(Reading time: 9 - 17 minutes)

 

ந்த கோவிலில் மூலவராக வீற்றிருப்பவர்,தென்னாடு உடைய சிவப்பெருமான் தான்.சுமார் 1800 வருடம் பழைமை வாய்ந்த கோவில் அது.இதில்,பார்வதி தேவி,கங்கா தேவி என்னும் திருநாமம் ஏற்று தனது வடிவமே கங்கை என்பதற்கிணங்க காட்சியருள்கிறார்.ஒரு காலத்தில்,கங்கையும், காவிரியும் கலந்து பாய்ந்த இடம் இது.இன்றோ,ஜீவநதி இன்றி காவிரி மட்டுமே பாய்கிறது.

"தாத்தா!"

"என்னம்மா?"

"கோவில் ரொம்ப பெரிசா இருக்கு.யார் இதை கட்டினா?"

"இது 1800 வருஷத்துக்கு முன்னாடி,ஒரு பல்லவ மன்னன் கட்டினாரு!"-என்று முன் கூறிய விவரத்தை கூறினார்.

"ஏன் கங்கைநதி வற்றிடுச்சி?"

"வற்றலைம்மா..அது ஒரு பெரிய கதை!அதை அப்பறமா சொல்றேன்!"

"ம்..."-சிவா,காரை நிறுத்தினான்.காரில் இருந்த நால்வரும் காரை விட்டு இறங்கினர் ஷைரந்தரி இறங்க தன் காலை எடுத்து வைத்த போது பலமாக காற்று வீசியது.

"என்னங்க?இப்படி காற்று வீசுது?"

"சாதாரண காற்று தான் சிவகாமி, வா!"

-ஷைரந்தரி மனதில் ஏதோ உறுத்திக் கொண்டே வந்தது.வழியில்,அவள் கண்ட காட்சிகள் அவளுக்கு பரிச்சியமானதை போலவே இருந்தது.ஏதோ யோசனையில்,அவள் முன்னால் சென்றாள்.

"ஷைரந்தரி.."

"ம்...என்ன பாட்டி?"

"அந்தப் பக்கம் போகாதேம்மா!"

"ஏன்?"

"அந்தப் பக்கம் போக கூடாது!அந்த இடம்...நான் அப்பறம் சொல்றேன்.நீ இப்படி வா!"-அவர்கள் செல்ல பின்னால் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

"அம்மூ!"

"என்ன?"

"நீ போய் சாமி கும்பிடு!நான் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரேன்!"

"எங்கே?"

"கோவிலுக்கு உள்ளே தான்.பார்டரை தாண்ட மாட்டேன்!"

"சரி..."-சிவா,மெதுவாக அங்கிருந்து நழுவி சென்றுவிட்டான். அனைவரும் கோவில் மூல ஸ்தானத்திற்கு வந்தனர்.

அங்கிருந்த அர்ச்சகர் அவர்களைப் பார்த்து,

"ஐயா!வாங்க வாங்க!" என்றார்.

"என் பேத்தி ஊரிலிருந்து வந்திருக்கா!அவ பேர்ல அர்ச்சனை பண்ணனும்!"

"ஷேமமா பண்ணிடலாம்.சொல்லுங்க!"

"ஷைரந்தரி,மகர ராசி,திருவோண நட்சத்திரம்,சிவ கோத்திரம்."-என்று சில விவரங்களை கூறினார்.விவரங்களை பெற்று கொண்ட அர்ச்சகர்,அவள் பேரில் அர்ச்சனை செய்தார்.

"திருவிழா விஷயம் எப்படி போகுது அர்ச்சகரே!"

"நீ இருக்கும் போது என்னங்க கவலை?எல்லா ஏற்பாடையும் நீங்களே பண்ணிட்டீங்களே!இவங்க தான் உங்க பேத்தியா?"

"ஆமாம்."

"அப்படியே அந்த கங்கா தேவி சாயலில் இருக்கா!"-ஷைரந்தரி புன்னகைத்தாள்.அந்தப் புன்னகையில் ஏதோ தேஜஸ் இருப்பது அவருக்கு தெரிந்தது.

எதிலும் ஈடுபாடு இல்லாததை போல கோவிலை நோட்டமிட்டு கொண்டிருந்தான் சிவா.அவன்,கண்ணில் அழகோவியமாய் வந்து செனறாள் பார்வதி.

திடீரென்று அலைப்பாயும் தன் மனதை கட்டுப்படுத்த,

'டேய்!!!மனசை திசை திருப்பு!!சலனப்படுத்தாதே!"-என்று தனக்கு தானே கட்டளை யிட்டு கொண்டான்.இருந்தாலும், காதலில் விழுந்த நெஞ்சம் யார் பேச்சை தான் கேட்கும்???மீண்டும்,மீண்டும் அது பார்வதியிடமே நின்றது.இதைப் பற்றியே சிந்தித்து வந்தவன் மீது கவனிக்காமல்,வந்து மோதினாள் பார்வதி.கீழே விழ போனவளை தாங்கினான் சிவா.சற்று அதிர்ச்சி தான் இருவருக்கும்.ஆனால், இவனுக்கோ அதோடு பனிச்சாரலும் வீசியதே!!!அவனிடமிருந்து மெல்ல விலகி,

"மன்னிச்சிடுங்க தெரியாம...நடந்துடுச்சி!"-என்றாள் தலை குனிந்தவாறு.அவள்,உள்ளுர வெட்கப்படும் அழகை இரசித்தவன்.பின்,

"பரவாயில்லைங்க...நானும் கவனிக்கலை.ஸாரி!" என்றான்.அவள்,ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்து பின்,மீண்டும் தலைக் குனிந்தவாறு அங்கிருந்து சென்றுவிட்டாள்.அவள் செல்வதையே சிறிது ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவனின், தோள்களில் கைப் போட்டு,

"செம...ரொமான்ஸ் சீன் சிவா!"-என்றாள் ஷைரந்தரி.

