2 நாட்கள் நகர்ந்தன.....
ஆதித்யா யாருடனும் சரியாக பேசுவதில்லை....
"சரண்..."-மகேந்திரன்.
"ம்...சொல்லுங்க மாமா!"
"என்னப்பா யோசிச்சிட்டு இருக்க?"
"ஒண்ணுமில்லை மாமா!"
"எனக்கு மது உன்னை எப்படி சமாதானம் படுத்துவான்னு தெரியாது!!!ஆனா,மனசை தளர விடாதப்பா!ராகுலை இனி நீங்க தான் பார்த்துக்கணும்!"
"................"
"ராகுல் இனி உங்க குழந்தை...அப்படி தான் வளர போறான்.சரியா??"-சரண் ஒரு பெரிய மூச்சை வெளிவிட்டு,
"பெரிய மனசுங்க உங்களுக்கு...ஒரு பொண்ணுக்கு அப்பாவா இருக்கிற யாரும் இந்த வார்த்தையை நிச்சயமா சொல்ல மாட்டாங்க!"
"ரகு எனக்கு மகன் மாதிரி தான்!!!ராகுல் நான் தூக்கி வளர்த்தவன்,எனக்கும் அவன் பேரன் தான்!!!!சரிப்பா...நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்."
"சரிங்க..."-அவர் சென்றப்பின்,ஏதோ ஒரு தனிமை சரணின் மனதை துளைத்தது.
அவன் தன் கைப்பேசியை எடுத்து மதுவிற்கு தொடர்பு கொண்டான்.
"ஹலோ!"
"சொல்லுங்க!"
"சாப்பிட்டியாம்மா?"
"இல்லைங்க..."
"ஏன்?"
"நீங்க சாப்பிட்டிங்களா?"
"இல்லை..."
"அப்போ நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்?"-ஒரு கனத்த மௌனம் நிலவியது.
"ராகுல் சாப்பிட்டானா?"
"சாப்பிட்டாங்க...."
"என்ன பண்ணிட்டு இருக்கான்???"
"விளையாடிட்டு இருக்கான்."
"அம்மூ!"
"சொல்லுங்க..."
"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"
"கேளுங்க."
"ராகுல்...ராகுல் இனிமே நம்ம குழந்தையா வளர்கிறதுல்ல....உனக்கு ஆட்சேபனை இல்லையே!"
"என்னங்க நீங்க????அவனை நான் நம்ம குழந்தையா தான் பார்த்துட்டு வரேன்...இப்படி கேட்கிறீங்க?????எனக்கு எந்த தயக்கமும் இல்லைங்க..."-மீண்டும் மௌனம்.
"என்னங்க..."
"ம்..."
"என்னாச்சுங்க???"
"ஒண்ணுமில்லை அம்மூ....நீ யாரோவா இருந்தா உனக்கு நன்றி சொல்லி இருப்பேன்....நீ சொன்னதுக்கு என்ன சொல்றதுன்னு புரியலை."
"எதுவும் சொல்ல வேண்டாம்.நீங்க எதையும் போட்டு குழப்பிக்காதீங்க..."
"ம்...."
"நான் அப்பறம் பேசுறேங்க..."
"சரிம்மா...வச்சிடுறேன்!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது
இனி என்ன செய்ய போகிறான் அவன்????
அவன் நம்பியிருந்த நம்பிக்கை சூரியன் இன்று அஸ்தமனமாகி விட்டானே!!!!
எவருக்கும் இந்நிலை வர கூடாது.தன் நண்பனின் உடல் கூட கிடைக்காது,அவன் உபயோகித்த பொருள்களை வைத்து இறுதி சடங்கு செய்தது.மனதை கூறு போட்ட நிகழ்வு அது....
இனி என்ன செய்வது???அவன் அன்றே கூறி இருந்தானே!!!என்னோடு வராதே என்று!!!கேட்டானா அவன்????
மண்ணில் மனிதன் பிறந்தால் அவன் உறவுகள் மகிழ்ச்சியில் மூழ்குவது உண்மை!!!
ஆனால்,அதே மனிதன் மரணிக்கும் வேலையில் கவலை ஒருவரை ஆட்கொள்ளவதில்லை என்பது மறுக்க முடியாத பொய் அல்லவா???
இந்த நேர் மாறான துருவங்களால்...என்ன பயன் கிடைத்தது???விரக்தி ஒன்றே!!!
