(Reading time: 12 - 23 minutes)

18. என்னுயிரே உனக்காக - சகி

செல்போனின் நிரஞ்சனை தொடர்புக் கொண்டான் ஆதித்யா.'ஸ்விட்ச் ஆப்'என்று வந்தது.மீண்டும் அழைத்தான்.அதே பதில் தான்!!!வசீகரனுக்கு தொடர்பு கொண்டான் யாரும் எடுக்கவில்லை.

"எடுக்க மாட்டிங்கிறாங்களே!"

"சரி...தலை வலிக்குதுன்னு சொன்ன!போய் தூங்கு!"

"இல்லடா செல்லம்!"

Ennuyire unakkaga

"போ ஆதி!"

"போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க!"

"இல்லை அம்மூ!"

"போங்க....தூங்கி எழுந்திரிங்க!"

"சரி...போன் வந்தா பேசு!"

"சரிங்க."-ஆதித்யா,தன் அறைக்கு சென்று,சிறிது நேரம் உறங்கினான். ஆனாலும்,அவன் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு,உறக்கம் அவனை தழுவியது.

உறங்க ஆரம்பித்தவன் எவ்வளவு நேரம் உறங்கி இருப்பான் என்று தெரியாது....

"கண்ணா...எழுந்திருப்பா!!சாப்பிட வா!"-என்ற போது கண் விழித்தான்.

"டைம் என்னம்மா?"

"மணி 1 ஆக போகுது!"

"நீ சாப்பிட்டியா?"

"இல்லை கண்ணா! நீ முதல்ல வா!"-கண்களை கசக்கி கொண்டே எழுந்தான் சரண்.

"நீ போம்மா...நான் குளிச்சிட்டு வரேன்!"

"சரிப்பா...சீக்கிரமா வா!"-என்று ராஜேஸ்வரி சென்றுவிட,எழுந்து குளிக்க சென்றான் சரண்.

சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி வந்தவன் மதுவிடம்,

"ராகுல் சாப்பிட்டானா??" என்றான்.

"சாப்பிட்டாங்க...நீங்க வாங்க!"

"அம்மா?"

"இல்லைங்க...அத்தை உங்களை சாப்பிட சொன்னாங்க...அவங்க கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுறாங்களாம்!"-மதுவின்,கையை பிடித்து தன்னருகே அமர வைத்து,

"நீ சாப்பிட்டியா அம்மூ?"

"இல்லைங்க...நீங்க முதல்ல சாப்பிடுங்க.."-என்று அவனுக்கு பரிமாறினாள்.

"அம்மூ!"

"என்னங்க?"

"ஞாபகம் இருக்கா?சின்ன வயசில நீ எனக்கு ஊட்டி விட்டியே!இப்போவும் அதே மாதிரி ஊட்டி விடுறீயா?"-அவள்,சில நொடிகள் எதையோ சிந்தித்தாள்.பின்,

"சரிங்க..."என்றாள்.மதுபாலா ஊட்டிவிட,சரண் அமைதியாக சாப்பிட்டான். அங்கே நடக்கும் காதல் காவியத்தை சற்றே தூரத்தில் இருந்து ராஜேஸ்வரி கண்டார்.அவர் மனம் இலேசானது.ஏதோ ஒரு நம்பிக்கை,தன் மகனை பத்திரமாய்,அன்போடு, அரவணைப்போடு,தனக்கு பின் பார்த்துக் கொள்ள ஒருத்தி இருக்கிறாள் என்ற நிம்மதி அவர் கண்களில் தெரிந்தது.

சரண் சாப்பிட்டு முடித்திருந்தான்.

"ம்...நீ சாப்பிடு அம்மூ!"

"இல்லைங்க...நான் அத்தைக் கூட சாப்பிடுறேன்.நீங்க நிரஞ்சன் கூட பேசணும்னு சொன்னீங்க?"

"ஆமா...அம்மூ...போன் எடுத்துட்டு வா!"

"சரிங்க..."-அவள், கைப்பேசியை எடுத்து வந்து தந்தாள்.

மீண்டும் நிரஞ்சனுக்கு தொடர்பு கொண்டான்.

இம்முறை அவன் எடுத்தான்.

"ஹலோ.."

"டேய்!ஏன்டா ஃபோனை ஆப் பண்ண?"

"ஆதி..."

"என்னாச்சுடா?"

"நீங்க எல்லாரும் கொஞ்சம் சென்னைக்கு வரீங்களா?"-அவன்,பேச்சில் ஒரு விரக்தி,சோகம்,வெறுப்பு தெரிந்தது.

"என்னாச்சுடா?"

"ஆதி..."

"சொல்லுடா!"

"அது..."

"சொல்லு!"

"ரகு..."

"ரகு?ரகுக்கு என்ன?"

"ரகு இறந்துட்டான் ஆதி!"-ஆதித்யா இடிந்து போனான்.அவன், கையிலிருந்த கைப்பேசி கீழே விழுந்து நொறுங்கியது.

"என்னங்க?என்னாச்சுங்க?"-அவனது இந்த செய்கையை கவனித்த ராஜேஸ்வரி, அவனிடம் வந்து,

"கண்ணா!என்னாச்சுப்பா?" என்று கேட்டார்.மதுவின், கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ!"

"மது!"

"என்னாச்சு?அவர் ஏன் எதுவும் பேசாம,இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்?"-அவன்,விஷயத்தை அவளிடம் சொன்னான். ஸ்தம்பித்துப் போனாள் மது.

"எ...எப்படி?"

"காஷ்மீர்ல அவன்,வந்த காரணத்தை தெரிந்து கொண்டே சிலர் வெடிகுண்டு வச்சி..."-அதற்கு மேல் அவனால்,பேச முடியவில்லை.

"ரகுவோட உடல் கூட கிடைக்கலை."

"என்ன சொல்றீங்க???இதை நடக்க எப்படி விட்டிங்க?"

"............"

"எப்போ நடந்தது?"

"காலையில தான் விஷயம் தெரிந்தது.உடனே கிளம்பி வாங்க...ப்ளீஸ்!"-மதுபாலா இணைப்பை துண்டித்தாள்.

"து?என்னாச்சும்மா?"

"அத்தை..."

"என்னம்மா?"

"ரகு..."

"ரகுக்கு என்ன?"

"ரகு இறந்துட்டாராம் அத்தை."-(இது தான் அந்த முக்கிய திருப்புமுனை வாசகர்களே!!!!இதைப் படித்தவுடன்,பலருக்கு என் மேல் பயங்கர கோபம் வந்திருக்க கூடும்,பலர் என்னை திட்டி தீர்த்திருப்பீர்.அதற்காக தயவு கூர்ந்து மன்னித்துவிடுங்கள்!)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.