(Reading time: 19 - 37 minutes)

 

ந்த பாடல் முடியும் வரை ஏதோ ஒரு மௌன நிலையில் இருந்தவள் அது முடிந்தவுடன் தான் உணர்ந்தாள் கண்கள் தன்னையும் மீறி கன்னங்களில் நீர் கோலம் போட்டதை. அவசரமாக எழுந்து முகத்தை துடைத்து கொண்டு கீழே சென்றாள். ஹாலில் லலிதா அமர்ந்து கொண்டிருக்க, 'என்ன ஆச்சு அம்மாக்கு' என்று யோசித்து கொண்டே அருகில் சென்று அமர்ந்தாள்.

அவள் வந்து அமர்ந்தது கூட தெரியாமல் அவர் ஏதோ சிந்தனையில் இருக்க, அவர் மடியில் படுத்துக் கொண்டாள். சட்டென சுதாரித்து பார்த்தவர்,

"என்னடா மிது தூக்கம் வரலையா?" என பரிவுடன் வினவ

"ம்ம்ம் ஆமாம்  ம்மா நீங்க என்ன பண்றிங்க தூங்காம?"

"ஒன்னும் இல்ல டா எனக்கும் தூக்கம் வரல"

"ம்ம்ம் ஹ்ம்ம் பொய்"

"எது?!"

"நீங்க தூக்கம் வரலன்னு சொல்றது"

"ம்ம்ம்ம் பெரிய மனுஷி கண்டு பிடிச்சிடியாக்கும்?"

"ப்ச் பேச்சை மாத்தாதிங்க"

"சரி மாத்தலை"

"ஐயோ அம்மா சொல்லுங்க என்ன யோசனை நான் வந்தது கூட தெரியாம?"

"எல்லாம் உன் கல்யாண விஷயம் தாண்டா, அந்த ஸ்வேதா உனக்கு அப்புறம் பிறந்தவ கல்யாண தேதி முதல் கொண்டு குறிச்சுட்டாங்க, உன் பிரெண்ட்ஸ் ல பதி பேர் குழந்தைங்களோட இருக்காங்க"

"ஆனா ரகு மெகா இருக்கங்களே"

"ம்ம்ம்ம் ஆனா அவங்களும் கல்யாணம் பண்ணிபங்க தானே டா"

"அதே மாதிரி தான் மா நானும் நேரம் வரட்டும்"

"அது எப்போ வரும்?!"

"வரும் போது"

"என்னமோ போ, சீக்கிரமா உன்ன கல்யாணம் பண்ணி கொடுத்த தான் எனக்கு நிம்மதி" என்றவாறு அவள் தலையை வருடி கொடுத்து தானும் சோபாவில் சாய்ந்து கண் மூடி கொண்டார். ஏனோ அம்மாவின் இந்த தோற்றம் மகளை பாதித்தது.     

சிறு வயதில் அவளுக்கு பேச, நடக்க சொல்லி கொடுத்த அம்மா, பள்ளியில் அவளை சேர்க்க அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அம்மா, அதிகாலையில் எழுந்து அனைத்து வேலையையும் முடித்து தாமதமாக எழும் அவளுக்காக காத்திருக்கும் அம்மா, முதல் நாள் பள்ளி செல்லும் போது பெருமையில் முகமும் வருத்தத்தில் கண்களில் நீரும் மின்ன கை அசைத்த அம்மா, பள்ளி சுற்றுலா சென்ற போது பார்த்து பார்த்து பதார்த்தங்கள் செய்து பத்தாயிரம் முறை "ஜாக்ரதை டா குட்டிம்மா" என்று சொன்ன அம்மா, மகளுக்கு பிடிக்கும் என வெண்டையும்,உருளையும் காய்கறி விற்பவனுடன் சண்டையிட்டு சிறந்ததாக தேடிய அம்மா, தினமும் சுட சுட சுவையாக சமைத்து "ஸ்கூலுக்கு லேட் ஆகுது என்னக்கு ஒன்னும் வேண்டாம் போங்க" என்று கோபத்துடன் கிளம்புகையில் பின்னாலையே ஓடி வந்து "இன்னொரு வாய் மட்டும் செல்லம்" என்று ஊட்டிய அம்மா, தன் தேவைகளும் திறமைகளும் அறிந்து நாட்டிய பள்ளியில் சேர்த்த அம்மா, ஒவ்வொரு கலை நிகழ்ச்சியின் போதும் ஒவ்வொரு முறை பரிசு வாங்கும் போதும் "அது என் பொண்ணு" என்று சந்தோசத்தில் அழுத அம்மா, துவண்டு விழுந்து காய்ச்சலில் அழுத போது இரவு முழுக்க அணைத்து படுத்து இருமினால் கூட பதறி எழுந்த அம்மா, பெரிய மனுஷி ஆனா போது சேலை கட்டி அழகு பார்த்த அம்மா, வேலைக்கு செல்லும் போதும் உன் விருப்பமே எனதும் என துணை நின்ற அம்மா... இன்றும் என் எதிர் காலத்தை நினைத்து உருகி உறக்கம் மறந்த அம்மா... அம்மா அம்மா அம்மா... இந்த ஒற்றை சொல்லுக்கும் அந்த சொல்லுக்கு உரியவளுக்கும் தான் எத்தனை சக்தி...

