(Reading time: 42 - 84 minutes)

 

டுத்து வந்த 7 நாட்களும் இதே போல் கழிய, பதினைந்தாம் நாள் அவளுக்கு நினைவு வந்தது… அவளின் பெயர், அவள் பிறந்தது, வளர்ந்தது, பள்ளீயில் படித்தது… என கொஞ்சம்…

ஹரீஷ் அன்று வந்ததும், “அண்ணா, எனக்கு என் பெயர் தெரியுமே…”

“ஹ்ம்ம் சொல்லு பார்ப்போம்…”

அந்த ஒரு வாரத்தில், அவர்கள் அண்ணனும் தங்கையுமாகவே மாறி போயினர்… அவன் எப்போது வருவான் என்று அவளும், அவளை எப்போது பார்ப்போம் என்று அவனும் காத்திருக்கும் நிலையும் உருவானது… 

“கெஸ் பண்ணுங்க அண்ணா…”

“ஹ்ம்ம்… உன் அண்ணா மக்குன்னு உனக்கு தெரியாதா?...”

“ஏன் தெரியாம… இன்னமும் அதை தெரிஞ்சுக்காம இருந்திருந்தா நான் மக்காயிருப்பேன்….” என்று வாய் பொத்தி சிரித்தவளை வாஞ்சையுடன் பார்த்தவன்,

“வாலு… இரு உனக்கு இன்னும் இரண்டு ஊசி போடுறேன்…” என்று தலையில் செல்லமாக அடித்தான்…

“அய்யோ… கொலை… கொலை… ஹரி அண்ணா என்ன கொல்லுறாங்க…. காப்பாத்துங்க…” என்று அவள் கத்தினாள்…

‘ஹேய்… உன்னை… ஹ்ம்ம்… சரி சொல்லு… பெயர் என்ன?...”

“”ஊசி போட மாட்டேன்னு சொல்லுங்க… அப்போதான் சொல்லுவேன்…”

“போட மாட்டேண்டா… நீ சொல்லு….”

“ரிகா…”

“வாட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!....”

“ஏன் ஷாக்?...”

“ஒன்னுமில்லை… முழுபெயரும் ரிகா தானா?...”

“இல்லை… சாகரிகா…”

“ஓ… நல்ல பெயர்…”

“ஏதோ ஷாக் ஆனீங்க… பட் என்னன்னு சொல்ல மாட்டேன்றீங்களே…”

“ஹ்ம்ம்… அதெல்லாம்… ஒன்னுமில்லை… சரி… நீ டேப்லட் ஒழுங்கா சாப்பிட்ட தான?..”

“ஹ்ம்ம்.. அதெல்லாம் சாப்பிடாட்டா நீங்களும் இங்க இருக்கிற சிஸ்டர்-ம் என்ன சும்மா விட்ருவீங்க பாருங்க…”

“தெரிந்தால் சரிதாண்டா…”

“அண்ணா.. அம்மா அப்பாவை பார்க்கணும்… பாவம் நான் காணாம போயிட்டேன்னு தேடுவாங்க…”

“ஹ்ம்ம்… போகலாம்…”

“நீங்களும் வரீங்களா?...”

“ஹ்ம்ம்… ஆமா…”

“ஹை…. சூப்பர் அண்ணா…. அப்போ நான் காலேஜ் ஜாயின் பண்ணும்போது நீங்களும் என் கூட இருப்பீங்க… ஹேப்பி…” என்று சிரித்தாள்…

“ஹ்ம்ம்ம்… நீ +2 எந்த இயர் பாஸ்டு அவுட்….?...”

“இதென்ன அண்ணா லூசுத்தனமான கேள்வி… இந்த இயர் தான்….”

“ஓ…. சரிடா… இன்னும் நீ கொஞ்சம் சரி ஆகணும்… சோ டூடேஸ் கழிச்சு போகலாம்… சரியா?...”

“இங்க இருக்கிற ஊருக்கு போக அவ்வளவு நேரம் எல்லாம் ஆகாது அண்ணா…”

“ஓ…. பட்… இப்போ நீ இருக்குற ஊர் தூரமா இருந்தா… நீ பொறந்த இடத்துக்கு போறதும் தூரம் தானே…”

“புரியலை அண்ணா…”

“நீ இப்போ இருக்குறது மும்பை…”

“மும்பையா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!....”

