(Reading time: 10 - 19 minutes)

20. என்னுயிரே உனக்காக - சகி

புது விடியல்...

மனதை உற்சாகப்படுத்தும் ரம்யமான விடியல்...

ஆதித்யனானவன் தன் கடமைகளை செய்ய கிழக்கு வானில் எழுந்துவிட்டான்...

ஆதித்யாவானவன் தன் கடமைகளை செய்ய உறக்கம் கலைந்து எழுந்தான்...

Ennuyire unakkaga

குளித்துவிட்டு கீழே இறங்கி வந்தவனை அதிசயமாய் பார்த்தாள் மது.அவளருகே ஒரு புன்னகையை பூத்தப்படி வந்தமர்ந்தான் சரண்.

"என்னடி?அப்படி பார்க்கிற?"

"உங்க வாட்ச் சரியா தானே இருக்கு?"

"ஆமா...ஏன்?"

"மணி 6 :30 தாங்க ஆகுது!அதுக்குள்ள எழுந்துட்டீங்க?"

"நிறைய பேர் தூக்கத்தை கெடுக்கணும்ல அதான்..."-அவள் விழித்தாள்.

"புரியலையா?போக போக புரியும் பார்."

"ம்...காப்பி குடிக்கிறீங்களா?"

"தா...செல்லம் நீ தந்து வேணாம்னு சொல்வேனா?"-மதுபாலா,சத்தியமாய் குழம்பிட்டாள்.    'என்னவாயிற்று இவனுக்கு?இவ்வளவு மகிழ்ச்சியாய் அவன் இருந்து பார்த்ததில்லையே!' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அவனுக்கு காப்பி போட்டு தந்தாள்.

"சூப்பர்...அம்மூ!ராகுல் தூங்கிட்டு இருக்கான்.அவன்,எழுந்ததும் அவனுக்கு எதாவது கொடு!நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்."-குழப்பத்தோடு,

"சரிங்க.."என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.

அவள்,ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாலும்,ஒன்று மட்டும் அவளுக்கு விளங்கியது.அவன் ஏதோ முடிவு எடுத்துவிட்டான்.இனி,அதில் வெற்றி பெறாமல் ஓய்வெடுக்க மாட்டான்.

"நிரஞ்சன்."-ரவி.

"ம்.."

"கேஸ் ஃப்லை கொடுக்கிறீயா?"

"ஏன்?"

"சரண் தான் கேஸ்சை வித் ட்ரா பண்ண போறானே!அதான்...நான்  பார்த்துக்கிறேன்."

"ஆதித்யா அனுமதி இல்லாம எதையும் தர முடியாது."

"பரவாயில்லைடா.. அவன்கிட்ட கொடு!"-என்றப்படி வந்தான் சரண்.

"ஆதி?என்னடா சொல்ற?"

"கொடு மச்சி...நல்லா படிக்கட்டும்.ஆனா, கடைசியில அது என்கிட்ட வந்துடணும்."

"அது எப்படி முடியும் சரண்?"

"கேஸ் என்னோடது ரவி.நான் தானே பார்த்துக்கணும்."

"ஆனா நீ?"

"வித் டிரா பண்ண போறதில்லை."-உச்சக்கட்ட அதிர்ச்சி ரவிக்கு.

"மச்சான்...கேஸ் ஃபைல்லை எடுத்துட்டு வா!"-அவன்,முகத்தில் என்றுமில்லாத தேஜஸ் நிரஞ்சனுக்கு புது தெம்பை அளித்தது.

"மச்சான்...முடிவு கட்டிட்டியா?"-சிரித்துக் கொண்டே கேட்டான் நிரஞ்சன்.

"ஆமா...மச்சி!"-பின் ரவியிடம்,

"என்ன சொன்ன?ரகு இறந்தது அதிர்ச்சியா இருந்ததா?"

"..............."

"நான் கேஸ்சை விட்டுட்டு போயிடணுமோ?"

"............."

