(Reading time: 42 - 84 minutes)

 

தி, ஹரி, முகில் மூன்று பேரும் ஒன்றாக படித்தவர்கள் பள்ளியில்… தாயில்லாத ஹரிக்கு தாய்க்கு தாயாய் இருந்து அப்போது கவனித்துக் கொண்டவர் கோதை தான்… அவனின் சின்னஞ்சிறு வயதில் கோதையும், அவன் வளர ஆரம்பித்த பிறகு, முகிலனும் ஆதியும் அவனை கவனித்து கொண்டனர்… ஆயினும் அவன் ஆதியின் வீட்டிற்கு வந்ததில்லை… பள்ளியிலும், வெளியிலும் சந்தித்து பேசி கொள்வார்கள்… வீட்டிற்கு வர மாட்டேன் என்று ஹரி சொல்லி விட்டான் திட்டவட்டமாக… கல்லூரி படிப்பில் அவன் மருத்துவம் எடுத்துபடிக்க, ஆதியும், முகிலனும் பொறியியல் எடுத்து படித்தனர்… கல்லூரி முடித்த பின், ஒரு தடவை கோதை நாச்சியாருக்கு முடியாமல் போன செய்தி கேட்டு பார்க்க வந்தான் தனது தாயை, அவரது பிடிவாத ஹரி… அப்போது அவ்னீஷ் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தான்… அதனால் தான், ஒருவருக்கொருவர் பார்த்து பேசி கொள்ள முடியாமல் போய்விட்டது முன்பே…”

“பேசிட்டிருங்க… நான் காபி எடுத்துட்டு வரேன்…” என்று நகரப் போனவரிடம்,

“இருங்க அம்மா… நானும் வருகிறேன்…” என்றபடி எழுந்து சென்றார் கோதை…

“ஷன்வி என்ன யோசனை?...”

“ஒன்றும் இல்லை ரிகா…”

“இல்லையே… அவ்னீஷின் அண்ணன் வந்து பேசிட்டு போனதிலிருந்து நீ நார்மலாக இல்லை… என்னாச்சு ஷன்வி?...”

“நீ உள்ளே வா ரிகா… உன்னிடம் பேசணும்…”

“என்னிடமெல்லாம், பேச மாட்டாயா ஷன்வி?...” என்ற குரல் கேட்க, யாராக இருக்கும் என்றபடி திரும்பியவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி அங்கு அனு நின்றாள் அபியுடன்…

“ரிகா மிஸ்…” என்றபடி அபி ரிகாவிடம் ஒட்டிக்கொள்ள, அவளும் அபியைத் தூக்கி கொண்டாள்….

“வாங்க அனு…” என்று இருவரும் வரவேற்று ஷன்வியின் அறைக்கு அழைத்துச் சென்றனர்…

கோதை மெதுவாக திருமணப்பேச்சை ஆரம்பித்தார்… அவர் சொல்லியதை கேட்டப் பாட்டிக்கோ இன்பம் தாளவில்லை…நிறைவுடன் அவர் கைகளைப்பிடித்துக்கொண்டவர், “தாய் தகப்பனில்லாத பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டது… மிக்க நன்றிம்மா…”என்றார் பாட்டி…

அனு, ரிகாவிடம் விஷயத்தை சொல்ல, இருவரும் சேர்ந்து ஷன்வியை தயார் செய்தனர்… இருவரின் கைவண்ணத்தில் அழகாக இருந்தாள் ஷன்வி… சிறு பயம், வெட்கம், படபடப்பு, உற்சாகம் என அனைத்து கலவைகளும் அவளுக்குள் எட்டிப்பார்த்தது…

“ரிகா அபிக்கு அம்மாகிட்ட பால் கலந்து கொடுக்க சொல்கிறாயா இப்போ?...”

“சரி அனு… அபி வா… நாம பாட்டிகிட்ட போகலாம்…” என்றபடி அபியுடன் நடந்தாள் ரிகா…

அவள் சென்றதும் எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கியவளிடம், ஷன்வியே ஆரம்பித்தாள் அவ்னீஷிடம் பேசியதை அனுவிடம் அப்படியே சொன்னவள்… “இப்போ முடிவு உங்கள் கையில் தான் அனு.. நீங்க என்ன சொல்லுறீங்க?...” என்று கேட்டாள்…

ஷன்வி சொன்னதை கேட்டு அனு அமைதியாகிவிட, “என்ன அனு, நான் எதும் தப்பா சொல்லிட்டேனா?...”