மெல்ல லலிதாவின் கையை பற்றி வருடினாள் மது.

"அம்மா"

"ம்ம்ம்ம் சொல்லுடா"

"என் கல்யாணத்த பத்தி நீங்க என்ன முடிவு பண்ணிருகிங்க"

"உன் முடிவு தாண்டா என்னோடதும்"

ஒரு நிமிடம் தலை நிமிர்த்தி அன்னையை உற்று நோக்கினாள்.

"நீங்க ஏதும் நினைகலையா?"

"ம்ம்"

"சொல்லுங்க அம்மா"

"எத பத்தி டா கேட்கிற என்ன சொல்லட்டும்?"

"இன்னைக்கு அந்த பையன் வந்து பேசுனத பத்தி"

"நல்ல பையனா தான் தெரியுது, உங்க அப்பாவுக்கு கூட நல்ல அபிப்ராயம் தான்"

"நான் உங்கள கேட்டேன்"

"எனக்கும் பிடிச்சுருக்கு டா"

சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டிருந்தாள்.

"என்னடா ஆச்சு"

" நிஜமா அவன இல்ல அவர உங்களுக்கு பிடிச்சுருக்கா?"

"ம்ம்ம்ம் ஆமாம், ஆனா உன் முடிவு தான் முக்கியம்"

"உங்களுக்கு பிடிச்ச எனக்கும் சம்மதம் ம்மா, அப்பா கிட்ட மேல பேச சொல்லுங்க" என்று அன்னையை கட்டி கொண்டாள்.   

எதுவும் அறியாத தாயுள்ளம் புன்னகையுடன் உறங்க சென்று விட, எதையுமே ஏற்று கொள்ளாமல் மறுத்து அடம் பிடித்த மனதை எண்ணி வேதனையில் ஆழ்ந்தாள் மகள்..

(நிறைய பக்கங்கள் தருவதாக சொல்லி உங்கள ஏமாத்துனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி பிரெண்ட்ஸ்... நான் நினைத்ததில் பாதியை தான் கொடுக்க முடிஞ்சுது... இந்த தடவை கேள்விகள நான் கேட்கல நீங்களே கேளுங்க.. எல்லாரும் என்ன இப்போவே திட்டிகொங்க தீபாவளிக்கு அப்புறம் திட்ட சான்ஸ் கிடைக்காது... புல் பார்ம்ல வந்து உங்களுக்கு ட்ரீட் தர போறேன்... நீங்க எல்லாரும் போய் தீபாவளிய சந்தோசமா ஜாக்கிரதையா கொண்டாடிட்டு வாங்க.. அடுத்த எபிசொட் நம்ம ஆதி-மது குடும்பமும் ஒன்னா தீபாவளி கொண்டாட போறாங்க.. இது ஹாப்பி நியுஸ் தானே... ஹிஹி இப்போவது திட்டமா இருங்க செல்லங்களா..... என் சில்சி தோழிகள்/தோழர்கள் அனைவருக்கும் ப்ரியா மற்றும் நெஞ்சமெல்லாம் காதல் குடும்பம் சார்பா  "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"..... டாட்டா பை பை......)

காதல் பெருகும்… 

Episode # 07

Episode # 09


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.