"அம்மூ!நீ எப்போ இங்கே வந்த?"

"நீ அண்ணியை அப்படி தாங்கி பிடிச்ச பார்த்தியா?அப்போவே,வந்துட்டேன்."

"அண்ணியா?"

"ஆமா....அண்ணி தான்.பார்க்கிறதுக்கு முனிவர் மாதிரி இருந்துட்டு பண்றதுல்லாம் விஸ்வாமித்திரர் வேலை!"-அவன்,மெல்ல சிரித்தான்.

"ஐயோ!உனக்கு வெட்கப்படலாம் தெரியுமா?"

"போதும்...ரொம்ப கிண்டல் பண்ண வேணாம்!"

"எனக்கு இனி அதான் வேலையே!சொல்லிட்டியா?"

"என்னது?"

"அண்ணிக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா?"

"அம்மூ...இப்போ தான் அவளை 12 வருஷம் கழிச்சி முதல் முறையா பார்த்து இருக்கேன்.அதுக்குள்ளவா?"

"பாருடா!!!காலையில வரைக்கும் அவங்களா இருந்தவங்க,இப்போ அவளா ஆகிவிட்டாங்களா?"

"ப்ச்...சும்மா இரு அம்மூ!"

"சிவா!நீ என்ன வேணாலும் பண்ணு,பொறுத்துக்கிறேன்.ஆனா,தயவு செய்து வெட்கம் படாதே,என்னால தாங்கிக்க முடியலை."-அங்கே கொஞ்சம் கோலாகலமான சிரிப்பு சப்தம் கேட்டது.

'சிரிக்கிறாயா?சிரி!இப்போவே சிரித்து வைத்துக் கொள்.இனி,உன் வாழ்க்கையில் சிரிப்பை தொலைத்துவிட்டு, நிர்மூலமாய் நிற்பாய்!!!!விரைவிலேயே பகை தீர்க்க வருவேன்!'என்று யாரும் அறியாதவாறு உரைத்தது ஒரு குரல்.

ண்களை மூடி அமைதியாக தியானம் செய்துக் கொண்டிருந்தார் நீலக்கண்டச்சாரியார்.

என்றுமே சலனமே படாமல் அமைதியாக தியானம் செய்பவர்,அன்று சலனங்களால் சூழ பட்டதைப் போல காணப்பட்டார். கண்களை மூடினால், ஏதேதோ பிம்பம் கண் முன்னே வந்தது.

என்ன அது????

'அடர்ந்த காடு போல இருக்கிறது,பல பேர் அங்கே குழுமி உள்ளனர்.நடுவில் ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவளை சுற்றி யாரும் நெருங்காதவாறு தீ பரவியுள்ளது.'கண்களை திறந்தார் அவர்.

"மகேஷ்வரா!இது என்ன சோதனை???என்றும் இல்லாமல்,இன்று என்ன ஆயிற்று என் தவத்திற்கு?"-எதிரில் கம்பீரமாய் வீற்றிருந்த சிவலிங்கத்தின் மீது கேள்வியை தொடுத்தார்.அவரின், கேள்விக்கு விடை அளிக்கும்படி தவறி அவர் முன்னால்,மகேஷ்வரனின் பாதத்தில் விழுந்தது ஷைரந்தரியின் ஜாதகம்.

நீலக்கண்டச்சாரியார் அதை கையில் எடுத்தார்.அவர், மனதில் ஏதோ ஒன்று நெருடியது.பழங்கால சுவடிகள் பல சேமித்து வைத்திருந்த அறைக்குள் சென்றார்.எதையோ தேடினார்.பல சுவடிகளை புரட்டினார்.இறுதியில் அவர் கையில் ஏதோ சிக்கியது.அதை எடுத்து படித்தார்.ஷைரந்தரியின் ஜாதகத்தை கணித்தார்.சிறிது நேரம் சென்றது.அவர், கண்களில் தன்னிச்சையாக கண்ணீர் திரண்டது.

"ஈஸ்வரா!!!!இவ்வளவு பெரிய சோதனையை அந்தப் பொண்ணுக்கு ஏன்ப்பா தர இருக்கிற?வரப்போற பிரச்சனையில இருந்து,உன் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்!"-மனமுருக வேண்டினார் நீலக்கண்டச்சாரியார்.

அப்படி என்ன அவளுக்கு சோதனை  வர இருக்கிறது?எந்த வேதனையை அவள் சமாளிக்க இருக்கிறாள்???சில விடைகள் தாமதமாக கிடைப்பதிலே சுவாரசியம் இருக்கிறது.

தொடரும்

Go to Episode # 03

Go to Episode # 05

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.