(Reading time: 38 - 75 minutes)

 

" சோதா கிருஷ்ணன் தான் "

" ஹ்ம்ம் ஏன் மீரா நான் ஒன்னு கேட்கட்டுமா? "

" கேளுங்க "

" கிருஷ்ணனை பெற்றது தேவகிதானே ... கிருஷ்ணர் இப்படிதான் இருப்பார்னு  நமக்கு தெரியும் .. அதுனாலே நீங்க கிருஷ்ணர் நு சொன்னது அதிசயமில்லை . ஆனா ஏன் அந்த பெண்  கண்டிப்பா யசோதா நு சொல்றிங்க ? தேவகியாக  இருக்க கூடாதா? "

" அது ..... எப்பவும் யசோதா கிருஷ்ணன் நு தானே சொல்வாங்க " என்ற மீரா புருவ முடிச்சுடன் பார்த்தாள்.

" ஆமா எப்பவுமே கிருஷ்ணனின் அம்மான்னா அதை யசோதான்னு தான்  சொல்றோம் ... அப்படின்னா, பெற்றால்தான் தாயாகனும் என்ற மரபை அப்போவே மாத்திட்டாங்க  தானே அர்த்தம் ? தாய்மைக்கு பெற்ற தாயக இருக்கணும்னு அவசியமே இல்லை .. கருணையும் அன்பும் தாய்மையும்  கருவறையில் இருந்து உருவாகுதா ? இல்ல மனசுல இருந்து உருவாகுதா ? "

"...."

" ஆனா அப்படி இருந்தும் நீங்க சொன்னிங்களே ' இந்த குழந்தைகள் இல்லாத வர்க்கம் ' அவங்க எல்லாம் எதார்த்தத்தை ஏற்றுகிட்டு அபி மாதிரி பசங்களை தத்தெடுக்க முன் வாராங்களா ? "

" ...."

" யாருமே வரலன்னு சொல்ல மாட்டேன் ... பட் பசிச்சா சாப்பிடனும் என்பது என்பது எவ்வளவு இயல்போ அந்த அளவு குழந்தை இல்லன்னா உடனே தத்தேடுக்கனும்னு நினைக்கிறாங்களா ? "

" ...."

" கடவுள் நம்பிக்கை அதிகம் நா, அரச மரமா தேடி தேடி சுத்துறாங்க... கோவில் குளம்னு ஏறி இறங்குறாங்க .... அறிவியல் நம்பிக்கை உள்ளவங்களா இருந்தா, நாடு நாட டாக்டரை பார்க்குறாங்க, சில பேரு டெஸ்ட் டியுப் பேபி காக கூட ட்ரை பண்றாங்க "

அந்த வார்த்தைகளை கேட்டதும் மீராவிற்கு யாரோ மனதில் அறைந்தது போல இருந்தது ... அன்று கிருஷ்ணனிடம் அவள் வாதிட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று ...  புவனாவின்  குரலில்  ஒலித்த ஆதங்கமா கோபமா ? ஏதோ ஒன்று அவளின் திடமான எண்ணத்தை அசைத்து பார்த்தது ... அருகில் இருப்பவளின் மனதை அறியாமல் தொடர்ந்து பேசினாள் புவனா...

" இந்த நிலைமை மாறனும் மீரா... கடவுள் சிலருக்கு குழந்தை வரம் கொடுக்காததே இந்த மாதிரி பிள்ளைகளுக்கு வாழ்வு தர்ரதுக்காகதான் நான் பீல் பண்றேன் . இப்போலாம் இளைஞர்களுக்கு கூட ஹெல்த் கான்சியஸ் இல்ல மீரா ... இந்த பிரச்சனை ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இருக்கு ... கல்யாணம் ஆகாதவங்க இதை ஒரு காரணம் காட்டி கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க .,.. எனக்கு அவங்களை பார்த்தா பாராட்டணும்னு தோனல கோபம்தான் வருது .. சொந்தமா பெற்றால்தான் குழந்தைன்னு ஏன் நினைக்கிறாங்க மீரா ... ? "

என்ன பதில் சொல்வாள் அந்த பேதை ? அவள் கேட்ட அந்த சிலரில் அவளும் ஒருத்தி அல்லவா ? என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையாட்டினாள். அதற்குள் அங்கு அபிமன்யு ஓடி வர, அவனை வாரி அணைத்து கொண்ட மீராவிற்கு ஏன் என்று சொல்லாமலே கண்ணீர் பெருக்கெடுத்தது .

" ஐயோ மீரா உன் கண்ணுலயும் தூசி விழுந்துடுச்சா ?... இங்க வா " என்றவன் அவளின் கண்களின் மெல்ல ஊதினான்.

அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்தவள் மெல்ல சிரித்து சூழ்நிலையை மாற்றினாள்.

தன் பிறகு, மற்ற சிறுவர்களும் புவனா, மீரா நின்ற இடத்திருக்கு வந்துவிட, மீராவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள் புவனா. அவர்களிடம் பேசியபடியே நடந்தவள், தன் வேலைக்கு அவசியமான தகவல்களையும் சேகரித்து கொண்டாள்.

