(Reading time: 39 - 77 minutes)

 

ஹேப்பி பர்த்டே அங்கிள்….” என்றபடி சத்தமிட்டு வாழ்த்தினார்கள் சித்துவும், நந்துவும் கையில் பெரிய பூங்கொத்துடன்… அவைகள் வானவில்லின் நிறங்கள் போன்று கலவையாக இருந்தது பெரிய பெரிய பூக்கள் மற்றும் சின்ன சின்னப் பூக்களுடனும்…

ஆதி-ரிகா இருவரும் மீண்டும் இந்த உலகிற்கு வந்தனர்…

“தேங்க் யூ சோ மச் சித்து நந்து….” என்றபடி ஆதி அவர்களுக்கு நன்றி கூறினான்…

“அங்கிள் நீங்க எங்களுக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது… இந்த தேங்க்ஸ் சாகரிக்கு தான் போய் சேரணும்… ஏன்னா அவ தான் இந்த ஐடியா கொடுத்தா” என்றாள் நந்து…

“சாகரி!!!...” என்று அவன் புரியாமல் பார்க்க,

“ஓ… சாரி… அங்கிள்… உங்களுக்கு இவ பேரு தெரியாதுல்ல, இவ எங்க ஃப்ரெண்ட் சாகரிகா சீதை… சாகரி… இவர் ஆதர்ஷ் ராம்…” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் நந்து…

(ஒருவரின் ஒருவர் பெயர் தெரியாமலே காதலில் விழுந்து விட்டனர் இருவரும்…. எனினும் அவனுக்கு அவள் சீதையாம்… அவளுக்கு அவன் ராமனாம்… ஹ்ம்ம்… அறியாமல் சொன்னார்களோ, அறிந்தே சொன்னார்களோ… ஆனால் இருவரின் பெயர்களும் அவர்கள் அழைத்துக்கொண்டதற்கேற்ப இருந்தது கடவுளின் செயலா?... ஹ்ம்ம்…இது தான் விதி போலும்… ராமன்-சீதை என இருவரும் சில நிமிடங்கள் வரை வாழ்ந்து வந்ததை என்னவென்று சொல்ல… ஹ்ம்ம்…)

“நல்ல பெயர் பொருத்தம்…. ராமனுக்கேற்ற சீதை தான்…” என்றான் மெலிதாய் அவளுக்கு மட்டும் கேட்கும்படி…

அவளை வெட்கம் சூழ்ந்து கொண்டது முழுமையாய்… எதுவும் பேச நா எழாமல் மீண்டும் தரையை வெறித்தாள்…

அவளின் வெட்கம் அவனுக்கு உவகையாய் இருந்தது… அணு அணுவாய் அவளின் வெட்கத்தை ரசித்து மகிழ்ந்தான்… பொக்கிஷமாய் நெஞ்சில் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தான் அவளைப் பார்த்த நொடி முதல் ஒவ்வொன்றாக அனைவற்றையும் மிக மிக மெதுவாக இதமாக…

“அங்கிள் என்னாச்சு…. நாங்க உங்களுக்கு இண்ட்ரோ கொடுத்தோம்… அதுக்குள்ள மறந்தாச்சா?...”

“ஹ்ம்ம்… சாரி சித்து… மறக்கலை… வேற ஒரு யோசனை… அதான்…. ஹ்ம்ம்… வணக்கம்…” என்றபடி அவளைப் பார்த்தான்… அவளோ பெரும் தவிப்புடன், “வணக்கம்…” என்று இரு கைகுவித்து சொன்னாள்… அவனுக்கு அது மலரை நினைவு படுத்தியது… ஆம்… தாமரை மொட்டாக அவள் கை கூப்பிய விதம் அவனை கவர்ந்தது வெகுவாய்…

“அங்கிள் உங்களுக்கு இந்த ஊர் தானா?...”

“இல்லை நந்து… இங்க நான் வேலைப் பார்க்கிறேன்…”

“ஓ… என்ன வேலை?... நம்ம சாகரி கூட வேலை தான் பார்க்குறா?...” என்றான் சித்து…

“நான் ஐ.டி. கம்பெனியில்….” என்று ஆதி சொல்வதற்கு முன்… “ஓ… நீங்களும் சாகரி மாதிரி அதே வேலையா… ஹ்ம்ம்… நீங்களும் அந்த கம்பெனி தானா?...” என்று யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சித்து அந்த நிர்வாகத்தின் பெயரையும் சொல்லிவிட்டான் சட்டென்று…

ஆதி புன்முருவலுடன், “ஓ…. ஹ்ம்ம்… அப்போ இனி அடிக்கடி பார்க்கலாம்…” என்றான் அவளைப் பார்த்தபடியே..

