(Reading time: 39 - 77 minutes)

 

ண்ணா, பூ, தேங்காய், பழம் கொடுங்க அண்ணா…” என்று கேட்டான் ஆதி…

“அண்ணா, எங்க தேங்காய் பழம் ரெடியா?...”

“ரெடி சித்து… இந்தா… உனக்காகவே எடுத்து வச்சேன்…”

“சித்து, பக்கத்தில் ஒருத்தர் வெயிட் பண்ணுறார் பாரு… அவருகிட்ட முதலில் கொடுக்க சொல்லிட்டு, நமக்கு அப்புறம் வாங்கிட்டு வா…”

“நீ எதுக்கு இங்க வந்த?... நீ போ உள்ளே…”

“சரி சித்து…” என்ற குரல் கேட்டு திரும்பிய ஆதி, அங்கு யாரும் இல்லாதது கண்டு சற்று ஏமாந்து தான் போனான்…

“யாருகிட்ட பேசின சித்து?...”

“என் ஃப்ரெண்ட் கிட்ட அங்கிள்…”

“ஓ…. பட் இங்கே யாரும் இல்லையே…”

“அவங்க உள்ளே போயிருப்பாங்க…”

“ஓ… சரி சரி..” என்றவன் பணத்தை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றான்…

உள்ளே நுழைந்ததுமே, அவனுக்குள் இதமான நிம்மதி பரவியது…. இன்னதென்று இனம் பிரித்து சொல்ல முடியாத சுகந்தம் அவனுள் எட்டிப்பார்த்தது…

“வாம்மா… சாகரி… வழக்கம் போல பகவான் பேருக்கு தான அர்ச்சனை?...”

“ஆமா… சாமி… அவர் பெயருக்கே அர்ச்சனை பண்ணிடுங்க…”

“சரிம்மா…”

“ஹேய்… சித்து.. நந்து… சாமி கும்பிடாம அங்கே என்ன வேடிக்கை…?...”

“இல்ல சாகரி…  நான் தேங்காய் பழம் வாங்கும்போது ஒரு அங்கிள் இருந்தார்ல, அவர் வரார்… அதான் பார்த்துட்டிருக்கேன்…”

“சித்து… முதலில் சாமி கும்பிடு…” என்று அதட்டினாள் அவள்..

“சரி சரி… நீ கோபப்படாத…” என்றான் சித்து…

“சாகரி… சுத்தி கும்பிட்டு வரலாம்…”

“இரு நந்து… சாமி கும்பிட்டு, அர்ச்சனை தட்டு வாங்கிக்கிட்டு போகலாம்…” என்றாள் சாகரி

“இன்னும் விபூதி, குங்குமம் கூட நாம வாங்கலை நந்து…  இரு…” என்றான் சித்துவும்…

“அண்ணா அதெல்லாம் வந்து வாங்கிக்கலாம்… சாமிக்கு அலங்காரம் பண்ணிட்டிருக்காங்க… எப்படியும் இன்னும் 5 நிமிஷம் ஆகும்… அதுக்குள்ள நாம, பின்னாடி இருக்குற செடியில பூப்பறிச்சிட்டு வந்துடலாம் சாகரி… வா… ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள் நந்து…

அவள் கெஞ்சல் சாகரியை சம்மதிக்க வைக்க, “குருக்களே நாங்க இப்போ வந்துடுறோம்….” என்றபடி இவர்கள் நகரவும், ஆதி அங்கே வரவும் சரியாக இருந்தது…

“வாங்கோ…. செத்த நாழி இருங்கோ… பகவானுக்கு அலங்காரம் நடக்குது… அப்பறம் அர்ச்சனை பண்ணுறேன் ஆமா அர்ச்சனை யார் பேருக்கு?…”

“சுவாமி பேருக்கு தான்…” என்றான் ஆதி…

“நல்ல படியா பண்ணிடலாம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ….”

“சரிங்க…”

பொறுமையாக நின்று கொண்டிருந்தவனை யாரோ பார்ப்பது போல் தோன்ற பின்னே பார்த்தான்…. அங்கே சித்துவும் நந்துவும் நின்று கொண்டிருந்தனர் கையில் ஒன்றிரண்டு மல்லிகையுடன்…”

கையசைத்து கூப்பிட்டான் அவர்களை அருகில்…

“அங்கிள் உங்க பெயர் என்ன?...”

“ஆதர்ஷ் ராம்… உங்க பெயர் என்ன?...”

