(Reading time: 38 - 76 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 12 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

ஜானகியிடம் பேசி முடித்த மீரா, நித்யா அங்கு வர  அவளிடம் பேசிக்கொண்டே ஜானகி அழைத்ததை முற்றிலுமாய் மறந்துபோனாள். ( ஞாபகமறதி என்பது எப்பவுமே தப்பான விஷயம் இல்ல ... நம்ம ரகு விஷயத்துல இப்போதைக்கு இந்த  விஷயம் அவருக்கு எட்டாமல் இருக்குறது நல்லது .... ஏன்னா ? அதை நம்ம ஜானகியின் முடிவு தெரியும்போது உங்களுக்கே புரியும்... இப்போ கதைக்கு வாங்க )

மீராவின் வார்த்தைகளை கேட்ட ஜானகிக்கு ஏன் என்று புரியாமலே அழுதாள். தன் செல்போனில்  இருந்த ஸ்ரீராமின் புகைப்படத்தை திறந்தவள், அவனிடம் மானசீகமாய் பேசுவதற்குள் புயலென அவளது அறையில் நுழைந்தான் அர்ஜுனன்.

" ஜானு " ன்று துள்ளலுடன் அழைத்தான் அர்ஜுன்

" ம்ம்ம் ? "

" உனக்கொரு  சர்ப்ரைஸ் "

" ... "

" என்னன்னு கேக்க மாட்டியா ? "

"...."

" நாம சுபீ வீட்டுக்கு போறோமே ... இந்த வீகெண்ட் அவங்க வீட்டுலதான் டைம் ஸ்பென்ட் பண்ண போறோம் ..அபி அத்தை , சிவகாமி அத்தை போன் பண்ணி  கூப்பிட்டதா இப்போதான் அம்மா சொன்னாங்க "

" ஓ .....ம்ம்ம்ம் "

அப்போதுதான் அவள் எங்கோ வெறித்துகொண்டிருப்பதை உணர்ந்தான் அர்ஜுனன். எதையுமே பார்த்த உடனே புரிந்து கொள்ளும் அர்ஜுனன், ஜானுவின் சோர்ந்த முகமும், அவள் கைகளில் வைத்திருந்த செல்போனில் இருந்த ஸ்ரீராமின் படமும், ஏதோ ஒன்று சரி இல்லை என்று அவனுக்கு உணர்த்தியது.

" ஜானகி என்னாச்சு உனக்கு ? "

" ஒ ...ஒ ... ஒன்னுமில்லையே மாமா "

" பொய் ..... என் முகத்தை பார்த்து சொல்லு ..! "

" ப்ச்ச்ச்... சொன்னா கேளுங்க மாமா "

" சரி என்கிட்ட ஷேர் பண்ண விருப்பம் இல்லன்னா பரவாயில்ல "

" அப்படிலாம் இல்ல மாமா ... நான் கொஞ்சம் தனியா இருக்கணும் "

" ம்ம்ம்ம் சரி .. நீ ரெஸ்ட் எடு.. நான் நாம இன்னொருநாளு வர்றதா சொல்லிகிறேன் "

" அதெல்லாம் வேணாம் மாமா .. நாம மதியம் அங்க போலாம் ... தூங்கி எழுந்திரிச்சா சரி ஆயிடும் எனக்கு "

" சரி உன் இஸ்டம் ... " என்றபடி  அவன் வாசல் வரை போக,

" மாமா"

" என்னடா..... "

" ஒரு வேளை  சுபா உங்க லைப் ல இல்லாம போயிருந்து, உங்களை ஆரம்பத்தில் இருந்தே ஒரு பொண்ணு ஆழமாக விரும்பினாள் நு தெரிய வந்தா என்ன பண்ணுவிங்க ? "

அவளின் கேள்வியில் ஆச்சர்யமடைந்த அர்ஜுனன் நொடிபொழுதில் அவள் குழப்பத்தின் காரணத்தை  யூகித்து விட்டான் . 

" ரகுவின்   காதல் விஷயத்தை புரிந்து கொண்டுதான் இவள் இப்படி கேக்குறா.. ஆனா ஜானகிக்கு எப்படி தெரியும்? அவளே கண்டு பிடிச்சிட்டாளா? " என்றவன் அவன் சிந்திக்கும்போதே

" மாமா ..பதில் சொல்லுங்க ப்ளீஸ் "

( நிச்சயமாய் சுபியை தவிர யாரையும் அவனால் ஏற்று கொள்ள முடியாது .. ஆனால் இதை அவன் சொன்னா, நிச்சயம் ஜானகி அந்த முடிவை மனசுல வெச்சுகிட்டு ரகுவை தவிர்த்திடுவா ... அதுனால ஜானகி என்ன செய்யணும்னு  அர்ஜுன் எதிர்பார்த்தானோ அதையே சொன்னான் " மெல்ல அவளருகில் வந்தவன் ஒரு பேச்சுமூச்சு விட்ட பிறகு, அவள் தோள் மீது கை போட்டு பேச ஆரம்பித்தான்.

" ஜானகி , உனக்கே தெரியும் சுபி என் உயிர் .. அவ இடத்துல இன்னொரு பொண்ணை நெனச்சு பார்க்குறது நடக்காத காரியம் "

அவள் பதிலுக்கு ஏற்றவாறு மனிதில் ஜானகி பேசி கொண்டாள்.

