(Reading time: 38 - 75 minutes)

 

" ருந்தாலும் அவங்க பெத்த பொண்ணு தானே சுப்ரி ..அவங்க மனசு  கஷ்டப்படுமே.. "

" இந்த விஷயத்துல சரி  தப்புன்னு  எதுவும் இல்ல மீரா ... சுப்ரி அவங்க அம்மா அப்பா கிட்ட பேசியாச்சு .. அவங்களே ஒதுக்கி வெச்சா இவ என்ன பண்ண முடியும் ? மனசுல ஆகாஷை வெச்சுகிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டுறது மட்டும் சரியா ? "

" ம்ம்ம்ம் கஷ்டம்தான்"

" கஷ்டம் இல்ல .. கொடுமை .. பொண்ணுங்களுக்கு மட்டும் இப்படி  ஒரு நிலை "

" நித்யா ?? "

" ஆமா மீரா... எப்பவுமே மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி தான் பொண்ணுங்களும் ... ஒரு பொண்ணு காதலை ஏத்துக்கலேன்னா, கல்நெஞ்ச காரி , சீன் போடுறான்னு சொல்வாங்க .. அதுவே ஏத்துகிட்டா வீட்டுல பிரச்சனை வரும் .. பேரன்ட்ஸ் ஒன்னு செத்துடுவேன்னு மிரட்டுவாங்க, அடிப்பாங்க  அப்படி  இல்லன்னா  என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்குனு பாச வலை போடுவாங்க .. அடியை கூட வாங்கிரலாம் .. பட் அவங்க பாசத்தை மீற முடியுமா ?அதன் விளைவு ? காதலை தியாகம் பண்ணனும் .. அப்போதும்  சமுதாயம் நம்மளை என்ன சொல்லும்?  ... நம்ம காதலே பொய், கலட்டி விட தான் பழகினோம், சுயநலமான பெண்கள்னு சொல்லு. .. சரி மத்தவங்க என்ன சொன்னா நமக்கென்னனு நாம்a விரும்பியவன் முன்னாடி போயி நின்ன அவனோ " இதெலாம் முன்னாடியே தெரியாத உனக்கு ? தெரிஞ்சு தானே லவ் பண்ணேன் நு ? "  வக்கனையா கேள்வி கேட்பான்.. நீயே சொல்லு எந்த பையன் ,' சாரிங்க எங்க வீடுல லவ் மேரேஜ் கு ஒத்துக்க மாட்டங்க என்னை லவ் பணந்திங்கன்னு சொன்னா' உடனே ' சாரி சிஸ்டர் ' நு ஒதுங்கி போறான் ? துரத்தி துரத்தி லவ் பண்ணி நம்மளையும் சம்மதிக்க வைப்பாங்க ... ஆனா  எதோ ஒரு  சூழ்நிலையில பிரிவு  வந்தா எல்லாத்தையும் நம்ம தலையில இறக்கி வெச்சிடுவாங்க "

"...."

" ஒரு ஆணுடைய காதல் தோல்வியை வெளிப்படுத்த, தாடி வளர்ப்பான், தண்ணி அடிப்பான் , கோபத்தை எல்லாருகிட்டேயும் காட்டுவான் ...அவனுக்கு எந்த தடையும்  இல்ல ... ஆனா பெண் ? பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ விதிக்கபட்ட வாழ்கையை பல்லை கடிச்சுகிட்டு வாழனும் .. ஆனா அதை கூட , என்னம்மோ நாம விரும்பி ஏத்துகிட்ட வாழ்க்கை மாதிரி தப்பதான் பேசுவாங்க "

முகம் சிவக்க பேசிய தோழியை, கேள்வியாய் பார்த்தாள் மீரா... எப்போதுமே குறும்பு தனத்தோடு  இருக்கும் நித்யாவுக்குள்ள இப்படி  ஒரு  ஆதங்கம் இருக்கா ?

அவள் அமைதியாய் யோசிக்கும்போதே நித்யா இயல்பாய் மாறிவிட்டாள்..உடனே,

" என்னடி என்னை லீவ் போட  வைக்கதன்னு சொல்லிட்டு நீயே கதை கேட்டுகிட்டு நிற்குற ... லீவ் சொல்லிடவா ராமசாமியின் பையன் கிட்ட? " என்று கண் சிமிட்டினாள். கடிகாரத்தை பார்த்த மீரா,

" அச்சோ ... போச்சு போச்சு ... மணியாச்சு .. போடி நான் கெளம்புறேன் " என்று ஆபீசிற்கு விரைந்தாள்..அவள் சென்றவுடன்.

