(Reading time: 12 - 23 minutes)

 

தித்யா அச்செய்தியை கேட்டவுடன்,நொறுங்கி விட்டிருந்தான்.ராஜேஸ்வரி,அவனிடம் சென்று,

"கண்ணா!"என்றார்.வாழ்வில்,அதுவரை அழாதவன்,தன் தாயின் மறைவிற்கு கூட கவலை உணர்ந்தும் கண்ணீர் சிந்தாதவன்,அன்று கண்ணீர் சிந்தினான்.

தன் தாயின் மீது சாய்ந்து கொண்டு,

"தப்பு பண்ணிட்டேன்மா! பெரிய தப்பு பண்ணிட்டேன்!" நான் அவனை அனுப்பி இருக்க கூடாது!இப்படி  என் வாழ்க்கையை திசை மாறாம மாற்றினவனை,கொல்றதுக்கு நானே காரணமா இருந்துட்டேனே!"-கல் மனமும் கரையும் வண்ணம் கண்ணீர் சிந்தினான் சரண்.ராஜேஸ்வரியால், அவனுக்கு ஆறுதல் கூற முடியவில்லை.அவரும், அவனோடு அழுதார்.ஏன் இந்தச் செய்தி ரம்யாவையே சற்று கலங்க வைத்துவிட்டது.அனைவரும் விஷயத்தை கூறி விட்டாயிற்று.நடந்த நிகழ்வு அனைவரையும் நிலை குலைய செய்து,தடுமாற வைத்தது.

"இப்போ என்ன பண்ண போற கண்ணா?"-பொங்கி வந்த அழுகையை அடக்கியவாறு கேட்டார் ராஜேஸ்வரி.

"தெரியலைம்மா...ஆனா, ராகுலுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது."-இது,அடுத்தக்கட்ட அதிர்ச்சி அனைவருக்கும்!

"என்னப்பா சொல்ற?"

"நிச்சயமா ரகு இறந்ததை,அவனால தாங்க முடியாது.இப்போ அவனுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்மா!"

"ஆனா?"

"வேற வழி இல்லைம்மா!அவன் இங்கேயே இருக்கட்டும்."

"குழந்தையை எப்படி தனியா விடுறது?"

"நான் ராகுல் கூட இருக்கேன் அத்தை!"-மது.

"மது?"

"அவர் சொல்றா மாதிரி,ராகுல் ரகுவை இழந்த வலியை தாங்கிக்க மாட்டான்.அவன் கூட நானும் இங்கேயே இருக்கேன்.நீங்க போ...போயிட்டு வாங்க!"

"அம்மூ?நீ எப்படி?"

"கஷ்டம் வரும் போது,அதை கூடவே இருந்து சமாளித்து கணவனுக்கு தைரியம் சொல்றது தான் ஒரு மனைவியோட கடமை!உங்களுக்கு தைரியம் சொல்ல முடியாவிட்டாலும், கஷ்டத்தை கூட இருந்து சமாளிக்க முடியும்.நம்புங்க!"-அவன்,சரி என்பதை போல தலை அசைத்தான்.

"ராகுல்....நாங்க ஊருக்கு போயிட்டு வரோம்.பத்திரமா இரு!மது உன் கூட இருப்பா,சரியா?"

"நீயும்,பாட்டியும் மட்டும் தானே!"

"பவி,மகேந்திரன் தாத்தா,உன் தாத்தா எல்லாரும்!"

"அப்படி என்ன வேலை?"

"ஒரு...ஒரு வேலை இருக்கு கண்ணா!"

"சரி...போயிட்டு வா!வரும் போது முடிந்தால் அப்பாவை கூட்டிட்டு வா ஆதி!"-கேட்டான் ஒன்றையும் அறிந்திராத அந்த பிஞ்சு.

அவனருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் கண்ணில் தன்னிச்சையாக திரண்டது கண்ணீர். மதுபாலா,அவனை நிலைக்கு கொண்டு வர,அவன் தோள் தொட்டு நிலையை உணர்த்தினாள்.

ஆதித்யா,ராகுலின் கன்னத்தை வருடியவாறு,

"அப்பா!....அப்பாவோட.... வர முயற்சி பண்றேன் கண்ணா!"

"சரி ஆதி...!"-கண்களில், இன்னும் வெளிவந்த கண்ணீர் காயவில்லை சரணுக்கு!!!!

"பத்திரமா பார்த்துக்கோ அம்மூ!"-மனதை கல்லாக்கி கொண்டு சரி என்றாள் மதுபாலா.

ஆதித்யாவின் கார்,அவன் தொலைத்த ஒளியை காண புறப்பட்டது.அவன் வாழ்வின் ஆதவனை காண தவித்தது.

ரந்து விரிந்த இந்த உலகை காணுங்கள்....சுற்றியும்,பகை மட்டுமே இருக்கின்றது....

நேரடியாக மோத தெரியாத கோழை,ஒரு வீரனின் பாசத்தோடு விளையாடி அவனை வெற்றி கொள்ள எண்ணுகிறான்.உயிரோடு, உணர்வோடு கலந்த உறவு காதல் மட்டும் அல்ல!நட்பும் தான்!!!!சொல்ல போனால் நட்பு ஆத்மார்த்தமான ஒன்று...மனச்சாட்சியிடம் மறைப்பதை கூட நண்பனிடத்தில் மறைக்க தயங்குவோம்.

