(Reading time: 38 - 76 minutes)

 

" ன் காதலி நல்ல ரெஸ்ட் எடுக்கனும்னு என் காதலியை நான் பார்க்கம இருக்க வழி பண்ணுறியே ! இதெல்லாம் அநியாயம் .. போடா நாளைக்கு என் பொண்ணை நான் உன் பையனுக்கு  தர மாட்டேன் ..கிருஷ்ணா பையனுக்குதான் தருவேன் .. "

" அடபாவி இன்னும் உனக்கே கல்யாணம் ஆகலே அதுக்குள்ள பசங்களை பத்தி கனவா ? "

" மச்சான் இது அர்ஜுனன் ஸ்டைல் ..ஜெட் வேகத்துல போகும் .. உன்னை மாதிரி வேலை இல்ல பட்டதாரியில வர்ற தனுஷின் சைக்கிள் மாதிரின்னு நெனச்சியா ? "

" ஹ்ம்ம் உன் காட்டுல மழை பெய்யுது.. நீ நடந்தது ராஜா .. எங்களுக்கும் காலம் வரும்"

" எங்களுக்கும் காலம் வரும்

காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

அப்படின்னு பாடிகிட்டே இரு டா ... நான் உன் ஆளை எழுப்பி கூட்டிட்டு வரேன் ..."

" டேய் ... ஜானகியை எழுப்பினே , நான் உன் சுபியை நித்யா கூட வெளிய  கூட்டிடு போய்டுவேன் .. ஆல்ரெடி உன் ஆளு ஷாப்பிங் கூட்டிடு போக சொல்லி நச்சரிக்கிறா... "

" அட எட்டப்பா ..அப்படி எதுவும் செஞ்சிடாதே...  உன் மகாராணி எழுந்து வர்ற வரை நான் வைட் பண்றேன் " என்று போலியான பணிவில்  பதில் சொன்னான் அர்ஜுனன்  ...

" சரிடா ...  அம்மா கூப்பிடுறாங்க போல .. பை "

" ஓகே டா.,.. "

" ரகு பேசுறதை வெச்சு பார்த்தா கண்டிப்பா அவன் ஜானுகிட்ட காதலை பத்தி பேசலன்னு தெரியுது .,. அப்படி இருக்கும்போது நம்ம வீட்டு டியுப் லைட்டு எப்படி பிரகாசமா எரியுது ? பட் இப்போதைக்கு இதை ரகுகிட்ட சொல்ல வேணாம்.. சொன்ன உடனே அவன் கவனமா நடந்துகுறேன் என்ற பேருல இன்னும் சொதப்புவான் .. இதுவும் நல்லதுதான் .. ஜானகியே ரகுவின் அக்கறையையும் காதலையும் இயல்பாக புரிஞ்சுக்க இது நல்ல வாய்ப்பு .. நம்ம சுபீயை பார்ப்போம் ..ஹ்ம்ம்ம்ம்..இளவரசியை  நாளைக்கு அவளை கடத்திகிட்டு எங்கயாச்சும் வெளில போகலாமா? இல்லே வேணாம்..அவளின்  படிப்பு முடியட்டும் .. ஆல்ரெடி நேத்து கொஞ்சம் ஓவராத்தான் போர்டர் தாண்ட்டிட்டோம்...... ஹ்ம்ம் சுபி நீ எப்போடி  படிச்சு முடிப்பே ? " என்று மனதிற்குள்ளேயே பேசி கொண்டான் அர்ஜுன் ...

தன் பிறகு அவன் தன் தாயுடன் நேரம் செலவழிக்க, தூங்கி எழுந்த ஜானகி, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். ( இந்த இடத்துல உங்களுக்கு ஒரு கேள்வி வரணுமே ... பானுவிற்கு ரகுராமின் காதல் தெரியுமா ?  நம்ம அர்ஜுனனின் பெஸ்ட் ப்ரண்டு அவங்க தானே  சோ அர்ஜுன் ஏற்கனவே ரகுவின் காதலை பத்தி சொல்லியாச்சு.. ஜானுவை பத்தி நல்ல தெரிஞ்சதுனாலே பானு பெருசா எந்த முடிவும் எடுக்காமல் ஜானகியின் பதிலுக்கு காத்திருக்காங்க... ஜானு ஜானு ஜானு .. உன் வார்த்தைக்காக எவ்வளவு பேரு வைட் பண்றோம்.. சீக்கிரம் இறங்கி வாம்மா ..... இதோ இறங்கி வந்துட்டாங்களே ... மாடியில் இருந்து ..ஹஹ ஹா  )

" மாமா "

" வாங்க மேடம் .. இப்போதான் பொழுது விடிஞ்சதா? "

" டேய் சும்மா இருடா .... ஜானு ..தலைவலி எப்படிம்மா இருக்கு ? "

" இப்போ நல்லா போச்சு அத்தை .. உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வரவா ? அத்தை  உங்களுக்கு மட்டும்தான் " என்று அர்ஜுனனை ஓரக்கண்ணால் பார்த்தபடி  சொன்னாள் ஜானகி ...

