(Reading time: 38 - 75 minutes)

 

" பாருடா இது வேறயா ? சரி இந்த டீலிங் ஐ நான் நோட் பண்ணிக்கிறேன் .,... இப்போ ஜானு விஷயத்துக்கு வா "

: நீ சொன்னபடி பார்த்தா இந்த விசயம் கேட்ட ஜானகி கோபபட்டுருக்கணும் அல்லது ரகுவை அவாய்ட் பண்ணிருக்கணும் ...பட் அவ ரெண்டுமே பண்ணலையே "

" ஆமால... இப்போ என்ன பண்ணலாம் ? "

" ஒன்னும் பண்ண வேணாம் .. விட்டு  பிடிப்போம் ... இந்த விஷயம் ரகுவுக்கும் சொல்ல வேணாம் "

" ம்ம் சரி "

" என்னடி தலைய தலையா ஆட்டுற ? எப்பவும் தாம் தூம்னு சண்டை போடுவியே , அது மிஸ்ஸிங்  ஆ   இருக்கே "

" ஓஹோ என்னை பார்த்த உங்களுக்கு சண்டை காரி மாதிரி இருக்கா ? " என்று அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க கிருஷ்ணனின் பார்வையும் அங்குதான் போக

" கல்யாணத்துக்கு முன்னாடி புடவை கட்டாதேடி " என்றான். அவன் பார்வையில் முகம் சிவந்தவள் ....

" போதும் போதும் வீடுக்கு போகலாம் " என்று வெட்கத்தில் சிணுங்கிய படி அவனின்  காரை  நோக்கி ஓடினான் ...

தே நேரம்,

சுபத்ராவை கோவிலுக்கு வரும்படி சொல்லி இருந்தான் அர்ஜுனன் ... உள்ளே வந்தவள் அவனை தேட அவளின் வாய் பொத்தி மறைவான  தூணிற்கு பின்னாடி இழுத்தான்....

" அர்ஜுன் இதென்ன விளையாட்டு "

" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அங்கே பார் " என்று அவன் காட்டிய திசையில் கிருஷ்ணனின் தோளில் மீரா சாய்ந்திருப்பதை கண்டாள் சுபத்ரா.

" ஹே ... அர்ஜுன் ... அது கிருஷ்ணா அண்ணா ... மீரா " என்றவளுக்கு மகிழ்ச்சியில் வார்த்தையே வரவில்லை . அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் ரசித்து மனதிற்கு சேமித்து வைத்தான் அர்ஜுன்.

" இதுக்குத்தான் உன்னை கோவிலுக்கு  கூப்பிடேன் " என்று காதலுடன் சொன்னான் ...

" ஆமா நீங்க எப்படி? ???"

" உன்னை தூரத்துல இருந்து பார்க்கலாம்னு வந்தேன் ... வெளிய கிருஷ்ணாவின் கார் இருந்துச்சு "

" ஹ்ம்ம்ம்ம்ம் எனக்காகவா அர்ஜுன் ? "

" ஆமா உனக்காகத்தான் இந்த அர்ஜுன் "

" அது எனக்கு தெரியும் ... நான் சந்தோஷப்படுவேன்னு தான் என்னை இங்க  வர சொன்னிங்களா ? "

" இதுக்கு பதில் உனக்கே தெரியுமே இளவரசி " என்றவள் காற்றுக்கு போக்கு காட்டிகொண்டிருந்த கற்றை கூந்தலை ஒதுக்கி விட்டு பெருமூச்சு விட்டான்.

" என்னாச்சு அர்ஜுன் "

" இவ்வளோ அழகா இருந்து தொலைச்சா நான் தொலைஞ்சு போகாம என்னாவேண்டி ? சீக்கிரமா படிச்சு முடிடா " என்று கெஞ்சலுடன் சொன்னான்...

