(Reading time: 31 - 62 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 14 - புவனேஸ்வரி கலைச்செல்வி

டல் சேரும் நதி யாருக்காகவும் காத்திருப்பதில்லை

கரை தீண்டும் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

பூக்கள் தீண்டும் காற்றும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

அதே போல

காலமும் யாருக்காகவும் காத்திருக்கவே இல்லை ...

VEVNP

இப்போ வருவேன் அப்போ வருவேன்னு சுபத்ராவுக்கு டிமிக்கி காட்டிக்கிட்டு இருந்த பைனல் எக்ஸாமும் ஒரு வழியா வந்து முடிஞ்சிருச்சு.. இது வரை கல்வியில் எனும் கலை மூலமாக சேர்த்து வெச்ச அஸ்திரத்தை எல்லாம் பரிட்சை என்ற போர்க்களத்தில் திறமையாய் பயன்படுத்தி முடித்தாள் நம்ம இளவரசி. கல்லூரியின் கடைசி நாட்களை நண்பர்களுடன் செலவிடுவதும், அவ்வப்போது எல்லை தாண்டும் தன்னவனின் குறும்பு பேச்சுகளுக்கு வெட்கபடுவதும்தான் சுபத்ராவின் தலையாய கடமைகள் இப்போதைக்கு ... ( சுபத்ராவுக்கு வெட்கமா நு அபத்தமா கேட்க கூடாது ... அப்பறம் அர்ஜுன் உங்க கிட்ட சண்டைக்கு வந்தா நான் பொறுப்பில்லை இப்போவே எச்சரிக்கிறேன் .....ஹா ஹா )

சுபத்ராவே இப்படினா நம்ம அர்ஜுனுக்கு சொல்லவா வேணும் ? அப்படின்னு  நீங்க நினைக்கிறது  எனக்கு கேட்குது ... நம்ம காதல் மன்னன் இப்போ தன் இளவரசியோடு உல்லாச பறவைகளா சுத்திகிட்டுதான் இருக்குறார் ... பட் அதே நேரம் சில முக்கியமான ப்ரோஜெக்ட்ஸ் வர்றதுனால அப்பபோ சுபியை காக்க வெச்சு ஊடலை ஏற்படுத்தி அதை விட சூப்பரா ஒரு கூடலையும் ஏற்படுத்தி காதல் ஆழியில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தார்.... தினமும் பேசுவதும், கொஞ்சி கொள்வதும், கை பிணைத்து நடப்பது, இறுக்கமான அணைப்புகளும் இதழ் ஒற்றுதலும் மட்டும் காதல் இல்லை.. புரிதலும், காத்திருத்தலும், விட்டு கொடுப்பதும் தான் காதல் என்பதை நம்ம காதல் குயில்கள் செவ்வனே உணர்த்தி கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிர்மறையான ஜோடிதான் நம்ம கிருஷ்ணா- மீரா ... மீரா ஒதுங்கி இருக்கும்போதே கிருஷ்ணன் அவரின் லீலையை நிறுத்த மாட்டாரு... இப்போ மீரா பச்சை கொடி காட்டிய பிறகு சும்மா இருப்பாரா நம்ம கிருஷ்ணன் ...? பட் இதுல அவர் பண்ண பெரிய சொதப்பல் என்ன தெரியுமா ? மீராவின் கொலுசு சத்தம் கிருஷ்ணாவுக்கு மட்டுமா கேட்கும்? மொத்த குடும்பத்துக்குமே கேட்குமே, சோ இவங்களின் சீண்டல் விளையாட்டெல்லாம் அவ்வப்போது பெரியவங்க கண்ணில் படத்தான் செஞ்சது ...

இப்படிதான் ஒரு நாள்,

இரவு லேட்டாக வீட்டுக்கு வந்த ரகு, மாடிக்கு செல்லாமல், அருகில் இருந்த வரவேற்பறையிலேயே உறங்கிவிட்டான். காலையிலேயே மீராவை கிருஷ்ணன் தேடி கொண்டிருப்பதை பார்த்த நித்யா வேண்டுமென்றே,

" குட் மோர்னிங் அண்ணா " என்று  அவன் முன் நின்றாள்...

" மோர்னிங் டா செல்லம் ....என்ன தனியா இருக்கே ? "

" இல்லையே நீங்களும் இங்கதானே இருக்கீங்க ? "

" ஆண்டவா .... அதுக்கும் முன்னாடி ? "

" அப்போ நான் சூர்யா பெரியப்பா கூட பேசிகிட்டு இருந்தேன் "

" ஓ"

" யாரையோ  தேடுறிங்க போல"

" உனக்கு தெரியாதாக்கும் ? "

" ஏன் தெரியாமல் ?? தெரியுமே பட் நீங்களே வாய திறந்து கேட்ட அவ எங்க இருக்கா நு நான் சொல்லிடுவேனே "

" ஷாபா...என் அன்பிற்கினிய பாசமலர் நித்யா அவர்களே, தங்களது அண்ணியார் வசந்தர  மீரா எங்கிருக்கிறார்? "

" ஹா ஹா ஹா .... அதோ அங்கே ரூம்ல மேடம் தூங்குறா "

" அங்கயா ? " என்றவன் அவளை சந்தேகமாய் பார்த்தான்.

