(Reading time: 42 - 84 minutes)

 

ரீஷ்………..!!!!!!!!!!!!!!................” என்று கிட்டதட்ட கத்தினான் முகிலன்…

“ஆதியும் நம் முன் தானே நிற்கிறான்… அவன் இன்னும் சொல்லவில்லையே எதுவும்…”

“அவன் என்னடா சொல்வது?... நம் வீட்டில் அது தான் முடிவு… ஆதிக்கு அவள் தான் மனைவி… அவள் மட்டுமே மனைவி… ஆதி அதை மறுக்க மாட்டான்…”

“அதை அவன் வாயால் சொல்லட்டுமே…”

“ஆதியைப் பற்றி உனக்கு தெரியாதா?... ஹரீஷ்… “ என்று கோபத்துடன் பார்த்தான் முகிலன்…

“கோபம் வேண்டாம் முகிலா… நான் உண்மையை தானே சொல்கிறேன்…”

“என்னடா பெரிய உண்மை… அவள் எனக்கு தங்கை போன்றவள்…”

“எனில்… அவளை விட்டு நீ எங்கே போய் தொலைந்தாய்?...”

“அது அவள் சொல்லாமல் கொள்ளாமல் போனாள்…”

“போனால் விட்டு விடுவதா?... அவளின் பின்னே சென்று அவளைத் தடுக்க முடியாவிட்டாலும், அவள் எங்கு, எப்படி இருக்கிறாள் என்பதையாவது தெரிந்து கொண்டாயாடா நீ?...” என்று விழி சிவக்க கேட்டான் ஹரி…

“தப்புதாண்டா… மன்னித்துவிடு…”

“இனி மன்னிப்பு கேட்டு என்ன ஆகப்போகிறது?...”

“ஏண்டா இப்படி சொல்லுற?...”

“வேறு எப்படிடா சொல்ல?...” என்று விரக்தியுடன் கேட்டான் ஹரி…

“ஹரி… ப்ளீஸ்… சொல்லுடா… என்னாச்சு…”

“…………….”

“விட்டேற்றியாக பதில் சொல்லாதேடா… சொல்லு… உன் நண்பன் கேட்கிறேன் சொல்லு…”

“என் நண்பனை விட எனக்கு அவளின் வாழ்வு தான் முக்கியம்…”

“அவள் யார் உனக்கு?...”

“என் உயிர்… என் தங்கை… எனக்கெல்லாம் அவள் தான்… அவள் மட்டும் தான்…”

“தங்கையா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....”

“ஆம்…. என் தங்கை…. என் ரிகா…” என்று இறுக மூடிய கண்களுக்குள் தவித்தான்…

முகிலன் அவனைக் கட்டிக்கொண்டு, “நண்பனாக நீ என்னை வெட்டிப்போட்டாலும் சந்தோஷமாக சாவேன்… என் நண்பன் உன் கோபத்தைவிட, எனக்கு இப்போது என் தங்கை தான் முக்கியம்… சொல்லுடா… என்னாச்சு நம் தங்கைக்கு?...” என்று கண்ணீருடன் கேட்டான்…

அதற்கு மேல் அவனாலும் முடியவில்லை… மூடி மூடி அவனும் எத்தனை நாட்கள் வைத்திருப்பான்?...

“சிக்கலின் முனை கிடைக்கும்போது அதை அவிழ்க்க முயற்சிப்பதுதான் புத்திசாலித்தனம்… அது தான் நல்லதும்கூட… நிச்சயம் அம்மா, ஆதிக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்… அதில் எனக்கு 200 சதவீதம் நம்பிக்கை உண்டு… ஆதியை விட பொருத்தமானவன் அவளுக்கு யாருமில்லை… அவன் அவளைப் பார்த்து உயிராக… ஆனால், ஆதி இன்னும் சம்மதம் சொல்லவில்லை… ரிகா என்ன சொல்வாள்?... எதுவும் வேண்டாம், சம்மதிக்க மாட்டேன் என்பாள்… எனினும், அவனது ரிகாவின் வாழ்வில், முகில்-மயூரி மூலமும் நல்ல பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது… ரிகாவின் காதலன்…. ஹ்ம்ம்… அதை சிறிது நேரம் கழித்து சொல்லலாம்…”

“ஆதி அவளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக அவசியம்… நிச்சயம் ஆதி, அவளைப் புரிந்து கொள்வான்…” என்ற நம்பிக்கையிலும் முகிலனைத் தோளோடு அணைத்துக்கொண்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்…

சாரி சார், உங்களை தொந்தரவு செய்வதற்கு… இந்த அதிகாலை வேளையில்…”

“என்ன விஷயமென்று சொல்லுங்க சிஸ்டர்…”

“ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸ் டாக்டர்… ப்ளட் நிறைய லாஸ் ஆகியிருக்கு… நீங்க உடனே…” என்று வாக்கியத்தை முடிக்கும் முன்,

“இதை முதலிலேயே சொல்லாமல், எதற்கு மன்னிப்பெல்லாம் கேட்டு நேரத்தை வீணடிக்கின்றீர்கள்?... வருகிறேன்…” என்றவன் காரின் ஏறியிருந்தான்…

“நீங்க முதலில் இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்துங்கள்…” என்றவன் அடுத்த 3-ஆவது நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான்… விரைவாக அவளை அட்மிட் செய்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான் ஹரி….

