(Reading time: 6 - 11 minutes)

01. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

ஸ்ரீமதி இல்லம்!

அன்று கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது ஸ்ரீ இல்லம். காரணம் அந்த வீட்டின் செல்ல மகள் ஸ்ரீமதியை பெண் பார்க்க வர இருந்த பரபரப்பு சந்தோஷம். ஸ்ரீமதி அந்த வீட்டின் கடைக்குட்டி. பொறியியல் பட்டம் பெற்றவள். சற்று பூசினால் போல் உடல் அமைப்பு. நீளமான தலை முடி. பாசம் மிகுந்தவள். காலேஜ் முடிந்த கையோடு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருந்தார் அந்த வீட்டின் தலைவர் குரு.

ஸ்ரீயின் நெருங்கிய தோழிகள் மஹா, பிரியா, பத்மா. இறுதி ஆண்டு படித்து போது நடைபெற்ற வேலைவாய்ப்பு தேர்வில் ஸ்ரீமதி தவிர மற்ற மூவரும் கலந்து கொண்டனர். மஹா

Poo magalin thedal

“ ஹே ஸ்ரீ எதுக்கு நீ ப்லேஸ்மெண்ட் ப்ரிபேர் பண்ண பேர் கொடுக்காம இருக்கடீ“.

ஸ்ரீ பதில் சொல்வதருக்கு முன்னால் பிரியா முந்தி கொண்டு

“ அவளுக்கு என்ன டீ வேலைக்கு போனும்னு அவசியமா என்ன.. அவுங்க அப்பா சம்பாதிச்சு வச்சிருக்குறா சொத்து மூணு தலைமுறைக்கு உக்காந்து தின்னலாம். இவ எதுக்கு டீ வேலைக்கு போனும்.“

ஸ்ரீ முதலில் மஹாவை பார்த்து

“ எங்க வீட பத்தி உனக்கு தெரியாத டீ. வேலைக்கு போனும் ரெண்டு வருஷம் இல்ல ரெண்டு வருஷம் படிக்க விடுங்கனு கேட்டேன். அதுக்கு ரெண்டு வருஷம் தனியா அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாரு எங்க அப்பா. எனக்கு மாப்பிள்ளை  பாத்திட்டு இருக்காங்க இப்போ. எனக்கு முடிஞ்சது அப்பறம் எங்க அண்ணன் இருக்கான். அதனால என்ன வேலை அண்ட் படிக்க வேணாம்னு ஆர்டர் போட்டார் எங்க அப்பா“.

ஸ்ரீ பிரியாவை பார்த்து

“ அது எங்க அப்பா சம்பாதிச்சதுடீ எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்னு எனக்கு ஒரு ஆசை இருக்கு டீ. இதை எல்லாம் எங்க வீட்டில சொல்ல முடியுமாடீ?“

ஸ்ரீ அவ்வாறு பேச காரணம் இருந்தது. ஸ்ரீ வீடு ஒரு கூட்டு குடும்பம். பெரியவர் குரு, அடுத்தவர் அஷோக், இவ்விரண்டு பெயருக்கும் மூத்தவர் அக்கா லக்ஷ்மி. குரு,அஷோக் மதுரையில் கொடி கட்டி பறக்கும் பிஸ்நெஸ் புலிகள். .குரு-கோமதி தம்பதிக்கு வேணி, ஸ்ரீமதி என இரண்டு பிள்ளைகள். அஷோக்-பாப்பாஅம்மாள் தம்பதிக்கு மணி, முருகன் பிள்ளைகள். வேணி,ஸ்ரீமதியின் அத்தை லக்ஷ்மிக்கு ஒரு புதல்வன் பிரகாஷ், புதல்வி ஸ்வாதீ. வேணி-பிரகாஷ் கல்யாணம் ஆறு வருடத்திருக்கு முன்பு ஸ்ரீ பத்தாவது படிக்கும் பொழுது நடந்தது. இப்பொழுது அவர்களுக்கு ராஜ் என்ற புதல்வன் இருக்கிறான். ஸ்வாதீ அந்நிய சொந்தமான ராஜேந்திரன்-தாய்அம்மாள் புதல்வன் குமாரை கரம் பிடித்தவள். அத்தை லக்ஷ்மியின் கணவர் தேவராஜ் புற்றுநோயினால் காலமாகிவிட்டார். லக்ஷ்மி பிரகாஷ்,வேணி,ராஜ் உடன் இருக்கிறார்.