நிஜமாகவே அவளுக்கு அதிர்ச்சிதான்… இதை கேட்டு… பின்னர் சற்று தெளிந்தாள்…,

“ஏன் தமிழ்நாட்டுல ஹாஸ்பிட்டல், டாக்டர்ஸ் யாருமே இல்லையா?... இங்கே என்ன கொண்டு வந்துருக்கீங்க?...”

“அங்க எல்லாரும் இருக்காங்க… நீ தான் இந்த ஊருக்கு வந்திருக்க…”

“ஆமா… அண்ணா எனக்கு இறக்கை இருக்குல்ல… அதான் பறந்தே வந்துட்டேன்…”

“அடடா… அதை நான் கவனிக்காம போயிட்டேனே…”

“அட ராமா… என்ன ஏன்ப்பா இப்படி படுத்துற, இந்த டாக்டர் அண்ணாவ எல்லாம் என் லைஃபில் கொண்டுவந்து…ஹ்ம்ம்…”

அவளின் இலகுவான உரையாடலை அவன் மிக ரசித்தான்…

“கேளு.. ராமர்… பதில் சொல்லுவாரான்னு நானும் பார்க்குறேன்…”

“என்னோட ராமருக்கு என்ன… அவர் கண்டிப்பா பதில் சொல்லுவார்…” என்று கோபத்துடனே கூறினாள்…

“ஓகே… ஒகே… பதில் சொல்லுவார்… நானும் நம்புறேன்… சரியா?...” என்று அவளைப் பார்த்து கேட்க,

அவளோ, “இது இது இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு…” என்று சிரித்தாள்…

“ஹ்ம்ம்.. சரி.. ரெஸ்ட் எடு… நான் நாளைக்கு காலையில் வரேன்…” என்று சென்று விட்டான் ஹரி…

வனுக்கோ பெரும் யோசனை… அவளது நினைவில், கல்லூரி படித்து முடித்த சுவடே இல்லை… அதன் பிறகும் இரண்டு வருடங்கள் அவளது நினைவில் இல்லை… 6 வருட நினைவுகளை, தொலைத்துவிட்டாய் என்று சொன்னால் தாங்குவாளா?... ஹ்ம்ம்… வேண்டாம்… அவளின் முணகல் மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் துருப்புச்சீட்டு… உபயோகிக்கும் காலம் வரும் வரை பொறுமையுடன் இருப்பதே நல்லது… என்று தனது அறையில் அமர்ந்து அவன் யோசிக்கையில், அவனது செல்போன் சிணுங்கியது…

“மருத்துவமனை எண், ஹ்ம்ம்… யாராக இருக்கும்…” என்று எண்ணியபடியே

“ஹலோ… ஹரி ஹியர்…” என்றான்…

“அண்ணா… நான் ரிகா…”

“சொல்லுடா…. என்னடா.. இந்த நேரத்துல போன்…. உடம்புக்கு எதும்… நான் வரட்டாடா?...”

“இல்ல அண்ணா… எனக்கு கொஞ்சம் நியாபகம் வந்தது… அதான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு…”

“இருடா.. நான் உடனே கிளம்பி வரேன்…”

“வேண்டாம் அண்ணா… இன்னும் அறை மணி நேரத்துல உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன் கேஸ் வேற இருக்குன்னு மார்னிங் சொன்னீங்க… சோ… நாளைக்கு வாங்க அண்ணா… இப்போ வேண்டாம்…”

“இல்லடா… நான் வந்து உன்ன பார்த்துட்டு….”

“வேண்டாம் அண்ணா… ப்ளீஸ்… நான் சொல்லுறத கேளுங்க…. எனக்காக… ஹ்ம்ம்.. நீங்க நாளைக்கு மார்னிங் வாங்க….”

“ஹ்ம்ம்… சரிடா…. சொல்லு… என்ன நியாபகம் வந்துச்சு…”

அவளிடம் சொன்னதை கவனமுடன் கேட்டுக்கொண்டான்… “அண்ணா, காலையில் ஒருவரை கை காட்டி சொன்னீர்களே அவர் தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தாரா?...”

“ஆமாம்டா…”

“சரிண்ணா…”

அவளிடம் பேசிவிட்டு ஆப்பரேஷனையும் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று அவனது கட்டிலின் மேல் விழுந்தான்… அப்போது இரவு பத்து மணி… அவனுக்கு போன் வந்தது…
“சொல்லுங்க சிஸ்டர்….”

“….”

“வாட்!!!!!!!!!!... நான் உடனே வரேன்….”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.