தாய்க்கு மறு பெயர் நண்பன் எனலாம்.

தந்தையின் மறு உருவம் நண்பன் எனலாம்.

குருவின் முழு உருவம் நண்பன் எனலாம்.

சில நேரம் தெய்வதின் மறு ஜென்மம் நண்பன் எனலாம்....

ஆதித்யாவின் மனம் நம்ப மறுத்தது ரகு     இறந்துவிட்டான் என்ற செய்தியை....

அந்த விஷயம் பொய்த்து போக கூடாதா என்ற நப்பாசை அவன் மனதில் எழாமல் இல்லை....

"து....??"

"ம்...என்ன ராகுல்?"-கண்களை துடைத்து கொண்டு கேட்டாள் மதுபாலா.

"ஏன் சோகமா இருக்க?"

"அ...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!"

"இல்லையே...."

"நிஜமாடா!!!!சரி....சாப்பிட வா!"

"போ...வேணாம்!"

"ஏன்?"

"வீட்டில யாருமே இல்லை...எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.அப்பா தான் இது மாதிரி என்னை அடிக்கடி தனியா விட்டு போயிடுவார்.இப்போ, இவங்களும் இப்படியே பண்றாங்க."-மது, தடுமாறியவரே,

"ராகுல்....அவங்க சீக்கிரம் வந்துடுவாங்க....நீ ரகுவை பற்றி கொஞ்ச நாள் பேசாம இருக்கிறீயா கண்ணா?"

"ஏன் அப்பா எதாவது தப்பு பண்ணிட்டாரா?"

"இல்லை....அப்படி இல்லை...உன் அப்பா ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு கடைசி வரைக்கும் வரவே இல்லை...அதான் எனக்கு கோபம்!"

"ஆமா...அப்போ எனக்கும் கோபம் தான்!இனி...பேசலை!"-சிரித்தப்படியே கூறினான் ராகுல்.மதுவிற்கு கண்ணீர் பீறிட்டு கொண்டு வந்தது.ஆனால்,அதை அவள் வெளிக்காட்டவில்லை

"சாப்பிட வா ராகுல்!"

"நீ சாப்பிடலை???"

"நான் அப்பறமா சாப்பிடுறேன்.நீ சாப்பிடு!"

"சரி...அப்போ கொஞ்ச நாள் உன் கூட தான் தூக்கமா?"

"ம்..."

"ஆதி தூங்கும் போது என்னை கட்டிப்பிடிச்சிப்பான்.நீயும்,அப்படி தான் தூங்க வைக்கணும்.சரியா?"

"ம்...சரி செல்லம்!"-மதுபாலா,ஊட்டிவிட விளையாடி கொண்டே சாப்பிட்டான் ராகுல்.

பின்,சிறிது நேரம் கழித்து அவன்,கூறியதைப் போலவே ராகுலை உறங்க வைத்தாள் மது.

அவளையே அறியாமல் கண்ணீர்த்துளி தலையணையை நனைத்தது.ஒன்றையும் அறியாமல் உறங்கிய அந்த குழந்தையை காணும் போதெல்லாம் வலித்தது.கள்ளம் கபடமில்லாத அந்த குழந்தையை விட்டுப் போக எப்படி மனம் வந்தது அவனுக்கு????என்றெல்லாம் யோசித்தாள்.உறக்கம் வர மறுத்தது....

இவனிடம் எப்படி சமாளிப்பது????நொறுங்கி விடுவானே!!!!அவள் கரங்கள் ராகுலின் கன்னத்தை வருடியது.

'இப்போ உன் முகத்தில இருக்கிற சந்தோஷம், எப்போவுமே இருக்கணும் கண்ணா!!!!!"-ராகுலின் உறக்கம் கலையாதவாறு எழுந்து,வெளியே வந்து அவள் தந்தைக்கு தொடர்பு கொண்டாள்.

"அப்பா!"

"சொல்லும்மா...."

"எங்கேப்பா இருக்கீங்க?"

"இன்னும் 1 மணி நேரத்துல போயிடுவோம்மா."

"சரிங்கப்பா..."

"ராகுல்...ரகுவைப் பற்றி கேட்கிறானா?"

"ஆமாப்பா!"

"உன் குரல்லையே தெரியுது மது!!!!2 நாள் சமாளிம்மா!!!நான் வந்துடுறேன்!"

"இல்லைப்பா...வேணாம்!நீங்க அங்கேயே இருங்க.அவருக்கு உங்க துணை வேணும்பா!!!ராகுலை நான்  பார்த்துக்கிறேன்."-சிறிது நேர மௌனத்திற்கு பின்,

"சரிம்மா...சரண் கூட நான் இருக்கேன்.பார்த்துக்கோடா!எதாவதுன்னா அப்பாக்கு போன் பண்ணு!"

"சரிங்கப்பா!"

"சரிம்மா...வச்சிடுறேன்."

"சரிப்பா!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.மீண்டும், மது ராகுல் அருகில் சென்று அமைதியாக படுத்து கொண்டாள்.உறக்கம் வரவில்லை என்றாலும், உறங்கியவாறு நடித்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.