(Reading time: 39 - 77 minutes)

காதல் நதியில் – 08 - மீரா ராம்

சென்னையில் எத்தனை பெருமாள் கோவில் இருக்கு… எதாவது ஒரு கோவிலுக்கு இன்று போயிட்டுவாப்பா… அம்மாக்காக…. உனக்கு அவரோட பேரு தான் வச்சிருக்கோம்… அவர் மாதிரியே நீயும் பல பேருக்கு உதாரணமா இருக்கணும்னு…”

“அம்மா… முக்கியமான மீட்டிங் இருக்கேம்மா…”

“அதை முகிலன் பார்த்துப்பான் பா… நீ போயிட்டுவா…”

“யாரு அவனா?... அவன் பார்த்துட்டாலும்… நீங்க வேற…”

kathal nathiyil

“அம்மாக்காக…”

“ஹ்ம்ம்…”

“உன் பிறந்தநாள் இன்று… நல்லபையன்ல போயிட்டுவாப்பா…”

“என் பிறந்தநாளுக்காக நான் போகலை… உங்களுக்கு பையனா பிறக்கும் வரம் கொடுத்ததற்காக போயிட்டு வரேன்… அவரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…”

“இப்போதான் நீ என் பையன்…”

“ஹ்ம்ம்… இன்னைக்கு சண்டை போடணும்… கண்டிப்பா..”

“எதுக்குப்பா?...”

“அவர் மட்டும் அவரோட சீதா கூட இருப்பாராம்… என் சீதாவ என் கண்ணுலயே காட்டமாட்டாராம்… அதுக்குதான் சண்டை போடப்போறேன்…”

“ஹாஹாஹா… அதுக்குதான் சொல்றேன்… அவர்கிட்ட போய் கேளு… என்னோட சீதாவை எப்போ நான் பார்ப்பேன்… சீக்கிரம் அனுப்புங்க… என் அம்மா அவங்க மருமகளைப் பார்க்க ஆர்வமா இருக்காங்கன்னும் சொல்லு…”

“டீல் அம்மா… யூ ஆர் சோ ஸ்வீட்….”

“சீதாவைப் பார்த்ததும் அம்மாவிடம் சொல்லாமல் விட்டுடமாட்டியே?...”

“கண்டிப்பா சொல்லுறேன் அம்மா… உங்களிடம் சொல்லாமலா?...”

“இப்போ இப்படி தான் சொல்லுவ… அப்பறம் மறந்துடுவ…” என்று பொய்யாக கோபம் கொண்டது அந்த தாயுள்ளம்…

அதை அறிந்து கொண்டவனின் மனம் பாசத்தில் கட்டுண்டது….

“நான் உங்க பையன்மா…”

“எப்பவும் என் செல்லப்பையன் தான் நீ…”

“ஆமா… அம்மா… நான் இன்னைக்கே பார்ப்பேனா சீதாவை?...”

“தெரியலையேப்பா…”

“ஹ்ம்ம்…”

“அதான், இன்னைக்கு அவரை மீட் பண்ணப் போகிறாய் அல்லவா… அவரிடமே கேட்டுட்டு வந்து அம்மாவிடம் சொல்லு…”

“சரிம்மா…” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், அடுத்து முகிலனுக்கு தொடர்பு கொண்டான்…

“டேய்… மச்சான்… ஹேப்பி பர்த்டே டா…”

“அதெப்படி மச்சான்… ?”

“எதுடா… எப்படி?...”

“அதான் இப்ப ஒன்னு சொன்னியே… அதான்…”

“ஓ… பர்த்டே விஷ்-அ சொல்றியா?... உனக்கு நான் விஷ் பண்ணாம வேற யாருடா பண்ணுவா?..”

“டேய்… வந்தேன்… வாயிலேயே நாலு அடி போடுவேன்…”

“ஏண்டா இந்த கொலைவெறி?... அதும் இன்னைக்கு…”

“பின்னே… நீ செய்யுற காரியத்துக்கு வேற என்ன செய்ய சொல்லுற?...”

“அடேய்… பாவி… உனக்கு விஷ் பண்ணது ஒரு குத்தமாடா?...”

“குத்தம் தாண்டா… வானரமே… நானே ஃபோன் பண்ணி எனக்கு விஷ் வாங்கிக்கிற கொடுமை… இந்த உலகத்துல எனக்கு மட்டும் தான் டா கிடைக்கும்…”

“யூ ஆர் வெரி லக்கி மேன்…”

“அடிங்க… இதுல இங்கிலீஷ் வேற?...”

“சரிடா… மச்சான்… விடு விடு… எதுக்காக போன் பண்ணின?...”

“அம்மா, கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்கடா… அதான்.. அந்த மீட்டிங்கை நீ பார்த்துப்பியா? கொஞ்ச நேரத்துக்கு…”

“டேய்… உனக்கு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்… கம்பெனி விஷயத்துல என்னை உள்ளே நுழைக்காதீங்கன்னு…”

“டேய்… டேய்… இன்னைக்கு ஒரு டூ அவர்ஸ் டா… ப்ளீஸ்டா மச்சான்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா…”

“அதுக்கு உனக்கு நான் தான் கிடைச்சேனா?...”

“உன்னை விட்டா எனக்கு யாரை தெரியும்?... நான் எங்கே போவேன்?...”

“டேய் டேய்… காலையிலேயே என்ன கலாய்க்கிறியா?...”

“இல்லடா மச்சான்… உன்னை புகழுறேன்…”

“யாரு… நீ…”

“யெஸ்… மச்சான்….”

“வர வர எங்கூட சேர்ந்து நீ ரொம்ப வாய் பேச ஆரம்பிச்சிட்டடா…”

“எல்லாம் உன் ஆசிர்வாதம் மச்சான்…”

“நல்லா இரு…”

“சரிடா… நான் டூ அவர்ஸ் கழிச்சு வந்தா போதும் தானே?...”

“டேய்… மச்சான்… கண்டிப்பா டூ அவர்ஸ் ஆகுமா?...”

“ஆமாடா…”

“ஹ்ம்ம்…”

“ஏண்டா என்னாச்சு…?..”

“என்னால உன்னைப்பிரிஞ்சு இருக்க முடியாதுடா… சீக்கிரம் வந்துடுடா…”

“அட படுபாவி… “

“ஏன் மச்சான் காலையிலேயே என்ன வாழ்த்துற?...”

“எல்லாம் என் விதி தான் வேற என்ன?...”

“விதி வலியது…”

“ஆமாடா… அது ஒன்னு தான் குறைச்சல் இப்போ…”

“ஹிஹிஹி… “

“இதுல உனக்கு சிரிப்பு வேறயா?...”

“சரி சரி சிரிக்கலை நான்… போய் தொலை… சீக்கிரம் வந்து சேரு…”

“தேங்க்ஸ்டா வானரமே…”

“சேம் டூ யூ ஆ…………………… தி………………………..”

முகிலனுடன் பேசிவிட்டு, கிளம்பியவனின் கார், அந்த அழகான மிகப்பெரிய கோவில் வாசலை அடைந்தது… கோபுரத்தை முதலில் தரிசித்தவன், அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களை வாங்க கடைக்குச் சென்றான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.