(Reading time: 10 - 19 minutes)

 

ன்று மாலை...

"இல்லை ராகுல்...அப்பா சொல்றதை கேளுப்பா!இங்கே கொஞ்சம் வேலை இருக்கு.நான் இன்னொரு நாள் வரேன்."

"போப்பா!எப்போ பார்த்தாலும் இதையே சொல்ற???உன்னைப் பார்க்கணும்பா!"

"அப்பா எங்கே போயிட போறேன்?வேலை முடிஞ்ச உடனே வந்துடுறேன்.நான் உன் கூடவே தான் இருக்கேன்."

"ம்....அப்பா எனக்கு இங்கே புது ஃப்ரண்ட் கிடைச்சிருக்காங்க."

"அப்படியா?யாரு?"

"அவ பேரு..."

"ஏ...பெரியவங்களை மரியாதையா பேசு! மதுவை சொல்லணும் உன்னை நல்லா கெடுத்து வச்சிருக்கா."

"சரிப்பா...மதுவை திட்டாதே!அவங்க பேரு ஸ்ரேயா."

"என்ன?"

"ஸ்ரேயா..."

"............."

"அவங்க கூட தாத்தா,பாட்டியை மாமா,அத்தைன்னு கூப்பிடுறாங்க.அப்போ எனக்கு என்ன உறவுப்பா?"

"............"

"அப்பா??"

"செல்லம்....அப்பாக்கு ஒரு வேலை இருக்கு.நான் அப்பறம் பேசுறேன்டா!"

"ம்....சரிப்பா!"-ரகுவின் மனம் சில யோசனைகளில் மூழ்கியது,

"கு!"

"............."

"ரகு!"

"ஆ....என்ன ஆதி?"

"என்ன யோசிச்சிட்டு இருக்க?"

"ஒண்ணுமில்லை சும்மா தான்...நீ ஏதோ சொல்லணும்னு சொன்ன??"

"ஆ....அது....ஸ்ரேயாவைப் பற்றி நீ என்ன நினைக்கிற?"

"ஏன்????"

"ராகுல் ஸ்ரேயாக் கூட நல்லா க்ளோஸ் ஆயிட்டதா சொன்னான்..."

"ஸ்ரேயா யாரு?"

".............."

"ஸ்ரேயாவிற்கு என் குடும்பத்தோட என்ன உறவு?"

"ஸ்ரேயா உன் அத்தைப் பொண்ணு."

"எந்த அத்தை?"

"ஸ்ரீதேவி..."

"ஓ...அந்த வாலா?அடப்பாவிகளா...!நான் அவளை யாரோன்னு நினைச்சிட்டு இருந்தேன்.அடையாளமே தெரியாம வளர்ந்துட்டா!"-ஆதித்யா அவனை கேள்வியாய் பார்த்தான்.

"என்னடா?"

"நான் ஒண்ணுக் கேட்பேன் செய்வியா?"

"என்ன?"

"எல்லாரும் ராகுலுக்கு அம்மாவா ஒருத்தர் வீட்டுக்கு வரணும்னு ஆசைப் படுறாங்க."-ரகுவின் முகம் கறுத்தது.

"அப்படின்னா?"

"நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்புறாங்க."

"ஆதி...."

"..........."

"நீ கூடவா இப்படி?"

"ராகுலுக்காகடா!"

"போதும் நிறுத்து ஆதி....."-அவன் கத்தியதில்,வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அங்கே வந்து விட்டனர்.மது உட்பட!

"ராகுல் இதுவரைக்கும் அம்மா இல்லாம தான் வாழ்ந்தான்.இனியும்,அப்படி தான்!என்னால,கீதா இருந்த இடத்தில்,யாரையும் கொண்டு வர முடியாது.ராகுலுக்கு என்னால இன்னொரு அம்மாவை கொண்டு வர முடியாது."

"நிறுத்து ரகு...நான் ராகுலுக்கு அவனோட அம்மாவை தான் கொடுக்க சொன்னேன்.யாரையோ இல்லை..."-அவன் பேசியதில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர்.

"என்ன?"

".........."

"இப்போ என்ன சொன்ன?"

"..........."

"பதில் சொல்லுடா!"

"ஆமா.....ராகுல்,உனக்கும்,கீதாவுக்கும் பிறந்தவன் இல்லை..."-ஆதித்யா முன்மொழிந்த இவ்வரிகளில்,அனைவரும் சிலையாகி விட்டனர்.

"ராகுல்...உனக்கும்,கீதாக்கும் பிறந்தவன் இல்லை...உனக்கும்,ஸ்ரேயாவுக்கும் பிறந்தவன்."-ரகு உடைந்தே விட்டான்.ஆதித்யாவின்,சட்டையைப் பிடித்து....

"என்னடா உளர்றே???பைத்தியக்கார தனமா பேசாதே!"

"நான் ஒண்ணும் பைத்தியக்கார தனமா பேசலை.ராகுல்...உன் பையன் தான் ஆனா,அவன் அம்மா கீதா இல்லை...ஸ்ரேயா!"-ரகு தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

"கீதாக்கும்,எனக்கும் மட்டும் தெரிஞ்ச உண்மை இது!"

"என்ன?"

"கீதாக்கு....இந்த...விஷயம் தெரியும்!"

"என்னடா சொல்ற??"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.