(Reading time: 42 - 84 minutes)

காதல் நதியில் – 06 - மீரா ராம்

டேய்… நல்லா தெரியுமாடா?... இந்த வழி தானா?...”

“ஆமா அண்ணா… இந்த வழி தான்…”

“டேய்… எனக்கென்னமோ நீ இந்த ஊட்டியை சுத்தி காட்டுறேன்னு தோணுது…”

“அண்ணா நீங்க என்ன கேட்டீங்க?...”

kathal nathiyil

“என்ன கேட்டேன்?...”

“”அய்யோ சொல்லுங்க அண்ணா…”

“அய்யோ…”

“அண்ணா ப்ளீஸ்… என்னால முடியலை… ஹரி அண்ணா நீங்களாச்சும் காப்பாற்ற கூடாதா என்னை…”

“அவனுக்கு அவன் பேஷண்ட்டையே காப்பாற்ற தெரியாது… இதுல உன்னை எங்க காப்பாற்ற போறான்…” என்றதும் ஹரி முகிலனின் மேல் பாய்ந்தான்…

“டேய்… டேய்… அடங்குங்கடா… இப்போ ஒழுங்கா சத்தம் போடாம வரீங்களா இல்ல காரைப் பள்ளத்திற்குள் விடவா….” என்று ஆதி கர்ஜிக்க,

“ஹரி மச்சான், ஆதி சிங்கம் மாதிரி கர்ஜிக்கிறாண்டா… விட்றலாம் மிச்சத்தை அப்பறம் வச்சிக்கலாம்…”

“மிச்சமா!!!???... மகனே உனக்கு ஃபுல்லா கொடுக்கணும் இருடா தராம விடமாட்டேன் முகிலா…”

“ஹரி அண்ணா அப்போ நான்?...”

“நீயுமாடா ஈஷ்… பாசக்கார பயபுள்ள… அண்ணனை தனியா அடி வாங்க விட மாட்டியே…”

“கரெக்ட் அண்ணா, சூப்பர்… சரியா சொல்லிட்டீங்க…”

“உன்னையெல்லாம் தம்பியா வச்சு, வச்சு… அய்யோ… அய்யோ….”

“ஹாஹாஹா… அண்ணா வடிவேலு சார் சொல்லுற மாதிரி சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு நீங்க பண்ணுறது…”

“இருக்கும்டா… இருக்கும்… உனக்கேன் இருக்காது?...”

“என்ன இருக்குது அண்ணா எனக்கு…”

“ஆ… புளியோதரையும் பொங்கலும் தான்…”

“அச்சோ… எனக்கு இப்போ சாப்பிட மூடு இல்லையே…”

“இருந்துட்டா மட்டும் அப்படியே பாய்ந்து பாய்ந்து சாப்பிட்டிருவியாக்கும்?...”

“அதுல கூட உங்களை மிஞ்ச முடியாதே…”

“ஹ்ம்ம்.. அது…” என்று முகிலன் ஸ்டைலாக சொல்ல, ஹரி அவனது தலையில் பட்டென்று அடித்தான்…”

“டேய்… எருமை… தலையில் கை வைக்காதே.. முடி கலையுதா இல்லையா…”

“அடங்கப்பா, இவன் இம்சை தாங்கலையே…”

“அத நான் சொல்லணும்டா ஹரி…”

“சொல்லுவ, ஏன் சொல்லமாட்ட, வானரமே… இப்போ உனக்கு பொண்ணு பார்க்க போகல, யாரும்… அதனால அடங்கி இரு…”

“எனக்கு நீங்க ஒன்னும் பார்க்க வேணாமே…”

“அதானே… அண்ணா தான் ஆல்ரெடி பார்த்துட்டாரே அண்ணியை… அப்படித்தானே முகிலன் அண்ணா…” என்று அவ்னீஷ் சிரிக்க…

முகிலனுக்குள் மயூரியின் முகம் வந்து போனது… அவன் சிரித்தப்படியே எதுவும் பேசாமல் கனவில் நுழைந்தான்…

“ஈஷ்.. இனி இவனை வேப்பிலை அடிச்சு தான் எழுப்பணும்…”

“ஹாஹாஹா… வேப்பிலையா?...”

“ஆமா… ஈஷ்…”

“ஹாஹாஹா…”

ஹரீஷும் அவ்னீஷும் முகிலனைப் பார்த்து சிரிக்க, முகிலனோ கனவில் மிதக்க, ஆதி இவர்கள் பேசுவதையெல்லாம் காதில் கேட்டுகொண்டே வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தான்…

“எல்லாரும் இறங்குங்கடா..”