( ஆமாம் மாமா ... என்னாலையும் ஸ்ரீராமை தவிர யாரையும் அப்படி நினைக்க முடியாது )

" ஆனா  நீ சொன்ன மாதிரி, ஆரம்பத்தில்  இருந்து ஒரு பெண் என்னை விரும்புறான்னா நான் கொஞ்சம் யோசிக்கணும் "

(ஏன் ? ) என்றவாறே அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான்.

" நல்ல யோசிச்சு பாரு ஜானு .. ஆரம்பத்தில் இருந்தே ஒரு பொண்ணு என்னை விரும்புறான்னா , ஆரம்பத்தில் இருந்தே அவ என்னை தொடர்ந்து வந்திருக்கா தானே அர்த்தம் ? காதலிக்கிறவங்களை, நாம நம்ம லைப் ஆ தான் நினைப்போம்.. லைப் ஆ தான் பார்ப்போம்...அப்படினா அந்த பொண்ணும் நான்தான் அவ வாழ்க்கைன்னு நெனசிருப்பா தானே ? "

( ஆமா ... ரகு கூட அன்னைக்கு சொன்னாரே, இந்த உலகமே என்னை விரும்புலேனாலும் பரவாயில்ல .. அவ விரும்பினா போதும்னு ... அப்போ ...அப்போ .... ரகுவும் என்னைத்தானே தன் உலகமா நெனைச்சிருக்கனும் ? "

" அதுமட்டுமில்ல ...நம்ம பெஸ்ட் பிரண்ட்ஸ் கூட வேற யாருகிட்டேயாவது கொஞ்சம் நெருங்கி பழகினாலே நமக்கு அவ்வளவு கோபம் வரும் , கஷ்டமா இருக்கும்.., வலிக்கும் .. அப்படி இருக்கும்போது  நாம மனசார விரும்புற பையனோ பொண்ணோ வேற ஒருத்தரை விரும்பினா எப்படி இருக்கும் ? அவங்களை இன்னொருதரோடு பார்க்குற ஷக்தி நமக்கு இருக்கா ? சுபி  என்னை முதல் தடவை பார்த்தப்போ போன் ல பேசினதை வெச்சு நீதான் என் வைப் நு நெனைச்சுகிட்டா... அவ முகத்துல நான் அப்போவே ஒரு ஏமாற்றத்தை கண்டுகிட்டேன் ... ரெண்டாவது முறை வீட்டுக்கு கூப்பிட்டேனேனே  அப்போ உன்னை பார்த்த  முதல் தடவை அவ முகம் ஞாபகம் இருக்கா ? ' எனக்கு சொந்தமானது உன் கிட்ட இருக்கே நீ அதிர்ஷ்டசாலி ' அப்படிங்குற மாதிரி பார்த்தா... நீ காபி கலக்குறேன்னு போனபோது  நான் , நீ என் வைப் இல்லன்னு சொன்ன பிறகுதான் அவ பெருமூச்சு விட்டு, ஒரு நிறைஞ்ச பார்வை பார்த்தா .... என் லைப் லாங் அதை மறக்க மாட்டேன் ... என்னை ரெண்டு தடவை மட்டும் பார்த்த பொண்ணு , என்மேல எவ்வளோ அன்பு வெச்சிருந்தா அப்படி ரியாக்ட் பண்ணி இருப்பா ?  அப்படி இருக்கும்போது ரொம்ப நாளாக காதலிக்கிற ஒரு பெண்ணோட  உணர்வை என்னால  புரிஞ்சுக்க முடியும் "

( ரகு சொன்ன அந்த பொண்ணுதான் நான் என்றால் ??? அப்போ ஸ்ரீராமை நான் பார்த்தபோதே ரகுவுக்கு என்மேல காதல்னு தானே அர்த்தம் ? அப்போ ரகுவால அதை எப்படி தாங்கி இருக்க முடியும் ? எவ்வளோ கஷ்டப்பட்டுருப்பார்? இதென்ன சோதனை ? ) என்று நினைத்தவள், அர்ஜுனனிடம்,

" அப்படின்னா, நீங்க அந்த பெண்ணை ஏற்றுக்குவிங்களா மாமா ? அதெப்படி முடியும் அப்போ உங்க காதல் பொய்யுனு தானே அர்த்தம் ? "

ஒரு புன்னகையை சிந்தியவன் அவள் கேள்விக்கு பதில் தருவதுபோல அவளின் மன சஞ்சலத்தை குறைக்க உதவினான்  .

" ஜானகி காதல்னா என்ன? அன்புதானே ? அன்பு, இவருக்கு இவர் மேலதான் வரணும்னு ரூல்ஸ் இருக்கா ? நான் சுபியை லவ் பண்ணதும், சுபி என்னை லவ் பண்ணதும் தப்பு இல்லன்னா, என்னை ஒரு பொண்ணு விரும்புறது மட்டும் எப்படி தப்பாகும் ? "

( இதையே தானே அன்னைக்கு ரகுராமும் சொன்னார்.. ஒருத்தர் மேல ரெண்டு பேருக்கு காதல் வர்றது தப்பான்னு கேட்டாரே ? )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.