(Reading time: 9 - 18 minutes)

 

".............."

"சொல்லு!"-ஸ்ரேயா,உடைந்துவிட்டாள்.

"ஸ்ரேயா....அழாம என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லு!"

"என்னை மன்னிச்சிடு கீதா!"

"என்னாச்சு?"-ஸ்ரேயா,அன்று நடந்தது அனைத்தையும் கூறினாள்.அதை கேட்டவள் நொருங்கிவிட்டாள்.சப்த நாடியும் அவளுக்கு ஒடுங்கிவிட்டது.

"என்ன சொல்ற நீ?என் ரகு அப்படி பண்ணிருக்க மாட்டார்!"

"அதான் உண்மை.நான் பொய் சொல்லலை.இந்த குழந்தை ரகுவோட வாரிசு!"

-கீதாவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.

"நீ சொல்ற வார்த்தையோட அர்த்தம் தெரியுமா உனக்கு?நான் இதை நம்ப மாட்டேன்."

"எந்தப் பொண்ணும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டா...!"

"ஐயோ கடவுளே....!இது என்ன சோதனை?"

"மாமா...மேல எந்த தவறும் இல்லை.அன்னிக்கு அவர்,அவர் நிலையில இல்லாத போது நான் அங்கே போயிருக்க கூடாது!"

"நடந்த விஷயத்துல இனி எந்த ஆறுதலும்,சொல்ல முடியாது!நான் என்ன தவறு பண்ணேன்?ஏன் நான் இந்த நிலையை அனுபவிக்கணும்?"

"கீதா.....நான் வேணும்னா இந்த குழந்தையை கலைச்சிடுறேன்!"-என்றாள் வேறு வழி இல்லாமல்!

அதைக் கேட்ட கீதா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

"என்ன பேசுற நீ?நீங்க ரெண்டு பேரும் பண்ண தப்புக்கு,எந்த பாவமும் பண்ணாத அந்த குழந்தைக்கு தண்டனை தர எப்படி உனக்கு மனசு வருது?"

"...................."

"உனக்கு அந்த குழந்தையால அவமானம்.வெளியில தெரிந்தால்,ரகுக்கும்,இந்த குடும்பம் மொத்தத்துக்கும்  அவமானம்.அந்தக் குழந்தையை வெறும் அவமானமா தான் பார்க்கிறீயா?ஒரு உயிரா பார்க்கலையா?"

"..........."-சரியான கேள்விகள் அவள் அடுக்கியது அனைத்தும்.

"அப்படினா,நீ செய்த தவறுக்கு தண்டனை உண்டு!"-ஸ்ரேயா அவளை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"என் ரகுவோட வாரிசு இந்த உலகத்துக்கு வரணும்."-அவள் கேட்டதில்,ஸ்ரேயா ஆடிவிட்டாள்.

"கீதா!"-அவள்,தன் கைகள் இரண்டையும்,ஸ்ரேயா முன் யாசிப்பதுப் போல நீட்டி,

"தயவுசெய்து அந்தக் குழந்தையை தண்டிக்காதே!அவன் பிறக்கணும்!"

"..............."

"வேணும்னா அவன் என் குழந்தையா வளரட்டும்.உனக்கு அவனால,எந்த கஷ்டமும் வராது.ப்ளீஸ்...."-ஸ்ரேயா,அவள் கரங்களைப் பற்றி 'சரி'என்பது போல தலை அசைத்தாள்.

டுத்த காரியமாக ஆதித்யாவிற்கு ஊருக்கு வர செய்து அனைத்தையும் அவனிடத்தில் கூறினாள் கீதா.அவன் எதையுமே நம்பவில்லை.ஆனால்,அவன் நம்பாததால்,உண்மை பொய்யாகி விடுமா?

"இது உண்மை தான் அண்ணா!"-அப்போது எதற்கு அசராத அவன் இருதயமும் கலங்கிவிட்டது.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா!எந்தப் பொண்ணுக்கும் இப்படி ஒரு மனசு வராது.ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா இருந்த அதே நிலைமையில நீயும் இருக்க!"-அவன்,கரங்கள் அவளைப் பார்த்து குவிந்தன.

"இது வரைக்கும் என் அம்மாவை தவிர யார்கிட்டையும் தலை வணங்கியதில்லை.இன்னிக்கு அவங்களோட மறு ஜென்மமா உன்னை பார்க்கிறேன் கீதா!"

"ஐயோ...பெரிய வார்த்தையெல்லாம் வேணாம்ணா!இந்தப் பிரச்சனையை தீர்க்க வழி சொல்லுங்கண்ணா!"

"இரண்டுப் பேரும் டெல்லிக்கு கிளம்புங்க.ஊர் பார்வைக்கு நீ கர்ப்பமா இருக்கன்னு தெரியட்டும்.யாருக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்."-இனி நிகழ்ந்தேறியதை அனைவரும் ஒருவாறு ஊகித்திருப்பீர்கள் அல்லவா?இதற்கு மேல் என்ன நிகழ்ந்தது என்பதை வரும் வாரம் காணலாம்.

தொடரும்...

Go to EUU # 12

Go to EUU # 14

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.