(Reading time: 38 - 75 minutes)

 

" ந்துட்டிங்களா ? "

" சூப்பரா பாடுறே கண்ணம்மா "

" எங்க போனிங்க ? "

" உனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா ? "

" ஏன் பாட்டை மாத்துநிங்க ? "

" கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரியுதா ? உன் கண்ணன் கண்ணு முன்னாடிதான் இருக்கேன் பட் நீதான் கண்டுக்கவே மாட்டுறியே "  என்றான் ...

அவளின் ஒரு கேள்விக்கும் அவன் சரியாக பதில் சொல்லாததால் செல்ல கோபத்துடன் வேறு புறம் திரும்பிகொண்டாள் மீரா ... ( மறுபடியும் முதல்ல இருந்தா ? மீரா நோ கோவம் ப்ளீஸ் )

காரை அருகில் இருந்த பூங்காவனத்தில் நிறுத்தினான் கிருஷ்ணன்.

" இறங்கு மீரா "

" ..... "

" ப்ளீஸ் டா "

" இப்பதான் ப்ளீஸ் சொல்ல வருதா ? நான் கோபமா திரும்பிகிட்டா சமாதனம் கூட பண்ண மாட்டிங்களா? நான் இறங்க மாட்டேன் " என்று சிலுப்பிகொண்டாள்...

" சரி ஓகே நானே உன்னை தூக்கிட்டு போறேன் " என்றவன் காற்றில் கரைந்த அவளின் குரலை கேட்காமல் தன் இருக்கையில் இருந்து இறங்கி அவள் புறம் வர , சட்டென இறங்கினாள் மீரா ...கள்ளசிரிப்புடன் அவளை பார்த்தவன்

" நான் தூக்கனும்னா  சொல்லிடு  டார்லிங் ..அதை விட்டுடு ஏன் இப்படி முரண்டு பிடிச்ச ? " என்றான்.

இல்லாத கோபத்தை எவ்வளவு நேரம் தான் பிடித்து வைப்பது ? அதுவும் கிருஷ்ணனின் மீதா ? நோ நோ.. என்று அவளின் மனம் எடுத்துரைக்க ,

" சரி இங்க எதுக்கு வந்தோம் சொல்லுங்க பா " என்றாள்...

" என் கண்ணம்மா என்னை கண்ணன்னு கூப்பிட்டாத்தான் நான் சொல்லுவேன் " என்று பேரம் பேசினான் கிருஷ்ணன் .

" உங்க அலும்பல் தாங்கல கண்ணா " என்று அவள் அலுத்துக்கொள்ள அவளை  தோளோடு அணைத்து அருகில் இருந்த பெஞ்ச் இல் அமர வைத்தான் கிருஷ்ணன்.

" கண்ணை மூடு"

" எதுக்கு ? இப்போ நீ மூடல நான் ஐ லவ் யு நு எல்லாரும் பார்குற மாதிரி கத்தி கிஸ் பண்ணிடுவேன் "

" இவன் பண்ணாலும் பண்ணுவான் " என்று நினைத்தவள் கண்களை மூட

கிருஷ்ணன் தன் பாக்கெட்டில் இருந்து அந்த கொலுசினை எடுத்து  அவளுக்கு அணிவித்தான்... அவன் பாதம் தொட்டதுமே கண் திறந்த மீரா, அந்த பூங்காவனத்தில் மண்டியிட்டு கொலுசு மாட்டி விட்டவனை இன்ப அதிர்ச்சியில் பார்த்தாள்.... " ஏன் என்னை இவ்வளவு காதலிக்கிறான் ? " என்று எண்ணி  திக்குமுக்காடி போனாள்.

" என்ன கண்ணா இதெல்லாம் " என்று கண் கலங்கியவளை பார்த்து அவன் கை நீட்ட, அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள் மீரா....

" போதும்டா கண்ணம்மா.... இனிமே நீ அழகூடாது .... ப்ளீஸ் டா " என்றான் உணர்ச்சிப்பூர்வமாக ....

" ம்ம்ம் ..... எனக்கு எதுக்கு கொலுசு இப்போ  ? " என்று அவள் நிமிர்ந்து பார்த்து கேட்க,

" சொன்னா நீ அடிப்பியே " என்றான்....

