(Reading time: 42 - 84 minutes)

 

ர்ஷ்… மிஸ் வீட்டுக்கு தான் வரோம்னு ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல?...”

“உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு தாண்டா…”

“ஓ… எப்பவும் நான் தானே சர்ப்ரைஸ் கொடுப்பேன்… இப்போ நீ என்ன கொடுக்குற?...”

“சும்மாதாண்டா… ஏன் நான் கொடுக்க கூடாதா?...”

“கொடுக்கலாமே….”

“குட்… சமத்து…”

“ஹ்ம்ம்… நானா?...”

“ஆமாடா… அப்பறம்… நீ இனி ஷன்வியை மிஸ் சொல்லக்கூடாது…”

“அப்போ எப்படி சொல்ல?... அவங்க என் மிஸ் தான?...”

“ஆமாடா… இனியும் ஸ்கூலில் உனக்கு மிஸ் தான்… ஆனா, வீட்டில் அவங்க உனக்கு அத்தை…”

“ஹ்ம்ம்…” என்று புரியாமல் அவள் பார்க்க…

“குட்டிமா… உன் அவ்னீஷ் மாமாக்கு ஷன்வியை கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க, நம்ம தாத்தா பாட்டி….”

“கல்யாணமா?...”

“ஆமாடா…”

“சரி தர்ஷ்… இனி அவங்க எனக்கு அத்தை… ஓ.கேயா?...”

“ஓ.கே.டா…”

“அப்போ இப்பவே நம்ம கூட வீட்டுக்கு வந்துடுவாங்களா?...”

“இல்லடா… ஈஷ் மாமா அவங்களை கல்யாணம் செஞ்ச பின்னாடி தான் வருவாங்க…”

“ஓ… அப்பறம்… நம்ம வீட்டுல தான் எப்பவும் இருப்பாங்களா?...”

“ஆமாடா…”

“சரி தர்ஷ்… உனக்கு எப்போ கல்யாணம் பண்ணுவாங்க?...”

அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவன் எண்ணுகையில், அவளே அடுத்த கேள்வியும் கேட்டு பதிலும் சொன்னாள்…

“ஷன்வி மிஸ்-ம் ரிகா மிஸ்-ம் இந்த வீட்ல தான இருக்காங்க… ஷன்வி மிஸ் நம்ம வீட்டுக்கு வந்துட்டா, ரிகா மிஸ் தனியா இருப்பாங்களா?.. மிஸ் பாவம்… அப்போ அவங்க கூட யார் இருப்பா?... அவங்களையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா தர்ஷ்?... ஹ்ம்ம்ம்… இல்லை வேண்டாம்… கல்யாணம் பண்ணினா தான கூட்டிட்டு போக முடியும்னு நீ சொன்ன, அப்போ நீ கல்யாணம் பண்ணிக்க அவங்களை… நாம கூட்டிட்டு போகலாம் தர்ஷ்… நீ எப்போ கல்யாணம் பண்ணுவ தர்ஷ்…?... நீ கல்யாணம் பண்ணிக்க…. ப்ளீஸ்….”

அவளின் பேச்சில் திணறினான் ஆதர்ஷ்… இதை யாரும் கேட்டுவிட கூடாதே என்று திரும்பியவனின் பார்வையில் ஒட்டு மொத்த அவனது குடும்பமும் இருந்தது….

“நாங்க கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னப்போ மாட்டேன்னு சொன்னல்ல… இப்போ அவ கேட்குறா பதில் சொல்லுடா… எப்போ பண்ணிக்கப்போற?... அவ உன் செல்லமாச்சே… அவ கேட்டு இதுவரை நீ எதையுமே தட்டினது இல்ல, நியாபகம் இருக்கு தான உனக்கு?... இப்போ நீ தட்டுறியா, இல்லையான்னு நானும் பார்க்குறேன்…” என்றார் கோதை…

அவன் பதிலை யோசிக்கையில், “வா ஷன்வி…” என்ற குரல் கேட்க அனைவரும் அமைதியாகினர்...

