(Reading time: 38 - 76 minutes)

 

" ....உ... உன்னைத்தான் "

" ஏன் என்னை தேடுநிங்க? "

" அதுவா ...ஹஹஹஹஹ "

" சொல்லிட்டு சிரிச்சா உங்களுக்கு கோடி புண்ணியம் "

" அதுவா ... இங்க வரும் வழியில ஒரு மேஜிக் மேன் பார்த்தேன் அவன்தான் ஒருகுரங்குகுட்டியை கொடுத்து , இதை தரையில விட்டிங்கன்னா ரெண்டே செகண்ட் ல இது பெண்ணாக மாறிடும் .. குரங்குக்கு உள்ள அத்தனை சேஷ்டைகளும் அது பண்ணும்னு சொன்னார்...நானும் இங்க வந்ததும் அதை கீழே விட்டுட்டு தேடுறேன் .. நீயே என் முன்னாடி வந்து நிற்குற " என்ற அர்ஜுனன் இன்னும் பலமாய் சிரித்தான்.

" நீங்க சுபத்ராவை தேடலையா? "

( அய்யோ பாவம் நித்து டார்லிங் நீ .... இதே கேள்வியை நீ வேறு யாருகிட்டேயாவது கேட்டிருந்தா சந்தேகமே இல்லாமல் பதில் சொல்லி இருப்பாங்க.. பட் நீ பேசுனது நம்ம அர்ஜுன் கிட்ட... நீ அப்படி கேட்டதுமே அர்ஜுனன் உஷார் ஆகிட்டாரு.. ஹா ஹா ஹா )

" சுபியை நான் ஏன் தேடனும் ? "

"  அவளை காணோம்தானே ? " ( ம்ம்ம்கூம்ம்ம்ம் எங்கப்பா புதருக்குள்ள இல்லன்னு கதை மாதிரி ஆச்சே )

" ஹா ஹா ...நீ அவளை தேடுறியோ  ? சுபா இங்கதான் இருக்கா... இப்போதான் நான் வந்துட்டே இருக்கேன் ன்னு எனக்கு மெசேஜ் அனுப்பினா "

அவனுக்கு என்ன பதில்  கொடுக்க என்று அவள் யோசிக்கும்போதே, இரு கரங்கள் பின்னால்  இருந்து அவள் கண்களை பொத்த,

" ஏய் யாரு " என்றவள் அந்த கரங்களில் இருந்த ப்ரசிலேட்டை தொட்டு  பார்த்து

" சுபத்ரா " என்றாள்.

" நானேதான் " என்றவள் அக்கம் பக்கம் யாரும் இல்லாததை பார்த்ததும் அர்ஜுனின் கரம் பற்றி அவன் தோளில் சாய்ந்து கொண்டு நின்றாள்.... இருவரும் தோரணையாக நிற்பதை கண்ட நித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது .. பின்ன இவ்வளோ கஷ்டபட்டு சுபாவை ரூம்ல பூட்டி வெச்சா, அந்த பூட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதையை தராமல் தப்பிச்சு வந்தா? பாவம் அந்த பால்கோவாவுக்கு மனசு கஷ்டம் ஆகாதா ?

" ஆமா இவரு அர்ஜுன யுவராஜா, இவங்க சுபத்ரா தேவி இப்போதான் போஸ்ட் கொடுக்குறாங்க .... இருடி உன்னை போட்டு கொடுக்குறேன் " என்றாள் நித்யா ... ( நியாயப்படி இப்படி ஒரு மிரட்டல் வந்தா ரெண்டு பேரும் கலவரம் ஆகணுமா இல்லையா? ஆனா இங்க என்ன நடந்துச்சு தெரியுமா ? நம்ம நித்யா அர்ஜுனனை யுவராஜன், சுபத்ராவை சுபத்ரா தேவின்னு சொன்னதும் ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கிட்டு காதல் ரகசியத்தை கண்களால் பேசிகிட்டு இருந்தாங்க  )

" ஆமா  சுபீ .. நீ வர ஏன் இவ்வளவு லேட்டாச்சு ? "

" அது இந்த குரங்குனால வந்தது அர்ஜுன் ...நேத்து நைட்  நான் தூக்கம் வரலன்னு தோட்டத்து பக்கம்  நடந்துட்டு ரூமுக்கு வந்தேன் ... நான் உள்ளே வரும்போது பார்த்துட்டா இந்த குரங்கு .. நான் எங்க போனேன் என்ன பண்ணேன் ன்னு  ஆயிரம் கேள்விகள் கேட்டா... நான் சொன்ன பதிலை நம்பாம, நீங்க வர்ரிங்கனு தெரிஞ்சதும் என்னை  என் ரூமிலே பூட்டி வெச்சிட்டு போய்ட்டா "

உண்மையில நேத்து நைட் என்ன நடந்ததுன்னு நினைத்து பார்த்த அர்ஜுன் அவளை பார்த்து கண் சிமிட்ட, அவளின் முகம் குங்குமமாய் சிவந்தது.. அதை கண்ட நித்யா

