(Reading time: 19 - 37 minutes)

08. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

வர்கள் இருவரும் தான் அதிர்ச்சியாக இருந்தார்கள் என்றால் இன்னும் சில உள்ளங்களும் அதே அதிர்ச்சியில் மூழ்க, நம்ம சீனியர்ஸ் அவங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போனாங்க.....

"என்னங்க இப்படியே எவ்வளவு நேரம் நின்னுட்டே பேசறது, வாங்க அப்டியே இங்க இருக்க ரெஸ்டாரண்ட்ல உட்கார்ந்து பேசுவோம்" என்று திவ்யா படபடத்தார்.

சரி என அனைவரும் அந்த ஹோட்டலின் பின் புறம் இருந்த அதன் ரெஸ்டாரண்டிர்கு சென்றனர். புல்வெளியில் நாற்காலிகள் போட்டு ஐந்து இருக்கைக்கு ஒரு குடை அமைத்து, இரவு என்பதால் அழகிய வண்ண விளக்குகளின் வேலைப்பாடில் ஜொலிக்க விட்டிருந்தனர்.

Nenjamellam kathal

வேறு விளக்குகள் அல்லாமல் அந்த வண்ண விளக்குகளின் மங்கிய ஒளியில் தன் ஒரு தேவதை அவள் அப்பாவுடன் முன் சொல்ல தன் தோளில் தூங்கிய அவனது குட்டி தேவதையை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்த மனதை வியந்தபடி நடந்தான் ஆதி.

அவளோ பின் வருபவன் பார்வை தன் முதுகை துளைத்து இதயத்தை கூறு போட்டு குருதி வலிந்து அந்த வலியில் தான் இதயம் எகிறி குதித்து விழுந்து அடித்து கொண்டு துடிக்கிறதோ என்னவோ? என்று சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள்.

அங்கு இருந்த ஒரு பணியாளை கூப்பிட்டு அனைவரும் உட்காருமாறு ஏற்பாடு பண்ண சொல்ல அவனோ நீச்சல் குளம் அருகில் இருந்து ஒரு பெரிய பேமிலி அமர கூடிய டேபிளை காட்டினான்.

லலிதா,திவ்யா,கற்பகம்,ரஞ்சனி,மகேஷ்,சரண்ராஜ்,மூர்த்தி என அரை வட்ட வடிவில் அவர்கள் அருகருகே அமர, லலிதாவின் அருகில் அமர்ந்தாள் மது.

அவளில் தொடங்கி மெகா, தன்யா,திவாகர்,ரகு,பிரகாஷ்,ஸ்ரீகாந்த்,ஆராதனா,ஸ்வேதா,ஆதி என அமர்ந்தார்கள். ஆதியும் மதுவும் நேர் எதிர் இருக்ககைகளில் அமர, இருவருமே நிலை தடுமாறினார்.

"என்ன விஷயமா நீங்க இங்க வந்திங்க" எட்ன்று சரண்ராஜ் வினவ,

"நம்ம மதுக்கு இன்னைக்கு பிறந்தநாள் அதான் ஒரு சின்ன பார்ட்டி" , மூர்த்தி.

"அப்படியா?!"

"ஹாப்பி பர்த்டே மது, நல்ல இரும்மா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது" என்று அனைவரும் மாறி மாறி வாழ்த்த சிறு புன்னகையும் தலை அசைப்புமாக அதை ஏற்று கொண்டாள்.

அனைவரும் வாழ்த்தி முடிக்க ஆராதனா, மதுவை பார்த்து சிறிது

"ஹாப்பி பர்த்டே மது" என்று கூறி விட்டு தன தமையனை பார்த்தாள்.

அவனோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை பார்த்தான்.

அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றை இனம் கண்டு கொண்டவன் மெல்லிய புன்னகையுடன்,

அவளிடம் கை நீட்ட, முதலில் திடுகிட்டவள், அவன் வாழ்த்து கூற தான் நீட்டுகிறான் என்று நிம்மதியுற்றாள். இருந்தும் அவன் ஸ்பரிசம் பட விரும்பாதவள் போல், தயங்க அதற்குள் அனைவர் பார்வையும் இவர்கள் மீது திரும்பியது. அதை உணர்ந்து சட்டென்று கையை நீட்டினாள், அவள் கரத்தை மென்மையாக பற்றியவன் சிறு அழுத்தத்துடன் குலுக்கி "மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்" என்று ஒரு மர்ம புன்னகையுடன் கூறினான்.  

அவன் தொடுதலில் இதனை நாட்களாக இருந்த ஏக்கம், இன்று முளைத்த  கோபம், நெஞ்சில் நிறைந்து விட்டிருந்த காதல் எதுவுமே நினைவில்லை. எதுவுமே உயிர் உடலை விட்டு சென்று உடம்பு காலியானது போல, மொத்த ரத்தத்தையும் யாரோ உறிஞ்சி எடுத்து விட்டது போல, உலகில் அவளை தவிர யாருமே அல்லாமல் வெறிச்சோடி விட்டது போல.... ஆக மொத்தம் எதுவுமே இல்லாமல் போனது போல அப்படி ஒரு உணர்வு.

