(Reading time: 39 - 77 minutes)

 

மோதாமல் போனதில் இவ்வளவு ஆனந்தமா?...”

சாரி என்று தரையோடு தரையாய் சொன்னவள், இந்த வார்த்தையை கேட்டதும், “இந்த குரல் அவருடையது ஆயிற்றே…” என்றபடி எதிரே நின்றிருந்தவனை பார்த்தாள் நேரே…

அவனைப் பார்த்ததும் ஒரு பெரிய நீரூற்று தன்னுள் ஆர்ப்பரிக்கும் உவகை கொண்டாள்… அவளின் வியப்பான பார்வை அவனை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுக்கு பறைசாற்றியது துல்லியமாய்…

“மோதாமல் போனதில் ஆனந்தமான்னு கேட்டேன்…”

“....”

“என்ன சொல்ல மாட்டியா?...”

“இல்ல… அது…” என்று கீழே பார்த்தபடி கூறினாள் அவள்

“உனக்கு இவ்வளவு சந்தோஷமா?... பட் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்… நீ விலகி நின்னது…”

“இல்ல… வந்து நான் யாரோன்னு….” என்று படபடக்கும் விழிகளை மறைத்தபடி அவனை கொஞ்சம் பார்த்தும் கொஞ்சம் கீழே பார்த்தும் பதில் சொன்னாள்…

“ஓ… அப்போ நான் என்று தெரிந்திருந்தால்?...”

“……”  வெட்கத்துடன் பேசாமல் இருந்தாள் அவள்…

“சொல்லு… தெரிந்திருந்தால்…” என்று அவனும் அவளின் வெட்கத்தை ரசிக்க முற்பட, எங்கே அவள் தான் எதற்கெடுத்தாலும் தரையைப் பார்க்கின்றாளே… ஹ்ம்ம்…  

“பேசாமல் நான் தரையாக பிறந்திருக்கலாம்…” என்றான் அவளுக்கு நன்றாக கேட்கும்படி…

“ஏன்?... அப்படி சொல்லுறீங்க…” என்றவள் அப்போதும் கீழே தான் பார்த்திருந்தாள்..

“பின்னே நீ என்னை விட அதை தான் அதிகமாய் பார்க்கின்றாய்… அதனால் தான்…” என்றான் கேலியுடன்..

அதைக்கேட்டவள் லேசாக சிரித்தாள்… பின்,

“ப்ளீஸ்ங்க… நான் கிளம்பணும்…”

“ஹ்ம்ம்… கிளம்பு… நான் உன்னை பிடிச்சு நிறுத்தலையே…”

“எப்படி கிளம்புறதாம்?...” என்றபடி அவனை பார்த்தாள்…

“பாருடா… முன்னேற்றம் தான்… ஹ்ம்ம்… ஏன் நான் கிளம்ப விடாம என்ன செஞ்சேனாம்…?...”

“நீங்க எதும் செய்யலை…”

“அதான நான் தான் நீ மோத வந்தப்போ கூட ஒன்னுமே செய்யலையே…”

“என்னங்க… ப்ளீஸ்…” என்றாள் வெட்கத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டே…

“ஹ்ம்ம்… சரி… சொல்லுடா… என்னாச்சு?..” என்று கேட்டான் பரிவாக…

“ஹ்ம்ம்… வந்து… குருக்கள்…. அர்ச்சனைத்தட்டை மாற்றி கொடுத்துட்டார்… அதான்… வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்று தயங்கி தயங்கி சொன்னாள்…

“ஹ்ம்ம்… சரி… அவர்கிட்ட கேட்டு வாங்கு….”

“நான் ஏன் அவர்கிட்ட கேட்கணும்?...”

“நீ தான இப்ப சொன்ன?, தட்டு மாறிடுச்சுன்னு…”

“ஆமா… அது யாருகிட்ட இருக்கும்னு தெரிஞ்ச பின்னாடி குருக்கள் ஐயா கிட்ட எதுக்கு கேட்கணும்?...”

“ஓ.. அதுவும் சரிதான்…”

“ஹ்ம்ம்ம்…”

“சரி நீ போய் வாங்கிட்டு வா…”

“யாருகிட்ட…?...”