" யாரு நீ சும்மா நடந்தியா? இதை நான் நம்பனும் ..? உன் முகத்துலேயே தெரியுது நீ எதோ கொக்கு மாக்கா பண்ணி வெச்சுருக்கேன்னு... அதுவும் அது நைட் இல்ல மிட் நைட்.. சரி அதை  விடு .. இப்போ எப்படி தப்பிச்சே நீ ? "

" அதுவா என் ரூம் ஜன்னல் வழிய குதிச்சு , ஓரமா நடந்து கிருஷ்ணா அண்ணா ரூம் ஜன்னல் வழியா உள்ள வந்து குதிச்சேன் " என்று கண்கள் மின்ன அவள் சொல்ல நித்யா பலமாய் சிரித்தாள்..இருவரும் விநோதமாய் அவளை  பார்க்க,

" அதுவா அர்ஜுன் , நீங்க ரிலிஸ்  பண்ண அந்த குரங்கு நான் இல்ல.. உங்க ஆளுதான் " என்று அவள் மீண்டும் சிரிக்க, அர்ஜுன் சுபத்ராவிற்கு நித்யாவிடம் சொன்ன அந்த குரங்கு கதையை விளக்கினான்.. அதுக்கப்பறம் என்ன ? ஒரே ரன்னிங் , ச்செசிங் தான்  .........

ரவு உணவுக்கு பிறகு, சிவகாமி பானுவிடம் பேசிகொண்டிருக்க, சூர்யா பிரகாஷ் அர்ஜுனனிடம் பேசிகொண்டிருந்தார். ( எல்லாம் அவரோட  வருங்கால மாப்பிளைக்கு வைக்கிற டெஸ்ட் தான் .. அர்ஜுன் வழக்கம் போல அவரை இம்ப்ரஸ் பண்ணிட்டு  இருந்தான் என்று நான்  சொல்லாமலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. சோ நாம மத்தவங்களை பார்ப்போம்...)

நம்ம கிருஷ்ணா, ரகு, ஜானு , மீரா, நித்யா, சுபா எல்லாரும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிகொண்டிருக்க அந்த கலகலப்பான வீட்டில் ஒரே ஒரு அறையில் மட்டும் ரொம்ப முக்கியாமான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்துச்சு ...

" அண்ணி "

" சொல்லுங்க  தம்பி .. ஏன் இப்பவே பேசியாகனும்னு சொன்னிங்க ? அப்படி என்ன அவசரம் ? " என்று கேட்டார் அபிராமி ...

" நம்ம மீராவை பத்தி தான் ..... நம்ம மீரா இப்போ கொஞ்சம் மாறிகிட்டு வர்றது தெரியுது .. ஆனா அதே நேரம் உங்ககிட்டயும் இந்த விஷயத்தை தள்ளி போட்டு எதிர்காலத்துல பிரச்சனை வருமோனு கவலையா இருக்கு " என்றார் சந்திரப்ரகாஷ்.

" சரி சொல்லுங்க  தம்பி "

கிருஷ்ணா-மீராவின் முழு கதையையும் அவர் சொல்லி முடிக்கையில், குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதியாய் இருந்தது அந்த அறை..அந்த மௌனத்தை  கலைத்தவர் நம்ம அபிராமிதான்.

" இந்த விசயம் அவருக்கு ?"

" அண்ணா கிட்ட கூட இன்னும் நான் சொல்லல அண்ணி ?"

"  மீரா,கிருஷ்ணா , நான் நீங்க தவிர யாருக்கும் தெரியாது .. இதெலாம் நடக்கும்போது கூட இருந்ததுனால நம்ம நித்யாவுக்கும் தெரிஞ்சிருக்கலாம் "

" இனி யாருக்கும் தெரிய வேணாம் தம்பி "

" சரிங்கண்ணி"

" சரியா? "

" என்ன தம்பி? சிவகாமிகிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலையா? "

" சொல்லனும்னு நெனச்சா எப்பவோ சொல்லி இருப்பேன் அண்ணி ... ஆனா நான் உங்க கிட்ட சொன்ன பிறகு , உங்க முடிவை கேட்டுதான் முடிவு எடுக்கனும்னு இருந்தேன்"

சந்திரப்ரகஷின் அன்பிலும் மரியாதையிலும் நெகிழ்ந்து போனார் அபிராமி.. கண்டிப்பா எல்லாருகிட்டேயும் சொல்லலாம் .. ஆனா இப்போ இல்ல தம்பி.. என்கிட்ட சொல்லிடிங்கல்ல இனி நான் பார்த்துக்குறேன்.. மீராகிட்டையும் நானே பேசுறேன் "

" சரிங்க அண்ணி "

" அவங்கல்லாம் தேடுவாங்க .. வாங்க போலாம்"

பிராமி, சந்திரப்ரகஷுடன் அங்கு வந்ததும் நம்ம சீனியர்ஸ் எல்லாரும் , தோட்டத்திற்கு செல்ல, அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர் .

" சரி போதும் போதும் பேசினது.. ரொம்ப போர் அடிக்கிது ..ஏதும் விளையாடலாமா ? " என்றாள் நித்யா .

" குட் ஐடியா " என சுபத்ராவும் ஆமோதிக்க, பெற்றோர்கள் எல்லாம் ஒரு அணி, நம்ம ஜூனியர்ஸ் எல்லாம் ஒரு அணியாக பிரிந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.