“இல்லை ஷன்வி… ரொம்ப சந்தோஷம்…” என்று அவளை அணைத்துக்கொண்டாள் அனு…

“ஆனா அனு… அதில் சில சிக்கல் இருக்கு…”

“உண்மை தான் ஷன்வி… நூலோட ஒரு பக்கம் மட்டுமில்ல, ரெண்டு பக்கமும் சிக்கல் தான்..” என்றபடி அங்கு வந்தார்கள் கோதையும் பாட்டியும்…

“வாங்க ஆன்ட்டி…” என்றாள் ஷன்வி…

“இன்னும் என்ன ஆன்ட்டி… அத்தைன்னு சொல்லு ஷன்வி…” என்று கண்டித்தார் பாட்டி…

“சரி பாட்டி… வாங்க அத்தை…”

“நீயும் நம்ம வீட்டுப் பொண்ணுதான்மா இனி… அத்தைன்னு சொன்னாலும் சரி, அம்மான்னு சொன்னாலும் சரிதான்…” என்று சிரித்தார் கோதை…

அங்கே ஹாலில் சுந்தரமும், ஷியாமும் பேசிக்கொண்டிருக்க, இளவட்டங்கள் நால்வரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்…

முகிலனுக்கு அந்நேரம் போன் வர, “யாருடா?... மயூரியா?...” என்றான் ஆதர்ஷ் பார்க்காமலே…

“அதெப்படி மச்சான் பார்க்காமலே சொல்லுற?...”

“பின்னே இத கண்டுபிடிக்க சிபிஐ வரணுமா?... போடா போய் பேசிட்டு சீக்கிரம் வா…”

“சரிடா…”

“டேய்… அவ்னீஷ்… எதற்கும் நீ அவனுடன் செல்… அப்போதான் உன்னை மனசுல வச்சாச்சும் சீக்கிரம் போன் பேசி முடிப்பான்… சோ… நீயும் அவனுடன் போ…” என்றான் ஹரி…

“ஆமா… எங்களை அனுப்பிட்டு நீ மட்டும் இங்கே என்ன கிழிக்கப்போற?.. வா வந்து தொலை நீயும்…” என்று ஹரியை இழுத்தான் முகிலன்…

“நான் வரலை… மச்சானுக்கு துணையா நான் இங்கேயே இருக்கேன்…”

“அவனுக்கு அபி துணை இருப்பா…”

“அவ தான் இங்கே இல்லையேடா…”

“இதோ வந்துட்டா பாரு ஹாஹாஹா…” என்று சிரித்தான் முகிலன்…

“இன்னுமென்ன அண்ணா பேசிக்கிட்டு, இவர் ஒரு கையை நீங்க புடிங்க… நான் இன்னொரு கையைப் பிடிச்சிக்குறேன்…”

“சரியா சொன்னடா… ஈஷ்… தூக்குடா இவனை…”

“டேய்… டேய்… விடுங்கடா…” என்ற ஹரியின் குரல் காற்றில் கரைந்தது…

மயூரியிடம், அவ்னீஷ்-ஷன்வி பற்றி சொல்லிவிட்டு திரும்பியவன், அவ்னீஷ் ஏதோ சொல்ல விரும்புவதைப் பார்த்து என்ன என்று கேட்டான்…

ஷன்வி சொன்னதை ஒருவித தயக்கத்துடன் முகிலனிடம் கூறினான்….

முகிலனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை… ஆதர்ஷ் என்னடா என்றால், அனைவரையும் ஷன்வியின் வீட்டிற்கு அழைத்து வர வேண்டுமென்று நினைத்து ஹரீஷிடம் சொன்ன ஐடியாவை முகிலன் செயல்படுத்தும் முன், ஆதி அதை முடித்தே விட்டான்…. இவன் என்னடா என்றால், இப்போ இப்படி சொல்கிறான்… அட கொடுமையே… அப்போ நான் தான் ஜோக்கரா… என்று சிரித்துகொண்டான் முகிலன்….

“என்னடா ஹரி, இவன் சொல்வது உனக்கு புரியுதா?...”

“புரிந்ததால் தாண்டா.. இப்படி அமைதியாக இருக்கிறேன்…”

“நீ என்ன செய்யப்போற ஹரி?...”

“நான் என்னடா செய்ய?...”

“நீதான் செய்யணும்…”

“நானா?...”

“ஆமா… உன்னை விட இதற்கு பொருத்தமான ஆள் யாருமில்லை…”

“எதை செய்வதற்கு முகிலன் அண்ணா?...”

“எல்லாம் நீ ஒன்று சொன்னாயே அதை செய்வதற்குதான்…”

“அதை ஹரி அண்ணா எப்படி செய்ய முடியும்?...”

“டேய்… அவசர குடுக்கை… பொறுமையா இருடா… அவன் செய்வான்… அவன் நல்ல முடிவா சொல்லுவான்… நீ அதுவரை கொஞ்சம் அமைதியாக இரு… ஷன்வியிடமும் சொல்லிவிடு… ஹரி பார்த்துப்பான் என்று…”

“சரிண்ணா…”

“கல்யாணத்திற்கு முன்னே பழகிக்கொள்கிறாய் போல?...”

“எதை அண்ணா?..”

“இப்படி ஆமாம் சாமி போடத்தான்…”

“ஆமாம் அண்ணா, அண்ணிகிட்ட நீங்க ஆமாம் சாமி போடுவதை இவ்வளவு நேரம் பார்த்தேன் இல்லையா… அதான் பழக்க தோஷம் என்னையும் தொத்திக்கிட்டு…”

“ஹாஹாஹா… சரியா சொன்னடா… ஈஷ்…” என்றான் ஹரி…

“அடிங்க… யாரடா… கலாய்க்கிறீங்க… நில்லுங்கடா…” என்று அவர்களை துரத்தினான் முகிலன்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.