“அதான் சொன்னியே டா, உனக்கு அந்த தட்டு மாற்றிக்கொண்டு போனவங்களை தெரியும்ன்னு…”

“அய்யோ ராமா…” என்று தலையில் கைவைத்துவிட்டாள் அவள்…

“என்னாச்சுடா… தலைவலிக்குதா?...” என்றான் அவன் மெய்யான அக்கறையுடன்…

“என்னப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?...” என்று இடுப்பில் கைவைத்து  ஒரு புருவம் உயர்த்தி, தோரணையாக கேட்டவளைப் பார்த்தவன் சொக்கிதான் போனான்… அவன் கோவிலில் நிற்கிறான் என்பதையும் மறந்து…

அவனின் முன் கை ஆட்டியவள், “என்னாச்சு,…” என்றாள்..

“ஹ்ம்ம்… இப்பவே உன்னை நம் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடனும்னு தோணுது… என் மனைவியா…” என்றான் கரையில்லாத காதலுடன்…

அவன் அப்படி சொல்லுவான் என்று எதிர்ப்பார்க்காத அவளுக்கு அவளை மீறி வெளிவந்த துடுக்குத்தனம் மீண்டும் அவளுள் அடங்கி, அவளின் நாணம் மேலே வந்தது…

புன்னகையுடன் அவளையும் அவளின் நாணத்தையும் ரசித்துக்கொண்டிருந்தான் மெய்மறந்து…

“ப்ளீஸ்ங்க…. சித்து நந்து வெயிட் பண்ணுறாங்க…”

“சரி… அதுக்கு நான் என்ன பண்ணனும்?... ஹ்ம்ம்..” என்று கேள்வியாய் அவன் அவளைப் பார்க்க,

“இப்படி அர்ச்சனைத்தட்டு உங்ககிட்ட இருந்தா நான் எப்படி போறதாம்?...”

அப்போது தான் அவனின் கையில் இருந்ததை பார்த்தவன்,

“ஓஹோ… அதான் என்னவள் என்னைத் தேடி வந்தாளா?..ஹ்ம்ம்” என்று சிரித்தான் அவன்…

“ஹ்ம்ம்… குடுங்க… ப்ளீஸ்…”

“ஏன் இது எங்கிட்ட இருந்தா உனக்கு எதும் பிரச்சினையா?...”

“இல்ல…”

“அப்புறம் என்ன?... நானே இத வச்சிக்கிறேன் உன் நியாபகார்த்தமா…”

அதைக் கேட்டதும் வாய் பொத்தி சிரித்தாள் அவள்…

“ஏன் டா சிரிக்குற?...”

“இல்ல ஒன்னுமில்லை…”

“ஹ்ம்ம்… சொல்லமாட்டியா எங்கிட்ட?...”

“இல்ல… என் நினைவா, இது மட்டும் தான் உங்ககிட்ட இருக்கா?... என்று அவனின் சட்டைப்பையை பார்த்தபடி கேட்க..

அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்தவனுக்கு புரிந்து போயிற்று… ஆக… இவள் அனைத்தையும் பார்த்திருக்கிறாள்… சரி தான்…

“ஹ்ம்ம்… எத்தனை இருந்தா என்ன?... எல்லாமே என் சீதையுடையது தானே…” என்றான்…

“சரி… அப்போ நான் கிளம்புறேன்…” என்றாள் அவள் மெதுவாக…

“ஹ்ம்ம்… கிளம்பணுமா?...” என்றான் அவன் சோகமாக…

“ப்ளீஸ்ங்க… இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா, அப்புறம் நான்… நான்…” என்றவள் அழுதே விட்டாள்…

அவளின் கண்ணீர் கண்டதும் அவனுக்கு கோபமும் நிறைவும் தலைக்கேறியது… அவனைப் பிரிய முடியாமல் அழுகிறாள் என்பது அவனுக்கு நிறைவை தந்தாலும், என்னவள் நான் இருக்கும்போதே எப்படி அழலாம்.. அவளை அழ வைத்து பார்ப்பதற்கா நான் அவளை நேசிக்கின்றேன்…?... என்றவனுக்கு அவனை எண்ணியே கோபமும் மூண்டது…

“குட்டிம்மா… ப்ளீஸ்டா… அழாதே… ப்ளீஸ்டா…” என்றவன் கைகள் அவனையும் மீறி அவளின் கண்ணீர் துடைக்க தானாக உயர்ந்துவிட்டது…  பின், இந்த தொடுகை அவளுக்கு ஆறுதல் அளிக்கும் தான்…. இருந்தாலும், கணவன் என்ற ஸ்தானத்தை நான் பெற்ற பின்னரே நடக்கட்டும்… என்று மிக சிரமப்பட்டு கைகளை எடுத்துவிட்டான்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.