(Reading time: 38 - 75 minutes)

 

ருவரும் அருகில் ஒரு மண்பத்தில் அமர, கிருஷ்ணனே பேச்சை ஆரம்பித்தான்.

" என்ன மேடம் , கோவில்ல நின்னு குங்குமம் வெச்சுருக்கேன்.. அட்லீஸ்ட் ரெண்டு அடியாச்சும் கிடைக்கும்னு பார்த்தால் இப்படி ஒட்டி உரசி உட்கார்ந்து இருக்கிங்களே " என்று கண் சிமிட்டினான். அக்கம் பக்கம்  அடிகடி பார்த்து அவளை இடித்தபடி அமர்ந்தது அவனேதான். அவளாக நகர்ந்தாலும், அவன் மேலும் அவளருகில் வர மற்றவர்கள் பார்வையில் பட்டுவிடுவோமே  என்று எண்ணி நகரமலே அமர்ந்தாள் மீரா ... இப்போது அவன் சொன்னதில் ரோஷம் வர,

" யாரு நானு ? உங்களை உரசிகிட்டு உட்காருறேனா? நெனப்புதான் "

" ஆமா அப்பவுமே உன் நெனப்புதான் "

" அச்சோ இது கோவில் .... "

" இருக்கட்டும் .... என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறேன் "

" என்னது பொண்டாட்டியா ? "

" ஆமா ... அதான் குங்குமமும் வெச்சு உன் .... " என்று சொல்லாமல் முடித்து அவளை கழுத்தை பார்க்க, " இவன் என்ன ராஜா ராணி ஸ்டைல் ல கண்ணை மூடிருக்கும்போதே தாலி கட்டிட்டானா? " என்று அதிர்ந்து பார்த்தாள் மீரா ....

" ஹா ஹா சோ கியூட் ... கவலை வேணாம் செல்லம்... தாலி எல்லாம் இன்னும் கட்டலே ... குங்கமும் வெச்சு உன் மனசுலயும் முழுசா கணவன் ஆகிட்டேநேன்னு சொல்ல வந்தேன் "

" திருட்டுத்தனம் திருட்டுத்தனம் "

" இருக்கட்டும்"

" நீங்க என்ன சின்ன குழந்தையா ? இப்படி சேஷ்டை பண்ணுரிங்க ? "

" நீ காலம்பூரா எனக்கு தாய் ஸ்தானத்துல  இருக்க போறியே அப்போ நான்தானே உன் பிள்ளை ? " என்றவன் அவன் கைகளுக்குள் அவளது மெல்லிய கரத்தை சிறைபிடித்தான்.

தேக்கி வைத்த அன்பை எல்லாம் அவன் விழிகளால்  அவளுடன் உறவாட, அவன்  தோளில் சாய்ந்தாள் மீரா ... எத்தனை வினாடிகளோ , நிமிடங்களோ, ஆலயமணி ஓசை கேட்டு இருவரும் அந்த மோனநிலையில் இருந்து விடுபட்டனர் ...

" என்னை மன்னிச்சிருங்க கிருஷ்ணா "

" ஷ்ஷ்ஷ்ஷ் என்ன கண்ணம்மா இது ? இதுக்கு மேலயும் நீ அழனுமா ? "

" உங்களை எத்தனை தடவை அழ வெச்சுருப்பேன் "

" ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம் இல்லவே இல்லடா "

" பொய் "

" மெய் ..... நீ ஒரு குழந்தை மீரா... நீ சொன்ன எந்த வார்த்தையும் எந்த செயலுமே என்னை பாதிக்கலை... அன்னைக்கு நீ ஜானகியை என்னோடு சேர்த்து பேசும்போது சித்தப்பா அங்க வந்ததை பார்த்துதான் நான் வேணும்னே கோபமா பேசிட்டு போனேன் "

" கிருஷ்ணா ??? "

" ஆமாடா.... நம்ம குடும்பம் எல்லாத்தையும் யேத்துபாங்க இரு ஒரு பிரச்சனையே இல்லேன்னு நான் சொல்றத்துகும் நீயே புரிஞ்சுக்கிரதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கண்ணம்மா"

" ..."

" அதுனாலதான் அப்படி பண்ணினேன்... இன்னைக்கு அம்மாவும் நம்ம விஷயத்துக்கு சம்மதம்னு சொன்னதும்  எனக்கு எவ்வளோ சந்தோசம் தெரியுமா ?? "

" ம்ம்ம்ம் என்னை சுத்தி இருந்த சந்தோஷத்தை நான்தான் புரிஞ்சுக்காம நடந்துகிட்டேன் கிருஷ்ணா "

" அதெல்லாம் இனி யோசிக்க வேண்டாம் டா,... கடவுள் மனுஷங்க கிட்ட கொடுத்த  அமுத சுரபியே அன்புதான் ... அன்பு மட்டும்தான் கொடுக்க கொடுக்க பெருகிகிட்டே இருக்கும் டா ...."