ராஜ் அந்த வீட்டின் முதல் பேரன்,செல்ல பேரன் எல்லாருக்கும். அவனுக்கு ஸ்ரீ சித்தி ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் ராஜ் என்றால் கொள்ளை பிரியம்.இருவரும் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்.

ஸ்ரீமதி காலேஜ் முடித்து பட்டம் பெற்றாள். அவள் தோழிகள் வேலை நிமித்தம் பெற்று வேறு ஊருகளுக்கு சென்று விட்டனர். லீவ் கிடைக்கும் பொழுது அனைவரும் சந்தித்து கொள்வார்கள்.

ஆனது இன்றோடு ஸ்ரீ படிப்பு முடித்து 5 மாதம் ஆகிவிட்டது. குரு மதிக்கு ஏற்ற வரன் தேடினார். பிரகாஷ் மாமாவிருக்கு(குரு) உதவியாக மாப்பிளை தேடினான். பிரகாஷ் மதுரையில் புகழ் பெற்ற மருத்துவர். 5 மாதம் கழித்து குருவின் குடும்ப நண்பர் கொண்டு வந்த ஜாதகம் பொருந்தி இருந்தது. ஸ்ரீக்கு அப்பா அம்மா மாமா பார்க்கும் மாப்பிள்ளை எனக்கு எப்பொழுதும் ஓகே என்று கல்யாண பேச்சு ஆரம்பமான முதலில் சொல்லி விட்டாள்.

முதலில் மாப்பிள்ளையின் பெற்றோர் வந்து பார்க்க போவதாக சொன்னார்கள். ஸ்ரீ மாப்பிள்ளை  பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவில்லை. வரட்டும் பிடித்தால் ஓகே இல்லை என்றாலும் ஓகே என்று இருந்தாள். அவர்கள் வந்தார்கள் ஸ்ரீக்கு அவர்களையும் அவர்களுக்கு ஸ்ரீயும் மிகவும் பிடித்துவிட்டது.

2 வாரம் கழித்து மாப்பிளை வந்து பார்ப்பதாக தகவல் வந்தது. ஸ்ரீக்கு பயம் கலந்த சந்தோஷம்.  ஸ்ரீ

“ ஐயோ மஹா,பத்மா, பிரியா ஆர் யூ இன் கால் கர்ல்ஸ்.. ஐ ஆம் சோ எக்ஸைடெட். டோன்ட் நோ வாட் டு பி டிட். நர்வஸ் ஆ இருக்கு டீ.“

அதற்கு தோழிகள் கிண்டல் செய்தனர்.

“ ஸ்ரீ நீ முன்ன பின்ன பசங்க கூட பேசி இருந்தா இந்த பதற்றம் இருந்து இருக்காது. பெரிய சாமியார் மாதிரி இருப்ப காலேஜ்ல. இப்போ நல்ல அனுபவி டீ.“

மஹா

“ ஸ்ரீ உனக்கு ஹஸ்பென்டா வரவர் குடுத்து வச்சுருக்கணும்டீ. நீ அவர ரொம்ப அன்பா பாசமா பாத்துப்ப டீ. டோன்ட் வரீ ஆல் தே பெஸ்ட்“..

பத்மா

“ மாப்பிளைய பாத்ததும் மயங்கி விழுந்துராத. விழுந்தாலும் அவரு பிடிச்சுக்குவாரு. ஹா ஹா ஹா“.

ஸ்ரீ

“ சும்மா இருங்கடி..“

ஸ்ரீ வெட்கபட்டு கால் கட் செய்து விட்டாள்.