இது என்ன விசித்திரம் காதலின் தொடுதலில் மோன நிலை. தாப நிலை, சந்தோசமாக உள்ளம் துள்ளும் நிலை, சிலிர்த்து கன்னம் சிவக்கும் நிலை, கோபமுற்றிருக்கும் போது சமாதானம் அடையும் நிலை... இப்படி நிறைய சொல்லலாம். சொல்லி கொண்டே போகலாம் அப்படி ஒரு தருணம் தான் அது, நீண்ட நாள் கழித்து அந்த ஸ்பரிசம் கண்ட மனதின் ஆனந்தமான ஒரு தருணம்.

ஆனால் தனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது. இது விசித்திரம் தானே?! ஒரு வேலை காதலர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் தோன்றும் உணர்வு தானோ?!

குழம்பிய மனதை மேலும் மூளை குழப்ப, அவன் கையை விடுவிக்கும் போது தன் உள்ளங்கையை விரல் நுனிகளால் தடவியதை எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.

எதுவுமே இல்லாதது போல் உணர்ந்தது எல்லா வற்றையும் அடைய போவதால் தான் என அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அங்கே அவர்களை கவனித்து கொண்டு இருந்த விழிகளுக்கு சொந்தமனவர்களும், ஏன் அவளையே சொந்தமாக்கி கொள்ள போகும் அந்த ஒருவனுமே அறியாது போது அவள் அறிந்திருக்க முடியுமா என்ன?!

ஒருவாறு மனதை சமாளித்து பெரியவர்கள் பேசுவதை கவனித்தாள்.

"உங்களுக்கு எப்படி பழக்கம் நு சொல்லலையே" என்று மகேஷ் கேள்வியாக வினவ,

சரண்ராஜ் கூற ஆரம்பித்தார்.

( வாங்க நம்மளும் போய் அந்த கதையை கேட்போம் )

ரண்ராஜ் படித்து கொண்டிருந்த காலத்திலேயே அவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்து அது நடந்தும் முடிந்தது. கோவையில் இருந்த திவ்யாவை தான் அவர் மணம் முடித்து கொண்டார்.

அவர் கல்லூரி படிப்பும் முடிய, கோவையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கலாம் என்று தோன்றிய எண்ணத்தினால் மனைவியின் ஊரிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியேறினர்.

என்ன தான் சொத்து பின்புலம் என்று இருந்தாலும், படிப்பும் சுயமரியாதையும் அவர் சொத்துகள் எனலாம்.

அப்படி தொழில் தொடங்க முடிவு செய்த சமயம் தன் மாமனார் மூலமாய் பழக்கம் ஆன மூர்த்தியையும் தன் பார்ட்னராக சேர்த்து கொண்டார்.

தொழில் நல்ல படியாக சென்று கொண்டிருக்க , அவர்கள் நட்பும் வளர்ந்து வலுவடைந்தது.

தன்னை விட வயதில் மூத்தவரும், தொழிலில் அனுபவமும் கொண்ட மூர்த்தியை சரன்ராஜிர்கு பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை தான்.

அந்த நேரத்தில் திவ்யாவும், லலிதா இரண்டாம் முறையாகவும் கருவுற, பிரசவ பயத்தில் இருந்த  திவ்யாவிடம் லலிதா காட்டிய அக்கறையால் அவர்களும் தோழிகள் ஆனனர்.  

மது முதலில் பிறந்து விட, ஸ்வேதா ஒரு மாதம் கழித்து பிறந்தாள். இரு குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் வயது ஆக, அப்போது தான் சரன்றஜிற்கு அவர் கற்று கொண்ட கணினி சம்மந்தப்பட்ட தொழில் பயிற்சியின் மூலம் சென்னையில் வேலை கிடைத்தது.

அந்த சந்தோசத்திலும், மூர்த்தி மீது கொண்ட அன்பாலும் நடத்தி வந்த தொழிலை அப்படியே அவரிடம் ஒப்படைத்து இனி அத உஅவருக்கு மட்டுமே சொந்தம் என பத்திரம் தயார் செய்து அதில் கையெழுத்தும் போட்டு கொடுத்து விட்டு தான் கிளம்பினார். தொலைவில், முகம் தெரியா ஊரில் இருந்தாலும், அவர்கள் நட்பு மட்டும் மாறவே இல்லை. 

சரண்ராஜ் சென்னை சென்ற பின்பு ஒரு முறை சந்திக்க வந்தார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்று விடவே அவர்களுக்கு இடையில் தொடர்பு இல்லாமல் போனது.

வர் இதை சொல்லி முடிக்க, மதுவும் ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிறிது கொண்டனர். எப்போது தாங்கள் சேர்ந்து விளையாடியது ஒரு நிழல் படம் போல ஞாபகம் வந்தது.

அதற்குள் ஸ்ரீகாந்தும், திவாக்கரும் தங்கள் IT நிறுவனத்தின் முக்கிய விஷயங்களை அலசி கொண்டிருக்க, ஆராதனா தன்யா ஒரு கூட்டணி அமைத்திருந்தனர்.

3 குடும்பத்தினரும் எந்த வித பந்தாவும் இல்லாமல் நட்புடன் இருந்ததால் விரைவிலேயே ஒருவருடன் ஒருவர் ஒன்றி போயினர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.