(Reading time: 38 - 76 minutes)

 

" துக்கெல்லாம் பலி ஆடு கிடைக்காமலா போகும் .. ஆமா நீ என்ன ரொம்ப பேசுற ? விட்டா நீயே மாட்டிவிட்டுடுவே நீ போயி கிருஷ்ணா அண்ணாவுக்கு கிச்சன் ல ஹெல்ப் பண்ணு " என்று அவள் முடிப்பதற்குள் ,

" மீரா ..கொஞ்சம் இங்க வந்து ஹெல்ப் பண்ணு " என்று சமையலறையிலிருந்து   குரல் கொடுத்தான் கிருஷ்ணன் .

" ஹா ஹா போடி ...அண்ணா கூப்பிடுறார் "

" கொழுப்புடி உன் அண்ணாவுக்கு .. சமையல் எல்லாமே ரெடி பண்ணியாச்சு.. அதை எடுத்து வைக்க கூட இவருக்கு ஆளு வேணுமா ? "

" ஆமாலே ? அதெப்படி அண்ணா இப்படி கூப்பிடலாம் .? ரொம்ப திமிருதான் " என்று ஒத்துபாடியவள் " அதை நீயே போய் கேளு " என்று கிச்சனுக்கு அனுப்பி வைத்துவிட்டு அர்ஜுனன் பக்கம் சென்றாள் .

அதே நேரம் மாடியிலிருந்து விசில் அடித்தபடி இறங்கி வந்த, ரகுராம் ஜானகியை பார்த்ததும் விசில் அடிப்பதை நிறுத்த, அதை கண்டுகொண்ட ஜானகிக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்தது.

" ஹேய் ஜானகி  எப்போ வந்த ? "

" நீங்க விசில் அடிக்கிறதை நிறுத்தும்போதே வந்துட்டேன் பாஸ் " என்றாள்.

" எத்தனை தடவை சொல்றது, ஆபீஸ் தவிர வேற எங்கயும் என்னை பாஸ் நு கூப்பிடாதேன்னு"

" அய்யயோ அது எத்தனை தடவைன்னு நான் எண்ணவில்லையே பாஸ் " என்றாள் ஜானகி

" கிண்டலா? சரி தலைவலி எப்படி இருக்கு ? "

" ம்ம்ம் இப்போ பரவாயில்ல ரகு " என்றவள் அடுத்து என்ன பேசுவது என்பது போல நிற்க,

" சரி மேல வா " என்றவன் அவளை ஒரு அறைக்கு அழைத்து சென்றான்.

" என்ன ரகு இது "

" இதெல்லாம் என்னுடைய கலெக்ஷன்ஸ் ஜானு ... பாரதியார் கவிதை தொடங்கி ஓஷோ வரை எல்லா புக்ஸ் உம் இருக்கு .. உனக்கு என்ன பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ " என்றான்.

முதலில் கொஞ்சம் சந்கோஜப்பட்டாலும் சிறிது நேரத்தில் மிக இயல்பாக ரகுவிடம் பேசிக்கொண்டே ஒவ்வொரு புத்தகங்களையும் பார்த்து கொண்டிருந்தாள் ஜானகி .. என்னதான் அவன் அவளை  காதலித்தாலும், அதன் சாயலே தெரியாமல் நட்புடன் அவன் பழகுவதும் , கண்ணியமாய் நடந்து கொண்டதும் ஜானகிக்கு அவன் மீது மதிப்பை அதிகப்படுத்தியது. இடையிடையே சில புத்தகங்களை  பற்றி இருவரும் சுவாரஸ்யமாக வாதிட்டு பேசி கொண்டிருந்தனர்..

ஜானகியுடன் செலவிட்ட நேரங்களை பொக்கிஷமாய் உணர்ந்தான் ரகு .. அடிக்கடி அவளை சிரிக்க வைத்தான் . அவ்வப்போது சிந்திக்கவும் வைத்தான் .. அவனுக்கு தேவை, அவளின் நட்பும் மகிழ்ச்சியும் தானே ? எனவே புன்னகையுடன் தன்னுடன் உரையாடிகொண்டிருந்த ஜானகியை  கண்டு மனம் நெகிழ்ந்தான் .