ரு வாரம் விரைவாக ஓடியது. அவளுக்கு மட்டும் மெதுவாக ஓடியது. மாப்பிள்ளை வரும் நாளும் வந்தது. சிகப்பு கலர் பான்சி ஸரீயில் தேவதையாய் ஒளிர்ந்தாள்.

ஹால் பக்கம் சென்று கை கூப்பி வணங்கினாள். மாப்பிள்ளை முகத்தை பார்க்க வெட்கப்பட்டு நின்றாள். பின் உள் அறைக்கு சென்று விட்டாள். மாப்பிள்ளை  தனியாக பேச வேண்டும் என்று சொன்னதாக சொன்னார்கள்.

அவன் வந்தான். ஸ்ரீக்கு அடித்து கொண்டது. இயல்பாக இருக்க முடியவில்லை. வந்து நாற்காலியில் அமர்ந்து அவளையும் அமர சொன்னான். ஸ்ரீக்கு பேச்சு வரவில்லை. கொஞ்ச நேரம் பார்த்தான். பின்பு பேச ஆரம்பித்தான். மாப்பிள்ளை

“ஹெலோ நான் அஜய். சென்னையில் வர்க்கிங். என் சாலரி ரொம்ப கம்மி  பட் ஐ காட் சாலரி இந்‌க்ரீஸ்ட் நௌ ஒனிலி. சென்னையில் சாலரி கம்மியா  வச்சு  பேமிலீ  ரன் பண்றது கஸ்டம். எங்க அப்பா அம்மா சொன்னாங்க  நல்ல பேமிலீ நல்ல பொண்ணு சோ கேம். ஃபீல் ஃப்ரீ ஸ்ரீ. டோன்ட் பே டெந்ஸ்ட்.“

ஸ்ரீ

“ உங்க நேம் அஜய் னு இப்போ தான் தெரியும். இட்ஸ் ஓகே தட் சாலரி இஸ் நாட் அ மாட்டேர் ஆஃப் ஃப்யாக்ட். இ ஜஸ்ட் நீட் அ குட் ஃப்யாமிலீ. இப் யூ லைக் மீ டு வர்க். ஐ ஆம் ரெடீ டு வர்க். காசு லைஃப்ல பெருசு இல்லை எனக்கு.“

அஜய்

“ ஹ்ம்ம்ம்ம்.. ஓகே.“ என்று அஜய் எழுந்து விட்டான். அவளும் எழுந்து கொண்டாள்.

அவர்கள் பேசி முடிவு சொல்வதாக சென்று விட்டனர்.

ஸ்ரீக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. முதலில் கல்யாணம் வேண்டாம் என்று இருந்தாள். காரணம் காதல் அல்ல. இப்படி ஒரு பாசமிகு குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லை ஆனால் இப்பொழுது. புரியாத ஒரு சுகம் கொண்டாள்.

சாயங்காலம் எல்லாரும் பேசும் வேளையில் கால் வந்தது குருவின் உறவினரிடம் இருந்து.

உறவினர்

“ பயன் ரொம்ப  யோசிக்குரான்.. பெரிய இடம். நாளைக்கு அந்த பொண்ணு வந்து எப்படி வாழும்னு. சோ வேணாம்னு சொல்ல சொன்னாங்க.“

குருவின் முகம் விழுந்து விட்டது. ஸ்ரீ அப்பாவின் பதிலை கேட்க மிக ஆவலாய் இருந்தாள். குரு உண்மையை சொல்லி விட்டார். ஸ்ரீயின் மனம் வெடித்து சிதறியது. எல்லோர்  முன்னால் அழ கூடாது என்று உதட்டை கடித்துக் கொண்டாள்.

சாப்பாடு வேண்டாம் என்று சொன்னாள். ஆனால் அப்பாவின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்று கொஞ்சம் சாப்பிட்டு ரூமில் சென்று கதவை அடைத்து கொண்டு ஓவென்று கேவி கேவி அழுதாள்.

தொடரும்...

Go to episode # 02

{kunena_discuss:740}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.