" லோ "

" ஹலோ அண்ணா"

" நித்து சொல்லுடா "

" நீலாம்பரி கெளம்பியாச்சு... நம்ம ராமசாமியின் மகன்கிட்ட பேசியாச்சா? சொதப்பிட போறான் "

" ஹேய் அதெல்லாம் பேசிட்டேன் .. அவன் சொதப்ப மாட்டான் .. "

" அதானே உங்க நண்பனை நீங்க விட்டு கொடுப்பிங்களா ? "

" ஹீ ஹீ ... இரு இரு ... உன்னை அவனோடு சேர்த்து வைக்கிறேன் "

" அண்ணா நோ மீன்ஸ் நோ ...நான் கிச்சன்ல போயி நம்ம பெரியம்மா என்ன சமைக்கிராங்கன்னு பார்க்குறேன் .. நீங்க கொஞ்சமாச்சும் ஆபீஸ் வேலைய பாருங்க ... எப்படியும் இன்று மதியத்துக்கு அப்பறம் உங்களுக்கு உங்க காதல் வேலைய பார்க்கவே டைம் போதாது

 என்றாள்....

 " வாலு வாலு .... அர்ஜுன் சொன்ன மாதிரி நீ குரங்குதான் "

" அர்ஜுனா ... ஓஹோ... அந்த பிரின்ஸ் இந்த கதையை உங்ககிட்ட சொல்லிடுச்சா ? "

"அர்ஜுன் என்கிட்ட எதையும் மறைக்க மாட்டான் .. அதென்ன பிரின்ஸ் ? "

" அதுவா ... அர்ஜுனன் , மகாபாரதத்துல இளவரசன்  தானே ..அதைதான் நான் பிரின்ஸ் நு சொன்னேன் "

" ஷபா...போதும்டா.... ஆளைவிடு .... நான் போனை வைக்கிறேன் " என்று சிரித்தபடி  போனை வைத்தான் கிருஷ்ணன் .

" குட் மோர்னிங் ஸ்வப்னா "

" ஹாய் மீரா வெரி குட் மோர்னிங் ..  உன் ஸ்ப்ரைன் எப்படி இருக்கு ? "

" இப்போ நல்ல போச்சு .... எம் டீ ???"

" உள்ளதான் இருக்கார் .. வந்ததுமே அவரை  வந்து பார்க்க சொன்னார்"

" ஓ ..ஓகே தேங்க்ஸ் " என்றவள் " போச்சு இன்னைக்கு என்ன வேலை தர போறானோ " என்று மனதிற்குள் நினைத்தாள்.

" மே ஐ  காம் இன் சார் "

" எஸ் "

" குட் மோர்னிங்  சார் "

" மோர்னிங்,... எப்படி இருக்கீங்க மீரா ? "

" பைன் .. தேங்க்ஸ் சார் ..."

" மீரா ஒரு விஷயம் "

( போச்சுடா ஆரம்பிச்சாச்சு )

" ம்ம்ம் சொல்லுங்க சார் "

" இனி லீவ் நா நீங்களே சொல்லுங்க .. இப்படி  தெரிஞ்சவங்ககிட்ட  சொல்லி பெர்மிஷன் வாங்கதிங்க "

( நெனச்சேன் .. எல்லாம் இந்த நித்யானால வந்தது )

" சாரி சார் இனி இப்படி நடக்காது "

" உங்களுக்கு ஒரு குட் நியூஸ் "

( குட் நியூஸ் ஆ? எனக்கா ? சான்ஸ் ஏ இல்ல... உனக்காகத்தான் இருக்கும் )

" என்னன்னு கேக்க மாட்டிங்களா ? "

(கேட்கலன்னா விட்ருவியா ? )

" நீ சொல்லுவிங்கன்னு நெனச்சேன் .. சொல்லுங்க சார் "

" உங்களுக்கு ஒரு புது ப்ராஜெக்ட் தர போறேன் "

( நான் சொல்லல ? இது உனக்குத்தானே குட் நியூஸ் )

" என்ன ப்ராஜெக்ட் நு கேளுங்க மீரா ? "

( ஷாபா... கேட்கலைன்ன விடேன் பா )

" என்ன ப்ராஜெக்ட்  சார் " என்று பவ்யமாய் கேட்டவளை பார்க்க சிரிப்பாக  இருந்தாலும் அதை மறைத்து  கொண்டான் சஞ்சய்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.