(Reading time: 7 - 14 minutes)

09. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

வ்வளவு நேரம் அமர்ந்திருந்தாலோ என்னென்னவோ யோசித்து இறுதியில் ஒரு முடிவுடன் படுக்கைக்கு சென்ற பொது மணி நான்கை தாண்டி இருந்தது.

ட்டென விழித்து எழுந்தான் ஆதி, இரவு வீட்டிற்கு வந்து தன் அறையில் நுழைந்தவன் மனம் அன்று நடந்த அனைத்தையும் நம்ப முடியாமல் தவித்து கொண்டிருந்தது. எதனை மாற்றங்கள் அவனுள், அவன் நினைத்தது என்ன நடந்தது என்ன?

'அவளை கண்டவுடன் பொங்கிய காதல்? காதலா??!! இல்லை இல்லை அது ஏதோ ஒரு வித உணர்வு இவ்வளவு நாட்கள் பிரிந்து இருந்ததனால்.. அவள் மீது இருந்த காதலை தான் குழி தோண்டி புதைத்து விட்டு சென்றாலே அன்று பாதகி' புத்தி ஏதோ வேகத்தில் இறந்த காலமும் நிகழ காலமுமாய்  கால வெளியில் பயணித்துக்  கொண்டிருக்க, மனது அமைதியாக தன் வேலையை துவங்கியது,

Nenjamellam kathal

' காதல் இல்லையா? அப்படி இருக்க ஏன் அவளை அணைக்க கைகள் துடித்தது, செல்போன் சிணுங்கி பூவுலகம் வந்திறங்கும் வரை அவள் மேலிருந்து கண்களை அகற்றவில்லையே?! ஏன் இமைக்கவும் மறந்தாய் தானே? அவளை அள்ளி அனைத்து முத்த....'

இடைவெட்டியது மூளை, 'ச்சே ச்சே நானா? அதெல்லாம் இல்லை அவள் தானோ ஏதோ உணர்ச்சி வேகத்தில்.. நான் என்....'

'நீ? உன்? உன் சிந்தனயில் முடிவில் இருந்து மாறுபடவில்லை அப்படி தானே? சரி இருக்கட்டும் ஸ்வேதா கையில் மோதிரத்தை மாட்டி விட்டு மதுவிற்கு வலிக்குமே என உன்னை நீயே நொந்து கொண்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும் காதலை தவிர?, அவளை மீண்டும் பிரகாஷுடன் பார்த்த போது கொதித்த மனதில் காதல் இல்லையா?!'

'அவள் மீதான காதல், அது முதலில் இருந்தே காதலே இல்லையே ஏதோ ஒரு வகை ஈர்ப்பு அவ்வளவே'

'ஒப்பு கொள்கிறேன், இன்னும் இதனை நாள் இந்த பிடிவாதம் என்று பார்க்கிறேன், ஒன்னு மட்டும் மறக்காத நீ இரு பெண்களுக்கு துரோகம் செய்கிறாய்'

மனசாட்சி ஒருவாராக ஓய, மூளை விழித்து கொண்டது, 'துரோகமா? நானா? அந்த காரணத்திற்காக தானே அவளை வெறுத்தேன் இப்போது நானே ஐயோ உடனே ஸ்வேதாவுடன் பேச வேண்டும் அவளை மறக்க நேரம் தேவை என கேட்க வேண்டும்'    என்று நினைத்து கொண்டு கணினியை உயிர் பித்தான் மனதை திசை திருப்ப எண்ணி.

(ஐயம் சோ சாரி ஆதி .. நீங்க மறக்க நினைச்சாலும் நான் விட மாட்டேன்  அப்புறம் எப்படி நம்ம மேகி கேட்ட மாதிரி உங்கள அழ வைக்க முடியும் ஹிஹிஹிஹி)

முதலில் தனக்கு வந்திருந்த மெயில்களை பார்த்து அதற்கு உரிய பதில் அளித்தான், தீபாவளி நான்கு நாட்களில் வர இருப்பதால் திங்கட்கிழமை வேளையில் சேர சொல்லி மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்கள்.

இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன அதனால் அதற்குள் தயாராகி விடலாம் என நினைத்து கொண்டு அடுத்து பெஸ்புக்கை திறந்தான், அதில் மதுவின் கவிதை பதிவு இருக்க, அதை படித்தவன் எண்ணங்கள் மீண்டும் அவளையே சுற்றி வந்தது,

கலந்து விட்டது என்னவோ ஒரே நிமிடம் தான்...

உன் விழிகளும்  என் விழிகளும்...

ஆனால் கலந்திருந்த வேளையில்

கசிந்து உருகிய காதலை கண்டு………….”

இந்த வரிகளை திரும்ப திரும்ப படித்தான், காதலா? அவளும் அதையே சொல்கிறாள். ஆனால் ஏன் பிரகாஷுடன்? அவள் மீது  தவறு இல்லையோ? நான் தான் அவளை... நினைக்கும் போதே ரகு பேசியது நினைவில் வந்தது...

( உங்களுக்கு நான் சொல்லலை இல்ல.. வாங்க பாப்போம் என்ன பேசுனங்கன்னு)

மைதியாக வந்த ஆதியிடம் ரகு தான் கேள்வியை ஆரம்பித்தான்,

"எப்படி இருக்கீங்க ஆதி? புது மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம்.. ரொம்ப சந்தோசமா  இருக்கீங்க போல?"