“நம்ம பார்க்கலாமா அங்கிள்?...” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் நந்து…

“ஹ்ம்ம்… இந்த கோவிலுக்கு வரும்போது கண்டிப்பா பார்க்கலாம்… சரியா?...” என்று நந்துவிடம் கூறினான்…

“ஹ்ம்ம்…ஓ..கே…. அங்கிள்… சரி நேரமாச்சு… நாங்க கிளம்புறோம்…” என்றனர் இருவரும்…

ஆதிக்கும் ரிகாவிற்கும் அப்போது தான் எட்டிப்பார்த்தது காதலின் பிரிவு முகவரி…

“பார்த்து முழுதாக அரைமணி நேரம் கூட ஆகவில்லை… அதற்குள் இந்த பிரிவு ஏன் வலிக்கின்றது எனக்கு…” என்று இருவரும் மனதிற்குள் புழுங்கியபடி ஒருவரிடம் ஒருவர் விடைப்பெற்றுக்கொண்டிருந்தனர் கண்களினால்…

“சித்து… மறுபடியும் எப்போ பார்க்கலாம்…” என்றான் ஆதர்ஷ்…

“நெஃக்ஸ்ட் ஃப்ரைடே, ஆர், சண்டே அங்கிள்…” என்றாள் நந்து…

“என்ன ரெண்டு டே சொல்லுறீங்க?...”

“ஆமா அங்கிள்… நாங்க எப்ப வேணும்னாலும் வந்து பார்த்துட்டு போவோம்… இங்க பக்கத்தில தான் எங்க வீடு இருக்கு… சோ… சாகரிகிட்ட சொன்னா போதும், உடனே எங்களை இங்கே கூட்டிட்டு வந்துடுவா…” என்றான் சித்து..

“ஓ… ஐ..சி… சரி… ஃப்ரைடே வர முடியுமான்னு தெரியலை… பட் சண்டே கண்டிப்பா வருவேன்… ஓகேயா?...”

“டபுள் ஓகே… அங்கிள்.. டாட்டா… சீ யூ…” என்று இருவரும் சொல்லிவிட்டு சாகரியை இழுத்துச் சென்றனர் ஆதியிடமிருந்து பிரித்து…

கோவிலை விட்டு வெளியே வரும் வரைக்கும் அவள் அவனை திரும்பி பார்க்கவில்லை… யாரேனும் பார்த்திடுவார்களோ என எண்ணிக்கொண்டு அவனை அவள் பார்க்கவில்லை… மேலும் அவரிடம் ஒரு வார்த்தை, வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வரவில்லையே, என்ன நினைத்திருப்பார் என்னை?.. சே… என்று தன்னையே கடிந்து கொண்டாள்… இப்போது என்ன செய்வது?... அவரிடம் பேச ஏதேனும் வழி காட்டு ஶ்ரீராமா… என்று வேண்டவும் செய்தாள்…

“ஹை… ஐஸ் க்ரீம்… ஹேய் சாகரி… வா போலாம்…” என்று அவளிடம் சித்து கேட்க,

“சரி… இரு…” என்று அர்ச்சனைக்கூடைக்குள் இருந்து பணத்தை எடுத்தவள், அப்போது தான் அதனை கவனித்தாள்… “இது நான் வாங்கினது இல்லையே… யாரோடதா இருக்கும்?... குருக்கள் எனக்கும் அவருக்கும் மட்டும் தான அர்ச்சனை செய்து கொடுத்தார்… அப்போ இது…?...” என்றெண்ணியவளுக்கு சந்தோஷம் தாளவில்லை… நன்றி ஶ்ரீராம் என்று அவருக்கு சொல்லிவிட்டு, சித்து நந்துவிற்கு, ஐஸ் வாங்கி கொடுத்து கோவிலின் உள்ளே இருந்த திண்ணையில் அமர வைத்து, அருகில் இருந்த தெரிந்த, வழக்கமாக பூ வாங்கும் அக்காவிடம் சொல்லி இவர்களை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா, தான் இப்போது வந்துவிடுவேன் என கூறி விரைந்து அவர்கள் நால்வரும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றாள்… அவர் இருப்பாரா இல்லை கிளம்பியிருப்பாரோ என்று நினைத்தவளுக்கு அந்த நினைவே கசந்தது… இல்லை சென்றிருக்கமாட்டார்,,, என்று நம்பிக்கையுடன் போனவள் அங்கே சிலையாகிப் போனாள்…

