(Reading time: 38 - 75 minutes)

 

" பேபி "

" ம்ம்ம்ம்"

" ஐ லவ் யு "

" சோ?"

" என்ன சோ? "

" மிஸ்டர் புருஷா... நீங்க இந்த ஐ லவ் யு எதுக்கு சொல்றிங்கன்னு தெரியும் ... என்னதான் சார் என்னை பிரைன் வாஷ் பண்ணாலும் என்னை கலாய்ச்சதுக்கு நிச்சயம் பனிஷ்மெண்ட் உண்டு .. சோ இன்னைக்கு நீங்க என் பக்கமே வர கூடாது "

" அய்யய்யோ"  என்று போலியாய் அலறியவன் அவளை இன்னும் இருக்கமாய் அணைத்து கொண்டு பாட ஆரம்பித்தான்.

எனக்காக பொறந்தாயே எனதழகி

இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி

உனக்கு மாலையிட்டு  வருசங்க போனா என்ன

போகாது உன்னொட பாசம்

எனக்கு எம்மேல தான் ஆசையில்ல

உம்மேல  தான் வச்சேன்

என்னை  ஊசி இன்றி  நூலும் இன்றி

உன்னோட  தான் தச்சேன்

" பேபி "

" ம்ம்ம் "

" கோவம் போச்சா ?? "

" ஹ்ம்ம்ம்ம் ... இன்னொரு நாள் வராமலா போய்டும் " என்றும் சிணுங்கியவள் தன்னவனின் மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

குராமின் காரில்,

" டைம் போனதே தெரியல ரகு "

" ..."

" என்ன சிரிக்கிறிங்க ? "

" .."

" சொல்லுங்க ரகு? "

" பின்ன ? நீதான் உன்னுடைய ரவி அண்ணாவை பார்த்ததும்  உலகத்தையே மறந்துட்டியே .. ஸ்கூல் லுக்கு குழந்தைய கை பிடிச்சி இழுத்து கூட்டிடு போற மாதிரி இருந்துச்சு  எனக்கு உன்னை வீடுக்கு கிளப்பும்போது...."

" வெவ்வெவ்வே ,... என்னை வம்பிளுக்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வரதே "

" தூக்கம் வரதா? மேடம் நீங்க தூங்கனும்னு தான், நான் உங்களை கூடிட்டு வந்ததே "

" புரியல ? "

" மணி என்ன தெரியுமா ? 7.30... நானும் கெளம்பலாம்னு பார்த்தா நீ பாட்டுக்கு  கதை கதையாக பேசிக்கிட்டு இருக்க .. நாளைக்கு ஆபீஸ் போகணும் ..நேத்து தானே தலைவலின்னு  சொன்னே ? சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டு சாப்டுட்டு தூங்கலாம் ல ? "

ரகுராம் சின்ன சின்ன விஷயத்திலும் அவள் மீது காட்டும் அக்கறையை  உணர்ந்து கொண்டாள் ஜானகி .. " இதுக்கெல்லாம் நான் என்னதான் செய்ய போறேன் " என்று மனதிற்குள் கேள்வி கேட்டவள், அவனிடம்  ஒரு புன்னகையை சிந்திவிட்டு, தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடினாள். அவள் கொஞ்ச நேரம் உறங்கட்டுமே என்று எண்ணியவன், அவள் அமர்ந்திருந்த சீட்டை சாய்வாக அமர்த்தி, மெல்லிய ஓசையில் வானொலியை  உயிர்பித்து விட்டு காரை எடுத்தான்.

எனக்காவே பிறந்தானிவன்

எனை காக்கவே வருவானிவன்

என் பெண்மையை வென்றான் இவன்

அன்பானவன்

என் கோடையில் மழையானவன்

என் வாடையில் வெயிலானவன்

கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

பாடகி சைந்தவியின் குரலில் மயங்கி உறங்கினாள் ஜானகி.