"டேய்....நீ உண்மையிலே ஆம்பளையா இருந்தா!என்கிட்ட மோதி இருக்கணும்.ஆனா,நீ கேவலமா ரகுவை கொல்ல துணையா இருந்த..!அங்கே விழுந்தீங்கடா!எப்படி எப்படி?இந்தியாவுல இருந்துட்டு எவனுக்கோ கைக்கட்டி வாலாட்டிட்டு இருந்த உனக்கே இவ்வளவு இருந்தா?அதே இந்தியாவுல பிறந்து ராத்திரி பகல் பார்க்காம இந்த நாட்டுக்காக உயிரைக் கொடுக்க போட்டி போட்டு வந்து நிற்கிற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?"

".........."

"நான் இந்த கேஸ்சை எடுத்ததுனால நாட்டுக்காக சேவை பண்றேன்னு நினைக்காத...நான் மறுபடியும் இதை எடுத்ததுக்கு காரணம் ரகு.எவ்வளவு கொடுமையா கொன்னு இருப்பீங்க அவனை?எப்படி துடிச்சிருப்பான்?அதைவிட ஆயிரம் மடங்கு வேதனையை அனுபவிக்க வேணாம்...நீ என் அமைதியான முகத்தை தானே பார்த்திருக்க?என் ருத்ர தாண்டவத்தை பார்த்ததில்லை தானே!போய் சொல்லு..உன் கூஜாகிட்ட ஆதித்யா வருவான்னு சொல்லு! உயிர்பிச்சை கேட்டு என் காலில் விழுந்து அவனை கெஞ்ச வைப்பேன்னு சொல்லு!"

"ஆனா,அவனுக்கு கூட ஈஸியா மரணம் வந்துவிடும்,உனக்கு....??நீ எனக்கு மரணத்தை கொடுன்னு கெஞ்சுவ!!இனி எவனும் தப்பிக்க முடியாது.நிரஞ்சன் ஃபைல்லை எடுத்துட்டு வா!"-என்று விரைந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் பேசிய  வார்த்தைகளை கேட்டு ஆடிப் போனான் ரவி.அவன் நினைத்ததற்கு நேர் மாறாக நிகழ்ந்தது அனைத்தும்.இனி என்ன செய்வது?ஆதித்யாவின் கோபத்தை பற்றி அறியாதவன் இல்லை அவன்....இனி அவன் என்ன செய்ய போகிறான்???

துரியோதனனிற்கு சகுனி எவ்வாறோ?அப்படியே... இவனுக்கு ஒருவன் இருக்கின்றானே!!!அதான்...அப்துல்லா!இனி...அவன் பேச்சை தான் கேட்க வேண்டும்.

ன்று மாலை.....

"ராகுல்...என்னாச்சுப்பா?ஏன் ஒரு மாதிரி இருக்க?"-மதுவின் கேள்விக்கு பதில் கூறாது மௌனம் சாதித்தான் ராகுல்.

"ராகுல்...எதாவது பேசுடா!"

"............."

"ராகுல்?"

"ஆதித்யா எங்கே?"-அவன் பேசும் விதம் அவளுக்கு விசித்திரமாய் இருந்தது.

"உள்ளே தான் இருக்காரு!"

"............"-சிறிது நேரத்தில் ஆதித்யா அங்கே வந்தான்.

"ராகுல்..."-சரண்.

"............."

"ஏ...என்னடா?ஒரு மாதிரி இருக்க?"

"அப்பா எங்கே ஆதி?"-ஒரே கேள்வியில் அனைவரையும் அடக்கிவிட்டான் ராகுல்.

"சொல்லு...அப்பா எங்கே?"

"அ...அப்பா ஊருக்கு போயிருக்காரு!"

"பொய் சொல்ற..."

"இல்லைடா..."

"பொய் சொல்ற...அப்பா உயிரோட இல்லை."-உச்சக்கட்ட அதிர்ச்சி சரணுக்கு.

"என்ன பேசுற நீ?யார் சொன்னா?"

"உண்மையை மறைக்காதே!"

"................"

"ரவி அங்கிள் எல்லா உண்மையும் சொல்லிட்டாரு!"-அந்நொடி ரவியை அந்நிமிடமே கொல்ல வேண்டும் என்ற வெறி அவனுக்கு வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.