" சரி தான் .. நீ தூங்கி எழுந்திரிச்சி வர்ற வரை வைட் பண்ணா, நாங்க கொலை பட்டினி தான் ... ஆல்ரெடி காபி போட்டு கிச்சன்ல உனக்கும் எடுத்து வெச்சுருக்கேன் .. போய் குடிங்க மகாராணி ... "

" என்ன மாமா , மரியாதை எல்லாம் தூள் பறக்குது. ? "

" பின்ன நீங்கல்லாம் யாருங்க .. தி கிரேட் ரகுராம் சாரின் பி. ஏ ஆச்சே ? "

" அன்னைக்கு சுபத்ராவும் இதேதான் சொன்னா.. ஜாடிகேத்த மூடி ரெண்டு பேரும்.... சரி நான் தூங்குறதுகும் என் பாஸ் கும் என்ன சம்பந்தம் "

" அதுவா ? மேடம் கு  தலைவலின்னு சொன்னேன் ... அதான் வேலையினாலதான் இருக்கும் .. நீங்க இன்னைக்கு வர வேணாம் .. ஜானகி ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொல்றான் உன் பாஸ் "

மனதிற்குள் ரகுவின் அன்பில் கொஞ்சம் தடுமாறினாலும், அதை வெளியே காட்டாமல்  " ஹா ஹா ஹா ..சரிதான் " என்று சிரித்து வைத்தாள் ஜானகி .. ( ஹா ஹா .. தடுமாற்றம் நம்பர் 1..... அதென்னப்பா ஒரு குட்டி விஷயத்துக்கு தடுமாறி போறாங்களேன்னு என்னை பார்த்து கேக்க கூடாது ... என்ன இதுமுன்னாடி ஜானகி ரகுவின் காதலை தெரிஞ்சுக்காம இருந்தாங்க..பட் இப்போதான் பூனை குட்டி வெளிய வந்துடுச்சுல ...இனிமேதான் சுண்டெலிக்கு ஓட்டமே இருக்கு  )

" அவன் சொன்னது உனக்கு ரொம்ப  சிரிப்பா இருக்குதா ? " என்று கோபத்துடன் கேட்டவன் மனதினுள் அவளின் புன்னகையை கண்டு நெகிழ்ந்தான்.

" ரொம்ப சிரிப்பா இல்ல மாமா.. பட் கொஞ்சம் சிரிப்பாதான் இருக்கு"

" அடிங்க .. போ போ.... சும்மா இங்க நின்னு கதை அளக்காம காப்பியை குடிச்சிட்டு கெளம்பு .. "

" கிளம்பனுமா ... எங்க ? " ஜானகி சோம்பல் முறித்தாள்...

" அங்கதான் "

"  நோ மாமா .. நோ .. என்  பாஸ் கிழிச்ச கோட்டை நான் எப்படி தாண்ட முடியும் ? ...அதெல்லாம் கஷ்டம் நாம நாளைக்கு போகலாம் .. எனக்கு மறுபடியும் தூக்கம் வருது " என்றவள் வராத தூக்கம்  வந்தது போல நடிக்க,

" வராட்டி போடி ..நான் கெளம்புறேன் " என்று அசால்ட்டாக பதில் தந்தான் அர்ஜுனன் ( பின்ன எங்க அர்ஜுன் என்ன சும்மாவா ? )

இருவரின் பேச்சையும் பார்வையாளராய் ரசித்து கொண்டிருந்த பானு

" போதும் போதும் .. ஜானு கெளம்புடா ... நானும் என் சிவகாமியை பார்க்கணும் " என்று கண் சிமிட்டுவிட்டு தன் மகனுக்கு ஹாய் 5 கொடுத்தார் ..

" ஆளாளுக்கு ஒரு பார்ட்னர் வெச்சுகிட்டு என்னை மிரட்டுரிங்களா ? எனக்கும் அங்க பெரிய கூட்டணியே இருக்கு.. நித்யா மீரா சுபா , என் பாஸ் ... எல்லாரும் சேர்ந்து லூட்டி அடிப்போம் .. நீங்க வேடிக்கை பாருங்க " என்றாள் ...

" ஹே சுபி எனக்கு .. இல்ல எனக்கு " என்று அர்ஜுனனும் ஜானிகியும்  சிறுது நேரம் செல்ல சண்டை போட்டுவிட்டு , மூவருமாக சுபத்ராவின் வீட்டிற்கு சென்றனர்.

" டடே வாங்க வாங்க" என்று அனைவரையும் வரவேற்றார் சூர்ய பிரகாஷ். சீனியர்ஸ் எல்லாரும் அர்ஜுன் மற்றும்  ஜானகியிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பானுவுடன் பேச தொடங்க, அர்ஜுனன் விழிகளாலே சுபத்ராவை தேடினான்.

அந்த ஒருவார கவனிப்பில் மீரா குணமாகிவிட, அவளும் நித்யாவும் ஹாலில் இன்னொரு சோபாவில் அமர்ந்து அர்ஜுனனின் தேடலை ரகசியமாய் பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர்.

" நித்து, பாவமா இருக்குடி ... சுபியின் ரூம் லாக்கை திறந்து விடு அர்ஜுன் தேடுறார் பாரு ..."

" அதெல்லாம் முடியாது ... நேத்து நைட் பூனைக்குட்டி மாதிரி எங்கயோ போய்ட்டு வந்தவளை நான் எவ்வளவு பொறுமையா ' எங்கடி போனே ? ' நு கேட்டேன் ..எங்கேயாச்சும் உண்மைய சொன்னாளா ? அதுனாலத்தான் ரூமில் பூட்டி வெச்சேன் .. நீ சொதப்பாமல் டிவியை பாரு "

" நாம மாட்டிக்க போறோம் டீ .. அர்ஜுனுக்கு கோபம் வந்திட போகுது "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.