“என் பேரு நந்து… இவன் என் அண்ணன் சித்து…”

“சித்து தெரியுமே எனக்கு முன்னாடியே…”

“எப்படி!!” என்று தன் சின்ன கண்களை விரித்து கேட்டாள் நந்து…

“சித்துவை கடையில் வைத்து பார்த்தேன் நந்து…” என்று சிரித்தான் ஆதர்ஷ்…

“அங்கிள் நீங்க சிரிக்கும்போதும் அழகா இருக்கீங்க…” என்றனர் நந்துவும் சித்துவும்…

“அதென்ன சிரிக்கும்போதும்?...”

“ஏன்னா… நீங்க சும்மாவே அழகா இருக்கீங்க…”

“ஹ்ம்ம்… என்னை விட நீங்க தான் ரொம்ப அழகா இருக்கீங்க தெரியுமா?...” என்றான் ஆதி…

“நிஜமாவா அங்கிள்…!”

“நிஜம் தான் என் குட்டி ஃப்ரெண்ட்ஸ்…”

“ஹைய்யா… நமக்கு இன்னொரு ஃப்ரெண்ட் கிடைச்சாச்சு…” என்று குதித்தாள் நந்து…

“ஆமா… கையிலே என்ன பூ?... சாமிக்கு ஸ்பெஷலா?...”

“ஆமா… மல்லிப்பூ….”

“ஓ…. எனக்கு பிடிச்ச பூ….”

“ஓ… உங்களுக்கும் பிடிக்குமா?..” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் நந்து…

“ஹ்ம்ம்,,,, ஆமா நந்து…. சரி நீங்க யாருகூட வந்தீங்க?...”

“எங்க ஃப்ரெண்ட் கூட வந்தோம் அங்கிள்…”

“அதான் நாம இப்போ ஃப்ரெண்ட் ஆயிட்டோமே… இன்னும் ஏன் அங்கிள் சொல்லுற நந்து?...”

“ஹ்ம்ம்… பெரியவங்களை வா, போ சொல்ல கூடாதே அதான்…” என்றான் பவ்யமாக சித்து… (மயில் மட்டும் இதை கேட்டா, என்னை கொன்னே போட்டுருவா… நல்ல வேளை அவ வரல இன்னைக்கு… என்று மனதிற்குள் எண்ணியபடி)

“ஓ…. பெரியவங்களை சொல்ல கூடாது தான்… பட்.. உங்க ஃப்ரெண்ட் என்னை பேர் சொல்லி கூப்பிடலாம்…” என்றான் ஆதி புன்னகையுடன்…

“ஹ்ம்ம்… இப்போ என்ன பண்ண நந்து?...” என்று கேட்டான் சித்து…

“யோசிக்கணும் சித்து…”

“சரி நீங்க யோசிங்க… அப்போ நான் போறேன்…” என்று எழுந்து கொண்டான் ஆதி…

“அச்சோ… வெயிட்… போகாதீங்க… ப்ளீஸ்…” என்றாள் நந்து…

“ஹ்ம்ம்…”

“கொஞ்சம் குனிங்க…”

சரி என்றவன், அவள் அளவுக்கு மீண்டும் முட்டி போட்டு அமர்ந்தான்…

“ஹேய் நந்து…. கால் வலிக்க போது அவருக்கு… சீக்கிரம் சொல்லு….” என்றான் சித்து…

“சாரி…” என்று கெஞ்சுதலோடு அவனைப் பார்த்துவிட்டு, இங்கேயே இருங்க… உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஓகேயா?... பட் நான் வந்து சொல்லும்போது தான் கண்ணை திறக்கணும்…” என்றாள்…

“சித்து நீ போ… சீக்கிரம் வா…” என்று அவனை அனுப்பிவிட்டு, இங்கே ஆதியுடன் இருந்தாள் நந்து…

கண்ணைத்திறக்கலாம்… என்றதும் என்ன சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்ற எண்ணத்துடன், மூடிய கண்களை திறந்த இருவரும் சிலையாகினர் ஒரு சில நிமிடங்கள்…

“அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்” என்ற கூற்று அங்கே மெய்யானது…

அந்த நேரம் அலங்காரம் முடிந்து, சுவாமியின் திரை அகன்றது… ஒலிப்பெருக்கியில், இனிமையான பாடலும் ஒலித்தது…

“சீதா கல்யாண வைபோகமே…

ராமா கல்யாண வைபோகமே…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.