" நம்பாட்டி போங்கண்ணா ..எனக்கு வேலை இருக்கு " என்று அவள் நகரவும், " ஒருவேளை  உண்மையா இருக்குமோ " என்று யோசித்தவாறே அந்த அறைக்கு சென்றான்.

கிருஷ்ணனை அங்கு அனுப்பும் முன்பே, நித்யா அந்த அறைக்கு சென்றாள். அங்கு  அசந்து தூங்கி இருந்த ரகுவின் முகம் யாருக்கும்  தெரியாதவாறு தலையணை எடுத்து வைத்து ஒரு புடவையை போர்த்திவிட்டு சென்றாள் ... ( இருந்தாலும் நித்து இதெல்லாம் கொஞ்சம் கூட்ட நல்லா இல்ல ) தூரத்தில் இருந்து பார்பதற்கு ஒரு பெண் உறங்குவதை போல இருக்க, நம்ம காதல் மன்னன் கிருஷ்ணன்,

" செல்லம் மாட்டிகிட்டியா ? " என்று கூறி அவளை ( ??? ) பின்னாலிருந்து அணைத்து முத்தமிட்ட, அலறியபடி தூக்கத்தில் இருந்து எழுது கண்களை கசிக்கினான் ரகு...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை கிருஷ்ணன் அணைக்க, அவன் துள்ளி எழ, அவனின் முகத்தை பார்ஹ்து கிருஷ்ணனும் பதற, அந்த கண்கொள்ளா காட்சியை  கண்டு வெடித்து சிரித்தது நித்யா மட்டுமல்ல... அனைவரும்தான் ... ( நம்ம சூர்யா சார் உட்பட ! )

" அண்ணா, என்ன அண்ணா நீங்க ? " என்று கன்னத்தில் கை வைத்துகொண்டே ரகுராம் கேட்க, உரக்க சிரித்தாள் நித்யா. மொத்த குடும்பமும் அங்கு நிற்க கிருஷ்ணனின் பார்வை மீராவின் மேல் திரும்பி அவளை சாடியது

" பார்த்தியாடி உன்னால தான் இப்படி " ஆனால் அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லையே. தன்னை நினைத்துதான் அவன் இப்படி செய்தான் என்று உணர்ந்தவளுக்கு அத்தனை பேர் முன் நிற்கவே  வெட்கத்தின் முகம் சிவந்தது. மெல்ல அங்கிருந்து நகர்ந்த நேரம்,

" நில்லு எல்லாம் உன்னாலதான் " என்று அவளை பார்த்து சொன்னான்...நித்யா உட்பட அனைவரின் பார்வையும் மீரா மீது திரும்ப, ஒரே நொடியில் நித்யாவின் அருகில் வந்து காதை திருகினான் கிருஷ்ணன் ...

" ஹேய் வாலு வாலு..இத்தனை நாலு மத்தவங்களைத்தான் நீ வம்புக்கு இழுத்தே ...இப்போ  என்னையேவா ? "

" ஐயோ அண்ணா.............. அண்ணா வலிக்கிறது" என அவள் அலற

" இதுங்க சண்டை இன்னைக்கு முடியாது ... நீங்க கெளம்புங்க ... ரகு போயி  குளிடா" என்று அனைவரையும் அனுப்பி வைத்தார் அபிராமி ...

பாவம் ரகுவை பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது .. சிவனேன்னு தூங்கிகிட்டு  இருந்த புள்ளைய வெச்சு கொஞ்ச நேரத்துல என்ன களேபரம் பண்ணிட்டாங்க ....

" நான் என்னடா பண்ணேன் " என்பதுபோல ரகு மீராவை பார்க்க

" நான் மட்டும் என்ன பண்ணேன் ரகு ? " என்பதை போல் அவளும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

ரகு மீரா இருவரும் ஒரு நேரத்தில் நித்யா அருகே வர

" யம்மா எஸ்கேப் .." என்றபடி அந்த அறைக்குள்ளேயே தனது மான் கராத்தே திறனை காட்டி கொண்டிருந்தாள் நித்யா .. சிறிது நேரம் நித்யாவை துரத்திய கிருஷ்ணனின் பார்வை மீராவின் பக்கம் திரும்ப அவள் எதிர்பாராத நேரம், அவளை கை பிடித்து இழுத்து சென்றுவிட்டான்....

" ஐயோ இந்த பிஆசு கூட என்னை தனியா விட்டுட்டாங்களே " என்பதை போல ரகு பார்த்து வைக்க

" இதுக்குத்தான் ராம் அண்ணா , நான்  இப்படி ஒரு டிராமா போட்டேன் ... நீங்க தான்  சொதப்பிட்டிங்க ..பாருங்க ..காதல் கிளிகளுக்கு ரெக்கை முளைச்சிடுத்து பறந்து போய்டுத்து " என்றாள் நித்யா.

ஓகே ஓகே இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.