அவள் செல்வதையே ஒரு வித இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன், சற்று முன் அவள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கினான்… அங்கு சென்றவன் அவளே அங்கு இருப்பது போன்று கற்பனை செய்து பார்த்தான்… பின், ஒரு பெருமூச்சுடன் கிளம்ப எத்தனித்தவனின் கண்களில் அந்த மலர்கள் தென்பட்டது… அவளின் தலையில் சூடியிருந்த சில மல்லிகைப்பூக்கள் அங்கே உதிர்ந்திருந்தது… அதை மெல்ல வருடியபடி எடுத்தவன், வாசம் பிடித்தான்… பின்பு அதனை நெஞ்சோடு சேர்த்துவைத்துக்கொண்டு, ”உன் நினைவாக இது என்னிடமே இருக்கட்டும் சீதை, நீயே என்னருகில் உள்ளது போல் இருக்கிறது எனக்கு… உன் கூந்தலில் இதே போன்று மல்லிகையை நான் என்று சூடி அதை வாசம் பிடிக்க போகிறேன்?... நான் உன்னவனாக உன்னை விரைவில் சேர விருப்பம் கொள்கிறேனடி பெண்ணே… ஹ்ம்ம்… என் புலம்பல்கள் உன்னிடம் சொல்லுமா என் மனதை… என்னைக்கொல்கிறாயே ஏனடி என் சீதை…” என்று வாய் விட்டு மெதுவாக சொல்லியவன் அந்த பூக்களை தனது சட்டைப்பையினுள் வைத்துக்கொண்டான்…

அவன் அவள் அமர்ந்திருந்த இடம் அருகே சென்றதும் அவளுக்குள் ஆர்வம் எட்டிப்பார்க்க, அவனின் பின்னே இருந்த தூணில் மறைந்து அவன் செய்வதை வேடிக்கைப்பார்த்தாள்… அவனின் செய்கையும், அவனின் வார்த்தையும் அவளை சிலையாக்கியது… காதல் மனிதரை இந்த அளவு மாற்றும் என்பதை அவள் நேரடியாக கண்டு ஊமையாகிப்போனாள்…

“அச்சச்சோ, மக்கு சாகரி… நீ எதுக்கு இந்த வந்த?, இப்போ நீ செய்யுறது என்ன?... போடி… சீக்கிரம்… அவர் மட்டும் கிளம்பியிருந்தார்ன்னு வை… உன்ன கொன்னுடுவேண்டீ பாத்துக்கோ…” என்று அவளை அவளே திட்டி பட்டென்று தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்டவள், அந்த நேரம் தூணின் அருகே வந்த ஒருவரின் மேல் மோத போனாள்… சட்டென்று சமாளித்து, விரல் நுனிகூட படாத அளவு விலகி நின்றவளுக்கு ஏனோ மூச்சு வாங்கியது… அப்பாடா… மோதலை… என்றவள் கண்களை திறந்தாள் சாரி என்ற வார்த்தையுடன்…

இங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்திடும் எனக்கு, கிளம்பு ஆதர்ஷ் என்று அவனுக்கு அவனே கட்டளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கும்போது, “இனி பைத்தியம் வேறு உனக்கு தனியாக பிடிக்க வேண்டுமா?...” என்று அவன் மனசாட்சி அவனை கேலி செய்தது… சிரித்துக்கொண்டே வந்தவன், தூணின் பின்னிருந்து வெளிப்பட்டவளை கவனிக்கவில்லை… சட்டென்று யாரோ மோத இருப்பது போல் தோன்ற, யார் என்ற எண்ணத்துடன் பார்த்தவனுக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியும் சேர்ந்தே வந்தது… சரி என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று பேசாமல் இருந்தவன், அவளின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் பதிய வைத்துக்கொண்டான்… அவளின் மோதல், சமாளிப்பு, விலகி நின்ற விதம், அவளின் மூச்சுக்காற்று, கடைசியாக அவளின் சாரியும்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.