“வானதேவதை ஆதவனை எதிர்பார்த்து காத்திருக்கும் காட்சிக்காக அவன் தூங்காமல் எத்தனையோ நாட்கள் அந்த அதிகாலை விடியலை ரசித்திருக்கின்றான் தான்… எனினும், அவளைப் பிரிந்த பிறகு அவனுக்கு அந்த காலை வேளை இனிக்கவில்லை… மாறாக அவளை அதிகம் நினைவூட்டி கொன்றது கொடூரமாய்… இருந்தும் அந்த வலியை தாங்கி கொண்டு தினமும் அதை மனமார அனுபவிக்கின்றான்… ஆனால் இன்று, அந்த காட்சி மீண்டும் அவனுக்கு முழு உவகை தராவிட்டாலும் அவனது சீதாவைப் பார்த்து விட்டானே… அந்த சின்ன சந்தோஷத்துடன் அந்த காட்சியை கண்டான்….
முகிலன் அப்போது தான் அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் இந்த காட்சிக்காக… மேலும் அவன் அழகு என்றும் சொல்லிகொண்டிருந்தான்… என்னவளை நேற்றுப் பார்த்த பிறகே என் முகத்தில் இன்று இந்த சின்ன சிரிப்பு வந்திருக்கிறது… வலியும் தருகிறது தான் இருந்தும் சிரிக்கின்றேன்…. ஹ்ம்ம்… எனக்கு பெண் கொடுக்க, க்யூவில் யாரும் நிற்க வேண்டாம்டா, நானே எனக்கு பெண்ணும் பார்த்து பொறுமையுடன் இருந்தும் பார்த்து விட்டேன். ஹ்ம்ம் ம்ம்… எங்கே… ஒரு சிறு அசைவு கூட காட்ட மாட்டேன் என்கிறாளே அவள் தான்… என்றே தன் மனதினுள் புலம்பியவன், வெளியே அதை மறைத்து முகிலனிடம் வம்பிழுத்து ஓட்டம் பிடித்தான்…
தகப்பன் நேராகவே கேட்டும், தனக்கு விருப்பமில்லை என சொல்லிவிட்டு, கனத்த இதயத்துடன் அபியைத் தேடிச்சென்றான்… தனது தாய்-தந்தை கேட்டு ஒரு விஷயம் அவன் மறுத்திருக்கின்றான் என்றால், அது அவனின் திருமண விஷயம் தான்… வேறு வழி இல்லையே அவனுக்கு… வேறொருத்தி என்று எண்ணுவதற்கு கூட அவன் மனம் எண்ணவில்லை…
அபியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தவன், அவளின் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை தான்… “நீ ஏன் என்னை அபின்னு சொல்லமாட்டிக்குற?” என்றதும் அவனுக்குள் சட்டென்று ரிகாவின் நினைவு… அவளைப் பிரிந்த பிறகு அவன் அபியை அபி என்று பெயர் சொல்லி அழைத்ததில்லை… எங்கு இருந்தாலும் சுற்றி சுற்றி உன் நினைவே வருகிறதே ஏன் சீதை?... என்று போலியாக சலித்துக்கொண்டு அபியை வகுப்பிற்குள் கொண்டு விட்டான்..
ஷன்வியிடம் பேச சென்றவன் திடீரென அங்கிருந்து கிளம்பி, ஷன்வியைப் பற்றி தகவல்களை சேகரித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று தந்தையிடம் விவரத்தை சொன்னான்… பெற்றவர்களும் சம்மதம் தரவே, சிறிது ஆசுவாசம் அடைந்தான்… தந்தை தன் விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பினான்… ஆனால் கோதை-சுந்தரத்தின் உறுதியான முடிவு அவனை அசைத்துப்பார்த்தது… அந்த நேரம் முகிலனும் அவ்வாறு பேசுவான் என்று அவன் கொஞ்சமும் எண்ணவில்லை… சரிதான் பார்த்துவிடலாம், சீக்கிரம் இங்கிருந்து வெளிநாடு சென்றுவிட வேண்டும், அப்போது தான் இவர்கள் என்னை வற்புருத்த மாட்டார்கள் என்று நகரப் போனவனை, கோதை சொன்ன பெயர் கட்டி போட்டது…
ரிகா என்ற தன்னவளின் பெயரை கேட்டதுமே, அவனுள் கோடி கோடியாய் மத்தாப்பு ஒளிர்ந்தது… “இந்த பிறவியில் அவள் ஒருத்தி மட்டுமே உனக்கு மனைவி… அதையும் நீ பார்க்கத் தானே போகிறாய்…” என்றனர் அவனைப் பெற்றவர்கள்… ஆம்… உலகமே தலை கீழாய் நின்றாலும், அவன் அவளுடைய சீதையை தவிற வேறொருவருக்கும் மாலை சூட மாட்டான்… எனினும் அவளின் பிரிவு, அவனுடைய அந்த சிறு நேர நிறைவை கூட பறித்தது… அதனாலேயே முதலில் அவளிடம் சம்மதம் வாங்குங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றவனின் கார் அந்த மலைப்பிரதேசத்தின் வளைவுகளில் செல்லும்போது சுற்றியுள்ள அனைத்தும் அவளையே நினைவூட்ட, அப்போது அவனுடைய காரில் ஒலிக்கவிடப்பட்ட பாடல் அவனை மேலும் உருக்கியது…
“வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி, தேன் கனிகளை தேடுது…
ஆஷைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…
அழகு மிகுந்த இராஜ குமாரி மேகமாக போகிறாள்…
சரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்…
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்?
