல் படுக்கையின் மேலே அவனது அடர் சிவப்பு நிற BMW கார் சென்றது.

அழகிய  வேலைப்பாடுகள் நிறைந்த வாசற் கதவின் முன் உள்ள  போர்ட்டிகோவில் காரை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

பி வீட்டினுள் நுழைத்ததும் தனது தமையனை அழைத்துக் கொண்டு  மொட்டை மாடிக்கு சென்றாள். அங்கேயும் அழகிய நறுமணம் வீசும் பல மலர்கள் வாசம் செய்தன.  அதனை கண்டு ரசிக்க "டல்சி" என்ற அழகு கிளி அங்கேயே குடி கொண்டிருந்தது.  

அச்வினை மொட்டை மாடிக்கு கூட்டி வந்த அபி அங்கு  உள்ள ஊஞ்சலிலே தமையனை அமரச்சொல்லி விட்டு தானும் அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

பின்பு மூச்சை இழுத்து வெளியே விட்டு தன்னை சீர் படுத்தி விட்டு "அண்ணா ஷங்கரை மீற் பண்ணியா? உனக்கு அவனை பிடிச்சிருக்கு தானே? நீ தான் அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்களை இதுக்கு சம்மதிக்க வைக்கணும் ப்ளீஸ்" என்று மூச்சே விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள்.

அவன் எதுவும் பேசாது சிறிது நேரம் அமைதி காத்தான். 

"என்னன்னா வீட்டுக்கு வந்து சொல்றன் என்றாய் நீயாயும் எதுவும் சொல்லல நான் கேட்டாலும் வாயே திறக்காமல் இருக்காய். எனக்கு எவ்வளவு டென்ஷனா இருக்கென்று தெரியுமா உனக்கு"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.