(Reading time: 9 - 18 minutes)

 

றுநாள் காலை.....

கண் விழித்தான் ரகு.முந்திய இரவு நடந்தது ஒன்றும் அவன் நினைவில் இல்லை.என்ன யோசித்தாலும்,அவன் நினைவிற்கு அது எட்டவில்லை,தன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.மணி பத்து என்றது.உடனே,அவசர அவசரமாக தயாராகி வந்தான்.

கீழே.....

அனைவரும் அமர்ந்து கோலாகலமாக பேசிக் கொண்டிருந்தனர்.

"என்னடா?பேக்கும் கையுமா வர?"

"காட்டுக்கு போகப் போறேன்ம்மா!"

"சரி தான்....பத்திரமா போயிட்டு வா!"

"விட்டா நீயே துரத்தி விட்டுவ போல?"

"நீ ஸ்ரீநகர் போறதும்,காட்டுக்கு போறதும்  ஒண்ணு தான்!பத்திரமா போயிட்டு வா!"

"சரிம்மா...."-அனைவரிடமும் விடைப் பெற்று வெளியே வந்தான்.கீதா அவனை வழி அனுப்ப உடன் வந்தாள்.

"அப்பறம்?"-ரகு.

"என்ன?"

"எதாவது என்கிட்ட சொல்லணுமா?"

"இல்லையே.."

"எதாவது என்கிட்ட சொல்லணும்னு தோணுதா?"

"இல்லையே.."

"போடி...நீ வேஸ்ட்..."

"சீக்கிரமா வந்துடுங்க!"

"ம்....இது தான் சொல்றதா?"

"வேற என்ன?"

"லூசு...."-கீதா,அவனருகில் நெருங்கி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

"போதுமா?"

"ஏதோ....!"

"கிளம்புங்க...."

"போடி! இரு...யாரையோ மறந்துட்டேனே! ஆ..ஸ்ரேயா எங்கே?"

"ஸ்ரேயா...தோட்டத்துல இருக்காங்க! என்னங்க..காலையில இருந்து அவங்க சரியாவே இல்லை.ஒரு மாதிரி இருக்காங்க...."

"அப்படியா?இரு..அவகிட்ட போய் ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு கிளம்புவோம்..."

தோட்டத்தில் ஸ்ரேயா தனிமையில் அமர்ந்திருந்தாள்.ரகு விளையாட்டாக சென்று அவள் கண்களை மூடினான்.அவனது,ஸ்பரிசம் பட்டதும் நெருப்பு பட்டதுப் போல பதறி எழுந்தாள் ஸ்ரேயா.

"ஏ...என்ன ஆச்சு?"

"ஒ....ஒண்ணுமில்லை."

"என்ன?ராத்திரி எதாவது கெட்ட கனவு கண்டியா?"-அவள்,கண்கள் கண்ணீரை மெல்லியதாக சேகரித்துவிட்டது.அவள் மனம்,'அது...கனவாகவே இருந்தால்...நன்றாக இருக்குமே...."-என்று எண்ணியது.

"என்னாச்சு?நான் பேசுறது கேட்குதா?"

"ஆ...கேட்குது!"

"ம்ஹீம்...இவளுக்கு ஏதோ ஆயிடுச்சி! எம்மா...நான் ஊருக்கு கிளம்புறேன்.அதை சொல்ல தான் வந்தேன்."

"ம்...."-என்றுமே இல்லாத அவளது அணுகுமுறை அவனுக்கு விசித்திரமாய் இருந்தது.நடந்தவற்றை எல்லாம் கீதாவும் அருகிலிருந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தாள்.அவள் மனதிலும்,ஏதோ சறுக்கியது.ரகு,அங்கிருந்து கிளம்பிவிட்டான்.கீதா,ஸ்ரேயாவிடம்,

"எதாவது,பிரச்சனையா ஸ்ரேயா?"

"ம்...அதெல்லாம் ஒண்ணுமில்லை."

"நீங்க என்னமோ மாதிரி இருக்கீங்களே??"

"என்னை மன்னிச்சிடு கீதா!"

"என்ன?என்னாச்சுங்க?"

"இல்லை....இது வரைக்கும் நான் பேசினது எதாவது,உங்களை கஷ்டப்படுத்தி இருந்தா,மன்னிச்சிடுங்க!"

"அட!என்னங்க நீங்க??குழந்தை மாதிரி!"-கீதாவும்,ஸ்ரேயாவும் நன்கு நெருங்குவதற்கு சில விஷயங்கள் வழி வகுத்தன.

நாட்கள் நகர்ந்தன.முன்பு கூறியதைப் போல விதி ஆடும் விளையாட்டில் இருந்து யார் தான் தப்பிக்க முடியும்???அன்றொரு நாள் நடந்த தவறு இன்று விருட்சமாகி விட்டது.

அன்று கீதாவும்,ஸ்ரேயாவும் வயல்வெளிக்கு சென்றிருந்தனர்.ஸ்ரேயா இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

"ஸ்ரேயா."

"ம்....."

"ஏன்?எப்போ பார்ததாலும் ஒரு மாதிரி இருக்கீங்க?"

"அதெல்லாம்...ஒண்ணுமில்லை!"-அவள்,பேசி கொண்டிருக்கும் போதே ஸ்ரேயாவிற்கு தலைச் சுற்றியது.அருகிலிருந்த மரத்தை பிடித்தவள்,அப்படியே அமர்ந்தாள்.

"ஸ்ரேயா...என்னாச்சு?"-கீதா,அருகிலிருந்த மூதாட்டி ஒருவரை அழைத்து என்னவென்று பார்க்க சொன்னாள்.

ஸ்ரேயாவின் நாடியை பரிசோதித்த அம்மூதாட்டி,

"யாரும்மா இந்தப் பொண்ணு?"

"என் சொந்தக்கார பொண்ணு பாட்டி.என்னாச்சு இவங்களுக்கு?"

"பொண்ணு கர்ப்பமா இருக்காம்மா!"-அதை,கேட்டவுடன் இப்போது கீதாவிற்கு தலை சுற்றியது.

"என்ன?சரியா பாருங்க பாட்டி!"

"இந்த ஊரோட மருத்துவச்சிம்மா நான்!இவ கர்ப்பமா தான் இருக்கா!"-கீதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.இது எப்படி

நிகழ்ந்திருக்கும்?கடவுளே....இதை வீட்டில் எப்படி கூறுவது?அவரிடம் கூறலாமா?என்ன செய்யலாம்?'-மனதில் பலவாறு சிந்தித்துவிட்டு,

"சரி பாட்டி! ரொம்ப நன்றி!"

"சரிம்மா..."-நல்ல விஷயம் என்னவென்றால் கீதாவையும்,ஸ்ரேயாவையும் அவருக்கு யார் என்று தெரியாது!!!

மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தாள் ஸ்ரேயா.

கீதா,அவளருகில் அமர்ந்திருந்தாள்.

"இப்போ எப்படி இருக்கு ஸ்ரேயா?"

"ம்..."

"உனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா?"-ஸ்ரேயா மௌனம் சாதித்தாள்.

"என்ன நடந்தது?யார் காரணம்?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.