ஷன்வியுடன் வந்த ரிகாவைப் பார்த்து சிலையென அசையாதிருந்தது ஒரு ஜோடி கண்கள்… ஷன்வியின் பின்னே வந்த ரிகா…”வாங்க…” என்று சலனமில்லாது எல்லோரையும் வரவேற்றாள் அந்த கண்களுக்கு சொந்தமானவனையும் சேர்த்து முகத்தில் சின்ன சிரிப்புடன்…

பெண் காபியோடு வர, பையனோ அவளைப் பருகுவது போல் பார்த்தான்… ஆம்… இனி அவனுக்கு அவள் சொந்தமாயிற்றே… அவன் பார்ப்பதை தடுக்க முடியாதே…

“டேய்… போதும்டா… பார்வை… காபியை எடு… பாவம் அந்த பொண்ணு எவ்வளவு நேரம் அதை கையிலேயே வச்சிட்டே இருப்பா?...” என்று ஹரி கூற, அங்கே சிரிப்பலை உருவாகியது…

பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்தேறியது…  அதற்காகவே காத்திருந்தாற்போல், வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்றான் ஆதியை, முகிலன்… ஹரீஷுடன்….

“மச்சான் அந்த ரிகா யாருன்னு தெரியுதா?...”

“யாருடா…?...”

“உனக்கு அவளை தெரியும்டா…”

“அப்படியா?...”

“டேய்… விளையாடாதடா… அவளை உனக்கு தெரியாதா நிஜமா?...”

“தெரியுமே… நேற்று தான பார்ட்டியில் பார்த்தேன்.. தேங்க்ஸ் கூட சொன்னேனே…”

“ஆதி… இவளை தான் உன் தங்கை இப்பவர, தேடுறா...”

“ஏன்?...”

“ஏன்னா… இவ தான் உன் தங்கையின் ஆருயிர் தோழி…

“ஓ…”

“ஆமாடா…”

“என்ன முகிலன் அண்ணா சொல்லுறீங்க?... ரிகா உங்களுக்கு தெரிஞ்சவங்களா, ஹரீஷ் அண்ணா-க்கு தெரிஞ்ச மாதிரி?...”

“எங்களுக்கு மட்டும் இல்லை… ஆதிக்கும் தெரியும்…”

“என்ன!!!!!!!!!!!!!!!!!!!”

“ஆமாடா ஈஷ்…”

“ஆதி முகிலன் சொல்லுவது உண்மையா?...” என்று ஹரி கேட்டான்…

“அவனை என்னடா கேட்குற?... நான் சொல்லறேன்… உனக்கு நம்பிக்கை இல்லையா?...”

“இல்லடா.. அவன் எந்த ரியாக்ஷனும் காட்ட மாட்டேன்றானே… அதான்…”

“இப்போ காட்டுவான் பாரு ஹரி… ஆதி, இதற்கு முன், அந்த பெண்ணை நீ பார்த்தது இல்லையா?...”

“பார்த்த நியாபகம் இல்லடா…”

“ஓ… அப்போ இது யாரு?...” என்று தன் கையில் வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து காட்டினான்…

அவனின் கண்கள் ஒரு நிமிடம் விரிந்தது… மீண்டும் பழைய நிலைக்கே வந்து சாதாரணமாக கேட்டான் முகிலனைப் பார்த்து… “இதில் நீ, மயூரி, நான்.. ஹ்ம்ம்… என் பக்கத்தில் இருப்பது இந்த பெண் தானா?... ஹ்ம்ம்.. பார்த்து ஒரு சில  நிமிடம் பேசி பழகியவர்களை எல்லாம் மனது நினைவில் வைத்திருக்காது… மயூரியுடன் ஒரு பெண் வேலை செய்தாளே… அவள் தானா இது?... எனக்கு அவளின் முகமும் நினைவில்லை… பெயரும் தான்…”

“இந்த பெண் தான் மயூரியிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்தவள்… இவளைத் தான் அவள் தேடுகிறாள்…”

“அதான்… இப்போது தெரிந்து விட்டதே… மயூரியிடம் தெரியப்படுத்து…”

“நிச்சயமாடா… ஆனா… ஆதி… ரிகாவை நிஜமாகவே உனக்கு தெரியவில்லையா?...”

“எத்தனை தடவை சொல்வது மச்சான் உனக்கு… எனக்கு தெரியவில்லைடா…”

“சரிடா ஆதி……”

“முகிலா, நிஜமாவே, ரிகா நம்ம மயூரியின் தோழியா?...”

“ஆமாடா ஹரி…”

“தேங்க் காட்…. மச்சான்…” என்று அவனின் கையைப் பிடித்துக்கொண்டான் ஹரி…

அதை மூவரும் வினோதமாக பார்த்தனர்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.