றுநாள்,

" என்னடி பார்க்கிற ? "

" இன்னைக்கு ஆபீஸ் போறியா செல்லம் ? "

" இது பாரு நித்யா , இன்னைக்கும் ஏதோ பிளான் பண்ணி லீவ் போட வெச்சே உன்னை நானே கொன்னுடுவேன் "

" யம்மா தாயே நீலாம்பரி, ஆளைவிடும்மா .. ஆகாஷ்  எருமைக்கு நான் ஒரே ஒரு தங்கச்சி "

" என்னடி திடீர்னு ஆகாஷ் அண்ணா மேல பாசம்... நீ கனவுல கூட என் அண்ணன்  பெயரை சொல்ல மாட்டியே "

" வந்துட்டாங்கயா சாவித்திரி மேடம் .. அடியே நானாச்சும் அப்பபோ ஆகாஷ் கிட்ட பேசிடுறேன் ... நீ ஊட்டியில்   இருந்து  இங்க வந்த பிறகு ஒரு தடவையாச்சும் அவனுக்கு போன் பண்ணியா ? "

" அது ..அது வந்து ..."

" நீ வரவும் வேணாம் .. போகவும் வேணாம் .. உனக்கொரு விஷயம் தெரியுமா ? ஆகாஷ் கல்யாணம் பண்ணிக்க போறான் "

" ஹே வாவ் ... சுப்ரியா தானே ? எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ? ஏண்டி இவ்வளோ அசால்ட்டா சொல்ற .. உடனே கெளம்ப வேண்டியதுதானே... அண்ணாவுக்கு ஹெல்ப் ஆ  இருக்கும் ல "

" ஹே நில்லு நில்லு .. நீ நிதானமா இல்ல ..உன் காலு தரையில படல .. முதல்ல நில்லு அப்பறம் என்னை கொல்லு .... ஐ மீன் உன் அட்வைஸ் ஆ சொல்லு " என்று அஞ்சான் சூர்யா போல தோரணையுடன் சொன்ன நித்யாவை பார்த்து முறைத்தாள் நித்யா.

" சரி நீ ஏன் இதை இவ்வளவு சாதாரணமா சொல்லுறே ? கல்யாண வேலை எல்லாம் இருக்கும் ல ? "

" இப்போதைக்கு இல்லடி "

" என்ன சொல்லுற நித்து "

" ப்ச்ச்ச் சுப்ரி வீடுல அவங்க காதலை ஏற்கல... அதுக்குன்னு ஹவுஸ் அர்ரெஸ்ட் உம் பண்ணல ...அவங்க அப்பா அம்மா மனசு இதுக்கு மேல மாறும்னு தோணல ..அதுனால முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சுப்ரி ஆகாஷ் கிட்ட பேசி இருக்காங்க நம்ம அம்மா  தான் இப்போதைக்கு  சிம்பலா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டு அதுக்கு அப்பறம் பொறுமையா ரிசப்ஷன்  வெச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க .. "

"  ஹ்ம்ம் பட் சுப்ரியா பேரன்ட்ஸ் பாவம் டீ "

" லூசா நீ .? சுப்ரியாவின் அப்பா, ஆகாஷ் அண்ணாவின் காலேஜ் லெக்சரர். எப்பவோ காலேஜ்ல நடந்த பிரச்சனையில ஆகாஷ் மேல அவருக்கு ஒரு நெகடிவ் அபிப்பிராயம் வந்துடுச்சு .. அதை மனசுல வெச்சுகிட்டு கல்யாணத்துக்கு தடை போடுறாரு.. அவர் ஒரு லெக்சரர் .. காலேஜ் லைப் எப்படி பட்டதுன்னு தெரிஞ்சவர் தானே .. இதெல்லாம் ஒரு ரீசன்னு அவர் இப்படி பண்ணலாமா ? அவங்க அம்மா என்னடான்னா, பார்க்க அமைதி மாதிரி  இருந்துட்டு நீ கூட லோவ பண்ணுறியான்னு  ஏமாற்றத்துல கோபபட்டு வார்த்தைய விடுறாங்க ... பாவம் சுப்ரி தான் ... "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.