(Reading time: 38 - 75 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 13 - புவனேஸ்வரி கலைச்செல்வி

"ன்ன " என்று இருவரும் கேட்க ,

( போச்சுடா இவ கதையை சொல்றேன்னு சொல்லி மறுபடியும் டென்ஷன் ஆகிட்டா மேடம் ஐ நான் எப்படி சாமாளிப்பேன் ? என்று மனதிற்குள் எண்ணிகொண்டான் ரவிராஜ். ஏற்கனவே அன்று நடந்த களேபரத்தில் சுஜாதா கோபம் அடைந்து விட, அவளை சமாதனபடுத்த ரவிராஜ் மேற்கொண்ட முயற்சிகளை மறக்க முடியுமா ? கிட்ட தட்ட இந்த மொழி படத்துல நம்ம ப்ரிதிவிராஜ் ஜோதிகாவை சமாதானப்படுத்த  முயற்சிப்பாரே அப்படிதான் நடந்தது... ஒரு முறை அதை நினைத்தவன், சட்டென )

" பேபி மா .. நீ பால் குடிச்சியா ? இரு நான் கொண்டு வரேன் " என்றான்.

" நீங்க ஒன்னும் பேச்சை  மாத்த வேணாம் "

VEVNP

" ayyo அண்ணா சும்மா இருங்க... சுஜா நீங்க சொல்லுங்க .. அண்ணா என்ன பண்ணாரு ? "

" ம்ம்ம்  உங்க அண்ணா , என்னை பார்த்ததும் குடுகுடுன்னு ஓடி வந்து சிரிச்சது மட்டும் இல்லாம, என்னை கை கொடுத்து தூக்காமல் உருண்டு விழுந்த அந்த இளநீரை பதறி  அடிச்சு எடுத்துட்டு வந்தாரு  " என்றவள் பல்லை கடித்துக்கொண்டு ரவிராஜை பார்க்க மற்ற இருவரும் பலமாய் சிரித்து கொண்டிருந்தனர்..

" சரி சரி விடு பேபி மா அது ஏதோ  அறியாத வயசுல பண்ணது "

" அறியாத வயசா ? அன்னைக்கு அதை மட்டுமா பண்ணிங்க நீங்க ? "

" ஓஹோ அப்போ இன்னும் உங்க கதை முடியலையா சுஜா ? " என்ற கேட்ட ரகுராம், அந்த காட்சியை கற்பனையில் பார்த்து மீண்டும் சிரித்தான்.

" அட போங்க பாஸ் .. அவரு சிரிச்சதை கூட பரவாயில்ல .. நான் மன்னிச்சுடுவேன் ....என்னால  வலி தாங்க முடியாமல் டாக்டர் பார்க்க போனோம் .  இதை நெனச்சு சிரிச்சுகிட்டே இருந்தவர் கிட்ட, டாக்டர் என் பெயரை கேட்கிறாரு,................. என் அருமை கணவர் சிரிச்ச சிரிப்புல என் பெயரையே மறந்துட்டாரு. டாக்டர் என் பேரை கேட்ட இவர் திருதிருன்னு விழிக்கிராறு ... "

" அய்யயோ அப்பறம் ? " என்று கேட்ட ஜானகியால் சிரிப்பதை நிறுத்தவே முடியவில்லை.

" அப்பறம் என்ன விழுப்புரம் தான் .. நானே என் பெயரை சொல்லி, அப்போ டாக்டர் என்னை பார்த்து ' இந்தாளு யாருன்னு ' கேட்குறாரு " என்று அவள் முடிக்க , தண்ணீர் குடித்து கொண்டிருந்த ரகுராமிற்கு புரையேறியது. அதுவரை சிரித்து கொண்டிருந்த ஜானகி சட்டென,

" என்ன ரகு நீங்க ? பார்த்து " என்றபடி அவன் தலையில் தட்டினாள். அவளின் ஸ்பரிசத்தை எதிர்பார்க்காத ரகுராமின் காதல் மனம் ஆனந்த கூத்தாட, அவன் பார்வையின் மாறுதலை உணர்ந்தவள், அப்போதுதான் தன் செய்கையை உணர்ந்தாள் . அவளுக்கு சிரமம் தர எண்ணாது ரகுவும்  சுஜாதாவின் புறம் திரும்பி

" இப்போ உங்க கோவம் புரியுது சுஜா " என்று மீண்டும் சிரித்தான். நொடிபொழுதில் நடந்த நிகழ்வில் அவள் திடுக்கிட்டாலும் மற்ற மூவரும் பேசுவதை கேட்டு தானும் இணைந்துக் கொண்டாள். ரகுராம் மட்டும் மனதளவில் உல்லாசமாய் பறந்து கொண்டிருந்தான்.

சற்று முன் கிடைத்த தகவல் படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே

என் உயிரே உயிரே

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி

இளமை சிறகடித்து பறந்ததடி

உயிரே என் உயிரே

என் உயிரே உயிரே

" என்ன யோசனை ரகு ? "

" ஒண்ணுமில்ல ரவி ... உன்னையும் சுஜவையும் தான் நெனச்சேன்  " ( நிஜம்மாவா ரகு? நான் நம்பிட்டேன்....)