அங்கு இருப்பவர்களுக்கு பிருந்தாவனம் ஒரு காப்பக இல்லமாக இல்லாமல், சாதாரண குடியிருப்பு பகுதியை போல காட்சியளிக்க வேண்டும்  என்று பார்த்து பார்த்து அமைக்கபட்ட அந்த கட்டட அமைப்பை மனதிற்குள் மெச்சினாள் மீரா. அங்கிருந்து மாலை வீடும் திரும்பியவளுக்கு மனதில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருந்தது ...

இதுவரை கடந்து வந்த நாட்களை மனதிற்குள் அசைப்போட்டவளின் எண்ணம் கிருஷ்ணனையே வளம் வந்தது. அவனை கண்ட நாளில் இருந்து இன்று வரை, அவன் கண்களில் மாறாத காதலை கண்டவளின் மனம், அவன் தொழில் சாய்ந்து அழ வேண்டும் என விசும்பி கொண்டிருந்தது . அதே வேலை அவனை எவ்வளவு வருத்திவிட்டோம் என்று குறுகியும் போனாள். வார்த்தைகளை யோசித்து பிரயோகம் செய்வது அவசியம் என்பது அவளை பொறுத்த மட்டிலும் உண்மைதான் .. அவள் கோபத்தில் அவனிடம் அவ்வபோது வீசிய வார்த்தைகள் இன்று அவளையே நெருஞ்சி முள்ளாய் தைத்தது . என்ன பேசுவது ? எப்படி பேசுவது என்று யோசித்தபடி தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளை அபிராமியின் குரலில் நடப்புக்கு கொண்டு வந்தது.

" மீரா "

" ஆன்டி ....வாங்க வாங்க .... ...உட்காருங்க "

" இப்போ நீ எதுக்கு எழுந்த ? நீயும் உட்காரும்மா "

" இல்ல பரவாயில்ல ..."

" உன் அத்தை சொன்னா கூட கேட்கமாட்டியா ? "

" அத்த ..... "

" எனக்கும் எல்லாம் தெரியும் மீரா... மனசு விட்டு பேசத்தான் வந்தேன் டா " என்று அவர் சொன்னவுடனே அவர் மடியில் முகம் புதைத்து தான் மனபாரத்தை கண்ணீரால் கரைத்தாள் மீரா ....

" மீரா ..... மீராம்மா ... இன்னும் எவ்வளோதான்  அழ போற? இங்க பாரு ,... என்னை நிமிர்ந்து பாரு "

" ...."

" இதுவரைக்கும் நடந்ததுல எதுலயாவது உன் தப்பு இருக்கா சொல்லு ? விதியால் நடந்ததுக்கு நீ ஏனம்மா அழறே ? "

" ..."

" உன் வலி எனக்கு புரியுது மீரா .... ஆனா யோசிச்சு பாரு ... சரி எனக்கு ஒரே ஒரு பதில் சொல்லு , ஒருவேளை  கிருஷ்ணனுக்கு இப்படி ஏதும் பிரச்சனையை இருந்தா நீ அவனை விட்டுட்டு போயிடுவியா ? "

" ஐயோ அத்தை " என்று உடனே மறுப்பாய் தலை அசைத்தாள் மீரா ....

" அப்போ நாங்க மட்டும் எப்படி உன்னை ஒதுக்கி வைப்போம் மீரா ? "

" ஆனா அத்தை ... வாரிசு ? "

" அதுதான் உன் பிரச்சனைனா என்னை நம்பி இந்த விஷயத்தை விடு மீரா .... நீ நிச்சயம் அம்மா ஆகுவ.. நம்ம வீட்டுக்கு வாரிசும் உண்டு..... இப்போதைக்கு நான் அவ்வளோதான் சொல்லுவேன்... நோர்மலா இரு ... இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேணாம்.. உனக்கு எதுவும் நடகலேன்னு நெனச்சுக்கோ " என்றவர் அவளின் நெத்தியில் முத்தமிட்டார் ... அவரின் அன்பில் கனைந்தவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், அவர் சொன்னது போல அனைத்தையும் அவரிடம்  ஒப்படைத்துவிடு அவள் மடியில் சாய்ந்தாள்...புதிதாய் பிறந்தது போல உணர்ந்தவளுக்கு கிருஷ்ணனை உடனேயே பார்க்கணும் என்று தோன்றியது. மெல்ல நிமிர்ந்தவள்,

" அத்தை நான் கோவில்லு போய்ட்டு வரவா ? " என்றாள்....

" சரி டா .. நான் கிருஷ்ணனை உன்னை கோவில்ல  பிக் அப் பண்ணிக்க சொல்றேன் "

கருணையே வடிவமாய் நின்றிருந்த கருமாரியம்மன் முன் கை கூப்பி மனதார வேண்டினாள் மீரா... இனி வரும் வாழ்க்கை அவளுடன் சேர்த்து  அவளை சார்ந்தவர்களுக்கும் இனிமையாய் அமைய வரம் தருவாய் தேவி என மானசீகமாய் கேட்டுகொண்டவளின் நெற்றி பொட்டில் யாரோ தொடவது போல இருக்க

சாட்சாத் கிருஷ்ணன் தான் அவளுக்கு திலகமிட்டு நின்றிருந்தான். அவனை கண்ட மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் அவள் கண்கலங்க

" ஷ்ஷ்ஷ்ஷ் நோ மோர் தியர்ஸ் " என்று ரகசிய குரலில் கூறினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.