(Reading time: 23 - 46 minutes)

 

வளுக்கு சுத்தமா என்னை நினைவில்லையாடா ஹரி… நான் மறைஞ்சுட்டேனா அவ மனசில்?...”

“வாழ்க்கை பல நேரங்களில் விசித்திரமானது… புதிரும் கூட… நினைவுகள், நியாபகங்கள், என்பது மனிதனாய் பிறந்தோருக்கு மிக அத்தியாவசியமானது… சில நேரங்களில் எங்கேயோ ஒரு பொருளை வைத்துவிட்டு, எங்கு வைத்தோம் என்று நம்மில் பலர் தேடுவதுண்டு… அந்த நேரம் அவர்கள் மனம் ஒருநிலை கொள்ளாது… அந்த பொருள் நம் கைக்கு கிடைத்த பிறகே மனம் ஆசுவாசம் பெரும்… எனில், மூன்று வருட நியாபகங்களை தொலைத்த அவளின் நிலை எப்படி இருக்கும்?... சில சமயங்களில் நாம் அடிக்கடி சொல்வதுண்டு… இந்த நாள், இந்த நிமிடம் என் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம்… இந்த மனிதர்களை என் வாழ்வில் பார்க்காமலே இருந்திருக்கலாம்…. அந்த கால கட்ட நினைவு மட்டும் எப்படியாவது அழிந்து போய் விட கூடாதா என்று?... அவ்வாறு இருக்க, முழுதாய் தன் மனது எண்ணாத நினைவுகளை அவள் எப்படி நினைவு வைத்திருப்பாள்?... மனமும் நினைவும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது… சொல்லப்போனால், அவை இரட்டைப்பிறவிகள் தான்… மனதில் ஒன்று பதியும் போது தான் அது நினைவாக எழும் நமக்குள்… மனம் மறந்தது நினைவில் ஒருநாளும் இருப்பதில்லை…. மனம் மறக்காததை நினைவில் இருந்து அழிப்பதும் சாத்தியமன்று…. பழைய பாடல் வரிகளில் ஒன்றை கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம்…

நெஞ்சம் மறப்பதில்லைஅது நினைவை இழப்பதில்லை…” என்று…

ஹரி சொன்னதை கேட்ட அனைவரும் அவனை கொஞ்சம் புதிதாக பார்த்தனர்…

“இன்னும் புரியவில்லையா ஆதி?... அவள் மனதிற்கு உன்னை அடையாளம் தெரியவில்லை…  தான் ஒருவரை காதலித்திருக்கிறோம் என்று அவளுக்கு தெரியும்…. ஆனால் அது நீ தான் என்ற உண்மை அவளுக்கு புரியவில்லை…. அதுமட்டும் இல்லை, இன்னொரு பிரச்சினையும் உள்ளது… அதை நான் பிறகு சொல்கிறேன்… அவளுக்கு உன் உருவம் தான் மறைந்துள்ளது… மற்றபடி, அபி, ராம், குட்டிம்மா, போன்ற வார்த்தைகள் அவளை உலுக்குகிறது… நீயும் அவளும் சம்மந்தப்பட்டது எதுவாக இருப்பினும் அவளுக்கு தெரியப்படுத்தினால், அவளின் மனது அதை முதலில் பதிய வைத்து கொள்ளும்… பின் அவளுக்கு அது நினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வரும்… வராவிட்டாலும் அவளது மனமே அவளுக்கு நினைவூட்டும் நிச்சயமாய்…”

“எப்படிடா?...” என்று கேட்டான் முகிலன்…

“அவளுக்கு விரைவில் அனைத்தும் நியாபகம் வரும்டா… அதற்கு நான் உறுதி…”

“ஆதி என்னாச்சு டா… ஏன் அமைதியா இருக்குற?...”

“…….”

“ஆதி… பேசு எதாவது… ஆதி… அவளுக்கு ஒன்னுமில்லைடா… இங்கே பாரு….”

“……..”

எதற்குமே அவன் பதில் பேசவில்லை… அவன் நகர்ந்து சென்றான் அங்கிருந்து வேகமாய்…

“ஆதி….” என்று முகிலன் அழைக்க…, ஹரி “அவனை கொஞ்ச நேரம் தனியாக விடுடா… சரி ஆயிடுவான்…” என்றான்…

“சரிடா….”

“அவ்னீஷ் நீ ஷன்விகிட்ட எல்லாம் சொல்ல போகிறாயா?...”

“நீங்க சொல்லுங்க அண்ணா, என்ன செய்யணும்?...”

