(Reading time: 38 - 76 minutes)

 

" ரி என்ன கேம் ? "  என கிருஷ்ணா கேட்க .

" அண்ணா பாட்டுக்கு பாட்டு விளையாடலாம் .. நாங்க பாடி முடிக்கிற கடைசி வார்த்தையின் முதல் எழுத்தில் நீங்க பாடனும் " என சுபத்ரா சீனியர்சை பார்த்து சொன்னா..

" அய்யே மொக்க " என ரகு சொல்லி அவளிடம் இருந்து இரண்டடி வாங்கி கொண்டான் .

" சரி இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்குறதுக்காக , நாமெலாம் (ஜூனியர்ஸ் ) பழைய பாட்டு அதாவது 60ஸ்ட் - 80 ஸ்ட் பாட்டு பாடலாம் .. நம்ம சீனியர்ஸ் எல்லாரும் 90 ஸ்ட் - 2014 சொங்க்ஸ் பாடட்டும் " என்றான் அர்ஜுன்.

" அட என்ன மாமா.. பாவம் அவங்க எப்படி புது பாட்டு பாடுவாங்க ? " என ஜானகி கரிசனமாய் சொல்ல ,

" ஜானு .. யு டோன்ட் வொர்ரி டா..பெரியமாமா நான், உனக்காக பாடி உன் பேரை காப்பாத்துறேன்" என்று சூர்ய பிரகாஷ் சொல்ல ஜானகி சிரிப்புடன் தலை அசைத்து மனதிற்குள்,

(" உண்மைதான் ராம் .. என்னை சுத்தி பாசம் வைக்க நிறைய பேரு இருக்காங்க "  என்று பேசிகொண்டாள்...)

" ஓகே கேம் ஸ்டார்ட் "

முதலில் மீரா நீ ஆரம்பி என்றார் பானு.

கிருஷ்ணனை ஒரு  தரம் பார்த்தவள்

" கண்ணனை நினைக்காத நாள் இல்லையே

காதலில் துடிக்கத நாள் இல்லையே ...

உண்ணும்போதும் உறங்கும்போதும்

எண்ணம் முழுதும் கண்ணன்தானே "

" க ... சீனியர்ஸ் 'க' எழுத்துல புது பாட்டு பாடுங்க " - ரகு

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்

என் செல்ல கண்ணனே வா .......... 'வா ' ல பாடுங்க " - சிவகாமி

" வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையை

வாராயோ வெண்ணிலவே கேலியோ எங்கள் கதையை

அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான் " என்ற நமட்டு சிரிப்புடன் மீராவை பார்த்து கொண்டே பாடினான் கிருஷ்ணன் ..

" நான் ரொம்ப ரொம்ப ரொம்ப

நல்ல புள்ள ..ரொம்ப நல்ல புள்ளக்கெல்லாம்

நான் செல்ல புள்ள இல்ல "- சந்திரப்ரகாஷ்

" இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா ?

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ? " - தன் சூழ்நிலையை நினைத்து உருகி பாடினாள் ஜானகி

" முதல் முதலாக முதல் முதலாக

பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே " - பானு

" அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்ன வென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை "

- இது நம்ம அர்ஜுனே தான்

" கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி ..இதயமே தெரியுமா உனக்காகவே நானடி " - சந்திரப்ரகாஷ்

" நாளாம் நாளாம் திருநாளாம்

நங்கைக்கும் நம்பிக்கும்  மணநாளாம் " - நித்யா

" மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல

மழை நிலவே மழை நிலவே

விடியல் எல்லாம் உன் உலா "  - அபிராமி

அர்ஜுனனை பார்வையால் அழைத்த சுபத்ரா பாடினாள்

" உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி

வரும் கனவுகள் பலகோடி"

" பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் " - பானு

" சொல்லத்தான் நினைக்கிறேன்...

உள்ளத்தால் தவிக்கிறேன் ...

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்" - ரகு

இப்படியாய் அனைவரும் பாட..அன்றைய இரவு இனிமையாய் கரைந்தது .. அர்ஜுனனின் திட்டத்தின் படி, அர்ஜுனனின் காரில், அர்ஜுன், பானு, சுபத்ரா, நித்யா, மீரா, கிருஷ்ணா ஏறிக்கொள்ள , ரகு ஜானகியை அவனது காரில் அர்ஜுனனின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

குவின் காரில்

" இன்னைக்கு ரொம்பே சந்தோஷமா இருந்துச்சு ரகு "

" ம்ம்ம் எனக்கும்தான் மா "

"  அத்தை மாமா எல்லாம் புது பாட்டு இவ்வளோ நல்லா பாடுவாங்கன்னு  நான் நினைக்கவே இல்ல.... அதுவும் பானு அத்தை இப்படியெல்லாம்  பாடி நான் வீட்டுல கூட கேட்டது இல்ல "

" சூப்பர் ஆ இருந்துச்சு ல .. "

 என்றபோதே ரகுராமின் செல்போன் ஒலித்தது. திரையில் " ரவிராஜ்" என்று இருக்க, சுஜாதாவிற்கு ஏதும் உதவி தேவையோ என்று பதறியவன் , காரை நிறுத்திவிட்டு போனை எடுத்தான்.

" ஹாய் ரகு "

" ஹாய் ரவி "

" ஆமா போன் பண்ணாதான்  இந்த ஹாய் ரவிலாம் ... என் வைப் உனக்கு பி. ஏ வா இருந்தும்கூட என் ஞாபகம் உனக்கு இல்லையேப்பா " ( நம்ம ரவியும் ரகுவும் பேசுறதை கேட்டு மூக்கு மேல விரலை வெச்சவங்க எல்லாரும் விரலை எடுங்க .. காமெடியா இருக்கு .. ஹா ஹா .... பல கலவரமான நிலவரங்களை நம்ம ரகு சமாதனம் படுத்துபோதே நம்ம ரகுவும் ரவியும் நல்ல பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க.... )

"அப்படிலாம் இல்ல ..."

" அப்படித்தான் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.