இன்பமும்,துன்பமும் ஒன்றென கூறும் மனிதன்..துன்பத்தை எளிதாக சந்திக்க தயங்குவதேன்???எவரேனும் சிந்தித்தத்துண்டா???
இனி...
ராகுலை,ஸ்ரேயாவிடத்தில் ஒப்படைக்க முடியாது!!!அது,அவள் வாழ்வினை பாதித்துவிடும்.
ரகுவின் தாய்,தந்தையிடமும் ஒப்படைக்க முடியாது...அது ராகுலை பலவீனமாக்கிவிடும்.
அதனால்,தான் ஆதித்யா அந்த முடிவிற்கு வந்தான்.
ராகுலிடம்,இதை எப்போது,எப்படி கூறுவது???விவரம் தெரியாதவனா அவன்???
ஒரு வேலை....ரகுவிற்கு வந்த ஆபத்து,தன்னால் ராகுலுக்கு வந்தால்?????
பலவாறு குழப்பத்தில் மூழ்கி போனான் ஆதித்யா.
நல்லவன் ஒருவனின் இழப்பினால்,வந்த விளைவு இது????
முதன் முறையாக தினை விதைத்தவன் வினை அறுக்க இருக்கிறான்!!!!!
இந்த மாற்றம் தன்னை எங்கே உரைப்பது????
"அப்துல்!!!"
"வா ரவி!!!என்ன இவ்வளவு தூரம்???"
"என் காரியம் பண்ணிட்ட?ஆதித்யா நிச்சயம் இதை விட மாட்டான்....ரகுவிற்காக நிச்சயம் அவன் பழி வாங்குவான்!!!"
"மாட்டான்....அவன் இதோடு இந்த கேஸ்சை விட்டுட்டு போயிடுவான் பார்..."
"நடக்கவே நடக்காது!!!!"
"வர மாட்டான்....இப்போ அவன் கவனம் எல்லாம் அந்த பையன் மேல தான் இருக்கும்.அவன்,இன்னும் இதை விடவில்லை என்றால்...அடுத்த உயிரழிப்பு ராகுல் என்பது அவனுக்கு தெரியும்!!!"
"எனக்கு சரியா படலை..."
"ஆதித்யா விதி என் கையில இருக்கு!!!!அவன் உயிர் பிச்சை கேட்டு என் காலடியில விழுகிற நிலை வரும்!"
"..................."
"நீ அவன் கூட போய் சேர்ந்துக்க இதான் சரியான நேரம்...நாளைக்கே சென்னைக்கு கிளம்பு!"
"சரி..."
"அவன் எங்கே பலவீனமா இருக்கிறான்னு பார்த்து அங்கே அடி!!!எதிரியோட பலவீனம் தான் நம்ம பலம்!!"
"ம்......"-யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்யலாம்....தாய் நாட்டிற்கு???
உயிரில்லாத மண்ணாக தான் நமக்கு அது தெரிகிறது...
ஆனால்,எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி...நம்மை தாங்க பாரதத்திற்கு என்ன தலையெழுத்தா???
எதிரிகள் கூட அவர்கள் நாட்டிற்கு நம்பிக்கையாக தான் உள்ளனர்.நாம்????
நடந்த நிகழ்வை படித்தீர்கள்???
நாடு என்ன ஆனாலும் பரவாயில்லை...தன் நன்மை போதும் என நினைக்கும் ஒருவன்....தன் உயிர் வேண்டியதில்லை.... உனக்காக நான் இருக்கிறேன் என்று அதே நாட்டிற்காக உயிர் துறந்த மற்றொருவன்...
இவர்களில்,யார் சிறந்தவன்???பிறப்பால் மட்டும் குடிமகன் என்ற முத்திரை குத்தப்பட்டால் போதுமா????அந்த முத்திரையை பாரதம் வழங்க மறுத்தது என்றால் நம் நிலை என்ன? அனைத்தையும் நமக்காக செய்தும்,நம் பரிசளிப்பு அழகாய் தெரிகிறது!!!எதையும் செய்யவில்லை எனில்???
(இக்கேள்வியை எனக்கும் நான் கேட்டு கொள்வதே!!!நான் கூறியதில் தவறு இருப்பின் மன்னித்துக் கொள்ளவும்...உங்களிடம் ஒரு கேள்வி...ரவி தங்களிடம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்??)
தொடரும்...
{kunena_discuss:722}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.