(Reading time: 13 - 25 minutes)

 

"ம்..சாப்பிடு."

"வேணாம்..."

"நீ கேட்க மாட்ட.."-என்று அவனுக்கு ஊட்டி விட்டாள்.தாயின் கையினால்,உண்ட  உணவின் சுவை அவனுக்கு தெரிந்தது...அவள் அருகே இருக்கும் போது தன் தாயின் ஞாபகம் அவனுக்கு தெரியவில்லை.

"இப்போ.. எப்படி இறங்குச்சாம்?"

"..................."

"தண்ணீர் குடி."-அவன் அமைதியாக வாங்கி குடித்தான்.நிதம் பகல் இவளோடு இப்படியே காலம் சென்றாள் எப்படி நல்லபடியாய் இருக்கும்?நாட்கள் உருண்டோடின...ஒரு நாள் சரணின் தந்தை மதுவை காண வந்தார்.

"மது...உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்மா."

"சொல்லுங்க அங்கிள்.."

"உனக்கே தெரியும் சாரதா இறந்ததில் இருந்து,சரண் என் கூட பேசுறதையே விட்டுட்டான்னு,இப்போ எனக்கு தேவை எல்லாம்,அவன் என் கூட பேச மாட்றான்னு ஒரே ஒரு காரணம் தான்...அது உன்னால மட்டும் தான் முடியும்மா..ரகுவும்,நிரஞ்சனும் அவன் சந்தோஷம் தான் முக்கியம் நாங்க உதவி பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க...நீ தான்ம்மா..."

"என்ன அங்கிள்...நீங்க?நான் கேட்கிறேன்..."

"தேங்க்ஸ்மா..."

"பரவாயில்லை.அங்கிள்."

ன்று மாலை சரணோடு இருக்கும் போது,

"ஆதி...."

"என்னடி?"

"நான் உன்கிட்ட ஒண்ணுக் கேட்கட்டா?"

"என்ன?"

"நீ ஏன் மஹாதேவன் அங்கிள்கிட்ட பேசுறதே இல்லை?"

"வேற எதாவது பேசுடி...!"

"ஏன்??"

"எனக்கு பிடிக்கலை."

"ஏன்?"

"அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை."

"சொல்லவே அவசியமில்லையா?இல்லை...என்கிட்ட சொல்ல அவசியமில்லையா?"

"........................."

"ஆதி....மஹாதேவன் அங்கிள் மேலே உயிரையே வைச்சிருந்த?இப்போ...."

"அதுக்காக என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு."

"ஆதி..."

"என்ன இப்படிலாம் பேசி சீன் கிரியேட் பண்ண சொன்னாரா அவர்?"

"நான் சீன் கிரியேட் பண்ணுறேனா?"

"ஏ....ஆமான்டி...என்ன நினைச்சிட்டு இருக்க நீ??என் அம்மா இல்லாதனால,நான் உன்கிட்ட என் வாழ்க்கையில சில விஷயத்தை ஷேர் பண்ணிட்டேன்.அவ்வளவு தான்...மற்றப்படி உனக்கும்,எனக்கும் எதுவும் இல்லை."

"அப்போ என்னை உன் சுயநலத்துக்காக தான் பயன் படுத்திக்கிட்டயா?"

"ஆமா...அப்படி தான்..என்ன பண்ண போற?என்ன...நான் கட்டிப்பிடிச்சேன் அவ்வளவு தானே!நமக்குள்ள வேற எதுவும் நடக்கவில்லை தானே!"-அவள் கூறியதோ ஒரு அர்த்ததில்,இவன் எடுத்துக் கொண்டதோ வேறு அர்த்ததில்...

"ஆதி...நீ என்னை அவ்வளவு கேவலமா நினைச்சிட்டியா??நீ பேசுறதுல வேற அர்த்தம் வருது.."

"அந்த எல்லா அர்த்தத்தோட தான் சொல்றேன்...உனக்கு என்கிட்ட வேண்டியது என் அன்பு இல்லைடி,வேற..."-என்று எதையோ கூற வந்து பாதியில் நிறுத்தினான்.

"ஏன்டா?நிறுத்திட்ட..இன்னும் வேற எதாவது சொல்ல தோணுதா?சொல்லிடு...நான்....இதுக்கு நீ என்னை கொன்றிருக்கலாம்டா...!போதும்...இதுக்கு மேலே எதையும் தாங்கும் தைரியம் எனக்கில்லை......தேங்க் யூ..!"-அவள் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.அன்று அவளை விட்டு சென்றவள் இன்றளவும் திரும்பவும் இல்லை.