" எங்களையா ? "

" ம்ம் ஆமா .. ஒரு செகண்ட் சண்டை போடறிங்க ... அடுத்த செகண்ட் சேர்ந்திடுறிங்க...சோ நைஸ்"

" ஐஸ் எல்லாம் போதும் பாஸ் ... இதென்ன பெரிய விஷயம் ? சண்டை இல்லனா சுவாரஸ்யம் இல்ல அதே நேரம்  விட்டு கொடுக்கவும் பழகிக்கணும் .. அவ்வளவுதானே "

வெகு இயல்பாய் பேசிய மனைவியை ஆசையாய் பார்த்தான் ரவிராஜ் ...

" இப்போ தெரியுதா ரகு, நான் ஏன் சுஜியை பார்த்ததுமே விழுந்துட்டேன்னு " என்றான் காதலுடன்.

" ஜானு உன் அண்ணாகிட்ட சொல்லு..இந்த ஐஸ் கெல்லாம் நான் மசியமாட்டேன் "

" ஓஹோ அப்படியா ? " என ரவி ஆரம்பிக்க

" அச்சோ மறுபடியும் முதல்ல இருந்தா   ?  அண்ணா ஒரு ப்ரேக் கொடுங்களேன் ப்ளீஸ்.. நாங்க பாவம் "

" ஹா ஹா ஹா .. சரி ஓகே சமாதானம்"

னியாமையான உரையாடலில் பல மணிநேரங்களும் மணித்துளியாய் கரைந்துவிட்டதை நால்வருமே உணரவில்லை. ரவிராஜ் - சுஜாதாவின் காதலை கண்ட ஜானகி மனதிற்குள் வியந்து கொண்டாள் ... விவாகரத்து, மனமுரண்பாடு இப்படி திருமண வாழ்க்கைகள் அதிவேகத்தில் பிரிந்து வரும் காலகட்டத்தில் இப்படியும் ஒற்றுமையாய் வாழ முடியுமா ?  அர்ஜுன் - சுபத்ராவின் காதலை அவள் நேரில் பார்த்தாலும்கூட இருவருமே வயதில் ஒத்தவர்கள் என்பதினாலோ அல்லது இருவருமே தனக்கு தோழர்கள் போல என்பதினாலோ, அவர்களின் காதலை கண்டு அவள் ஆச்சர்யபட்டதில்லை...அவளும் காதல் கொண்டவள் தானே ? அவளை பொறுத்த வரை காதலிப்பது கடினமில்லை ...திருமணத்திற்கு பிறகும் காதலிப்பதும் விட்டு கொடுத்து புரிந்து கொள்வதும் தான் மிக சிறந்தது என்று எண்ணினாள் ஜானகி... தனக்கும் இப்படி ஒரு வாழ்வு அமையுமா ? என்று எண்ணிய ஜானகி சட்டென ரகுராமை பார்த்தாள். அவ்வப்போது  அவளை பார்த்து ரசித்து கொண்டிருந்த ரகுராமும் அவள் பார்வையில் கலந்தான். ( ஓஹோ இதைதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் நு சொல்வாங்களோ ? )

அதே நேரம் ஜானகியிடம் ஏதோ மாற்றம் தெரிகிறதே என யோசனையோடு பார்த்தாள் சுஜாதா...

" என்ன பேபி ? ஒரு மாதிரியா இருக்கே ? குடிக்க ஏதும் கொண்டு வரவா ? " கணவனின்  அன்பில் கரைந்தவள், ஒன்றுமில்லை என தலையாட்டி கண் சிமிட்டினாள்.

" ஜானு நீ ஏன் மா இப்படி பார்குற ? "

" சூப்பர் அண்ணா... நானும் கொரியன் டிராமா பார்த்துருக்கேன், ஹிந்தி சீரியல் பார்த்துருக்கேன் .. நம்ம கௌதம் மேனன் லவ் ஸ்டோரீஸ் கூட பார்த்துருக்கேன்  பட் லைவ் ஆ இப்படி ஒரு காதல் காவியம் பார்த்ததே இல்ல "

" இது என்ன பிரமாதம் .. கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க ரெண்டு பெரும் பண்ணுற டிராமாவை நாங்களும் பார்க்கத்தானே போறோம் " என்று சிரித்தவன் மனைவியைபார்க்க , அவளோ

" இல்லை " என திருதிருவென முழித்தாள்.... நம்ம ரவி சார் என்ன சும்மாவா ? மனைவியின் தலை அசைவியிலேயே ' அய்யயோ சொதப்பிடோமே ' என்று புரிந்து கொண்டார் .. உடனே ,

" அதாவது நீயும் உன் வருங்கால கணவரும் ... ரகுவும் ரகுவின் வருங்கால மனைவியும் " என்று சமாளித்தான். ஒரு பெருமூச்சு விட்டு ஆசுவாசபெற்ற சுஜாதா அப்போதுதான், ஜானகி குங்குமம் இடாமல் இருந்ததை பார்த்தாள்..." ஓஹோ அதுனாலெதான் ஜானகி இன்னைக்கு வித்தியாசமா இருக்காளோ ? " என்று மனதிற்குள் வினவிகொண்டாள்.

அதன்பின் ஜானகியும் ரகுராமும் , சுஜாதா-ரவிராஜின்  திருமண புகைப்படங்களை பார்த்துவிட்டு, மாலை சிற்றுண்டியையும் முடித்து விட்டு வீடு திரும்பினர்.. அவர்களை வழியனுப்பியதும்

தன் மனைவியை பின்னாலிருந்து அணைத்தான் ரவிராஜ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.