ஜானகியின் எண்ணமும் அவனைத்தான் சுற்றி வந்தது .. ஒருவேளை மீரா காலையில் அப்படி சொல்லாவிட்டால், நிச்சயம் இந்த சந்திப்பு கூட அவளுக்கு இயல்பானதாகத்தான் இருந்திருக்கும் .. அந்த அளவிற்கு பார்வையில் கூட கண்ணியம் காத்த ரகுவை எண்ணி சொல்ல முடியாத உணர்வில் இருந்தாள். அவனது அறையில் இருந்த புத்தகங்கள் கூட அவனின் குணத்தை பறைசாற்றியது ... ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கும்.. அப்படி ஜானகியின் கற்பனையின் ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே இருந்தான் ரகுராம் .. ஸ்ரீராம் சொன்னதுபோல, ரகு ஸ்ரீராமிற்கு முன்பு ஜானகியின் வாழ்வில் வந்திருந்தால் ஒருவேளை அவளும் ரகுவைத்தான் விரும்பி  இருப்பாளோ என்று நினைத்தாள்..நினைத்தவள் தன் நினைப்பை எண்ணி திடுக்கிட்டாள்....ஸ்ரீராமின் காதலும் ஆசிகளும்  மட்டும் ஏதோ தூரத்தில் இருந்து அவளை பார்த்து நிம்மதியாய் புன்னகைத்தது.. இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் இனிதே தொடங்கி இனிமையாய் முடியுமா?  பொறுத்திருந்து பார்ப்போமே..

(சரி கிச்சனுக்கு போனாங்களே நம்ம ஜூலியட் அவங்க தன் ரோமியோ கூட என்ன பண்றாங்க பார்ப்போம் )

" கூப்பிடிங்களா கிருஷ்ணா " என்று இடது கரத்தை இடை மீது வைத்து தோரணையுடன் நின்றாள் மீரா.

இளமஞ்சள் நிற புடவை கட்டி நின்றிருந்தவள் பார்த்தவன்

" புடவை கட்ட வேணாம்னு சொன்னேன் தானே ? மறுபடி ஆரம்பிச்சுட்டியா ? " என்றான்.

" எனக்கு புடிக்கும் "

" உனக்கு பிடிக்குமா இல்ல உன் ஆளுக்கு பிடிக்குமா ? " என்று கண்ணடித்தான்.

" எனக்கு தெரியலை  "

" என்ன தெரியலை ? "

" தெரியாத மாதிரி கேள்வி கேக்குறவங்களை என்ன செய்யனும் தெரியலை "

" தெரியலைன்னா நான் சொல்லி தரேன் " என்றபடி அவளை அவன் நெருங்க

" ஐயோ வீட்டுல நிறைய பேரு இருக்காங்க கிருஷ்ணா .. ஏன் இப்படி வம்பு பண்ணுரிங்க ? " என்று கேட்டவளின் குரல் அவனின் அருகாமையினால் காற்றில் கரைந்தது ... அவள் விழியோடு விழி கலந்தவன்

" இப்போ சொல்லு என்னை கட்டிக்கிறியா?  " என்றான்.

முடியாது என்று சொல்ல முடியாதவள், " யோசிக்கிறேன் .. பெரியவங்க கிட்ட நான் பேசிட்டு சொல்றேன் " என்றாள்.

அவள் பதிலில் மனம் குளிர்ந்தவன் , சந்தோஷமாய் பாடினான் ..

முடியாதுன்னு ..

முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி

முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி

முடியாதுன்னு சொல்ல முடியாது

முடியாதுன்னு சொல்லக் கூடாது

" சரி போதும் போதும் ... வாங்க எல்லாரும் பசியோடு வைட் பண்ணுவாங்க "

" ஓஹோ பேச்சை மாத்துறிங்களா ? அப்படி திரும்பிட்டா நீங்க வெட்கப்படுறது எங்களுக்கு தெரியாதா? இன்னும் எத்தனை நாள் இந்த கண்ணாமூச்சி நு பார்க்குறேன் " என்றவன் அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றான்.

(ரகு  - ஜானு கண்ணாமூச்சி , கிருஷ்ணா - மீரா கண்ணாமூச்சியை கேட்டோமே, இப்போ உண்மையில அர்ஜுனனிடம் விளையாடிய கண்ணாமூச்சியை பார்ப்போம் வாங்க .. சிட்டிவேஷன் சாங் காக எல்லாரும் கண்ணாமூச்சி ரே ரே .. கண்டுபிடி யாருன்னு பாடுங்க பார்ப்போம் ..ஹா ஹா )

ர்ஜுனன் அருகில் சென்ற நித்யா

" என்ன ஜி .. எதையோ தேடுறிங்க போல ? எதை தொலைச்சிங்க ? " என்றாள் .

அவளின் முகத்தை வைத்தே நிச்சயம் இவதான் ஏதோ பண்ணிருக்கா என்று கண்டுபிடித்துவிட்டான் அர்ஜுனன்...

" ஹேய் உன்னைத்தான் தேடுனேன் ....வாவ் ... " என்றவன் அவளை ஒரு தடவை சுற்றி வந்து மேலிருந்து கீழ் வரை பார்க்க  ( ஐ மீன் சைட் அடிக்கலப்பா ... நீங்க பாட்டுக்கு சுபிகிட்ட எக்குதப்பா போட்டு தந்துடாதிங்க  )

" எ .... எ.... என்னய்யா? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.