அந்த அழுத்தத்தில் இருந்த கோபத்தை புரிந்து கொண்டான் ஆதி,

"அப்படி எல்லாம் இல்லை உடனே கல்யாணம் நடக்காது, இந்த என்கேஜ்மன்ட் கூட எனக்கு தெரியாம சர்ப்ரைசா நடந்தது தான்"

"ஒ அது எப்படி உங்களுக்கே தெரியாம  பொண்ணு  பார்த்து, உங்கள அமெரிக்கால இருந்து வர வெச்சு சர்ப்ரைசா பண்ணுனங்களா? அதும் உங்க சம்மதமே கேட்காம.. இன்டரஸ்டிங்"

"இல்ல ஸ்வேதா மாமா பொண்ணு, வீட்ல கேட்டாங்க சம்மதம்ன்னு சும்மா சொல்லி வெச்சேன், ஆனா இப்போ இப்படி"

இவனுக்கு எதுக்கு தாம் விளக்கம் கொடுக்கிறோம் என்று நினைத்தாலும் இது மதுவின் காதுகளை எட்டும், அவளுக்கு புரிய வைக்க வேண்டும்  என்று நம்பி கூறினான்.

ஆனால் ரகு இதை சொன்னால் தானே. அதுவரை பொறுமை காத்தவன்,

அவன் சம்மதத்தில் தான் இந்த ஏற்பாடுகள் நடந்தன என்று அறிந்ததும் வெடிக்க தொடங்கினான்,

"இங்க பாரு ஆதி, நீ எப்படி வேணாலும் யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ ஆனா இனி மது லைப்ல மட்டும் தப்பி தவறி கூட வந்துடாதா"

"என்ன ரகு பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு மிரட்ற மாதிரி"

"அப்படி தான் வெச்சுக்கோயேன், உங்கள மாதிரி பொண்ணுங்க மேல பலி போட்டுட்டு சந்தோசமாவும் சுயநலமாவும் தன் வாழ்க்கை தான் முக்கியம்ன்னு  இருக்குற பசங்களுக்கு என்ன மாதிரி ஒரு நண்பனோட கோபம் மிரட்டலா தப்பா தான் தெரியும்"

"......."

"இனி நீ மது வாழ்க்கைல வர மாட்டேனு எனக்கு தெரியும் தான், உன்ன இப்படி பாக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் ஒண்ணுமே பண்ணாம தினமும் அழுதுட்டு இருந்தாலே அந்த முட்டாளுக்காக பேசி பாக்கலாம்னு தோனுச்சு, ஆனா அது எல்லாமே வீன்னு இப்போ அவளுக்கும் புரிஞ்சுருக்கும், சோ இனி அவ இருக்குற பக்கம் நீ வரது என்ன வரணும்னு நினைச்ச கூட நன் விட மாட்டேன் எனக்கு மது சந்தோஷம் தான் முக்கியம்"

"...."

அவன் பேசாமலே நிற்க விறுவிறுவென்று சென்று விட்டிருந்தான் ரகு. 'இவன் எப்படியும் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிட்டு போய்டுவான்,இனி மதுவ பத்தி தான் யோசிக்கணும் அவல சீக்கிரமே மாத்தனும்" என்று ஒருவாறு தெளிவாகி இருந்தான்.

ஆனால் ஆதி தான் மிகவும் குழம்பி போனான். அவன் அவளை பற்றி என்னவெல்லாம் நினைத்து கோபம் கொண்டானோ அதே பலிகளை இன்று ரகு அவன் மீது போட மனம் முரண்டு பிடித்தது.

(இப்போ உங்களுக்கு புரிஞ்சுருக்குமே ஏன் ஆதி குழப்பத்தில் வந்தான் நு, இப்போ ஏன் இந்த பிளாஷ் பேக்னு கேட்கறிங்கள அதையும் சொல்றேன் வாங்க

கு பேசியது நினைவில் வந்தவுடன் தான் இன்னும் தீவிரமாக யோசிக்க தொடங்கினான். அன்று நடந்தது......... பின் ஒரு வருடதிற்கு பின் இன்று அவனை கண்டதும் அவள் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகள், அவன் ஸ்வேதாவிற்கு மோதிரம் அணிவித்த போது அவள் கண்களில் தெரிந்த வலி, ரகுவின் குற்றசாட்டு, இந்த கவிதை இவை அனைத்திற்கும் மேல் அன்றைக்கு நடந்தவற்றுள் ஒன்று அவன் புத்திக்கு அப்போது தான் எட்டியது ஆக, அவன் நினைத்தது தவறு தான் ஆனால் முற்றிலும் அல்ல.

ஒரு முடிவிற்கு வந்தவன் "என் முட்ட கண்ணி இனி அந்த கண்ணுல எப்பவும் நான் கண்ணீரையோ வலியையோ பார்க்க கூடாது டி, என்ன எல்லாம் பண்ணிட்ட அதுக்கு எல்லாம் சேர்த்து இந்த ஆதித்யன் திருப்பி தர போறேன் டி ஆனால் எல்லாமே ஸ்வீட் பணிஷ்மன்ட் தான்' என்று பேசியவாறு உறங்கி போனான்.

( நீங்க மட்டுமா ஆதி முடிவு எடுத்தீங்க மதுவும் தானே உங்க முடிவு இப்படி இருக்க விதியோட முடிவு வேற மாதிரி இருக்கே)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.