"உண்மைதான் கிருஷ்ணா.... இனி அதை கொடுக்குறது மட்டும்தான் நம்ம வேலையா இருக்கணும் "

" அப்போ வா காருக்கு போலாம் "

" எதுக்கு ? "

"  இல்ல  நீதான் ஏதோ கொடுக்க  போறேன்னு சொன்னியே "

" ச்சு  போங்க .... " என்று அழகாய் வெட்கபட்டவளை அள்ளி அணைக்க நினைத்தவன் ,

" இது சரி இல்ல வா கிளம்பலாம்" என்றான்.

" இருங்க இருங்க என்ன அவசரம் .. நாம நிறைய பேசணும் "

" இப்போவே பேசியாகனுமா? "

" எஸ்.... சரி சொல்லுங்க செல்லம் " என்றவள் அவள் விரல்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

" எனக்கு மனசே நிறைஞ்சு போச்சு கிருஷ்ணன் .... இன்னைக்கு என்னல்லாம் நடந்துச்சு தெரியுமா ? " என்றவள் நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னான் ... மீரா புவனாவை  பார்த்தால் மாற்றம் ஏற்படலாம் என்று கிருஷ்ணன் நம்பினான்  தான் ... எனினும் அவள் மனம் முழுதாய் மாறும் என்பதும், தன் தாயார் அவளிடம் பேசியதையும் அவன் எதிர்பார்க்க வில்லைதான்.... இத்தனை நாட்கள் கண்ணீரால் செய்த யாகத்திற்கு இறைவன் தந்த வரங்கள் தான் இவை என்று எண்ணிகொண்டவன் , இறைவனுக்கு நன்றி சொன்னான்...

" அப்போ இனிமே நான் ஜன்னல்  வழியா பாடாமல் உன் ரூம்லேயே வந்து பாடலாம் தானே கண்ணம்மா ? " என்று கண்ணடித்தான் கிருஷ்ணன் ...

" அதுக்கு இன்னும் நேரம் இருக்கு சார் ... " என்றவள் பொறுப்பாய் பேச ஆரம்பித்தாள்.

" நமக்கு நிறைய கடமைகள் இருக்கு கிருஷ்ணா... சுபத்ரா அர்ஜுன் அண்ணா , ஜானகி - ரகுராம் பத்தியும் நல்ல முடிவெடுத்து பெரியவங்க கிட்ட பேசணும் ... "

" அர்ஜுன் - சுபி நோ ப்ரொப்லெம் .... ரகுதான் "

" ஏன் அவருக்கு என்ன ? " என்று கேட்டவளிடம் ரகுராமின் காதலை பற்றி அவன் சொல்ல,

" என்னடா இப்படி பார்குற ? " என்றான்.

" தப்பு நடந்து போச்சு கண்ணா " என்றாள்..... நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் தன்னை ' கண்ணா ' என்று அழைத்ததில் உச்சி குளிர்ந்தவன்

" அய்யயோ நான் இன்னும் உன் பக்கமே வரலையே " என்று இருபோருளில் பேசினான் ....

" ஈஸ்வரா ..... என்ன கிருஷ்ணா நீங்க ... இதெல்லாம் முன்னாடியே சொல்லறது இல்லையா ? " என்று பொரிந்து தள்ளியவள், தான் ஜானகியிடம் போனில் பேசியதை சொன்னாள்... ( மீரா மேடம், அவரு சொல்லிருபாறு பட் நீங்க அவர்  பேச்சை எல்லாம் கேட்குற நிலையிலா இருந்திங்க ? நீங்களே இப்படி போங்கு ஆட்டம் விளையாடிட்டு எங்க கிருஷ்ணாவை திட்டுனிங்க  அப்பறம் அவரின்  ரசிகைகள்  கோபத்தில் கொந்தளிப்பாங்க)

" இப்போ என்ன பண்றது ?" என்று அவள் விழிக்க, யோசனையுடன் கிருஷ்ணன்,

" இது எப்போ நடந்தது ? " என்றான்

" சனிக்கிழமை "

" ஹா ஹா ஹா  "

" ஏன் சிரிக்கிறிங்க ..? எனக்கு பயம்மா இருக்கு ? "

" என் சிரிப்பு அவ்வளோ கொடுமையா  இருக்கா ? "

" அச்சோ நான் அப்படியா சொன்னேன் ? உங்க சிரிப்பை போயி கொடுமைன்னு சொல்ல முடியுமா ? என்னை விட்டா நான் விடிய விடிய பார்த்துகிட்டே இருப்பேனே " என்று செல்லம் கொஞ்சினாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.