“தோழி என்ற முறையில் ஷன்விக்கு ரிகா பற்றி தெரியணும்…. நான் தான் நேரம் வரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று மறைத்துவிட்டேன்…. ஹ்ம்ம்… நீ சொல்லிடு…. அவளுக்கு நினைவில்லை என்பதை மட்டும்….” என்று அந்த மட்டும் என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னான் ஹரி…

“புரிகிறது அண்ணா…. ரிகா அண்ணியின் மறதியை மட்டும் சொல்வேன்…”

“தேங்க்ஸ்டா…” என்றான் ஹரி…

“தாரிகா எனக்கும் தங்கை தான் அண்ணா… அதுவும் இல்லாமல் அண்ணியும் நம் வீட்டுப்பெண் என்பதில் கவனம் கொள்வேன்…. கவலை வேண்டாம்….” என்று மெலிதாக சிரித்தான்…

“டேய்… அவ்னீஷ்… உனக்கு கூட பொறுப்பு வந்துட்டு போல… ஹ்ம்ம் நேரம் தாண்டா…”

“ஏண்டா… முகிலா அப்படி சொல்லுற?...”

“இல்ல இவனெல்லாம் இப்படி பேசுறானே… அந்த கொடுமையைப் பார்த்து தான்…”

“சரி சரி… என்னை கலாய்ச்சது போதும்… ஆதி அண்ணாவையும்- ரிகா அண்ணியையும் எப்படி சேர்த்து வைக்கிறதுன்னு யோசிங்க….”

“இதோடா… இந்த பெரிய பொறுப்பை எங்க தலையில கட்டிட்டி நீ ஷன்வி கூட டூயட் பாடலாம்னு நினைக்கிறியா?... அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காதுடா ஈஷ் ராசா…”

“இது நல்லா இருக்கே…. நீங்க மட்டும் மயூரி அண்ணிகூட டூயட் பாடலாம்… நான் என் ஷன்வி கூட டூயட் பாட கூடாதா?... இதெல்லாம் அநியாயம் அண்ணா….” என்று அழாத குறையாக ஈஷ் சொல்ல,

“சரி சரி அழுது வைக்காத, விடு விடு….” என்று முகிலன் சிரித்துக்கொண்டே கூறினான்…

“டேய்… லூசுப்பயல்களா… முதலில் ஆதி-ரிகா விஷயத்துக்கு வாங்கடா… டேய்… முகிலா, நீ மயூரிகிட்ட ரிகாவைப் பார்த்தது பற்றி எப்ப சொல்லப்போற?...”

“இப்போ தூங்கியிருப்பாடா… விடிஞ்சதும் சொல்லிடுறேண்டா ஹரி…”

“சரி… போய் தூங்கலாம் வாங்க…”

“ஆதி…” என்று முகிலன் இழுக்க,

“இன்னைக்கு அவன் தனியாவே தூங்கட்டும்… நீ வா… ஈஷ் வா… நாம போகலாம்…”

நான் ஏன் ஆடினேன்…. இத்தனை நாட்கள் ஆடாத நடனத்தை நான் ஏன் இன்று ஆடினேன்… என்னையும் மீறி என் மனது வெளியே வந்துவிட்டதே இன்று ஏன்?... நடனம் ஆடி முடித்து, நிமிர்ந்தவளின் சிவந்த கண்களில் ஒருவனின் முகம் மட்டும் தெரிந்தது… அவனின் வேதனை முகம் தெரிந்தது… அவனின் அழகிய கண்களில் சொல்லொண்ணா வருத்தம் தெரிந்தது… அவள் அவனைப் பார்த்ததை அவன் அறியவில்லை… அந்த கண்களில் ஏனந்த பரிதவிப்பு?... எதற்காக அத்தனை துயரம்?.

ஆதர்ஷ்…

அவரை இன்று பார்த்த போது, போகிறேன் என்று சொன்னதும் என் உடல் ஏன் அதிர்ந்தது?... அவரின் மேல் மோத பார்த்து மோதாமல் ஏன் நான் பதறி விலகி நின்றேன்?... அவர் அதை ஏன் வினோதமாக பார்த்தார்?... அவர் செல்லும் திசையையே ஏன் நான் வெகு நேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்…. ?... நான் தற்போது இருக்கும் இக்கட்டான நிலையை ஏன் மறந்து போனேன்?... அவரைப்பார்க்கும்போது மட்டும்?... ஏன்?..

