(Reading time: 23 - 46 minutes)

காதல் நதியில் – 07 - மீரா ராம்

வள் சொன்னது என்ன?.. அவள் ஏன் அப்படி பாடினாள்?... எனில் அது தெரிவிக்கும் செய்தி யாது?... அந்த கண்களில் ஏனந்த வலி?... என்னால் அதை காண முடியவில்லையே ஏன்?... அவள் முகத்தில் ஏனிந்த வேதனை?... என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே… அவள் பாடல் வரிகளில் ஏனிந்த துயரம்?... எதற்காக?... ஏன்?... ஏன் இவ்வாறு உனது அபிநயத்தில் துயரத்தை, நீ அனுபவிக்கும் வேதனையை வெளிப்படுத்தினாய்?... உன்னை தெரியாது என்று முகிலனிடம் நான் சொன்னது உன் காதில் விழுந்ததா?...

அதற்காகவா இத்தனை கவலை கொண்டாய்?... எனில் நீயும் என்னை தெரிந்தவள் போல் காட்டிக்கொள்ளவில்லையே… நேற்றும் இன்றும்… பிறகு நான் எப்படி உன்னை தெரிந்தவன் போல் நடந்து கொள்வேன்?... சொல்லு… அபிநயா?... சொல்லு… உன் அபிநயத்தில் நீ உரைத்தது என்ன?... எனக்கு என்னவோ உருத்துகிறது… சொல்லிவிடு…” என்று தனக்குள் உழன்று கொண்டிருந்தவனை முகிலனின் கேள்விகள் பலமாக தாக்கியது… ஆயினும் அவன் பதில் சொல்லவில்லை… கண்களின் கண்ணீர் அவனைப் பறை சாற்றியது… இருந்தும் அதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…

பரிதாபமென்றே நினைத்தனர்… மேலும் முகிலன் ஹரியை கெஞ்ச, ஹரியும் அவளின் கடந்த காலத்தை கண் முன் கொண்டு வந்தான்… அதை கற்பனை செய்தவனுக்குள் இருதயம் ஒரு சில நிமிடங்கள் துடிப்பதை நிறுத்தியது… உலகமே இருண்டது போல் இருந்தது… கண்கள் ஒரு நொடி துக்கத்தில் செங்குருதி வடித்தது…

kathal nathiyil

கனத்த மௌனத்தை ஹரி மீண்டும் கலைத்து, அவளுக்கு எதுவும் நினைவில்லை…. என்று சொன்னதும், இடம் மறந்தான்… நண்பர்களை மறந்தான்… “உனக்கு நினைவில்லையா என்னை?... என்னவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா?.. அதனால் தான் ஆசைமுகம் மறந்து போச்சே என்று பாடினாயா?... சீதை…” என்று மனதிற்குள் கேள்வி கேட்டவன் தன்னையும் மறந்து அப்படியே தரையில் சரிந்து விட்டான்…

நேற்று இந்நேரம் உன்னை நான் ஒரு வருடம் கழித்து பார்த்தேனே அதுவுமின்றி உன்னை முதன் முதலில் நான் என் வாழ்வில் சந்தித்த நாளும் இது தானே...…. என்றவனுக்குள் நேற்றைய, இன்றைய நாளின் காட்சி விரிந்தது அவனது விழிகளில்…

“என்ன சர்ப்ரைஸ்-ஆக இருக்கும் என்ற நினைவில் கண்களை திறந்தவனின் எதிரே இருந்தவள், அவனது சீதை… அவன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் சீதை… இன்றளவும் அவளை மறக்க முடியாமல் தவிக்கின்றான் அவளது ராம்…. அவளோ சஞ்சலமே இல்லாது அவனைப் பார்த்து வணக்கம் சொல்கிறாள்… அந்த நேரம், ஹரீஷின் பேச்சு, ஹரியின் செய்கை தனக்கு அவர்களின் உறவை வெளிப்படுத்திவிட்டது,.. அவன் மனம் இன்னும் தவித்தது… அவனை அவளின் வேல் விழிகள் தாக்கியது… யாரோ போல் அவளைப் பார்க்க அவனால் முடியவில்லை… தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பேசுவது  நாடகம் போல தெரிந்தது அவனுக்கு… அதில் அவனும் கதாபாத்திரமாய் நடிப்பது இயலுமா என்பதும் அவனுக்கு புரியவில்லை…

அவளுடன் வாழ்ந்த காலங்களை மட்டுமே அவன் இமைகளில் ஊற்றி உறங்குகிறான் இன்றும்… மறுநாள் விடியலில் நகரும் அந்த வான்மதியை தனது கைகளுக்குள் பிடித்து வைக்க ஏக்கமும் கொள்கின்றான்….

