(Reading time: 38 - 76 minutes)

 

" மாடா .... நானாச்சும் உன் காதலை பெற்றுகிட்டே தான் என் காதலை கொடுத்தேன் .,...பட் ரகுராம் உன்கிட்ட எதையுமே எதிர்பார்க்காமல்தானே தன் காதல் கொடுத்தார் .. இப்பவும் கொடுத்துகிட்டு இருக்கார் ... அப்போ அவர் காதல் உயர்ந்தது இல்லையா ? "

" ஆனா ... எனக்கு ..எனக்குன்னு ஒரு மனசு இருக்கே ராம்  "

" அந்த மனசே நான்தானே டீ ...  அதை உன்னாலே இல்லேன்னு சொல்ல முடியுமா ? "

" கண்டிப்பா முடியாது ..."

" அப்போ உன் மனசாக நான் சொல்றதை நீ ஏன் கேக்க கூடாது .... "

" ராம் .....? "

" இது பாரு கண்ணம்மா ... பாத்திரத்துல  இருந்தாலும், நதியாக  இருந்தாலும், மழையாக பொழிந்தாலும் , நீர் நீர்தானே ? அதே மாதிரிதான் அன்பும் ... உனக்கு சேர வேண்டிய அன்பும், உன்னை காக்க வேண்டிய கடமையும் அன்னைக்கு என் உருவத்துல இருந்தது .. இன்னைக்கு ரகுராமின் உருவத்துல இருக்கு ... ஒருவேளை நான் உன்னை பார்க்க கொஞ்சம் லேட்டயிருந்தாலும் இன்னைக்கு ரகு மாதிரிதானே நானும் வேதனை பட்டிருப்பேன் ??? நம்ம காதலும் உள்ளமும் அடுத்தவங்களை வாழ வைக்கணும் , நோக வைக்க கூடாது டீ "

" ஆனா என்னாலே உடனே மாற முடியாது ராம் .. நீங்க சொல்றது எனக்கு புரியுது .. நிச்சயமா எனக்கு ரகு மேல கோபம் இல்ல ... ஆனா அதே நேரம் காதலும் வரல... "

" மக்கு நானும் உன்னை நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கோ .. என்மேல அன்பு இருந்தா என் உயிருக்கு நீ மதிப்பை தந்தா, இதை நீ செஞ்சே ஆகணும்னு நான் சொல்ல வரல ... எனக்கு தெரியும் நான் ,  என்மேல சத்தியமா நீ ரகுராமை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னா அடுத்த நொடி நீ சரின்னு சொல்லுவே ... உன்னாலே என் பேச்சை மீற முடியாது "

" உண்மைதான் "

" ஆனா எனக்கது வேணாம் .. ரகுராமின் காதலுக்கு அதைவிட பெரிய துரோகம் இருக்காது ... நீ ரகுவை ரகுவின் காதலுக்காக ஏத்துக்கணும் .. யாரும் வற்புறுத்தி நீ ஒரு முடிவு எடுக்க கூடாது ..."

" ம்ம்ம்ம் "

" எனக்கு வேண்டியதெல்லாம் உன்னுடைய மனமாற்றம்தான்.. 'என் வாழ்கையே முடிஞ்சிருச்சு .. இனி என்னை பத்தி யோசிக்க எதுவும் இல்ல .. யாரோடைய அன்பும் என் ராம் அளவிற்கு வர முடியாது ' இது மாதிரி யோசிகிரத்தை நிறுத்து ... உன் மீது காட்டபடுற எல்லா அன்புமே நான் உனக்கு அனுப்பி வெச்சது .. அதை மனசுல பதிய வெச்சு அதை ஏத்துக்கோ ... "

"ம்ம்ம்ம்ம் "

" தலையை மட்டும் நல்லா ஆட்டு ... அதுக்கு அப்பறம் பழைய குருடி கதவை திறடின்னு ஆரம்பிச்சுடு  "

" ஹா ஹா "

" இந்த சிரிப்புதான் கண்ணம்மா வேணும் ... என் உயிர் போகல ... என் உயிர் உன் புன்னகையில்தான் இருக்கு .... நான் வாழுறதும்  வாழம போறதும் உன் சிரிப்புல தான் இருக்கு ... அதுக்குன்னு பொய்யான சிரிப்பை சிரிக்காத "

" ஹீ ஹீ "

" எனக்கு உன்னை நல்ல தெரியும் டீ அழுமூஞ்சி "

" ம்ம்ம்ம்ம்ம்ம் "