ஆதி சொன்னதை கேட்டு இறங்கிய அவ்னீஷிற்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, ஒரு பக்கம் மகிழ்ச்சி….

“என்னடா ஈஷ்… பொண்ணு பார்க்க போகலாமா?... “ என்றபடி முகிலன் இறங்கினான்…

“போங்க அண்ணா… வெட்கமா இருக்கு,,,,”

“அட கொடுமையே இத பொண்ணு சொல்லணும்டா…. நீ சொல்லுற?...”

“யாரு சொன்னா என்ன முகிலா?... மொத்தத்தில் வெட்கம் வந்தா சரிதான்… உனக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வந்த மாதிரி…” என்றவாறு ஹரி இறங்கினான்…

“சீ… போடா…” என்றான் முகிலன்…

“பாருடா.. வெட்கத்தை… அநியாயத்துக்கு வெட்கப்படுறியேடா ராஜா… கொஞ்சம் அடக்கி வாசி… பொண்ணு பார்க்க போறது அவனுக்கு…” என்று சொல்லிக்கொண்டே வந்தான் ஆதி…

ஷியாம், அனு, அபி, சுந்தரம், கோதை ஐவரும் ஒரு காரில் வந்து இறங்கினர் இளவட்டங்களுக்கு அடுத்தபடி…

“என்னங்க சொல்லாம வந்துட்டோமே, எதுவும் நினைச்சுப்பாங்களோ?...”

“அதெல்லாம் ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க… நீ வா.. எதும் நினைக்காம…” என்றார் சுந்தரம்…

“குட்டிமா.. இங்க வாடா…” என்று அவளை தூக்கி கொண்டான் ஆதர்ஷ்…

“அபிக்கு ஆதர்ஷ் இருந்தா போதும், நீயும் நானும் கூட வேண்டாம், அவனே பாத்துப்பான் அவளை…” என்றபடி மனைவியின் கைப்பிடித்து நடந்தான் ஷியாம்…

“அவ இங்க இருந்தா, நீங்க இப்படி என் கையைப் பிடிச்சிகிட்டு வரமுடியுமா?... என் தம்பி அது தெரிஞ்சு தான் அவளை தூக்கிகிட்டு போறான் மக்கு புருஷா…” என்று சிரித்தாள் அனு…

“நான் மக்கா?...!!...” என்றவாறு அவனும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்…

ழைப்பு மணி அழுத்தியவர்களை ஒரு நிமிடம் கூட காக்க விடாமல் வந்து கதவை திறந்தார் செல்லம்மாப்பாட்டி…

ரிகா, பாட்டியிடம் ஷன்வியின் திருமண தகவலை சொல்லியிருந்தபடியால், பாட்டி அதிர்ச்சியடையாமல், அவர்களை இன்முகத்துடனே வரவேற்றார்…

“வாங்க.. வாங்க… எல்லாரும் வாங்க… உட்காருங்க… சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வரேன்…”

“வேண்டாம் அம்மா… நீங்க இருங்க… நாங்க உங்களையும் உங்க பொண்ணையும் தான் பார்க்க வந்தோம்… திடீர்னு வந்துட்டோம் சொல்லாமல்… தப்பா நினைக்க வேண்டாம்…”

“அதனால என்னம்மா… பரவாயில்லை…”

“நான் கோதை, இவர் என் கணவர், அவங்க என் பொண்ணும் மாப்பிள்ளையும்… பேரு அனு-ஷியாம்… இவன் என் மூத்த பையன் ஆதர்ஷ்… அவன் மடியில இருக்குறது என் பேத்தி அபி… இவன் இரண்டாவது பையன் முகிலன்…. இவன் ஹரீஷ்…. என்னோட அடுத்த பையன்… அப்பறம், இவன் என் கடைசி பையன், அவ்னீஷ்…” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் கோதை பொறுப்புள்ள குடும்ப தலைவியாய்…

எல்லோருக்கும் வணக்கம் சொன்ன பாட்டி, “ரொம்ப சந்தோஷம் மா… நீங்க எல்லாரும் இங்கே வந்தது…” என்று சொல்லிவிட்டு, பின், ஹரீஷைப் பார்த்துவிட்டு, “இவர் டாக்டர் தம்பி தானே?... இவரும் உங்க பையன் தானா?.. நல்லதுமா…” என்றார்…

“ஆமாம் அம்மா… இவனும் என் பையன் தான்…” என்று சிரித்தார் கோதை…

ஹரியும் அவரைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்தான்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.