சீதையாகிய அவளின் நினைவுகளை மட்டும் தான் நெஞ்சில் சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கின்றான் இன்றும் நீங்காமல்… அவளை அன்று பிரிந்த போது அவன் நெஞ்சையும் சேர்த்தே அங்கே தொலைத்தும் விட்டான்…

அவனுக்குள் அந்நேரம் அந்த பாட்டு வரிகள் நினைவு வந்தது… ஏதோ அவனுக்கென்றே எழுதியது போல் என்ன பொருத்தம்… ஹ்ம்ம்…

ஏதோ ஒன்று என்னைத் தாக்க,

யாரோ போல உன்னைப் பார்க்க

சுற்றி எங்கும் நாடகம் நடக்க,

பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும் வாழும் கனவை

கண்ணில் வைத்து தூங்கினேன்

காலை விடிந்து போகும் நிலவை

கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் நியாபத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே

உன்னைப் பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே…”

தற்கு மேலும் அங்கே அவள் மூன்றாவது மனிதன் போல் பார்ப்பதை அவனால் தாங்க இயலாது வராத ஃபோன் வந்ததாக எடுத்துச்சென்று விட்டான்…

அங்கிருந்து அவளை விட்டு அவன் பிரிய அவன் மனம் முரண்டு பிடித்தது மிக… அவளிடத்திலேயே அவனை விட்டு சென்றான் எதுவுமில்லாமல்…. அவனின் பாதைகள் அவளிடமே மீண்டும் வர, எங்கே சென்று யாரை கேட்பது என நொந்து கொண்டான்…

என் வாழ்வில் எதற்காக வந்தாய் சீதை, வந்ததோடு நில்லாமல் என் பகல்-இரவு மாற்றினாயே ஏன்?... எதற்காக என்னை விட்டு விலகி, இந்த பிரிவு வலியை தந்தாய் சீதை?... ஏன் என் இதயம் தனிமையை சுமக்க வைத்தாய்?... உன் குரல் என் உள்ளே ஒலிக்கிறதே சீதை… என் உயிர் கூட என்னை தாக்கி கொல்கிறதே சீதை… எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன்… எங்கே போகிறேன், முற்றிலும் மறந்தேனே….

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்

ஏதும் இல்லையே என்னிடத்தில்

எங்கே போவது யாரை கேட்பது

எல்லா பாதையும் உன்னிடத்தில்

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்

என் இரவையும் பகலையும் மாற்றிப் போனாய்

ஏன் இந்த பிரிவை தந்தாய்

என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய்

உள்ளே உன் குரல் கேட்குதடி

என்னை என் உயிர் தாக்குதடி

எங்கே இருக்கிறேன், எங்கே நடக்கிறேன்

மறந்தேன் நான்….”

அவளின் நினைவலைகளால் தாக்கப்பட்டவன் தன்னை மறந்து நின்றிருந்த வேளையில் முகிலன் அவனைத் தேடி வந்தான், அவனை சமாளிக்க, போனை எடுத்து அவனிடத்தில் வேலை பார்க்கும் செல்வத்திடம் பொய்யாக, பேசுவது போல் நடித்தான்… அப்படியும் முகிலன் அவனிடத்தில் ஆபீசில் எதும் பிரச்சினையா என்று கேட்டான் தான்… நல்ல வேளை… அவன் உனக்கு எதும் பிரச்சினையா என்று கேட்கவில்லை… அதனால் தப்பித்தான் ஆதி… மேலும் முகில் அவளைப் பார்க்கவில்லையே என்று வருத்தம் தெரிவித்த போது, நீ இன்று பார்க்கவில்லை… ஆனால் நீ அவளை பார்க்கும் போது, நீ என்னிடம் தான் கோபம் கொள்வாய்… எனவே… அதற்கும் பதிலை தயார் செய்ய வேண்டும் இப்பொழுதே… என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்….

அவனுக்கு அவளை “என் சீதை…” என்று பேச முடியவில்லையே என்கிற ஆதங்கமே மேலோங்கி இருந்தது… பல நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்த்தும் அவள் அவனிடத்தில் பேசவில்லையே சீதையாக… அவள் ரிகாவாக எல்லாரிடத்திலும் பேசுவது அவனுக்கு பிடித்தது தான்… ஹரீஷிடம் கூட தன்னுடைய சகோதரன் என்ற உரிமையில் பேசுகிறாள் ரிகாவாக… ஆனால் என்னிடத்தில் மட்டும் என் சீதையாக நீ ஏன் பேசவில்லை சீதை… உனக்கு என்னைப் பார்த்து பேச பிடிக்கவில்லையா?... என்று கேள்விகளுக்குள் இருந்தவனை, ஹரீஷின் என் ரிகா என்ற உச்சரிப்பு அவனை மேலும் வஞ்சித்தது…

நான் உன்னை என் சீதா என்று சொல்லமுடியவில்லையே என்று புலம்புகிறேன்… உன் அண்ணனுக்கு கொழுப்பைப் பார்த்தாயா… என் முன்னாடியே என் ரிகா என்று சொல்லி வெறுப்பேற்றுகிறான்… இதெல்லாம் யாரால்… உன்னால் தானே… நீ என்னுடன் என்னவளாக பேசியிருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்குமா?... என்றவன் தலை பாரமாகியது உண்மையிலேயே… அதனால் தலை வலிக்கிறது டா.. தூங்குகிறேன் என்று சொல்லி படுத்தும் விட்டான்…

படுத்தானே தவிர, நித்திரா தேவி அவனை நெருங்கவில்லை… ஏனெனில் அவனின் சீதா தேவி அவனை நெருங்கவில்லையே இன்று… நீண்ட நாட்கள் கழித்து அவளைப் பார்த்த நிறைவு அவனுக்குள் இருந்தாலும், அவளுடைய யாரோ போன்ற பேச்சு அவனை வதைத்தது என்னவோ உண்மைதான்… அந்த இரவில் உறங்காமல் இருந்த இரு ஜோடி விழிகளில், ஒரு ஜோடி விழிகள் சாட்சாத்… நம்ம ஆதியுடையது தான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.