அவரின் வீட்டில் உள்ள பூஜை அறையில் அந்த ராம்-சீதா உருவங்கள் எனக்கு ஏன் கண்ணீர் வரவழைத்தது… என் வாழ்வோடு அது தொடர்புடையதா?.. அங்கே இருந்த அந்த சீதாவின் ராமமைப் பார்த்தபோது எனக்குள் என்னவென்று சொல்ல முடியாத படபடப்பு, வெட்கம், சிணுங்கல், பூரிப்பு, அளவு கடந்த காதல் ஏன் உண்டானது?...

அவரை நான் நேற்று பார்த்தபோது ஏன் என் கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது?... அவரின் குட்டிமா என்ற அழைப்பும், அபி என்ற பெயரும் என்னை ஏன் அதிர்வுக்கு உள்ளாக்கியது?... அவரின் விழிகளை விட்டு விலகும்போது ஏன் என் இதயம் துடித்தது வேண்டாம் பிரியாதென… அய்யோ ஏன் இத்தனை தூரம் அவர் என்னை பாதிக்கிறார்?... நேற்றிரவு நான் தூங்காமல் போனதின் மர்மம் என்ன?... ஏன் என் கண்களில் உறக்கமில்லை?..

தினம் அதிகாலையில் நான் வெளியே வந்து அந்த சூரிய உதயத்தை ஏன் பார்க்கின்றேன்…. வானதேவதை அந்த ஆதவனின் வருகையை எதிர்பார்த்து இருப்பதை நான் ஏன் என்னவனைப் பார்க்கப் போவது போல் அளவில்லா உவகையோடு பார்க்கின்றேன்?... இரவில் உறங்குவதற்கு முன் ஸ்ரீராமனை தரிசிக்கின்றேனே ஏன்?... ஒரு நாள் ஒரு பொழுது அதைப் பார்க்காவிடிலும் என் உள்ளம் பதறுகிறதே ஏன்?...

நேற்று அதிகாலையில் நான் ஏன் கோவிலுக்குச்சென்றேன்?... எதற்காக?... யாருக்காக?... என்று தலையைப் பிடித்துக்கொண்டவள் அழுகையில் துவண்டாள்… கதறி முடித்து ஓய்ந்த நேரம் அவளுக்குள் சில மாற்றங்கள் நேர்ந்தது… ஆதர்ஷின் முகம் பார்த்த நாள் அன்று டைரியில் எழுதியதை எடுத்துப் படித்தாள்…

“என் வாழ்வில் நான் இன்று சந்தோஷம் கொண்டேன்… “

ஏன்?... சந்தோஷம்… கொண்டேன்..?... ஆதர்ஷ்…. ஆதர்ஷ்…. ஆதர்ஷ்… என்று அவனின் பெயரையே சொல்லிகொண்டிருந்தவள்,  திடீரென, ராம், ராம், ரா….ம்…  “என் ராம்…” என்றாள்… அவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது… அவள் அவனை முதன் முதலில் சில வருடங்களுக்கு முன் சந்தித்த நாட்களில் பயணித்தாள்… அதிர்ச்சியோடு…

வேகமாக அவனது அறைக்குள் சென்றவன், சீதை என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தான், என்னை எப்படி மறந்தாய் என் சீதை என்று அவளை முதன் முதலில் சந்தித்த நாட்களில் பயணித்தான்….

என் சீதை”, “என் ராம்என்று கண் மூடியவர்களின் விழிகளோடு அவர்களின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது

நாமும் பயணிக்கலாமா?... இவர்களின் காதல் நதியில்?...

உறங்காத அந்த இரு ஜோடி கண்கள் யாருடையது என்று தெரிந்து விட்டதா இன்று?... ஹ்ம்ம்…… நித்திரா தேவி எப்படி ராமனை நெருங்கலாம் என்று சிலர் கேட்கலாம்… அதற்கு விடை, ஆதி-ரிகா வின் பயணத்தில் இருக்கிறது… ஹரி சொன்ன இன்னொரு பிரச்சினை என்ன… ரிகா ஏன் கோவிலுக்குச்சென்றாள்?... யாருக்காக?... இது தவிர வேறு கேள்விகள் நீங்க என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை… இருந்தால், இங்கே குறிப்பிடுங்கள்… நான் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விடையளிக்கின்றேன்… ஆதி-ரிகா வின் காதல் கதை சில வாரங்கள் தொடரும்… அதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா?... இருந்தால் தெரிவியுங்கள்… ஹ்ம்ம் என்னுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்க ஆயத்தமாகி விட்டீர்கள் தானே… இல்லையென்றால் தயாராகுங்கள்… வரும் வாரம் ராம்-சீதா காதல் நதியில் சந்திக்கலாம்…

தொடரும்

Go to episode # 06

Go to episode # 08

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.