(Reading time: 9 - 17 minutes)

04. ஷைரந்தரி - சகி

வாழ்க்கையானது, பல்வேறு இரகசியங்களை தன் அகத்தே கொண்டுள்ளது. சொல்ல போனால்,இந்த இரகசியங்கள் நிலகரி தன்னில் மறைந்து கிடக்கும் வைரங்கள் போன்றது. ஆனால்,விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த வைரத்தை தேடி யாரும் அலைவதில்லை. விலை மதிப்பே இல்லை என்றாலும்,இதன் முக்கியத்துவம் யாருக்கும் தெரிவதில்லை.மண்ணில் மனிதன் ஒருவன் பிறக்கும் போதே,அவன் ஏதோ ஒரு கடமையை நிறைவேற்றவே உதிக்கின்றான்.

அவன் வழி தர்மத்தின் பாதையில் செவ்வனே பயணிக்க அவன் எடுத்துக் கொண்ட,உருவாக்கி கொண்ட இடைநிலை இறைவன்.அந்த இடைநிலையை நம்புகிறவன் நிச்சயம் தன் பாதையை தவறுவதில்லை. தன்னையே இடைநிலையாய் வைத்தவன்,தன் பாதையை மறந்ததில்லை.

"சிவா!"

"என்ன அம்மூ?"

shairanthari

"எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா?"

"ஏன்டா?"

"போர் அடிக்குதுடா!"-அப்போது அங்கே பணிப்புரியும் வேலையாள் ஒருவர்,

"எது சின்னம்மாக்கு போர் அடிக்குதா?ஐயா... சின்னம்மாக்கு போர் அடிக்குதாம்!"-என்று கூவினார்.

"சின்னம்மாக்கு போர் அடிக்குதா?"

"சின்னம்மாக்கு போர் அடிக்குதா?"

"சின்னம்மாக்கு போர் அடிக்குதா?"-என்று அச்செய்தி காட்டுத்தீ போல பரவியது.அதைக் கேட்டு ஷைரந்தரியின் தாத்தா அங்கே வந்தார்.

"என்னம்மா...போர் அடிக்குதா?என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?டேய்...குழந்தையை வெளியே கூட்டிட்டுப் போக ஏற்பாடு பண்ணுங்கடா!"

"தாத்தா..."-ஷைரந்தரி.

"ஏன் தாத்தா எக்ஸ்பிரஸ் பிடிக்கிற?போர் அடிக்குதுன்னு தானே சொன்னேன்.இப்படி பாஞ்சாலபுரமே அதிர்கிற மாதிரி கத்துற?"

"இல்லைம்மா..."

"உஷ்...பேசாதே!நான் உனக்கு குழந்தையா?"

"ஆமா..."-சிவா கூறிய பதிலுக்கு ஷைரந்தரி அவனை முறைத்தாள்.அவன்,உடனே தொண்டையை செறுமிக் கொண்டு,தன் கைப்பேசியில் கவனம் பதித்தான்.

"ஷைரு...எங்கேம்மா போகணும்?"

"எங்கேயாவது தாத்தா!"

"கோவிலுக்கு போகலாமா?"

"ம்...போகலாம் தாத்தா!"

"சரிம்மா...நீ போய் ரெடியாகு!சிவகாமி... கோவிலுக்கு போகணும் கிளம்புங்க ."-என்றவாறு சென்றார் அவர்.

சிறிது நேரம் சென்றது...

ஷைரந்தரியின் அறை கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

திறந்தாள்.பார்வதி நின்றிருந்தாள்.

"வாங்க!"

"கிளம்பிட்டீங்களா?"

"ம்..கிளம்பிட்டேன்."-ஷைரந்தரி வெள்ளை நிற சுடிதாரில் இருந்தாள்.

"இந்த டிரஸ்லையா?"

"ஏன்?"

"ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க.சேலை கட்டிக்கோங்களேன்."

"ம்...எனக்கு கட்ட தெரியாது!"

"நான் சொல்லி தரேன்.அம்மா உங்களுக்கு அதை தர சொல்லி தான் என்கிட்ட  கொடுத்து விட்டாங்க."-என்று அழகிய வேலைப்பாடு அமைந்த கீரிம் நிற புடவையை தந்தாள்.

"இது கட்டிக்கிறீங்களா?பட்டுப்புடவை கட்டிக்கிறீங்களா?"

"இதுவே கட்டிக்கிறேன்."

"சரி.."-சிறிது நேரம் கழிந்தது.

சிவா பொறுமை இழந்து மூன்றாவது முறையாக கதவை தட்டினான்.

"அம்மூ...ரெடியாயிட்டியா?"

"இதோ வந்துட்டேன் சிவா."-அவனை கண்ட மஹாலட்சுமி,

"எப்பவும்,பொண்ணுங்க ரெடியாக லேட்டாகும் சிவா!"என்றார்.

"அதுக்கு 1 மணி நேரமா ஆகும்?அம்மூ இவ்வளவு நேரம் எடுத்துக்கவே மாட்டா அத்தை."

"அவ வெளியே வரும் போது இது அம்மூவான்னு கேட்ப,பார்!"

"என்னமோ சொல்றீங்க,சரி!"-சிறிது நேரம் கழித்து,அவள் அறை கதவு திறக்கப்பட்டது.அதற்காகவே காத்திருந்ததை போல அனைவரும் அங்கே குழுமினர்.(ஹீரோ மிஸ்ஸிங்)

ஷைரந்தரியை பார்த்ததும் சிவா,மஹாலட்சுமி கூறியது போல உண்மையில் பிரமித்தே விட்டான்.தன் தங்கை இவ்வளவு அழகா?என்று அவன் யோசிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.

"எப்படி இருக்கு சிவா?"

"ஐயோ...அம்மூ என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு!"

"நல்ல சொல்லலை..என் அம்மூவா இதுன்னு வாயை பிளப்பன்னு சொன்னேன்ல!"-மஹாலட்சுமி.

"உங்க செலக்ஷன் சூப்பர் அத்தை."-ஷைரந்தரி.

"சரி...பேசி இருக்க வேணாம் கிளம்புங்க."

"சரிங்க அத்தை."-அவர்கள் இருவரும் முன்னால்,

சென்றனர்.சிவா ஷைரந்தரியிடம் இரகசியமாக,

"அம்மூ...பார்வதி வரலை?"-தன் தமையனின் இந்த கேள்வியில் திகைத்தவள் ஏதோ புரிந்தவாறு,

"ஏன் கேட்கிற?"என்றாள்.

"அது...வந்து..ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்னு தான்!"

"எதுக்கு?"

"என் தங்கச்சியை இவ்வளவு அழகா மாற்றி இருக்காங்களே அதுக்கு தான்!"

"அப்படியா?நம்பிட்டேன்."

"நிஜமா அம்மூ!"

"அதான் நம்பிட்டேன்னு சொல்றேன்ல!வேணும்னா கூப்பிடுறேன்,நீயே சொல்லிடு!!!!"

"இல்லை...அது...நான் அப்பறமா சொல்லிக்கிறேன்!"

"சிவா!!!நீ எது நினைத்தாலும் நான் கண்டுப்பிடிச்சிடுவேன்."-அவன்,புரியாதைப் போல விழித்தான்.இல்லை... நடித்தான்.ஷைரந்தரி அவனுக்கு ஒரு சிரிப்பை மட்டும் விடையாக தந்தாள்.

அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் செல்லும் அந்த கோவிலுக்கும்,இந்த கதைக்கும் மிகுந்த பிணைப்பு உண்டு என்பதை!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.