" அட போங்க பா .. என்னமோ நான் மட்டும் உங்களை மிஸ் பண்ணாத மாதிரி சொல்றிங்க ? நிம்மதியா ஒரு பாட்டு கூட கேட்க முடியல தெரியுமா ? "

" ஏனாம் ? "

" ஆமா எதை கேட்டாலும் நீங்க பாடுற மாதிரி இருக்கு .. எதை பார்த்தாலும் நம்ம ஞாபகம்தான் வருது ... எப்போடா கல்யாணம் பண்ணிப்போம்னு இருக்கு " என்றவளின் குரலில் தொனித்த ஏக்கமே அவனின் மோகத்திற்கு திருப்தியை தந்தது. " ச்ச கொஞ்ச நேரத்துல படிக்கிற பொண்ணு மனசை கலைக்கிரோமே " என்று நினைத்தவன்

" அதெல்லாம் சரி ஆகிடும் .. உனக்கு டே எப்படி போச்சு ? புதுசா ப்ராஜெக்ட் செய்யணும்னு சொன்னியே , அது எந்த லெவல் ல இருக்கு ? " என்று பேச்சை மாற்றினான ...

தனக்காகத்தான் அவன் பேச்சை மாற்றுகிறான் என்று உணர்ந்தவள் மனதிற்குள் உருகி போனாள்... இந்த காதலும்தான் எவ்வளவு ஷக்தி வாய்ந்தது? இதயத்தை உருக்கும் திறன் படைத்தது காதலோ? சில நாட்களுக்கு முன்பு

" உனக்கு  காதல்  வர போகுது " என்று யாராவது ஆருடம் சொல்லி இருந்தால் நிச்சயம் மறுத்திருப்பாள் சுபத்ரா ..அவளை பொருத்தவரை உண்மை காதல் என்பது , கற்பனைகளின் சாம்ப்ராஜத்தின் உச்சம் ... ஆனா இன்று ? மனம் எங்கும் அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் !!!

ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ

நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட

தேகமெங்கும்  கண்கள் தோன்றாதோ

நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட

இருதயம் முறைப்படி துடிக்கவில்லை

இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை

நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது

நீ தந்தது

அவள் முன் கை தட்டி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த அர்ஜுனன் வாய் விட்டு பாடினான் .

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போலே ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே

வந்து சேர்ந்ததா

" அர்ஜுன் நான் இந்த பாட்டு மனசுக்குள்ள பாடினது உங்களுக்கு எப்படி தெரியும் ? "

" ஹ்ம்ம்? நான் உன் மனசுக்குள்ள தானே இருக்கேன்  அதான் "

" ப்ச்ச்ச் உண்மைய சொல்லுங்க "

" என் மக்கு இளவரசி நீங்கதான் மைண்ட் வாய்ஸ் நு நெனச்சு சத்தமா பாடுநிங்க " என்று சொல்லி அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.... வெட்கத்தில் சிணுங்கியவள், தன்னவனை பார்வையால் அணைத்து கொண்டாள்.

கிருஷ்ணனின் காரில்,

" ஏன் வண்டியை நிறுத்திட்டிங்க கிருஷ்ணா ? "

" இருடா வரேன் "  என்று அவளை அமரவைத்து விட்டு இறங்கி சென்றான் ... அவன் வரும்வரை காத்திருக்க வேண்டுமே, அதனால் வானொலியை உயிர்பித்தவள் அனுராதா ஸ்ரீராமின் குரலில் ஒலித்த அந்த பாடலை கேட்டு புன்னகையோடு பாடினாள்.... பாடலில் மூழ்கியவள் அவன் காரில் அமர்ந்ததை கூட பார்க்கவில்லை.

நான் தூங்கி நாளாச்சு

இராவெல்லாம் பாழாச்சு

கொள்ளாமல் என்னை கொன்று வதைக்கிறதே

சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே

கண் எல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே விரிகிறதே

தனிமையில் இருக்கையில் எரிகிறதே

பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

என்று பாடியவள், பாடல் நின்றதும் சட்டென கண் விழித்தாள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.