" டேய் கண்ணா "

" என்னது டேயா "

" ஹஹஹ ஆமா ... சொல்லுங்க என்ன வில்லங்கம் இது "

" ரெண்டு ரீசன் செல்லம் "

" என்னது "

" ஒன்னாவது உனக்கு ஸ்ப்ரைன் வந்ததுக்காக .,.. இந்த பாதம் மட்டும் அன்னைக்கு சுளுக்கிகலன்னா நீ நம்ம வீட்டுக்கு வந்துருப்பியா ? அதான் " என்று அவளிடம் இருந்து இரண்டடி வாங்கி கொண்டான்...

" சரியான அரட்டை தான் நீங்க ... சரி ரெண்டவது ரீசன் ? "

" அதுவா ..., வீட்டுல ஜனத்தொகை ஜாஸ்தியாச்சு "

" நித்யாவை சொல்றிங்களா ? "

" அடிப்பாவி நீ பாட்டுக்கு இப்படி அவகிட்ட சொல்லிடாதே "

" பார்க்கலாம் "

" அப்போ உன் புருஷனுக்கு அடி விழ போவதை உன்னாலேயே இனி தடுக்க முடியாது போல "

" ஹா ஹா அவளுக்கு பயபடுறிங்களா கிருஷ்ணா  ?"

" இல்லடா .... வீட்டுல பெரியவங்களுகெலாம் நம்ம மேட்டர் தெரிய வந்தாலும் அவங்க முன்னாடி ரொமேன்ஸ் பண்ண முடியுமா ? "

" சோ ? "

" சோ ...... உன் கொலுசு சத்தம்  வெச்சு நீ எங்க இருக்கேன்னு கண்டுபிடிச்சு மாமன் உடனே ஆஜர் ஆகிடுவேனே" என்று இல்லாத கோளரை அவன் தூக்கி விட்டுக்கொள்ள

" திருடா... திருடா .... " என்று அவனை அடித்தாள் மீரா... அவன் அவளின் கரம் பற்றுவதற்கும், சட்டென அடைமழை பொழிவதற்கும் சரியாக  இருந்தது . ஏற்கனவே கூட்டம்  அதிகமில்லாத பூங்காவனத்தில் இப்போது அனைவருமே மழையில் ஒதுங்கி ஓடிவிட, அவளின் கரத்தை இரும்பு பிடியாய் பிடித்தான் கிருஷ்ணன்.

" கிருஷ்ணா " என்று அழைத்தவளின் குரல் காற்றில் கரைய, மெல்ல அவளின்  இதழை சிறைபிடித்தான் கிருஷ்ணன் ... அவனின் ஸ்பரிசத்தில் தன்னிலை மறந்த மீரா அவனின் மார்பில் தஞ்சமடைய பிரிந்திருந்த ஜோடி கிளிகளுக்கு ஸ்பரித்தால் பேசிக்கொள்ள ஆயிரம் பேச்சுக்கள் இருக்க, நாமும் ஒரு பாடலுடன் அவர்களிடமிருந்து விடை பெறுவோமா ?

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

 மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை

அடுத்தொன்றும் தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

 பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை

இலக்கணம் பார்க்கவில்லை

 பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

 உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

 ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

 எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ

உணர்ச்சிக்கு பாதை உண்டோ

 விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ

காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ

கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

 ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

( அப்பாடா.... அப்படி இப்படின்னு கிருஷ்ணா - மீரா சேர்ந்தாச்சு ... இதே மாதிரி ரகு -ஜானகி எப்போ சேருவாங்க ? சுபி- அர்ஜுனின் காதல் இப்படி தெளிந்த ஓடையாய் போகுமா ? சுப்ரியா- ஆகாஷின்  கல்யாணத்துல ஏதும் ட்விஸ்ட் இருக்கா ? அபிராமி " நீ நிச்சயம் அம்மா ஆகுவ " என்று சொன்ன  வார்த்தைகளுக்கு பின்னாடி என்ன இருக்கு ? எப்பவுமே சிரிச்சுகிட்ட இருக்கும் நித்யாவுக்கு இன்னைக்கு வந்த கோபத்தின் பின்னாடி ஏதும் கதை இருக்கா? இதெல்லாம் அடுத்தடுத்த எபிசொட் சொல்றேன் ... பாய் பாய் )

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.