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?..
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கம் சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக்காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி…
(தினம் காலையில் அவன் பார்க்கும் காட்சி தெரிந்தது)
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா, பெண் போலே ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா… ஆனந்தம்…. அம்மம்மா… ஆனந்தம்…”
ஷன்வி-அவ்னீஷ் திருமண சம்மதம் அவனுக்கு ஒரளவு கவலை அகற்றியது… நான் ஆசைப்பட்ட பெண்ணை தான் என்னால் திருமணம் செய்ய முடியவில்லை… என் தம்பிக்கும் அந்த நிலை வர நான் விட மாட்டேன் என்ற வைராக்கியமே ஷன்வியின் குடும்ப தகவல்களை ஓரே நாட்களில் சேகரிக்க தெம்பு அளித்தது…
அவனுக்கு தெரியும் ரிகா இங்கு இருப்பாள் என்று… அவளைப் பார்ப்பதற்காக தான், அவன் இப்போது ஷன்வியைப் பார்க்க போவது… என்ன செய்வது.. அவள் இல்லாத போதே அவளைப் பார்க்க வேண்டுமென்ற தவிப்பு அவனுள் பேரலையாய் எழும்… நேற்று அவளைப் பார்த்து விட்டு, இந்த பாழாய்ப் போன மனது அவளை நேரில் மீண்டும் தரிசிக்க முரண்டியது அவனை…
ஷன்விக்கு பதிலாக ரிகா இருந்தது அவனுக்கு வசதியாய் போனது… அவளைப் பார்த்ததும் அவன் உள்ளம் குதியாட்டம் போட்டது… ஒரு பாடல் வரிகள் கூட அவனுக்கு தோன்றிற்று…
“ஓர் குழந்தையின் மகிழ்ச்சியைப் போலவே உன்னை விடுமுறை தினமெனப் பார்க்கிறேன்… என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே…”
ஹ்ம்ம்.. என்று யோசித்துக்கொண்டே அவளுடன் பேச்சு கொடுத்து, அவளையும் கூட அழைத்துச்சென்று, அவளுடன் தனியே பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தி அவளுடன் பேசினான்… அவள் மற்றவர்கள் முன் என்னை தெரியாதது போல் நடித்தாள் சரி,,, இன்று என் முன்பும் ஏன் என்ற குழப்பத்துடன் ஓரிரு கேள்விகள் கேட்டான்… அதற்கும் அவள் ஓரிரு வார்த்தையில் விடையளிக்க அவனது பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது… நல்ல வேளை அந்த நேரம் அவ்னீஷ் வர, காற்றில் பறந்த பொறுமையை மீண்டும் இழுத்துபிடித்து தனக்குள் வைத்து கொண்டான்…. பிறகு வந்த விஷயத்தைக்கூறி, அவர்களின் முகத்தில் பூரிப்பை பார்த்தவன் நிறைவுடன் அங்கிருந்து அகன்றான்…
தன் பின் யார் வருவது என்றபடி திரும்பியவன், ரிகாவை அங்கே எதிர்பார்க்கவில்லை… அவன் மேல் மோதுவது போல் வந்து விரல் நுனி கூட படாமல் அவள் நின்ற விதம் அவனுக்கு கோபமும், வியப்பையும் தந்தது… எனவே பொறுமையுடன், அவளை நிதானமாக பார்த்தான்… அவள் நன்றி தான் சொன்னாளே தவிர, அவனை கண்டு கொள்ளவில்லை… அது தெரிந்து தான், போகிறேன் என்றான் வேண்டுமென்றே… அவளும் அவன் எதை நினைத்து அதை சொன்னானோ, அதை அக்சு பிசராமல் செய்து சொன்னாள்… இந்த சின்ன திருப்தியாவது எனக்கு தந்தாயே போதும்டா… என்று மகிழ்ந்தபடியே வீட்டில் ஷன்வியை பிடித்து போனது தான் முதல் காரணம்… அப்புறம்… என்று நிறுத்தி அவளைப் பார்த்தவன், நீ தான் என்று அவனுக்கே அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்…
அவளிடம் விடைபெற்று வந்தவனின், மனமெல்லாம் அவளே வியாபித்திருந்தாள்… என் மீது மோதினால் நீ உடைந்து போவாயா?, இல்லை கரைந்து தான் போவாயா?... ஏன் சீதை… இந்த இடைவெளி?... போய் வா என்று சொல்ல சொல்கிறாய்… இதில் மட்டும் தான் உனக்கு என் மேல் அக்கறையா?... வேறெதிலும் இல்லையா?... நேற்று என்னை பார்த்த போது உன் விழியின் ஓரம் ஒரு துளி நீர் கசிந்ததே…. அது எதற்காக?... இன்று இந்த யாரோ போன்ற உரையாடலும் ஏன்?...
தள்ளாடும் அவன் மனம், கண்களில் காதல் சுமந்து, தினமும் அவளால் தன்னுள் சேரும் மணத்தையும் அனுபவித்து நுகர்ந்தான்… நீ சென்று விட்டாய் என்னை விட்டு… எனினும் என் வாழ்க்கை நதி என்றும் போல் ஓடிக்கொண்டிருக்கின்றது… உன் வாசத்தை என்னுள் பரப்பி, எனக்குள் காதல் கணத்தை விதைத்து போகிறாய்…