“டாக்டர் ப்ளீஸ்… அவங்களை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்…”

“வெயிட்… நீங்க பேஷண்ட்டுக்கு என்ன உறவு?...”

“அது…” என்று இழுத்தவனைப் பொருட்படுத்தாது அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தான் வேகமாக…

குருதி மறைத்த முகமும், வாடிய கொடியாய் கிடந்த அவளும் அவனுக்கு ஒருநிமிடம் பழைய நினைவுகளை தந்தது… தலையை குலுக்கி அதிலிருந்து வெளி வந்தவன் அவளுக்கு சிகிச்சையை தொடங்கினான்…

மயக்கத்தில் இருந்தவள் மருந்து ஏற்றும்போது சுயநினைவு வந்து ஏதேதோ முணகினாள்… அவன் அதை கவனித்தும் கவனியாமல் தனது வேலையில் கவனமாக இருந்தான்… அவளின் முணகலும், கண்ணீரும், துடிப்பும் அவனை உலுக்க தான் செய்தது… அந்த நிலையிலும்…. உயிர் ஊசலாட கிடந்தவளை, தன் உயிராகிய மருத்துவத்தை கொடுத்து அவளைப் பிழைக்க வைத்தான்… அதற்கு அவன் பட்ட பாடு அந்த அறையில் உள்ளவர்களே அறிவர்…

“டாக்டர் இந்த பொண்ணை அட்மிட் செய்தவர் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார்…”

“ஓ..கே… விடுங்க… நாம பாத்துக்கலாம்…” என்று புன்னகையோடு சென்றுவிட்டான் ஹரீஷ்…

உயிர் மட்டும் தான் இருந்தது அவள் உடம்பில்… தன்னிலை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள், 7-ஆம் நாள் கண் விழித்தாள்… தலையில் மட்டும் பலத்த அடி.,.. கை கால்களில் லேசான உராய்வு மட்டுமே இருந்தது… அதுவும் இந்த 7 நாட்களில் ஓரளவு சரியாகிவிட்டிருந்தது…

வள் கண் விழித்தபோது அவளின் அருகே ஹரீஷ் நின்றிருந்தான் விழிகளில் பெரும் தவிப்புடன்… இந்த ஒரு வாரத்தில் அவளுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது… ஆனால் கண்கள் மட்டும் திறக்கவில்லை… உதடுகள் மட்டும் அவ்வப்போது ஒருசில வார்த்தைகள் உதிர்க்கும்…

லேசான முக சுளிப்புடன் கண்களைத் திறந்தவளின் எதிரே புதிய முகங்கள் இருப்பதை அறிந்து, “நீங்க யார்?... நான் ஏன் இங்க இருக்கேன்?... எனக்கு என்ன ஆச்சு?...” என்று கேட்டாள்…

அவள் பேசிவிட்டாள் என்ற நிறைவுடன், “இது ஹாஸ்பிட்டல்… ஒன்னுமில்லை… நீங்க இதை சுற்றிப் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டீங்க.. அதான் இங்கே இருக்கறீங்க…” என்றான் ஹரீஷ்…

அவனை வியப்பாக பார்த்தவள், “ஆஹா… ரொம்ப நல்ல எண்ணம் தான் டாக்டர் உங்களுக்கு… சரி பிழைச்சுப்போங்க…. என்னை காப்பாற்றியிருக்கீங்க… அதற்காக உங்களை மன்னித்து விடுகிறேன்…” என்றாள்…

(அவளின் பேச்சை அவன் வெகுவாக ரசித்தான்… எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து மீண்டவள், இப்படி வாயாடுகிறாளே… அவள் தலையில் இன்னும் கட்டு இருக்கின்றது… அதை அறிந்தும் இந்த பேச்சா?... சரிதான்…) “மன்னிச்சிட்டீங்களா?... அப்போ ஒகே தான்…. நான் ஹரீஷ்…. நீங்க?...”

“நீங்க பேர் சொன்னா, நானும் சொல்லணுமா என்ன?... ஹ்ம்ம்.. சரி… போனால் போகுது சொல்லுறேன்… நான்….. “ என்று இழுத்தவளுக்கு அவளின் பெயர் அந்த நேரத்தில் நினைவுக்கு வரவில்லை… எவ்வளவோ முயற்சித்தும் அவளுக்கு தெரியவில்லை தான் யாரென்று…

எதிரே தனது பதிலை எதிர்பார்த்து ஒருவன் நிற்கிறான் என்பதும் அவளுக்கு உறைத்தது…

ஒரு பெருமூச்சு விட்டபடி, “என்ன மருந்து சார் எனக்கு கொடுத்தீங்க?... என் பெயர் கூட எனக்கு நினைவில்லை… உங்க மேல நான் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப்போறேன்…”

“தாராளமா கொடுங்க… யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்க… உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு…”

“ஆர் யூ ஷுயர்?...”

“யெஸ்… ஐ அம் வெரி ஷுயர்…”

“ஹ்ம்ம்… ஓகே… அப்போ கண்டிப்பா கொடுத்துடுறேன்…” என்று அவனைப் பார்த்து சிரித்தாள்… அவனும், பதிலுக்கு சிரித்துவிட்டுசென்றுவிட்டான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.