ண்களை மூடி சரண் கூறியவற்றை கேட்டுக் கொண்டிருந்தான் ரகு.பொறுமை இழந்த நிரஞ்சன்,

"டேய்!என்னடா இது?உன்னால,மதுகிட்ட எப்படி இப்படிலாம் உன்னால பேச முடிஞ்சுது?"

"......................"

"இன்னும் மதுவை நீ காதலிக்கிறீயா?"-ரகு கேட்ட கேள்விக்கு இருவரும் விழித்தனர்.

"சொல்லு...ஆதி?"

"ம்...."

"சரி.."

"என்ன மச்சான் பண்ண போற?"

"நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்...மதுவை நான் என் தங்கச்சி ஸ்தானத்தில வச்சிருக்கேன்.நியாயப்படி இந்த விஷயத்துல என்னால ஒண்ணும் பண்ண முடியாது.அதே சமயத்துல இவனோட நண்பனா மதுகிட்ட பேசி பார்க்கிறேன்..."

"ரகு வேணாம்...அவளுக்கு நிச்சயமா என் மேல இருக்கிற வெறுப்பு குறைந்திருக்காது....."

"எந்த ஒரு விஷயமும் பேசினா தான் தெளிவாகும் ஆதி...இந்த விஷயத்துல,நான் உனக்கு சாதகமா இல்லை.உன் மேல எனக்கு கோபம் இருக்கு..ஆனா,உன் நண்பனா என்னால சுய நலமாக தான் யோசிக்க முடியுது.இதுக்கு மேல முடிவு மதுகிட்ட தான்!"-என்று அவன் சென்றுவிட்டான்.சிறு வயது முதலே ரகுவின் கோபத்தை ஸ்பரிசிக்காத இருவரும்,அன்று தான் அதை கண்டனர்.ஏனென்றால்,மௌனமாய் வெளிப்படுத்தும் கோபமானது,விஷத்தை விட கொடியது ஆயிற்றே!

"து...கதவை திற"-என்று மூன்றாவது முறையாக கதவை தட்டினாள் பவித்ரா.தென்றல் வீசும் போது அசையும் ஊஞ்சலை போல் கதவு மெதுவாக திறக்கப்பட்டது.

"என்னக்கா?"

"என்னம்மா?எதுவுமே சாப்பிடலையா?"

"பிடிக்க....இல்லை...பசிக்கலைக்கா!"

"உனக்கும்,சரணுக்கும் நடந்ததை யோசிச்சிட்டு இருக்கிறீயா?"

"..............."

"ம்....இப்படி உட்காரு!"-என்று அவளை மெத்தையில் அமர்வித்தாள்.

"மது...என்னம்மா நீ?தினமும் கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிற?எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கிற தைரியத்தை தான்னு தானே வேண்டிக்கிற?அப்படி இருக்கும் போது,இந்த பிரச்சனையை சமாளிக்க மாட்டியா?"-அப்போது,"உள்ளே வரலாமா??"என்றது ஒரு குரல்.யாருடைய குரல் என்று இருவரும் திரும்பி பார்க்க..ரகு நின்றிருந்தான்.

"அண்ணா...நீங்களா?வாங்கண்ணா."-பவித்ரா

"வா..ரகு!"-மதுபாலா.அவன் உள்ளே நுழைந்தான்.

"மது..நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.."

"சொல்லு..ரகு!"

"நான் ஆதியைப் பற்றி..."

"தயவு செய்து பேச வேண்டாம்.."

"எனக்கு புரியுதும்மா..அவன் பேசினது,நடந்துக்கிட்டது எல்லாமே தப்பு தான்.."

"அதை சாதாரணமாக தப்புன்னு ஒரே வார்த்தையில அடக்கிடலாமா??எனக்கு இப்போ நினைச்சாலும்,தாங்கிக்க முடியலை.ஒரு உண்மையை சொல்லணும்னா அவன் அப்போ சொன்னதுக்கான அர்த்தமே அப்போ எனக்கு முழுசா விளங்கவில்லை தெரியுமா??அப்போ..அவன் சொன்னது ஏதோ தப்பான விஷயம் அவ்வளவு தான் எனக்கு புரிந்தது.ஆனா..."-அவள் ஏதோ கூற வந்து பாதியில் நிறுத்தினாள்.

"பேசிவிடு மது...சரண் பக்கம் நான் பேச வரவில்லை.ஆனால்,அவனுக்காக தான் வந்திருக்கிறேன்."-மதுவும்,பவித்ராவும் புரியாமல் விழித்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.