" உன்னை சுத்தி உள்ளவங்களை சந்தோஷமா வெச்சுகிட்டு நீயும் சந்தோஷமா இருக்கணும் .... மறுபடியும் சொல்லுறேன் நான் உன்னோடுதான இருக்கேன் ... ரகுராமின் காதலும் என் காதலும் வேற வேற கிடையாது .. நீ நிராகரிச்சா அது ரகுவின் காதலை மட்டுமில்ல நான் உன் கிட்ட சேரணும்னு சேர்த்து வெச்ச என் காதலும்தான் .. பொறுமையா யோசி நல்ல முடிவெடு...இல்லையா , இது எல்லாத்தையும் மறந்துட்டு ரகுராமுக்கு நல்ல தோழியா இரு ... விலகி போகணும் காயபடுத்தனும்னு மட்டும் நினைக்காதே ... காலத்துகிட்டையும், ஆண்டவன் கிட்டயும்  உன்னுடைய ஸ்ரீராம் கிட்டயும் உன் பிரச்னையை ஒப்படைச்சிட்டு இயல்பா இரு .. காலம் உன் மனசுல மாற்றம் கொண்டு வரும் அல்லது ரகு மனசுல மாற்றம் கொண்டு வரும்.. ஆனா நிச்சயம் மாற்றம் உண்டாகும் .. அதை உன் ஸ்ரீராம் உன் நிழலாக இருந்து பார்த்துகிட்டே இருப்பேன் டீ .." என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு அணைத்துகொண்டான் . அவனின் ஸ்பரிசத்தில் கரைந்தவள் நிறைந்த புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, ஸ்ரீராமிற்கு பதிலாய் ரகுராம் அவளை அணைத்தபடி நின்றிருக்கும் காட்சியை கண்டு  சட்டென கண்விழித்தாள்.

எங்கிருந்தோ அவளுக்காக ஒலித்துகொண்டிருந்த பாடல் வரிகளை கேட்டாள் ஜானகி.

கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை

கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை

மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை

மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா?

கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா?

மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?

உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

ஒரு நெடிய பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாச படுத்திகொண்டவள், அர்ஜுனனை தேடி சென்றாள்.

(  ஜானகி தூங்கிகிட்டு இருந்த நேரம் நம்ம அர்ஜுனன் சைலெண்டா இருந்தாருன்னு நான் சொன்னா அதை சுபத்ராவே நம்ப மாட்டாங்களே ... சோ ஜானகி அறையை  விட்டு வெளியே வந்த  அர்ஜுனன் என்ன பண்ணாருன்னு இப்போ பார்ப்போம் வாங்க )

ஜானகியின்  அறையில் இருந்த வெளிவந்த அர்ஜுனனுக்கு ரகுராமின் காதல் விஷயம் எப்படி ஜானுவுக்கு தெரியும் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது .. உடனே ரகுவை போனில் அழைத்தான்.

" ஹலோ ரகு "

" குட் மோர்னிங் ஜி .. நீதான் வீட்டுக்கு காலையிலேயே வர்ற ஆளா ? சரியான கும்பகர்ணன் "

" யாரு நான் கும்பகர்ணன் ? டேய் உன் ஆளுதாண்டா கும்பகர்னி ... "

" என் ஆ..... ஜானுவா ? ஏன் ஜானுவுக்கு என்னாச்சு ? "

" ஒன்னும் ஆகல ... அவ தலை வலின்னு  தூங்குறா .. "

" தலைவலியா ? என்னாச்சு? காபி ஏதும் கொடுத்தியா  ? வேலை ஏதும் டென்ஷனோ? "

" ஆமா மகாராணி பிரதமர் பொறுப்பை எடுத்துருக்கா .. அதான் ஒரே தலைவலி " என்று அர்ஜுன் குறும்புடன் கூறினாலும் மனதில் ரகுவின் காதலை மெச்சினான்.

" விளையாடதே அர்ஜுன் .. "

" நான் கூட நீதான் ஏதோ சொல்லிட்டியோனு  நெனச்சேண்டா "

" நான் என்ன சொல்ல போறேன் ஜானுவை ? அதெல்லாம் ஒண்ணுமில்ல டா .. நேத்து ரொம்ப நேரம் ஆபீஸ் டீடைல்ஸ் எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா .. நான் அப்போவே திட்டினேன் .. ஒழுங்கா தூங்குன்னு .. அதான் .. சரி அப்போ அவ வீட்டுல ரெஸ்ட் எடுக்கட்டும் ...நீங்க இன்னைக்கு வர வேணாம் நாளைக்கு வாங்க  ! "

" அடபாவி உருப்புடுவியா நீ ? "

" ஏன் மச்சான் ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.